சம்ஸ்க்ருத அகராதி தயாரித்த ஆட்டோ வான் போத்லிங்க் (Post No.13,994)

Written by London Swaminathan

Post No. 13,994

Date uploaded in London – 10 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அகராதி என்பது வெளிநாட்டு சம்ஸ்க்ருத அறிஞர்களுக்கு இன்றியமையாத நூலாக இருக்கிறது; இதைத் தயாரித்தவர் ஆட்டோ வான் போத்லிங்க் Otto von Böhtlingk. அவர் ரஷ்யாவிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் 1815– ஆம் ஆண்டில் பிறந்தார்.

அவர் தயாரித்த சம்ஸ்க்ருத அகராதி மிகப்பெரியது; அதில் நிறைய மேற்கோள்களையும் கொடுத்துள்ளார். ஜெர்மன் மொழியில் வெளியானது; பின்னர் ஆங்கிலத்திலும் வெளியானது. அதில் பல பிழைகள் இருந்ததால் அவரே  திருத்திய பதிப்புகளையும் வெளியிட்டார். Otto von Böhtlingk 1815-1904 ஆட்டோ வான் போத்லிங்க் ரஷ்யாவில் பிறந்த ஜெர்மானிய சம்ஸ்க்ருத அறிஞர் ; இவருக்கு சம்ஸ்க்ருதம், ரஷ்யன், ஜெர்மன், அராபிய பாரசீக மொழிகளும் தெரியும்

அவர் செய்த இன்னுமொரு குறிப்பிடத்தக்க பணி, பாணினியின் சம்ஸ்க்ருத இலக்கண நூலை வியாக்கியானங்களுடன் வெளியிட்டதாகும்.

ரஷ்யாவில் பிறந்தாலும் குடும்பத்தின் பின்னணி காரணமாக ஜெர்மன் குடிமகன் ஆனார்.  செயின்ட்  பீட்டர்ஸ்பர்க் நகரிலேயே ஜெர்மன் பள்ளியில் சேர்ந்து படித்தார்  பின்னர் பான் , பெர்லின் நகர்களுக்கு வந்து சம்ஸ்க்ருதம் கற்றார் . பாப் மற்றும் வான் ஸ்லேகல் ஆகியோர் சம கால அறிஞர்கள் ஆவர்.

அவர் பல நிறுவ னங்களில் (Royal Academy of Sciences) உறுப்பினராக நியமிக்கப்பட்டாலும் எந்தப் பணியினையும் ஏற்காமல் முழு நேரத்தையும் ஆராய்ச்சியிலும் எழுத்திலும் செலவிட்டார் ஜெர்மனியிலுள்ள ஜேனா, லெய்ப்சிக் நகரங்களுக்கும் சென்று பணிகளைத் தொடர்ந்தார் மரணப்படுக்கையில் இருந்த போதும் இந்து மத வேதம் பற்றி கட்டுரை எழுதினார்; அவர் 1-4-1904-ல் இறந்தார்.

பாணினியின் அஷ்டாத்யாயீ நூலை இந்திய அறிஞர்களின் பாஷ்யங்களுடன் முதலில் ஜெர்மன் மொழியில் வெளியிட்டார். பின்னர் அதற்கான அறிமுகம் , விளக்கங்களை எழுதினார் . ஜெர்மன் மொழியிலேயே விளக்கங்களை எழுதிச் சேர்த்தார்  தாது பாடம், பாணினியின் சொற்கள் இண்டெக்ஸ் ஆகியனவும் பின்னர் சேர்க்கப்பட்டன. சம்ஸ்க்ருதம் பயிலுவோருக்கு இது உதவியாய் இருந்தது

13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வோபதேவரின் முக்தபோதா என்ற இலக்கண நூலினையும் போத்லிங்க் வெளியிட்டார்.

நிறைய கட்டுரைகளையும் எழுதி பாணினீயத்தை விளக்கினார். சைபீரிய மொழிகள் பற்றியும் எழுதினார்.

காளிதாசரின் சாகுந்தலத்தையும் சூத்ரகரின் மிருச்சகக்கடிகத்தையும் எடிட் செய்து வெளியிட்டார் .

·         அவர் எழுதிய அல்லது எடிட் செய்து வெளியிட்ட நூல்கள் :

·         Vopadevas Grammatik (Saint Petersburg, 1847)

·         Über die Sprache der Jakuten (Saint Petersburg, 1851)

·         Indische Sprüche, a series of Sanskrit apothegms and proverbial verses (2nd ed. in 3 parts, Saint Petersburg, 1870–1873, to which an index was published by Blau, Leipzig, 1893)

·         a critical examination and translation of the Chandogya Upanishad (Saint Petersburg, 1889)

·         a translation of the Brihadaranyaka Upanishad (Saint Petersburg, 1889)

Sanskrit-German dictionary, Sanskrit-Wörterbuch (7 vols., Saint Petersburg, 1853–1875; shortened ed. (without citations) 7 vols, Saint Petersburg, 1879–1889), which with the assistance of his two friends, Rudolf Roth (d. 1895) and Albrecht Weber (b. 1825), was completed in 23 years.

He also published several smaller treatises, notably one on Vedic accentÜber den Accent im Sanskrit (1843).

வேதத்திலுள்ள உச்சரிப்பு முறைகளை விளக்கி முதல் முதலில் ஜெர்மன் மொழியில் எழுதிய பெருமையும்  இவருக்குண்டு.

இவருடைய மாபெரும் சம்ஸ்க்ருத அகராதியை— இவர் மீண்டும் மீண்டும் திருத்தி வெளியிட— 23 ஆண்டுகள் ஆயின. இது 7+7 தொகுதிகளைக் கொண்டது.

–SUBHAM—

ஆட்டோ வான் போத்லிங்க்சம்ஸ்க்ருத அகராதி, செயின்ட் பீட்டர்ஸ்பர்க், Otto von Böhtlingk

Leave a comment

Leave a comment