Post No. 13,976
Date uploaded in London – 6 DECEMBER 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தெலுங்கு மொழிக் கவிஞர் போதனாவைத் தெரியுமா ? (Post No.13,976)
போதனா (Bammera Pothana (1450–1510)
ஆந்திரத்தின் புகழ்மிகு வேமனா கதையைக் கண்டோம். போதனா கதையையும் கேளுங்கள்
போதனா யார்? எங்கே ,எப்போது வாழ்ந்தார் ?
தெலுங்கு மொழியில் பாகவத நூலை எழுதி அம்மக்களின் நாவிலும் இதயத்திலும் நீங்காத நினைவு பெற்றவர் போதனா.
ஆந்திரத்தில் கடப்பா மாவட்டத்தில் ஒன்றிவிட்டாவில் 600 ஆண்டுகளுக்கு முன்னர் பிராமண குடும்பத்தில் பிறந்தார்.
அவருடைய தந்தையின் பெயர்- கேசனா;
தாயின் பெயர்- லக்ஷ்மியம்மா.
போதனா பிறந்த இடம் , காலம் பற்றி சில கருத்து வேறுபாடுகள் உண்டு தெலுங்கானாவில் உள்ள பம்மெரா கிராமத்தில் பிறந்த தாவும் சொல்லுவார்கள்
அவர் கால அரசர் – Padma Nayaka king of Rachakonda ராசகோண்டாவின் பத்ம நாயக்க.
அவருடைய குரு யார் ?
அவர் சிறு வயதில் அதிகம் கற்கவில்லை. ஒரு நாள் வயலில் மாட்டு மேய்த்துக் கொண்டிருந்தபோது , யோகி ஜிதாநந்தர் அவரைச் சந்தித்து ஞான உபதேசம் செய்தார். அதுமுதற்கொண்டு அவர் ஆன்மீக ஞானம் பெற்றார்.
போதனா என்ன நூல்களை எழுதினார் ?
போதனா தெலுங்கு மொழியில் கவிதை வடிவில் கிருஷ்ணரின் கதை சொல்லும் பாகவதத்தை எழுதினார். அது தவிர நாராயண சதகம், போகினி தாண்டகம், வீரபத்ர விஜயம் ஆகிய நூல்களையும் எழுதினார். ஸ்ரீ சிங்க பூபாலன் என்பவரின் கள்ளக்காதலி மீது இவர் எழுதியது போகினி தாண்டகம்.
இராம பிரானே அவருக்கு தரிசனம் தந்து, பாகவதத்தை எழுதச் சொன்னார். இதை அவரே கவிதையில் எழுதியுமுள்ளார்
పలికెడిది భాగవతమట
పలికించెడి వాడు రామభధృండట నే
పలికిన భవహర మగునట
పలికెద వేరొండు గాథ పలుకగనేల
PalikeDidhi Bhagavatamata
Palikinchedivadu Ramabhadrundata Ne
Palikina Bhavaharamagunata
PalikedaVerondu Gaatha PalukagaNela
Translated it means : “That which is spoken is the Bhagavatam and the one who made me speak/chant this is Lord Rama. The result of chanting this (Bhagavatamata) is ultimate freedom, the Liberation of soul. So, let me sing it, since there is no other story better than this (Bhagavatam).”
முதல் அற்புதம் என்ன ?
போதனாவின் உறவினரின் பெயர் ஸ்ரீநாதர். அவர் வட்டார அரசரின் ஆஸ்தானக் கவிஞர்; பெரிய பண்டிதர். போதனாவைக் காண பல்லக்கில் வந்தார். அப்போது போதனா பாவாதம் எழுதிக் கொண்டிருந்தார்; அவருடைய மகன் மல்லண்ணா , வயலில் உழுது கொண்டிருந்தார் . ஸ்ரீ நாதர் தனது சக்தியைக் காட்டுவதற்காக முன் பக்கத்திலுள்ள பல்லக்குத் தூக்கிகளை நகரச் சொன்னார். அப்படியும் பல்லக்கு முன்னே நகர்ந்தது . உடனே போதனா, நுகத்தடியிலுள்ள ஒரு மாட்டினை அவிழ் த்துவிடு என்று மகனிடம் சொன்னார். இன்னும் ஒரு மாடு வழக்கம்போல உழுதது. பின்னர் ஸ்ரீ நாதர் பின்புறமுள்ள பல்லக்குத் தூக்கிகளையும் விலகுங்கள் என்றார்; அப்படியும் பல்லக்கு அந்தரத்தில் ஊர்ந்து வந்தது. உடனே போதனா தன் மகனிடம் இரண்டாவது மாட்டையும் அவிழ்த்து விடு என்றார் அப்படிச் செய்தபின்னரும் ஏர் தானாகவே உழுது கொண்டிருந்தது; உடனே ஸ்ரீ நாதர் பல்லக்கிலிருந்து இறங்கி அவரிடம் மன்னிப்புக் கோரினார்.
இரண்டாவது அற்புதம் என்ன ?
பாகவத நூலை அரசரிடம் சமப்ப்பித்தால் நல்ல வெகுமதியும் புகழும் கிடைக்கும் என்று போதனாவிடம் ஸ்ரீநாதர் சொன்னார். போதனா பதிலே சொல்லவில்லை; ஆனால் ஸ்ரீநாதர், அரசரிடம் போய் , போதனா வரப்போவதாகச் சொல்லிவிட்டார். பல நாட்கள் ஆகியும் போதனா வராததால் காவலாட்களை ஏவி அவரை இழுத்து வருமாறு அனுப்பினார். ஆனால் அவர்களை பன்றி கள் தாக்கி அழித்தன. வீட்டுக்குத் தீ வைக்கும் படி சேவகர்களை அரசன் அனுப்பினான். ஆனால் மன்னரின் மாளிகையே தீப்பிடித்தது.
மூன்றாவது அற்புதம் என்ன ?
கோபம் கொண்ட அரசன் போதனாவை கிராமத்திலிருந்தே விரட்டினான்; அரசனுடைய செல்வமெல்லாம் அழியத் தொடங்கியது; பின்னர் போதனாவை அழைத்து நிறைய செல்வத்தை அளித்து ஆதரித்தான் .
இவ்வாறு வாழ்நாள் முழுதும் இறைவனே வந்து போதனாவுக்கு உதவினார்.
நான்காவது நிகழ்ச்சி என்ன ?
போதனா எழுதிய பாகவத நூலில் ஒரு தவறு இருப்பது போல ஸ்ரீநாதர் கருத்து தெரிவித்தார் அதாவது கஜேந்திர மோட்சம் அத்தியாயத்தில், விஷ்ணு கையில் சார்ங்கம் இருப்பதாக எழுதவில்லையே என்றார். அவருக்குப் பாடம் கற்பிக்க வேண்டி போதனா ஒரு தந்திரம் செய்தார். ஸ்ரீ நாதரின் மகனை ஓரிடத்தில் பாதுகாப்பாக ஒளித்துவிட்டு , அவர் சாப்பிடும் போது, உங்கள் மகன் பாழுங்கிணற்றில் விழுந்துவிட்டான் என்று போதனா சொன்னார். அவர் பாதி சாப்பாட்டினை நிறுத்திவிட்டுப் பாழுங்கிணற்றுக்கு ஓடிவந்தார். கயிறும், தூக்குவதற்கான கருவிகளும் இல்லாமல் எப்படிக் காப்பாற்றப்போகிறீர்கள்? என்று கேட்டப்போது விழித்தார். பின்னர் மகன் பாதுகாப்பாக இருப்பதைத் தெரிவித்தார்; அப்போது கஜேந்திர மோட்சத்தை விளக்கினார். உங்கள் மகனைக் காப்பாற்ற எந்தவிதக் கருவியும் எடுக்காமல் கிணற்றுக்கு ஒடி வந்தீர்களே ! அதைவிட பக்கதர்களிடையே இறைவனுக்கு கருணையும் அவசரமும் உண்டு; ஆகையால் நான் சார்ங்கம் பற்றிக் குறிப்பிடவில்லை என்றார்.
அவருடைய தெலுங்கு மொழி பாகவதம் அவருக்கு அழியாத புகழை ஈட்டித்தந்தது. பாகவத நூலின் தெலுங்குப் புஸ்தகத்தை ஓடும் கார்ட்டூன் திரைப்படமாக எடுக்க அமெரிக்க நாசா விஞ்ஞானி புட்சா மல்லிக் முயற்சி எடுத்துள்ள செய்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கில நாளேட்டில் வெளியானது
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் THE NEW INDIAN EXPRESS
Updated on:
29 Sep 2019, 5:27 am
As part of keeping Telugu’s beloved poet Pothana’s Bhagavata poems alive for generations to come, a retired scientist of NASA Putcha Mallik is planning to make the animated versions of Telugu Bhagavatham.
Putcha Mallik, who was currently living in Houston, was in touch with Sony for bringing the animated Telugu Bhagavatham.
“Mallik is planning to bring animated versions in Telugu, Kannada, Hindi and English. So that pan-India will know about the greatness of Pothana and Telugu Padyam (metered poetry),” said retired IAS officer MVS Prasad, who was organising various programmes locally to promote Pothana’s magnum opus, along with Mallik.
–subham—-
Tags– போதனா , தெலுங்கு மொழி, பாகவதம், ஸ்ரீநாதர்.