ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்தி மடல் 8-12-2024 (Post.13,986)

Written by London Swaminathan

Post No. 13,986

Date uploaded in London – 8 DECEMBER 2024 .             

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

COLLECTED FROM POPULAR DAILIES AND EDITED BY LONDON SWAMINATHAN

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை  வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

அனைவருக்கும் வணக்கம்

இன்று ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் எட்டாம் தேதி 2024-ம் ஆண்டு

*****

அமெரிக்காவில் இந்துக்களைக் கேலி செய்யும் துணிகள் விற்பனை– இந்துக்கள் கண்டனம்

அமெரிக்கா முழுதும் ஊர்தோறும் சூப்பர் மார்க்கெட்டுகளை வைத்துள்ள வால்மார்ட் நிறுவனத்தை இந்துக்கள் பாகிஷ்காரிக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் விரும்புகின்றன. அவர்கள் விற்பனை செய்யும் பெண்களின் , ஆண்களின் உள்ளாடைகள் முதல் காலணிகள் வரை 120 பொருட்களில் பிள்ளையார் படத்தைப் போட்டு அவமதிப்பு செய்துள்ளார்கள். இதை ஒருவர் ட்விட்டர் TWITTER தளத்தில் வெளியிட்டதால் வெளி உலகிற்குத் தெரியவந்தது. இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தபின்னர் அவைகளை விலக்கிக்கொள்வதாக  வால்மார்ட் அறிவித்துள்ளது; ஒவ்வொரு பண்டிகை சீசனிலும் அமெரிக்க நிறுவனங்கள் இந்திய நடிகர் நடிகையர் போல அசிங்கமான மட்டரக  பப்ளிசிட்டி –அதாவது மட்டரகமான விளம்பரம் தேடுவதற்காக== இந்துக்களைக் கிண்டல் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன .

வால்மார்ட் முதலிய கடைகள இந்துக்களை பரிகாசிக்கும் செயல்களை செய்வது இது முதல் தடவை இல்லை ; அவர்களுக்கு இது வாடிக்கை ஆகிவிட்டது; இதன் மூலம் அவர்களுக்கு அந்தக் கடைகளை பற்றிய விளம்பரம் கிடைக்கிறது. இந்துக்கள் சாதுக்களாக இருப்பதால் ஆண்டு தோறும், சீசன் தோறும் இது நடைபெறுகிறது இந்தியாவிலும் இந்து விரோத அரசியல் வாதிகளும் நடிகர், நடிகையரும் இதே உத்தியைக் கையாண்டு இந்துக்களை அவமதிக்கின்றனர்; கண்டனம்  தெரிவித்தவுடன் மன்னித்துவிடுங்கள் என்று சால்ஜாப்பு சொல்வதும்  வழக்க மாகிவிட்டது. அவர்களுக்கு பயங்கர அபராதமும் அதிக தண்டனையும் கொடுத்தால்தான் இத்தகைய அசிங்கமான மட்டரக  பப்ளிசிட்டி தேடுவோரிடமிருந்து இந்துக்களுக்கு விமோசனம்  கிடைக்கும் என்று இந்து சமய பார்வையாளர்கள் கருதுகின்றனர்

XXXXXXX

இந்துத் தலைவர்கள் மீது பிரிட்டிஷ் அரசு தாக்குதல்

பிரிட்டனின் இரண்டு புகழ்பெற்ற இந்துத் தலைவர்களின் கெளரவ விருதுகளை ரத்து செய்து அரசரின் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவர்கள் காலிஸ்தானி ஆதரவாளர்களை எதிர்த்தும்  இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ஆதரித்தும் பேசியதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர் என்று பார்வையையாளர்கள் கூறுகின்றனர்

இந்து கவுன்சில் அணில் பனோத் மற்றும் ரமி ரேஞ்சர் இருவரும் சிபிஇ CBE விருதினை இழக்கின்றனர். பிபிசி தவறான செய்தி வெளியிட்டதும் இதற்கு ஒரு காரணம்.

வங்க தேச இந்துக்கள் மீதான தாக்குதலையும் அவர்கள் கண்டித்தனர் பிரிட்டனில் சுதந்திரமான பேச்சுரிமை பழங்கதையாகிவிட்டது என்றும் இருவரும் கருத்து தெரிவித்தனர்.

பிரிட்டனில் லேபர் அரசு பதவி ஏற்றதிலிருந்து இந்துக்களுக்கு ஆபத்து அதிகரித்து வருகிறது; அரசர் பேரில் விருது வழங்கப்பட்டாலும் அவை அனைத்தும் ஆளும் கட்சியின் சிபாரிஸிலேயே வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

xxxxx

கத்தி முனையில் வங்கதேச இந்துக்கள் – பிரிட்டன் எம்.பி.க்கள் கண்டனம்

வங்க தேசத்தில் நடக்கும் இந்துக்களுக்கு எதிரான வன்முறைக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், ( Barry Gardiner ) பேரி கார்டினர் மற்றும் பிரித்தி படேல் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

கடந்த ஆகஸ்ட் முதல், வங்கதேசம் முழுவதும் 2,000 மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன என்றும், சிறுபான்மை இந்துக்களையே குறிவைத்து வன்முறைகள் நடத்தப்பட்டுள்ளன என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ( Barry Gardiner ) பேரி கார்டினர் கூறினார்

மேலும், தடை செய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி உள்ளிட்ட தீவிரவாத அமைப்புக்கள், இந்துக் கோவில்கள் மற்றும் இந்துக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதையும், இடைக்கால அரசின் அதிகாரிகள் இந்த வன்முறை சம்பவங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்காததையும் ( Barry Gardiner ) பேரி கார்டினர் சுட்டிக் காட்டினார்

மேலும், சின்மய் கிருஷ்ணதாஸ் பிரம்மசாரி கைது செய்யப்பட்டதைக் குறிப்பிட்ட ( Barry Gardiner ) பேரி கார்டினர், வங்க தேசத்தில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்றும் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார் .

*****

வங்க தேசத்தில் கொல்லப்படுகிற இந்துக்கள் மனிதர்களாக தெரியவில்லையா? – முதல்வருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி!

வங்க தேசத்தில் கொல்லப்படுகிற இந்துக்கள் மனிதர்களாக தெரியவில்லையா என  தமிழக முதல்வருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது : “நமது அண்டை நாடான வங்கதேசத்தில் நிகழக்கூடிய அசாதாரண சூழலில், இந்து சமுதாயத்தைச் சார்ந்த அப்பாவி பொதுமக்கள் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகின்றது.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற விதமாக, பாரதிய ஜனதா கட்சி சார்பாக நடைபெற்ற நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, பிற மாநிலங்களில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசாங்கம் அனுமதி மறுத்ததுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

வங்கதேசத்தில் நமது சகோதர சகோதரிகளான இந்து மக்கள் கொல்லப்படுவதை கண்டிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக பாஜக
தொண்டர்கள் மற்றும் தலைவர்களை கைது செய்ததன் மூலம், ‘போலி திராவிட மாடல்’ அரசானது பாசிச அரசு என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்துவிட்டது.

தமிழக முதல்வர் அவர்களே, உக்ரைனிலும், பாலஸ்தீனத்திலும் நடக்கின்ற போர்களில் இறந்து போகிறவர்கள் மட்டும் தான் மனிதர்களா? நமது அண்டை தேசத்தில் அப்பாவிகளாய் கொல்லப்படுகின்ற இந்து மக்கள், உங்கள் கண்களுக்கு மனிதர்களாகத் தெரியவில்லையா?

தொடர்ச்சியாக இதுபோன்ற பாசிச போக்கோடு செயல்பட்டு வரும்  இந்த ‘போலி திராவிட மாடல்’ அரசிற்கும், அதன் கைப்பாவையாக இயங்கி வருகின்ற தமிழக காவல் துறைக்கும், எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

*****

 வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து கோவை சிவானந்தா காலனியில் வங்கதேச இந்து உரிமை மீட்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பாரதீய ஜனதா கட்சியின்  மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது பேட்டியளித்த ஹெச்.ராஜா, வங்கதேசத்தில் நூற்றுக்கணக்கில் இந்துக்கள் கொல்லப்படுவதாக குற்றம்சாட்டினார். இந்து கோயில்கள் தாக்கப்படுவதாகவும், இந்தியர்களின் வர்த்தக நிறுவனங்கள் சேதப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

மறவனேரியில் ஆர்.எஸ்.எஸ் மாநில பொருளாளர் மகேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி அமைப்புகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 170 பேரை போலீசார் கைது செய்து பின்பு விடுவித்தனர்.

 *****

ஐ.நா. தலையிட சின்மயா மிஷன் சுவாமி மித்ரானந்தா வலியுறுத்தல்! 

வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான வன்முறைக்கு முடிவு கட்ட ஐ.நா. தலையிட வேண்டுமென சின்மயா மிஷன் சுவாமி மித்ரானந்தா வலியுறுத்தினார்.

சென்னையில் உள்ள சின்மயா மிஷன் சுவாமி மித்ரானந்த செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்துக்கள் சகிப்புத்தன்மை மிக்கவர்கள் என்றும், அமெரிக்காவில் இந்திய இந்துக்களே அதிக பட்டதாரிகளாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

வங்கதேச இந்துக்கள் அங்கேயே இருக்க வேண்டும் என்றும், வங்கதேச இந்துக்களுக்காக தனி பிராந்தியம் அமைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதனை  ஐ.நா. பரிசீலிக்க வேண்டும் என்றும் சுவாமி மித்ரானந்தா கூறினார்.

*****

இலங்கை ஐ.நா. அலுவலகம் முன் உலக இந்து அமைப்பு பேரவை ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் ஐக்கிய நாடுகள் அலுவலகம் முன்பு, அந்நாட்டு ஆர்ஆர்எஸ் மூத்த தலைவர் விஜயபாலன் தலைமையில் உலக இந்து அமைப்புகளின் பேரவையை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், சொத்துக்களை சூறையாடுதல் போன்ற சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்தும், வங்கதேசத்தில் சிறுபான்மையினராக வாழும் இந்துக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு வழங்க கோரியும் ஆர்ப்பாட்டக்கார்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

**************

சபரிமலை கோவிலில் நடிகர் திலீப்பிற்கு விஐபி தரிசனம் – தேவசம் போர்டு, போலீசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

பிரபல மலையாள நடிகர் திலீப் நேற்று சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு விஐபி தரிசனம் வழங்கப்பட்டதாக கேரள நாளிதழில்  இன்று செய்தி வெளியானது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு காத்திருந்தபோது நடிகர் திலீப்பிற்கு விஐபி தரிசனம் வழங்கப்பட்டதாகவும், அவர் தரிசனத்திற்கான முன்வரிசையில் மாலை கோவில் நடை அடைக்கும்வரை நின்றுள்ளார். இதனால், பிற பக்தர்கள் பல மணிநேரம் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததாகவும், அவர்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளா னதாகதாகவும் செய்தி வெளியானது.

இந்த செய்தியை அடிப்படையாக கொண்டு கேரள ஐகோர்ட்டு இன்று தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, நடிகர் திலீப்பிற்கு சபரிமலைகோவிலில் எந்த அடிப்படையில் விஐபி தரிசன வசதி வழங்கப்பட்டது என்று கோர்ட்டு கேள்வி எழுப்பியது. மேலும், நடிகர் திலீப்பிற்கு விஐபி தரிசனம் வழங்கியதற்கு  சபரிமலை தேவசம் போர்டு மற்றும் போலீசாருக்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.விரிவான அறிக்கை சமர்ப்பிக்க போலீசாருக்கு உத்தரவிட்ட ஐகோர்ட்டு, கோவிலின் சிசிடிவி காட்சிகளை  சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

*****

ராமாயணம்‘: லட்சுமணனாக நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர்

 சென்னை, நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதையை மையமாக வைத்து தயாராகும் ‘ராமாயணம்’ படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். கன்னட நடிகர் யாஷ் ராவணனாக வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

 இந்த படத்தில் அனுமானாக சன்னி தியோல், கும்பகர்ணனாக பாபிதியோல் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில் லட்சுமணனாக பிரபல நடிகர் ரவி துபே நடிக்கிறார். இதனை அவரே தற்போது தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், ‘ரன்பீர் கபூர் போன்ற ஒரு மெகா ஸ்டாருடன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறை. அவர் எனக்கு மூத்த சகோதரர் போன்றவர்’ என்றார்.

ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் ராமாயணம் படத்தின் முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளிக்கும் இரண்டாம் இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக உள்ளது. 

*******

 இந்தியர்கள் குறைந்தது 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்— ஆர் எஸ் எஸ் தலைவர் பேச்சு

மக்கள் தொகை குறைந்தால் சமூகம் இல்லாமல் அழிந்துவிடும் என்றும், இந்தியர்கள் குறைந்தது மூன்று குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்

ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பிறப்பு விகிதம் குறைந்து வருகின்றன. இதனால், அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சலுகைகளை அளிக்கப்படுகின்றன. உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் தற்போது இந்தியா உள்ளது. 2024ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை 138 கோடியிலிருந்து 142 கோடியாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

நாகபுரியில் நூல் வெளியீட்டு விழாவில் பேசுகையில் மோகன் பகவத் கூறியதாவது:- மக்கள் தொகை குறைந்து வருவது கவலை அளிக்கிறது. ஒரு சமூகத்தின் பிறப்பு விகிதம் 2.1 சதவிகிதத்திற்கும் கீழ் குறையும் போது சமூகம் அழிவை எதிர்கொள்கிறது என்று மாடர்ன் டொமகிரபிக் ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.

வெளியில் இருந்து எந்த அச்சுறுத்தலும் தேவையில்லை. தானாகவே அது மறைந்துவிடும். பல மொழிகளும் சமூகங்களும் இல்லாமல் போய்விட்டன. எனவே, நமது மக்கள் தொகை 2.1 சதவிகிதத்திற்கு கீழ் போகக் கூடாது. எனவே இதில் குறைவு ஏற்பட்டால் மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

xxxxxxx

மதமாற்றத்துக்கு பயன்படுத்தப்படும் வெளிநாட்டு நிதி —கோவை ‘ஏ3’ மாநாட்டில் பேச்சு

மதமாற்றத்துக்கு பயன்படுத்தப்படும் வெளிநாட்டு நிதி கோவை ‘ஏ3’ மாநாட்டில் பேச்சு

மதமாற்றத்துக்கு பயன்படுத்தப்படும் வெளிநாட்டு நிதி கோவை ‘ஏ3’ மாநாட்டில் பேச்சு

ADDED : டிச 02, 2024 04:16 AM

தேசம் முதலா அல்லது மதம் முதலா’ எனும் தலைப்பில், தேசியவாதி ஜெரோம் ஆன்டோ பேசியதாவது:

மதமாற்றம் இப்போது எளிதாக நடக்கிறது. ஒருவர் மதமாற்றம் செய்யப்பட்டால், அவர் இந்தியாவுக்கு எதிராக மாற்றப்படுகிறார் என அர்த்தம்.

உங்களது சனாதன நம்பிக்கையை மாற்றுகின்றனர். அவர்களின் கோட்பாடுகள் நம் தர்மத்துக்கு எதிராக உள்ளன. இதனால், சமூக மற்றும் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதி, மதமாற்றத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.

வங்கதேசம் இன்று’ என்ற தலைப்பில், ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று பேசியதாவது:

எத்தனையோ படையெடுப்புகளை தாண்டி, நம் பாரதம் நிலைத்து நிற்கிறது. நமக்கு சுதந்திரம் கிடைக்கும்போது, நாடு வெட்டி பிளக்கப்பட்டது. வீரம் மிக்க சீக்கியர், ஹிந்துக்கள் வசித்த பஞ்சாபில் பாதி மற்றும் லாகூர் நம்மிடமில்லை.

வங்கத்தில் பாதி நம்மிடம் இல்லை. தமிழகம் போல, வங்க மொழி இலக்கிய செழுமை வாய்ந்தது. 1905ல் வங்கப் பிரிவினைக்கு எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து, மத ரீதியாக தனி நாடு கோரி கலவரங்கள் வெடித்தன.

ஹிந்துக்கள் தாக்கப்பட்டனர்; துரத்தப்பட்டனர்.வங்க தேசம், பாகிஸ்தானுடன் இணைந்தபோது, ஹிந்துக்கள் இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர்.

வங்கதேச கலாசாரத்தை பாக்., ராணுவம் அழித்தது. இந்திய ராணுவம் சென்று, வென்று தனி வங்கதேசத்தை உருவாக்கி கொடுத்தது. அங்கு, 1972க்கு பிறகு, 26 சதவீதமாக இருந்த ஹிந்துக்கள் இன்று, 6 சதவீதமாக குறைந்துள்ளனர்.

கோவை: கோவையில் நடைபெற்று வந்த, ‘விழித்திரு, எழுந்திரு, உறுதியாக இரு’ என்ற, ‘ஏ3’ மாநாடு, ஆரோக்கியமான விவாதத்துடன் நிறைவடைந்தது.

****

இந்துக்களுக்கு எதிராக செயல்படும் தமிழக அரசு – இந்து முன்னணி குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்றும்தமிழக அரசின் செயல்பாடு இந்துக்களுக்கு எதிராக உள்ளது என்றும் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.

வங்கதேசத்தில் இந்துக்களின் உரிமைகளை மீட்கக்கோரி, மாவட்டத் தலைநகரங்களில் வரும் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக இந்து முன்னணி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் மற்றும் ஆர்எஸ்எஸ் கோட்டத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய காடேஸ்வரா சுப்பிரமணியம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்றும், உளவுத்துறை சரியாக செயல்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார். மேலும் குற்றவாளிகள் குறித்து காவல்துறையிடம் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதில்லை என்று தெரிவித்த அவர், தமிழக அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .

அடுத்த ஒளிபரப்பு

டிசம்பர்  15 –ஆம் தேதி லண்டன் நேரம் ஒருமணிக்கும் இந்திய நேரம் மாலை ஆறரை மணிக்கும்  நடைபெறும். வணக்கம்.

—-subham—-

TAGS- ஞானமயம் , உலக இந்து செய்தி மடல் 8-12-2024, world hindu news81224

Leave a comment

Leave a comment