சந்தானம் சீனிவாசன் அவர்களுக்கு அஞ்சலி – 2 (Post No.13,964)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.964

Date uploaded in London – 3 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

 ஞான மயம் நிகழ்ச்சிகளில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நவக்கிரகக்ங்கள் , சித்த வைத்தியம் பற்றி சுமார் பத்து உரைகளை நிகழ்த்தியவர் சென்னை சந்தானம் சீனிவாசன் )

ஞானமயம் நிகழ்ச்சி 1-12-2024 அன்று சந்தான சீனிவாசன் அவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டது. திரு ச. நாகராஜன் நிகழ்த்திய உரை இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.

சந்தானம் சீனிவாசன் அவர்களுக்கு அஞ்சலி – 2

அடுத்து திரு சந்தானம் சீனிவாசன் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள இன்னொரு புத்தகம் நவகிரகங்கள் – கலைக் களஞ்சியம்

இதன் விலை ரூ 100.  85 பக்கங்கள்

கிடைக்கும் இடம் : http://www.pustka.co.in

தொலைபேசி எண் 91 7418555884 

இந்த நூலுக்கு அவர் வழங்கியுள்ள முன்னுரை இது:

நவகிரகங்கள் – கலைக் களஞ்சியம்

தமிழ் உலகில், ‘நவகிரகங்கள் – கலைக் களஞ்சியம்’ என்ற இந்த நூலை சமர்ப்பிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

இளமை முதல் ஜோதிடத்தில் ஒரு ஈடுபாடு எனக்கு உண்டு. மதுரையில் தினமணியில் ராசிபலன் எழுதி வந்த திரு ரங்கநாத ஜோசியர், காரைக்குடியைச் சேர்ந்த, ஓலைச் சுவடிகள் மூலம் சித்த வைத்தியம், ஜோதிடம் இவற்றை நுணுக்கமாக அறிந்து எங்களுக்குக் கூறி வந்த, ஶ்ரீ கிருஷ்ண ஐயர், முகத்தைப் பார்த்தவுடன் வருங்காலம் உரைக்க வல்ல மதுரை காளி ஜோஸியர் உள்ளிட்டோருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டதால் பல விஷயங்களை அறிந்து கொண்டேன்.

பரசுராமரால் ஸ்தாபிக்கப்பட்ட ஶ்ரீ ஐயப்பனின் விக்ரஹத்தை மீண்டும் கண்டெடுத்து அச்சன்கோவிலில் பிரதிஷ்டை செய்து அச்சன்கோவிலை நிர்மாணித்த ஆயக்குடி ஶ்ரீ ஸ்வாமிஜி கிருஷ்ணா அவர்கள் எங்கள் குடும்பத்தினருக்கு குரு. அவர் அருளால் பல தெய்வீக நுட்பங்கள் விளங்கின.

இது தவிர பல பழம் பெரும் ஜோதிட புத்தகங்கள், சாஸ்திர நூல்கள் இவற்றையும் இல்லத்தில் எனது நூலகத் தொகுப்பில் சேர்க்க முடிந்தது.

இதன் பலனாகவே இந்தத் தொடரை என்னால் உருவாக்க முடிந்தது.

லண்டனிலிருந்து வாரம் தோறும் ஒளிபரப்பாகி வந்த ஞானமயம் ஒளிபரப்பில் நவகிரகங்களைப் பற்றிப் பேசும் வாய்ப்பை திரு கல்யாண்ஜி மற்றும் திரு ஸ்வாமிநாதன் ஆகியோர் வழங்கினர்.

உலகெங்கிலுமிருந்தும் இதைக் கேட்ட பல்லாயிரக் கணக்கானோர் இந்த உரைகளை ரசித்துக் கேட்டதோடு பயனுள்ள உரைகள் என்று பாராட்டினர்.

இவை உடனடியாக கட்டுரைகளாக லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களின் www.tamilandvedas.com  பிளாக்கிலும் பிரசுரிக்கப்பட்டன.

இந்த நூலை உருவாக்குவதில் இவர்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். அனைவருக்கும் எனது நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

அடுத்து உரைகளை நூல் வடிவில் ஆக்க உதவி செய்த திரு ச.நாகராஜன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

இவற்றைத் தொகுக்கும் போது பல்வேறு விதங்களில் எனக்கு உதவி செய்த எனது மனைவி, மகன்கள், மகள், மருமகள்கள், சகோதரர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக!

இதைப் படித்து அவ்வப்பொழுது என்னைப் பாராட்டி ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றி.

இதை டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் கொண்டு வர முன் வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

சென்னை                          சந்தானம் சீனிவாசன்

31-7-2023

இதற்கு அடியேன் வழங்கியுள்ள அணிந்துரை இது:

வேத அங்கங்கள் ஆறில் ஜோதிடமும் ஒன்று. இது  மிக அகன்ற ஆழமான நுட்பமான கலை.

மற்ற கலைகள் எல்லாம் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே உள்ளன. மிகவும் தேவையான காலத்தில் அவை உதவாது. ஆனால் வைத்தியம்,ஜோதிடம், மந்திரம் ஆகியவையே உயிர் காக்கும் கலைகள் என்று கீழ்க்கண்ட சுபாஷிதம் கூறுகிறது.

அன்யானி சாஸ்த்ராணி விநோத மாத்ரம்

   ப்ராப்தேஷு காலேஷு நதைச்ச கிஞ்சித்

சிகித்ஸித ஜ்யோதிஷ மந்த்ரஹதா

   பதே பதே ப்ரத்யய பாவஹந்தி

மனிதனின் வாழ்வில் அன்றாடம் தோன்றும் பிரச்சினைகள் ஏராளம்.

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தத்துவஞானிகளுல் ஒருவரான டபிள்யூ. டபிள்யூ. பார்ட்லி ஆங்கிலத்தில் ஒரு சுவையான சிறு அறிவுரையைத் தருகிறார் இப்படி:

For every ailment under the Sun

There is a remedy, or there is none;

If there be one, try to find it;

If there be none, never mind it.

 ― W.W. Bartley

ஆதவனுக்குக் கீழுள்ள மனிதனின் ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உண்டு அல்லது இல்லை. உண்டென்றால் அதைக் கண்டுபிடி; இல்லையென்றால் அதைப் பற்றிக் கவலையே படாதே என்பதே இதன் பொருள்.

ஆனால் ஹிந்து சாஸ்திரங்களோ ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உண்டு; ஒரு பரிகாரம் உண்டு என்று திடமாகக் கூறுவதோடு வழிமுறைகளையும் விளக்குகின்றன.

அந்த வகையில் நமது வாழ்வில் ஒரு பெரும் பங்கை வகிக்கும் நவகிரகங்கள் நல்லனவற்றையும் தீயனவற்றையும் நமக்கு நல்கின்றன – நமது பழைய நல்ல மற்றும் தீய வினைகளுக்கு ஏற்ப!

ஆனால் தீமையான விளைவுகள் ஏற்படக்கூடிய சூழ்நிலையில் அவற்றை மாற்றவோ அல்லது குறைந்த விளைவுகளை மட்டும் நம்மை அதிகம் பாதிக்காதபடி ஏற்படுத்தவோ நவகிரக வழிபாடு விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வழிபாட்டிற்கு நவகிரகங்களைப் பற்றிய உரிய ஞானம் நமக்கு வேண்டும்.

அதற்கு இந்த நூல் மிக அருமையாக உதவி செய்கிறது.

 நவகிரகங்களைப் பற்றிய அரிய விவரங்களை இது தருகிறது. ஆகவே பிரச்சினைகளைத் தீர்க்கும் கலைக்களஞ்சியமாக அமைகிறது.

வாழ்க்கையை நலமுள்ளதாகவும், வளமுள்ளதாகவும் ஆக்குவதற்கு உதவும் நூல்கள் மிகச் சில தான். அவற்றில் மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது இந்த நூல்

இதை நமக்கு அளிக்கும் திரு சந்தானம் சீனிவாசன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தனது ஆழ்ந்த அறிவுடன் அனுபவத்தைக் குழைத்து அவர் இந்தக் கட்டுரைகளை உருவாக்கியுள்ளார்.

இதை நம்மில் ஒவ்வொருவரும் படித்து மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தெரியப்படுத்தினால் அது அவர்களுக்கு நாம் செய்யும் பெரிய உதவியாக அமையும்.

நவ கிரகங்களைப் பற்றி அறிவோம்; உரிய முறையில் வழிபடுவோம். வளமான வாழ்வைப் பெறுவோம்.

நன்றி வணக்கம்.

பங்களூர்                                                       ச.நாகராஜன்

31-7-23

இந்த நூலில் உள்ள அத்தியாயங்கள் 10

அத்தியாயங்கள்

 1. சூரியனே போற்றி!

 2. அம்புலிமாமா வாவா!

 3. மங்களம் தரும் அங்காரகன்!

 4. புத்தி தரும் புதன்!

 5. குரு பகவான்!

 6. சௌபாக்யம் அருளும் சுக்கிரன்!

 7. சனீஸ்வர பகவான்!

 8. ராகு பகவான்!

 9. கேது பகவான்!

10. நவக்ரஹ மஹா மந்த்ரம்!

பெயருக்கேற்ப இது நவகிரகங்கள் பற்றிய ஒரு கலைக்களஞ்சியம் என்பதில் ஐயமில்லை.

அவரது நினைவைப் போற்றுவோம். அவருக்கு நமது அஞ்சலியைச் செலுத்துவோம்.

நன்றி, வணக்கம்.

***

tags– சந்தானம் சீனிவாசன்,  அஞ்சலி – 2,  நவகிரகங்கள் – கலைக் களஞ்சியம்

Leave a comment

Leave a comment