Post No. 13,973
Date uploaded in London – 5 DECEMBER 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஜெர்மானிய அறிஞர்கள் சம்ஸ்க்ருத மொழிக்கு மட்டும் சேவை செய்யவில்லை; தமிழ், மலையாளம் போன்ற மொழிகளின் வளர்ச்சிக்கும் உதவினர். ஹெர்மன் குண்டர்ட் என்பவர் வங்காளி, ஹிந்துஸ்தானி, மலையாள, தமிழ் மொழிகளைக் கற்றார். அவர் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக இந்தியாவுக்கு வந்தார். கேரளத்திலுள்ள தலைச் சேரியில் தங்கி கிறிஸ்தவ மதத்தைப் பரப்பினார். அதற்காக மலையாளத்தைக் கற்று பைபிளின் புதிய ஏற்பாட்டு NEW TESTAMENT பகுதியை மலையாள மொழியில் ஆக்கினார்; அத்தோடு மலையாளம்- ஆங்கில அகராதியையும் தயாரித்தார்.
ஹெர்மன் குண்டெர்ட் 1814- ஆம் ஆண்டில் ஜெர்மனியில் உள்ள ஸ்டுட்கார்ட் நகரில் பிறந்தார்; துர்பிங்கன் பல்கலைக்கழகத்தில் சமயம் பற்றி கற்றார். கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக இந்தியாவுக்குச் செல்ல முடிவு செய்து லண்டனில் ஹிந்துஸ்தானி, வங்காளி மொழிகளைக் கற்ருவியது கேரளத்திலுள்ள தலைச்சேரி நகரில் பேசல் BASEL MISSION மிஷனில் பணியாற்றினார் .
1836–ஆம் ஆண்டில் முதலில் திருநெல்வேலிக்கு வந்தார் ; அங்கு மதப் பிரசார வேலையில் இருந்த
போது தமிழ் மொழியைக்கற்று பைபிள் /புதிய ஏற்பாடு தொடர்பான சொற்களை வைத்து கிரேக்க- தமிழ் அகராதியை அச்சிட்டார்.
மங்களுருக்குச் சென்று கன்னட மொழியையும் கற்றார் ; அதற்குப் பின்னர் தலைச்சேரிக்கு வந்தார். அவரும் அவருடைய மனைவியும் மலையாள மக்களைப் போல வாழ வேண்டும் என்று எண்ணி ஒரு குடிசையில் வாழ்ந்தனர். அரிசிச் சோற்றினையும் தினை வகைத் தானியங்களையும் உண்டனர். பின்னர் உடல் நலம் குன்றியவுடன் அந்த உணவுவகைகளைக் கைவிட்டு வழக்கம் போல மாமிச உணவுகளுக்குத் திரும்பினார்கள் கன்னட, மலபார்/ மலையாள ஊர்களில் இரண்டு ஆண்டுகளுக்கு அரசாங்கப் பள்ளி இன்ஸ்பெக்டராகவும் பணிபுரிந்தார். உடல்நலம் குன்றவே 1859 ஆம் ஆண்டில் ஜெர்மனிக்குத் திரும்பினார்.
HERMANN GUNDERT 1814-1893
ஹெர்மன் குண்டர்ட்
பிறந்த தேதி – 4-12-1814
இறந்த தேதி – 25-4-1893
பிறந்த ஊர் – STUDGART ஸ்டுட்கார்ட்
கல்வி கற்ற இடம் – TURBINGEN UNIVERSITY துர்பிங்கன் பல்கலைக்கழகம்
வேலைபார்த்த இடம் – தலைச்சேரி INDIA AND GERMANY/ஜெர்மனி
எழுதிய அல்லது மொழிபெயர்த்த நூல்கள்
பைபிள் புதிய ஏற்பாட்டிலுள்ள கிரேக்க- தமிழ் அகராதி
மலையாள இலக்கணம்
மலையாள கவிதைகள், உரைநடைத் தொகுப்பு
மலையாள கிறிஸ்தவ மதப் பத்திரிகைகள்
மலையாள பழமொழிகள்
பைபிளின் மலையாள மொழிபெயர்ப்பு- புதிய ஏற்பாடு மட்டும்
மலையாள பாடப் புஸ்தகங்கள்
மலையாள — ஆங்கில அகராதி
இவை தவிர ஜெர்மன் ஓரியண்டல் சொசைட்டியின் இதழ்களில் கட்டுரைகள் .
சம்ஸ்க்ருதத்தில் உள்ள தமிழ்ச் சொற்கள் என்ற கட்டுரையில் தாவரங்கள் மற்றும் சில பொருட்கள் எப்படி உரு மாறி வழங்குகின்றன என்று எழுதினார் .
மலையாளிகளிடையே கிறிஸ்தவத்தைப் பரப்புவதற்காக அதன் இலக்கண இலக்கியங்களைக் கற்றுப் பாடல்களையும் எழுதினார்; அதை மலையாள கிறிஸ்தவர்கள் இன்றும் பாடி வருகின்றனர் .
ஜெர்மனிக்குத் திரும்பியவுடன் கிறிஸ்தவத்தைப் பரப்பும் மிஷன் மேகஸின் என்ற பத்திரிகைக்கு ஆசிரியர் ஆனார். அதிலும் அவர் கட்டுரைகளை எழுதினார் . . அப்போதுதான் அவரது சிறந்த படைப்பான மலையாள -ஆங்கில அகராதி (1872) அச்சானது; கோட்டயத்தில் நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் 1973 ஆம் ஆண்டில் அதன் புதிய பதிப்பினை வெளியிட்டார்கள்.
அவர் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டு, 1893 -ஆம் ஆண்டில் இறந்தார்.
அவர் இறந்தாலும் அவருடைய பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் இந்தியத் தொடர்பினை விடாமல் வைத்துக்கொண்டனர். பேரர்களில் ஒருவரான ஹெர்மன் ஹெஸ்ஸே HERMANN HESSE என்பவர் புகழ்பெற்ற ஜெர்மானியக் கவிஞர் ஆவார்.
—-SUBHAM—
TAGS- மலையாள அகராதி , ஹெர்மன் குண்டர்ட், HERMANN GUNDERT