சிங்கப்பூர்  சிங்கப்பூர் வீர மா காளி அம்மன் கோவில் – கார்த்திகைத் திருவிழா (Post.14,000)

Written by London Swaminathan

Post No. 14,000

Date uploaded in Sydney, Australia – 18 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

நான் வெள்ளிக்கிழமை (13-12-2024) கார்த்திகைப் பெருவிழா நாளன்று சிங்கப்பூ ரிலுள்ள புகழ் பெற்ற சிங்கப்பூர் வீர மா காளி அம்மன் கோவிலுக்குச் சென்றேன்.நல்ல சுவாமி தரிசனம் செய் தேன். ஒரே ஒரு குறை; முருகன் சந்நிதியை அலங்காரத்துக்காகத் திரைபோட்டு மூடிவிட்டார்கள்;முருகன் சந்நிதிக்கு முன்னால்,வேத முழக்கங்களுடன் ஹோமம் நடந்து கொண்டிருந்தது ஏனைய சந்நிதிகளை தரிசனம் செய்தேன். நல்ல கூட்டம். பல வெளினாட்டுச் சுற்றுலாப்பயணிகளும் வெளியிலிருந்து புகைப்படம் எடுத்தனர். நானும் கோவிலுக்குள்ளேயும் வெளியேயும் படங்கள் எடுத்தேன்.

சிங்கப்பூரின் பழமையான இந்துக் கோவிலான சிங்கப்பூர் வீர மா காளி அம்மன் கோவில், லிட்டில் இந்தியா என்ற பேட்டையில் இருக்கிறது; நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து பதினைந்து நிமிடத்தில் நடந்தே போனோம். ஒரே நகைக்கடைகளும் புடவைக்கடைகளும், ஊதுபத்தி மணமும்  பரவிக்கிடக்கிறது.

நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழைய கோவில்; அந்தக் காலத்தில் சிங்கப்பூருக்கு வந்த தமிழர்கள் கட்டிய கோவில் இது. சிறிது தொலைவில் வெங்கடேஸ்வரர் கோவிலும் உளது  பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் ஈர்க்கும் முக்கிய தலமாகும்.

நான் சமீபத்தில் அந்த கோவிலுக்கு சென்ற போது, அதே சமயத்தில் கார்த்திகை திருவிழா நடைபெற்று கொண்டிருந்தது. புனித நாளில் செல்வது அதிர்ஷ்டமாக இருந்தாலும், ஒரு சிறிய ஏமாற்றமும் இருந்தது; இது போன்ற திருவிழா நாட்களில் எல்லோரும் யாரைத் தரிசிக்க வருகிறார்களோ ,அவரைப் பார்க்கமுடியாமல் செய்து விடுகிறார்களா; நான் 30 ஆண்டுக் காலத்துக்கு மதுரையில் வாழ்ந்தபோதும் இதே அனுபவம்தான். பிள்ளையார் சதுர்த்தி அன்று பிள்ளையாரைத் திரைபோட்டு மணிக்கணக்கில் மூடிவிடுவார்கள்; ஆனால் எங்களுக்கு இந்த வாழக்கம் தெரியுமாதலால் அதிகாலையில் போய் தரிசனம் செய்து விடுவோம். மதுரையில் வடக்கு மாசிவீதி- மேல மாசிவீதி சந்திப்பிலுள்ள நேரு ஆலால சுந்தர விநாயகரைத் தரிசிக்காமல் நான் சாப்பிட்டதில்லை. இது எல்லாம் 1987-க்கு முந்திய கதை.

ஒரு கேள்வி ?

எவ்வளவோ ஆகம விதிகளை மீறிவிட்டார்கள்; கோவிலுக்குள் கண்டதும் கடையதுகளும் கர்ப்பக்கிரகம் வரை செல்கின்றன. எந்த கோவிலிலும் அரை மணி நேரத்துக்கு மேல் இப்படி எந்தத் தடையும் இல்லாமல் செய்வது நல்லது.  சுவாமியைத் தரிசிக்கக் கட்டணம் வைக்கிறார்கள். பூஜை காலங்களை மாற்றுகிறார்கள்; அபிஷேகம் ஆராதனைகளை மட்டும் அரை மணி நேரத்துக்குள் முடிக்கலாமே; அல்லது திரையையாவது திறந்து வைக்கலாமே. பக்கதர்கள் ஏமாறாமல் இருப்பார்கள்;

நாங்கள் பள்ளி மாணவர்களாக இருந்த போது கண்ணாமூச்சி விளையாடிய, உலகப் புகழ் பெற்ற மீனாட்சி கோவிலில், எங்களை ஒரு மணி நேரத்துக்கு மேல் கியூ—வில் நிறக வைத்துவிட்டார்கள்; காரணம் கேட்டபோது ஆறுகால பூஜைகளையும் ஒரே காலத்தில் செய்வதாக ஒருவர் முனுமுனுத்தார்;  சரியா தவறா என்று தெரியவில்லை. இது சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது.

எங்கள் வீட்டு அடுத்தவீட்டுக்காரர் ஒரு குஜராத்தி; அவரிடம் மதுரை மீனாட்சி  கோவில் பற்றிப் பெருமையாகப் பேசினேன். அவர் தொச்சுக் கொட்டிவிட்டு நானும் போனேன்; இனிமேல் தென்னிந்தியக் கோவிலுக்குப் போவதில்லை என்று முடிவு செய்துவிட்டேன். எங்கள் குஜராத்துக்கு வந்து பாருங்கள் இது போன்றவை இராது என்றார்

ராமேஸ்வரம், திருப்பதி கோவில்களில் நடக்கும் அட்டூழியங்கள் நமக்குத் தெரியும். அரசாங்கத் கட்டுப்பாட்டிலிருந்து கோவில்களை விடுவித்தால் 90 சதவிகிதம் சரியாகிவிடும்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல எதிர்த்தாற்போலுள்ள மிகவும் புகழ்பெற்ற கோமள விலாஸில் சாப்பிட்டேன். காலை11 மணிக்கே முழுச்  சாப்பாடு! வடை, பாயசம் அப்பளத்துடன் கிடைத்தது. சிங்கப்பூருக்குப் பயணம் செய்யும் வெஜிட்டேரியன்கள் கோமள விலாஸ் போகாமல் இருக்க மாட்டார்கள் .

—subham—

Tags–சிங்கப்பூர்  சிங்கப்பூர் வீர மா காளி அம்மன் கோவில், கார்த்திகை, திருவிழா,   கோமள விலாஸ்

Leave a comment

Leave a comment