Post No. 13,989
Date uploaded in London – 9 DECEMBER 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஜெர்மானிய அறிஞர் Theodor Benfey (1809-1881) தியோடர் பென்பே, உலகப் புகழ்பெற்ற பஞ்ச தந்திரக் கதைகளை பற்றிய புதிய செய்திகளை நமக்கு அளிக்கிறார்.
பஞ்ச தந்திரக் கதைகளில் பதிமூன்று பகுதிகள் இருந்ததாகவும் அவைகள் அழிந்துபோய் இப்போது ஐந்து பகுதிகள் மட்டுமே இருப்பதாகவும் பென்பே சொல்கிறார்.
உலகிலுள்ள எல்லா விலங்குகள் (Fables) பற்றிய நீதிக் கதைகளையும் விரிவாக ஆராய்ந்து ஒப்பிட்டு நூல்களை எழுதிய அவர், எல்லாக் கதைகளும் இந்தியாவிலிருந்தே சென்றதாகவும் உறுதிபட மொழிகிறார் .
மங்கோலியர்களும் இந்தியக் கதைகளை பரப்பியதாக புதிய செய்தியையும் பென்பே பகிர்கிறார்.
அவர் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டது தென் இந்தியாவில் வழங்கி வந்த ஸம்ஸ்க்ருதச் சுவடிகள் ஆகும்.
சாமவேதத்தையும் ஆராய்ந்து நூல் வெளியிட்டார்
****
இதோ அவரது வரலாறு:
தியோடர் பென்பே(1809-1881) , ஒரு ஈடு இணையற்ற ஜெர்மானிய அறிஞர்; அவர் சம்ஸ்க்ருத மொழி மற்றும் மொழியியல் தொடர்பான நானூறு நூல்களை எழுதியுள்ளார்.
உலகில் வழங்கும் விலங்குகள் தொடர்பான எல்லா நீதிக் கதைகளையும் ஒப்பிட்ட பின்னர், அவை அனைத்தும் இந்தியாவிலிருந்து சென்றவைதான் என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்கிறார்.
அவர் ஜெர்மனியில் கோட்டிங்கன் நகருக்கு அருகில் 1809– ஆம் ஆண்டு பிறந்தார்; அவருடைய தந்தை ஒரு வணிகர். ஆயினும் யூத மத நூல்களை மகனுக்கு கற்பித்தார். தால்முட் நூலைக் கற்றவுடன் எபிரேய/ ஹீப்ரு மொழியில் ஆராய்ச்சி நடத்தினார் பின்னர் கிரேக்கம் , லத்தீன் மொழிகளைக் கற்று சம்ஸ்க்ருத மொழியின்பால் ஆர்வத்தைச் செலுத்தினார்
அவர் கோட்டிங்கன், மூனிச் நகர்களில் கல்வி கற்றார்
மத்தியதரைக்கடல் பண்பாடு பற்றிய ஆராய்ச்சிக்கு அவர் டாக்டர் பட்டம் பேராறு. பல இடங்களில் பேராசிரியர் வேலை பார்த்துவிட்டு கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் வாழ்நாளின் இறுதிவரை பேராசிரியர் பணியில் இருந்தார் ரஷிய மொழியையும் கற்றார்
பாரிஸ் பெர்லின் முதலிய நகரங்களில் அவருக்கு கெளரவ பதவிகள் அளிக்கப்பட்டன. கிரேக்கச் சொற்களின் மூலம்/ வேர் என்ற நூலை வெளியிட்டார்; எகிப்திய செமிட்டிக் மொழிகளையும் ஒப்பிட்டார்.
சாமவேதத்தை மொழி பெயர்த்து பிற்சேர்க்கையாக சொல் பொருள் விளக்கத்தையும் சேர்த்தார்; அந்த நூல் இன்றுவரை பயன்படுத்தப்படுகிறது.
சம்ஸ்க்ருத மொழியை விளக்க அவர் எழுதிய நூலில் பாணினியின் அரிய இலக்கண நூலை எளிதாக விளக்கினார்
முக்கியமான மொழிகளை அறிந்ததால், ஈசாப் கதைகளைப் போல உள்ள எல்லா மொழிக் கதைகளையும் ஒப்பிட்டு உலகில் இந்தியாதான் இவைகளை அளித்தது என்றார்; மங்கோலிய மொழியில் வேதாளக் கதைகள் மொழி பெயர்க்கப்பட்டதைப் படித்து பல புதிய ஆதாரங்களை முன்வைத்தார். இதன் மூலமாக மங்கோலியர்கள் செய்த பங்கு பணியை முதல் தடவையாக உலகிற்கு காட்டினார்; அது வரை அராபிய, பாரசீக மொழிகளில் பஞ்ச தந்திரம் இருந்ததை மட்டுமே உலகம் அறிந்து இருந்தது. சிரியா மொழியில் பஞ்ச தந்திரக் கதைகள் இருப்பதையும் கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்தார்..
****
· Theodor Benfey தியோடர் பென்பே (1809-1881)
· பிறந்த தேதி – 28 January 1809
· இறந்த தேதி – 26 June 1881
· பிறந்த ஊர் – கோட்டிங்கன் நகருக்கு அருகில்
· கல்வி கற்ற இடம் – TURBINGEN UNIVERSITY துர்பிங்கன் பல்கலைக்கழகம்
· வேலைபார்த்த இடம் – பிராங்க்பர்ட், ஹைடல்பர்க் கோட்டிங்கன் பேராசிரியர்
·
· Selected works: தியோடர் பென்பே எழுதிய அல்லது மொழிபெயர்த்த நூல்கள்
· De Liguris, 1828, Ph.D. thesis.
· Observationes ad Anacreontis Fragmenta Genuina (Observations on Anacreontis and Genuine Fragments), 1830. Venia Legendi dissertation.
· Über die Monatsnamen einiger alten Völker (Month Names of Ancient Peoples), 1836, in collaboration with Moritz A. Stern.
· Griechisches Wurzellexikon (Lexicon of Greek Roots), 1839.
· Über das Verhältniss der ägyptischen Sprache zum semitischen Sprachstamm (On the relationship of the Egyptian language to the Semitic language group), 1844
· The Cuneiform Inscriptions, 1847.
· The Hymns of Sama-Veda, 1848.
· The History of Oriental Philosophy in Germany, 1868.
· A Practical Grammar of the Sanskrit Language for the Use of Early Students, 1868.
· A Sanskrit-English Dictionary: With References to the Best Edition of Sanskrit Author and Etymologies and Comparisons of Cognate Words Chiefly in Greek, Latin, Gothic and Anglo-Saxon, 1866.
வேதங்களில் உள்ள இலக்கணத்தை விரிவாக ஆராய துவங்கினார்; ஆனால் அந்தப் பணியை முடிப்பதற்குள் அவரது ஆவி பிரிந்தது .
அவர் எழுதிய நூற்றுக்கணக்கான நூல்களில் பஞ்ச தந்திர கதை ஆராய்ச்சியும், சாமவேத ஆராய்ச்சியும் முதலிடம் வகிக்கின்றன.
–subham—
Tags- சாமவேதம், ஆராய்ச்சி, பஞ்ச தந்திரம், ஜெர்மானிய அறிஞர், தியோடர் பென்பே, Theodor Benfey,