WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,030
Date uploaded in Sydney, Australia – —30 DECEMBER 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயணத்தில் வரங்கள் (27)
ராமாயணத்தில் வரங்கள் (27) சூர்ய பகவான் மேரு மலைக்குத் தந்த வரம்!
ச. நாகராஜன்
.
கிஷ்கிந்தா காண்டத்தில் நாற்பத்திரண்டாவது ஸர்க்கமாக அமைவது ‘மேற்குத் திக்கில் ஸுஷேஸணனை அனுப்புதல்’ என்ற ஸர்க்கமாகும்.
சுக்ரீவன் சீதா தேவியைத் தேட தன் வீரர்கள் அனைவரையும் எல்லா திசைகளிலும் அனுப்புகிறான்.
மரீசியின் புத்திரனான மாரீசனையும் பெயர் பெற்ற வானரனான அர்ச்சிஷ்மானையும் மேற்குத் திக்கில் சீதையைத் தேட அனுப்புகிறான்.
அவர்களுக்கு மேற்குத் திசையில் உள்ள அனைத்து இடங்களையும் தெள்ளத் தெளிவாக விளக்குகிறான்.
ஸுராஷ்ட்ரம், பாஹ்லீகம், சூர தேசம் பீம தேசம் உள்ளிட்ட பல தேசங்களைச் சொல்லி விட்டு மேரு பர்வதத்தைப் பற்றி வர்ணித்து விளக்குகிறான் சுக்ரீவன்.
தேஷாம் மத்யே ஸ்திதோ ராஜா மேருருத்தரப்ர்வத: |
ஆதித்யேன ப்ரஸன்னேன ஷைலோ தத்தவர: புரா ||
தேஷாம் – அவைகளின்
மத்யே – நடுவில்
உத்தரபர்வத: – மிகச் சிறந்த பர்வதமும்
ராஜா – எல்லாவற்றிலும் பெரிதுமாகிய
மேரு: – மேரு என்னும் பர்வதம் (இது மகா மேரு பர்வதம் அல்ல; வேறொரு மேரு பர்வதம்)
ஸ்தித: – இருக்கிறது
புரா – முன்னொரு காலத்தில்
ஷைல: – அந்தப் பர்வதமானது
ப்ரஸன்னேன – உள்ளங்குளிர்ந்த
ஆதித்யேன – சூரிய பகவானால்
தத்தவர: – பின் கண்ட வரத்தைப் பெற்றது
தேனைவமுக்த: ஷைலேந்த்ர: ஸர்வ ஏவ த்வதாஸ்ரயா |
மத்ப்ரஸாஜாத்பவிஷ்யந்தி திவா ராத்ரௌ ச காஞ்சனா: ||
ஷைலேந்த்ர: – மலையரசன்
தேன – அவரால்
ஏவம் – பின்கண்டபடி
உக்த: – வரமளிக்கப்பட்டது’
த்வதாஸ்ரயா – உன்னை அடைந்திருக்கும்
ஸர்வ ஏவ – எல்லோருமே
திவா ராத்ரௌ ச – பகலிலும் இரவிலும்
காஞ்சனா: – பொன்னாக
மத்ப்ரஸாஜாத் – என்னுடைய அருளினால்
பவிஷ்யதி – ஆகக் கடவன்
த்வயி யே சாபி வத்ஸ்யந்தி தேவகந்தர்வதானவா: |
தே பவிஷ்யந்தி ரக்தாஸ்ச ப்ரபயா காஞ்சனா இவ ||
யே – எந்த
தேவ கந்தர்வஸ்ச தானவா: ச – தேவர்களும் கந்தர்வர்களும் தானவர்களும்
த்வயி – உன் மீது
வத்ஸ்யந்தி அபி – வசிக்கின்றார்களோ
தே ச – அவர்களும்
ப்ரபயா – ஒளியால்
காஞ்சனா இவ – பொன்னென
ரக்தா: – சிவந்தவர்களாய்
பவிஷ்யந்தி – இருப்பார்கள்
– 42வது ஸர்க்கம், ஸ்லோகங்கள் 38,39,40
இப்படி மேரு மலை பெற்ற வரத்தை சுக்ரீவன் விளக்குகிறான். இந்த வரம் கேட்டுப் பெறப்பட்டதா சூரியபகவானால் அருளித் தரப்பட்டதா என்ற விளக்கம் தரப்படவிலை. என்றாலும் கூட மேரு மலை பெற்ற அற்புதமான வரத்தைப் பற்றி அறிய முடிகிறது.
**