குடிடி பாபா கதை தெரியுமா ? “ ந ஹம், ந தும், தர்பார் கம் ?” (Post No.13,965)

Hindu Devotees Pictures from Daily Mail, year 2014

Written by London Swaminathan

Post No. 13,965

Date uploaded in London – 3 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஞானக் துகிவா ஸப் ஸம்சாரா, 

ஸுகியா வஹி ஜோ நாம அதாரா”

****

எவ்வளவோ பாபாக்களின் பெயர்களைக் கேட்டிருப்பீர்கள்  குடிடி பாபா-வின் சுவையான கதையைக் கேட்டிருக்கிறீர்களா?

****

குடிடி பாபா யார்?

ற்புதங்களைப் புரிந்த ஒரு சித்தர். அண்மைக்காலத்தில் வாழ்ந்த மஹான் என்று ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தா தனது புஸ்தகத்தில் எழுதியுள்ளார்.. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்

****

குடிடி என்றால் என்ன ?

பஞ்சு வைத்து தைக்கப்பட்ட போர்வையை குடிடி என்பார்கள்; அதன் மீது வண்ணத் துணிகளையும் தைத்து, போர்த்திக்கொண்டு பில்குவா என்னும் இடத்துக்கு. அவர் வந்தார். அது ஆர்ய சமாஜிகளும் காங்கிரஸ்காரர்களும் நிறைந்த வட இந்திய நகரம்.

****

அவருடைய சிறப்புகள் என்ன ?

நாஸ்தீகவாதிகளும் வியக்கும் அற்புதங்களைச் செய்து காட்டினார்.

தொலைதூரத்திலுள்ள பொருளகளை கொண்டுவரும் அதிசய சக்தி அவருக்கு உண்டு.

மூலிகை பற்றிய ஞானம் உடையவர்; அவற்றின் மூலம் நோய்களைத் தீர்த்தார்.

குடிடி பாபா நன்றாகப் பாடி பக்தி இசையைப் பரப்பினார்.

****

அவர் சமாதி ஆனது எப்போது ?

1951-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் தேதியன்று குடிடி பாபா தமது பூத உடலை விட்டு  நீங்கினார் .

அவருடைய ஜாதி, மதம், இனம், முதலியவை பற்றி யாருக்கும் ஒன்றும் தெரியாது; ஆயினும் அவர் பாடியது கிருஷ்ணர் மேலான பக்திப்  பாடல்களே. அவரிடம் மூங்கில் குழாய் ஒன்றும், ஒரு பாத்திரமும் மட்டுமே இருந்தன. மூங்கில் குழாயில் பாலோ நீரோ அருந்துவார்; அதையே இசைக்  கருவியாகவும் பயன்படுத்துவார்

****

முதல் அற்புதம் என்ன?

சிவன் கோவிலில் குடிடி பாபா தங்கி இருந்தபோது ராஜபுதன சிறுவர்களை அழைத்தார். கையில் நூலைக் கொடுத்து    மூ டிக்   கொள்ளுங்கள் என்றார்; கையை   திறவுங்கள் என்றார். திராட்சைப் பழங்களும் சர்க்கரையும் இருந்தது; சிறுவர்கள் உண்டு மகிழ்ந்தனர்.

****

அவர் தன்னைப் பற்றி கூறியது என்ன ?

முப்பது வயது தோற்றமே உடைய அவரிடம் கோமணம் மட்டுமே இருந்தது; அருகில் குடிடி போர்வை இருந்தது; ஆனால் தன்னை அவர் ஷா இன்  ஷா (சக்ரவர்த்தி) என்று அழைத்துக் கொள்ளுவார்; உண்மைதான்! ஆசையே இல்லாத விருப்பு வெறுப்பற்ற அந்த முனிவர் முன்னால், இந்திரனே வந்தாலும் அவன் ஒரு பொருட்டல்ல. அப்படியிருக்கும் போது இவர் இந்திரனுக்கும் மேலானவரே

****

குடிடி பாபாவின் உபதேசம் என்ன ?

இரண்டாவது என்று ஒருவரும் இல்லை; நான் ஒருவன் மட்டுமே; யார் யாருடன் பேசுவது ?  “என்று சொல்லி அத்வைதக் கருத்தினை வலியுறுத்துவார்.” ந ஹம் ந தும் ,தர்பார் கம் ?”

ஞானக் துகிவா ஸப் ஸம்சாரா, 

ஸுகியா வஹி ஜோ நாம அதாரா “

உலகில் எல்லோரும் துன்புறுகின்றனர்.  ஆனால் பகவான் நாமத்தை ஜெபிப்பவன் மட்டுமே சந்தோஷமாக இருப்பான்” என்பது இதன் பொருள்.

****

நாத்தீகர்கள்  முன்னால் நாணயங்கள் வந்த அற்புதம் என்ன ?

பில்குவாவில் நடந்த கூட்டத்தில் இந்து மத சடங்குகளை மட்டம் தட்டிப் பேசிவந்தார்கள்; குடிடி பாபா மெளனம் சாதித்தார்

நாத்தீகர்கள் பாபாஜியை மந்திரவாதி என்பர். அவர்களும் இவரது கூட்டத்துக்கு வருவார்கள்; அவர்களுக்கு முன்னால் சீடன் ஒருவன் அவருக்கு மூங்கில் குழாயில் பாலை ஊற்றினான். அது மறைந்தது; அதற்குப்பதிலாக திராட்சைப் பழம் கொத்து கொத்தாக வந்தது  அவர்கள் முன்னால் பல அ ற்புதங்களைச் செய்வார்  ஒருமுறை அவர்களுக்கு முன்னால் ஒரு சீடனைப் பால் வாங்கிவர அனுப்பினார். அவன் பாலைக்  கொண்டுவந்து மூங்கில் குழாயில் ஊற்றினான்; அதைக் குடித்துவிட்டு அவன் கொண்டுவந்த டம்பளரைத் திருப்பிக் கொடுத்தார் அதைக் குலுக்கு என்றார். ஒரு ரூபாய் நாணயம் வந்தது; இப்படி ஐந்து முறை குலுக்கச் சொன்னார்; ஐந்து ரூபாய் நாணயங்கள் வந்தன; இதை பால்காரன் கடையில் கொடுத்துவிடு என்றார்.

****

காந்தார மாதுளம்  பழம் வந்த அற்புதம் என்ன ?

ஒருமுறை மஹாத்மா ஆத்மாராம்ஜியுடன் குடிடி பாபா தங்கி இருந்தார் அப்போது பெரும் கூட்டம் கூடியது. நாத்தீகர்களின் தலைவர் ஒருவரும் அந்தக்கூட்டத்தில் இருந்தார் பலரும்  ஏதேனும் அற்புதம் செய்யுங்கள் என்று மன்றாடினார். முதலில் உங்களுக்கு என்ன வேண்டும்? என்று சொல்லுங்கள் என்றார்; அந்த வட்டாரத்தில், மாதுளம் பழமே கிடையாது; ஒருவர் காண்டஹார் நகரில் விற்கப்படும் மாதுளம்  பழம் வேண்டும் என்று கேட்டார். தனது கையில் இருந்த ஒருகை க்குட்டையில் அதை வரவழைத்து அவரிடம் கொடுத்தார் ; எல்லோரும் அதைச் சுவைத்துவிட்டு சுவையான பழம் என்று கூறினார்கள்

****

மருத்துவ அறிவுக்குச் சான்றுகள் என்ன ?

குடிடி பாபா பல நோயாளிகளை மூலிகை மூலம் குணப்படுத்தினார்; கந்தகதத்திலிருந்து எண்ணெய் வடித்து மருந்தாகப் பயன்படுத்தினார். அதே கந்தகத்திலிருந்து மற்றவர்களும் முயற்சி செய்தபோது வரவில்லை; அவர்கள் ஏன் எஙகளுக்கு வரவில்லை? என்று கேட்டபோது மணிமந்திரம் ஒளஷதம் மூன்றும்  தெரிந்தால்தான் வரும் என்றார்; சிக்கலான மருந்துகளைத் தயாரிக்க மருத்துவர்களுக்கு உதவினார். பாதரசத்தைக் கெட்டியாக்கி அதை வைத்துக்கொண்டு குடிடி பாபா வானில் பறந்தார். ஒருவருக்கு குழந்தை இல்லை; தனக்கு மகப்பேறு கிடைக்க அருள் புரியவேண்டும் என்று பிரார்த்தித்தவுடன் தங்க பஸ்பத்தைக் குடிடி பாபா கொடுத்தார். அவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைத்தது. இவ்வாறு எண்ணற்ற அற்புதங்களைச் செய்த குடிடி பாபா பற்றி, அவருக்கு சம காலத்தில் வாழ்ந்த சுவாமி சிவானந்தா எழுதுவதால் நாம் அதை அப்படியே நம்பலாம்.

–subham—

Tags- நாத்தீகர்கள் ,பில்குவா  ,குடிடி பாபா , சுவாமி சிவானந்தா, அற்புதங்கள், ந ஹம் ந தும் ,தர்பார் கம்

Leave a comment

Leave a comment