SRI RAMA AND SITA AND LAKSHMANA COMING BACK TO AYODHYA FROM SRI LANKA BY THOUGHT POWERED SPACE SHUTTLE CALLED PUSHPAK.
WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.993
Date uploaded in London – —10 DECEMBER 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயணத்தில் வரங்கள் (22)
ராமாயணத்தில் வரங்கள் (22) சரபங்க மஹரிஷியும் ஶ்ரீ ராமரும் பரஸ்பரம் பேசியது!
ச. நாகராஜன்
.
ஆரண்ய காண்டத்தில் ஐந்தாவது ஸர்க்கமாக அமையும் ‘ சரபங்கர் அக்னிப் பிரவேசம் செய்வது” என்ற ஸர்க்கத்தில் சரபங்கர் ராமரிடம் அனைத்தையும் அர்ப்பணிப்பதைச் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம்.
சரபங்கரின் அர்ப்பணிப்பை அவர் ஶ்ரீ ராமரிடம் இவ்விதம் கூறுகிறார்:
அக்ஷயா நரசார்தூல மயா லோகா ஜிதாச்சுபா:
ப்ராஹ்மத்யாச்ச நாகப்ருஷ்டத்யாச்ச ப்ரதிக்ருஹ்னீஸ்வ மாமகான்\ ||
நரசார்தூல – புருஷோத்தமனே
மயா – என்னால்
சுபா: – புண்ணியமானவைகளும்
அக்ஷயா – அழிவற்றவைகளும்
ப்ராஹ்மத்யாச்ச – பிரம்மனைச் சேர்ந்தவைகளும்
நாகப்ருஷ்டத்யாச்ச – மேல் உலகைச் சேர்ந்தவைகளுமான
லோகா: – உலகங்கள்
ஜிதா: – (என்னால்) சம்பாதிக்கப்பட்டிருக்கின்றன
மாமகான் ச – என்னுடைய எல்லாவற்றையும்
ப்ரதி க்ருஹ்னீஷ்வ – நீ ஏற்றுக்கொள்
– ஆரண்ய காண்டம் 5-ம் ஸர்க்கம், ஸ்லோக எண் 28
இப்படி சரபங்கர் சொல்ல ஶ்ரீ ராமர் பின்வருமாறு பதில் சொல்கிறார்:
அஹமேவாஹரிஷ்யாமி சர்வான் லோகான்மஹாமுனே |
ஆவாஸம் த்வஹமிச்சாமி ப்ரதிஷ்டமிஹ கான்னே ||
மஹாமுனே – மா முனிவரே
அஹம் ஏவ – நானே
லோகான் – உலகங்கள்
சர்வான் – எல்லாவற்றையும்
ஆஹரிஷ்யாமி – ஸ்வீகரிக்கிறேன்
அஹம் – நான்
இஹ – இப்போது
கான்னே ப்ரதிஷ்டம் – காட்டில் குறிப்பிட்டு காட்டப்பட்டதான
ஆவாஸம் து – ஒரு இருப்பிடத்தை மட்டும் காட்டுமாறு
இச்சாமி – வேண்டுகின்றேன்
– ஆரண்ய காண்டம் 5-ம் ஸர்க்கம், ஸ்லோக எண் 30̀̀
\
உடனே சரபங்கர் அவரை சுதீக்ஷ்ண ரிஷியைச் சென்று காணுமாறு கூறுகிறார்.
பின்னர் அக்னியை வளர்த்து அதில் புகுந்து தன் உடலை நீத்து தேஜோ மயமாக விளங்கி பிரம்மலோகத்தை அடைகிறார்.
இங்கு சரபங்கரின் கூற்றை ஶ்ரீ ராமர் எற்றுக் கொண்டதையும் அவர் கேட்டதற்கு இணங்க சுதீஷ்ணரின் ஆசிரமத்திற்குச் செல்லுமாறு சரபங்கர் கூறியதையும் காண்கிறோம்.
**