
Post No. 14,013
Date uploaded in Sydney, Australia – 24 DECEMBER 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள்!-3
முந்தைய கட்டுரைகள்
ஆண்டாளும் நகைகளும் -1
பறை என்றால் என்ன ?- 2
ஆண்டாளும் ஏனைய ஆழ்வார்களும் பல சொற்களையும் பெயர்களையும் மொழியியல் ரீதியில் மாற்றி எழுதியுள்ளனர். இந்த ஸ்பெல்லிங் மாற்றங்கள், சந்தி/ புணர்ச்சி விதிகள் ஸம்ஸ்க்ருதத்தைப் போன்ற விதிகளைப் பின்பற்றுகின்றன. உலகிலேயே இன்றுவரை புணர்ச்சி வீதிகளுடன் வாக்கியங்களை எழுதும் முறை சம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் மட்டுமே உள்ளதால் இந்த இரண்டு மொழிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதில் ஐயமில்லை. ஆனால் எப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியன தனிப்பட்ட விதிகளைப் பின்பற்றுகின்றனவோ அது போல தமிழும் ஸம்ஸ்க்ருதமும் தனிப்பட்ட விதிகளைப் பின்பற்றுகின்றன. இந்திய மொழிகள் அகர வரிசையிலும் (alphabetical order) , அகராதி அமைப்பிலும் (dictionary), வாக்கிய அமைப்பிலும் (Sentence Construction) கிட்டட்டத்தட்ட ஒரே அமைப்பினை உடையன. உலகிலேயே மிகப்பெரிய நாடுகளில் ஒன்று என்பதாலும் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை உடையதாலும் அதிக ஜனத்தொகை உடையதாலும் வெளிநாட்டுப்படையெடுப்புகளாலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. உலகில் பல மொழிகளும் நம்முடைய விதிகளைப் பின்பற்றுவது இந்துக்களின் குடியேற்ற வழிகளைக் காட்டுகின்றன. நாம் பரப்பிய பண்பாட்டின் எச்ச சொச்சங்களை அங்கே காண முடிகிறது. உலகில் பழைய மொழிகளில் சம்ஸ்க்ருதம் ஒன்றில் மட்டுமே ‘ஜ’ என்னும் எழுத்து உள்ளது . இது எப்படி ‘ய’ ஆக மாறுகிறது என்பதைக் கண்டால் இந்துக்களின் செல்வாக்கு பரவிய இடங்களை எளிதில் அறியலாம்.
****
இப்பொழுது ஆண்டாள் லிங்குஸ்டிக்ஸ் — மொழியியல் பற்றிக் காண்போம்
சம்ஸ்க்ருதத்தில் ஆ என்ற ஒலியில் முடியும் சொற்களைத் தமிழ்ப் படுத்தும்போது ஐ என்ற ஒலியில் முடிப்போம் :
பகவத் கீதா – கீதை
சீதா – சீதை
கோதா – கோதை
கோதா என்ற சொல் ரிக் வேதத்திலேயே 1-4-2 இருக்கிறது
மாலா – மாலை; ராதா = ராதை
****
விஷ்ணுசித்தர் /ன் என்பது பெரியாழ்வாரின் பெயர்
விஷ்ணுசித்தர் /ன்= விட்டுசித்தன்
ஷ்ணு= ட்டு
பூனை என்ற விலங்கினைக் குறிக்க சங்க இலக்கியம் முழுதும் பூசை என்றுதான் எழுதுவார்கள் ;
வண்டி என்பதைச் சொல்ல பாண்டில் என்றுதான் எழுதினார்கள்.
கம்சன் = கஞ்சன்
ஆழ்வார்பாடல்களில் கஞ்சன் என்றே காண்கிறோம்
ம்ச= ஞ்ச M=N
******
திருப்பாவை 4
ஆழிமழைக் கண்ணா …….
பாழியன்தோளுடைப் பற்பநாபன் கையில் ;
பத்மநாபன் = பற்பநாபன்
உத்சவம் = உற்சவம்
த் = ர்/ ற் T/ D= R
*****
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலை நீராடி
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலை நீராடி
பாற்கடலுள்= பால் கடலுள்
ற்= ல் R=L
நாட்காலே = நாள் காலை
ட் = ள் D= L
கிரிசைகள்= கிரியைகள்
சை = யை
****
கலுழன் = கருடன்
ஆழ்வார் பாடல்களில் இந்தச் சொல்லைக் காண்கிறோம் .
மாயோன் மேய காடுறையுலகமும் – என்ற தொல்காப்பிய வரிக்கு எழுதிய உரைகளிலும் முல்லை நிலப் பறவை கருடன் என்பதைச் சொல்லும்போது இப்படித் தமிழ்ப் படுத்தியுள்ளனர் .
கலுழன் = கருடன் L=R
கலுழன் = கருடன் L=D
கலுழன் = கருடன் GALUZAN=GARUDAN
****
ஆழ்வார் பாடல்களில் ஒடித்து என்பதை ஓசித்து என்று பாடி இருப்பதைக் காண்கிறோம்.
டி = சி D=S
சம்ஸ்க்ருத எழுத்துக்களை தமிழ்ப் படுத்தும் இடங்களில் இதை மேலும் காணலாம்
பாஷை = பாடை D=S
விஷயம் = விடயம் D=S
இந்த மாற்றங்கள் உலகெங்கிலும் காணப்படுகின்றன ; குறிப்பாக ஆர் =எல் = டி R=L=D மாற்றங்களையும் டி= எஸ் D=Sமாற்றங்களையும் காணலாம்
ஆங்கிலத்தில் டி T என்பதை எஸ் S என்று உச்சகரிப்பதை நூற்றுக் கண கான சொற்களில் காண்கிறோம் TION=SION
*****
திருப்பாவை 10
துளசி = துழாய் Tulsi= Tuzaay
நாற்றத் துழாய்முடி நாராயணன் — என்ற வரி பத்தாவது பாடலில் வருகிறது
*****
இப்போது ஒரு கேள்வியை எழுப்புவோம்
தமிழர்களைப் பார்த்து இப்படி ஆங்கிலேயர்கள் செய்தார்களா அல்லது ஆங்கிலேயர்களைப் பார்த்து தமிழர்கள் இப்படிச் செய்தார்களா ; இரண்டும் இல்லை.
மொழிகள் மாற்றாரின் செல்வாக்கு இல்லாமலேயே இப்படி மாறும் என்றே சொல்லவேண்டும் ;ஷன் SION என்பதை TION என்று ஆங்கிலேயர்கள் சொல்வது ஓசித்து = ஒடித்து என்பதைப் போன்றதே.
*****
Tulasī (तुलसी) refers to the “holy basil” துளசி என்பதை ஏன் துழாய் என்று தமிழுக்கே உரித்தான சிறப்பு ழ கரத்துடன் மாற்றினர் என்று புரியவில்லை; அதே போல கருடன் என்பதையும் ஏன் கலுழன் என்று கஷ்டப்படுத்தினர் (!!!) என்றும் புரியவில்லை!
—subham—
Tags- ஆண்டாளும் மொழியியலும், லிங்குஸ்டிக்ஸ் , திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள்-3,