
Post No. 14,039
Date uploaded in Sydney, Australia – 1 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அருட்பிரகாச ராமலிங்க சுவாமிகள்/ வள்ளலார் பொன்மொழிகள்
வள்ளலாரின் தெய்வமணிமாலை பாடலிலிருந்து தொகுக்கப்பட்ட பொன்மொழிகள்
****
பண்டிகை நாட்கள்:– ஜனவரி 1-புத்தாண்டு தினம்; 6-குரு கோவிந்த ஜெயந்தி; 10-வைகுண்ட ஏகாதசி; 12- சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி ; தேசீய இளைஞர் தினம் ; 13- போகிப் பண்டிகை; ஆருத்ரா தரிசனம் 14- பொங்கல்/ மகர சங்கராந்தி 15- மாட்டுப்பொங்கல் ;கணுப்பொங்கல்- திருவள்ளுவர் தினம்; 16-உழவர் தினம்; 23- நேதாஜி ஜெயந்தி 26-குடியரசு தினம்; 29-தை அமாவாசை; 30- காந்திஜி நினைவு தினம்
*****
அமாவாசை- ஜனவரி 29; பெளர்ணமி-13; ஏகாதசி உண்ணாவிரத நாட்கள் -10, 25
சுப முஹுர்த்த நாட்கள்
- January 16: Thursday, with a Subh Tithi of Tritiya
- January 19: Sunday, with an auspicious marriage muhurat from 12:28 PM to 8:28 PM
- January 23: Thursday, with an auspicious marriage muhurat from 3:38 PM to 5:06 PM
- January 24: Friday, with an auspicious marriage muhurat from 7:17 AM to 5:37 PM
- January 26: Sunday, with an auspicious marriage muhurat from 2:04 PM to 7:32 PM
- *****

ஜனவரி 1 புதன் கிழமை
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவுகல வாமைவேண்டும்
***
ஜனவரி 2 வியாழக் கிழமை
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை
பேசா திருக்க்வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
****
ஜனவரி 3 வெள்ளிக் கிழமை
மத மானபேய்
பிடியா திருக்கவேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
மறவா திருக்கவேண்டும்
****
ஜனவரி 4 சனிக் கிழமை
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.
****
ஜனவரி 5 ஞாயிற்றுக் கிழமை
ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத
இயல்பும்என் னிடம்ஒருவர்ஈ
திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல்
இடுகின்ற திறமும்
****
ஜனவரி 6 திங்கட் கிழமை
இறையாம்
நீஎன்றும் எனைவிடா நிலையும்நான் என்றும்உள
நினைவிடா நெறியும்
****
ஜனவரி 7 செவ்வாய்க் கிழமை
அயலார்
நிதிஒன்றும் நயவாத மனமும்மெய்ந் நிலைநின்று
நெகிழாத திடமும்
****
ஜனவரி 8 புதன் கிழமை
உலகில்
சீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத்
தீங்குசொல் லாததெளிவும்
திரம்ஒன்று வாய்மையும் து‘ய்மையும் தந்துநின்
திருவடிக் காளாக்குவாய்
****
ஜனவரி 9 வியாழக் கிழமை
வள்ளல்உனை உள்ளபடி வாழ்த்துகின் றோர்தமை
மதித்திடுவ தன்றிமற்றை
வானவரை மதிஎன்னில் நான்அவரை ஒருகனவின்
மாட்டினும் மறந்தும்மதியேன்
****
ஜனவரி 10 வெள்ளிக் கிழமை
கள்ளம்அறும் உள்ளம்உறும் நின்பதம்அ லால்வேறு
கடவுளர் பதத்தைஅவர்என்
கண்எதிர் அடுத்தைய நண்என அளிப்பினும்
கடுஎன வெறுத்துநிற்பேன்
****
ஜனவரி 11 சனிக் கிழமை
எள்ளளவும் இம்மொழியி லேசுமொழி அன்றுண்மை
என்னை ஆண் டருள்புரிகுவாய்
என்தந்தை யேஎனது தாயேஎன் இன்பமே
என்றன்அறி வேஎன்அன்பே
****

ஜனவரி 12 ஞாயிற்றுக் கிழமை
காமஉட் பகைவனும் கோபவெங் கொடியனும்
கனலோப முழுமூடனும்
கடுமோக வீணனும் கொடுமதம் எனுந்துட்ட
கண்கெட்ட ஆங்காரியும்
ஏமம்அறு மாச்சரிய விழலனும் கொலைஎன்
றியம்புபா தகனுமாம்இவ்
வெழுவரும் இவர்க்குற்ற உறவான பேர்களும்
எனைப்பற்றி டாமல்அருள்வாய்
****
ஜனவரி 13 திங்கட் கிழமை
சேமமிகு மாமறையின் ஓம்எனும் அருட்பதத்
திறன்அருளி மலயமுனிவன்
சிந்தனையின் வந்தனைஉ வந்தமெய்ஞ் ஞானசிவ
தேசிக சிகாரத்னமே
****
ஜனவரி 14 செவ்வாய்க் கிழமை
அன்புடைய நின்அடியர் பொன்அடியை உன்னும்அவர்
அடிமலர் முடிக்கணிந்தோர்க்
கவலமுறு மோகாமம் வெகுளிஉறு மோமனத்
தற்பமும்வி கற்பம்உறுமோ
****
ஜனவரி 15 புதன் கிழமை
வள்ளல்உன் சேவடிக்கண்
மன்னாது பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை
வாய்ந்துழலும் எனதுமனது
பேய்கொண்டு கள்உண்டு கோலினால் மொத்துண்டு
பித்துண்ட வன்குரங்கோ
****
ஜனவரி 16 வியாழக் கிழமை
பேசுறு குலாலனாற் சுழல்கின்ற திகிரியோ
பேதைவிளை யாடுபந்தோ
காய்கொண்டு பாய்கின்ற வெவ்விலங் கோபெருங்
காற்றினாற் சுழல்கறங்கோ
காலவடி வோஇந்த்ர ஜாலவடி வோஎனது
கர்மவடி வோஅறிகிலேன்
****
ஜனவரி 17 வெள்ளிக் கிழமை
கற்ற்மே லவரொடும் கூடிநில் லேன்கல்வி
கற்கும்நெறி தேர்ந்துகல்லேன்
கனிவுகொண் டுவதுதிரு அடியைஒரு கனவினும்
கருதிலேன் நல்லன்அல்லேன்
குற்றமே செய்வதென் குணமாகும்
****
ஜனவரி 18 சனிக் கிழமை
அப்பெருங் குற்றம்எல் லாம்குணம்எனக்
கொள்ளுவது நின்அருட்குணமாகும் என்னில்என்
குறைதவிர்த் தருள்புரிகுவாய்
பெற்றமேல் வரும்ஒரு பெருந்தகையின் அருள்உருப்
பெற்றெழுந் தோங்குசுடரே
****
ஜனவரி 19 ஞாயிற்றுக் கிழமை
. சேவலம் கொடிகொண்ட நினைஅன்றி வேறுசிறு
தேவரைச் சிந்தைசெய்வோர்
செங்கனியை விட்டுவேப் பங்கனியை உண்ணும்ஒரு
சிறுகருங் காக்கைநிகர்வார்
****
ஜனவரி 20 திங்கட் கிழமை
நாவலங் காரம்அற வேறுபுகழ் பேசிநின்
நற்புகழ் வழுத்தாதபேர்
நாய்ப்பால் விரும்பிஆன் து‘ய்ப்பாலை நயவாத
நவையுடைப் பேயர் ஆவார்
****
ஜனவரி 21 செவ்வாய்க் கிழமை
நீவலந் தரநினது குற்றேவல் புரியாது
நின்றுமற் றேவல்புரிவோர்
நெல்லுக் கிறைக்காது புல்லுக் கிறைக்கின்ற
நெடியவெறு வீணராவார்
****

ஜனவரி 22 புதன் கிழமை
பிரமன்இனி என்னைப் பிறப்பிக்க வல்லனோ
பெய்சிறையில் இன்னும்ஒருகால்
பின்பட்டு நிற்குமோ முன்பட்ட சூட்டில்
பெறுந்துயர் மறந்துவிடுமோ
****
ஜனவரி 23 வியாழக் கிழமை
இரவுநிறம் உடைஅயமன் இனிஎனைக் கனவினும்
இறப்பிக்க எண்ணம்உறுமோ
எண்ணுறான் உதைஉண்டு சிதைஉண்ட தன்உடல்
இருந்தவடு எண்ணுறானோ
****
ஜனவரி 24 வெள்ளிக் கிழமை
கரவுபெறு வினைவந்து நலியுமோ அதனைஒரு
காசுக்கும் மதியேன்எலாம்
கற்றவர்கள் பற்றும்நின் திருஅருளை யானும்
கலந்திடப் பெற்றுநின்றேன்
****
ஜனவரி 25 சனிக் கிழமை
உடைஉண்டு கொடையும்உண்டு
உண்டுண்டு மகிழவே உணவுண்டு சாந்தம்உறும்
உளம்உண்டு வளமும்உண்டு
தேர்உண்டு கரிஉண்டு பரிஉண்டு மற்றுள்ள
செல்வங்கள் யாவும்உண்டு
தேன்உண்டு வண்டுறு கடம்பணியும் நின்பதத்
தியானமுண் டாயில்
****
ஜனவரி 26 ஞாயிற்றுக் கிழமை
உளம்எனது வசம்நின்ற தில்லைஎன் தொல்லைவினை
ஒல்லைவிட் டிடவுமில்லை
உன்பதத் தன்பில்லை என்றனக் குற்றதுணை
உனைஅன்றி வேறும்இல்லை
இளையன்அவ னுக்கருள வேண்டும்
****
ஜனவரி 27 திங்கட் கிழமை
எத்திக்கும் என்உளம் தித்திக்கும் இன்பமே
என்உயிர்க் குயிராகும்ஓர்
ஏகமே ஆனந்த போகமே யோகமே
என்பெருஞ் செல்வமே
****
ஜனவரி 28 செவ்வாய்க் கிழமை
நன் முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான
மூர்த்தியே முடிவிலாத
முருகனே நெடியமால் மருகனே சிவபிரான்
முத்தாடும் அருமைமகனே
****
ஜனவரி 29 புதன் கிழமை
பத்திக் குவந்தருள் பரிந்தருளும் நின்அடிப்
பற்றருளி என்னைஇந்தப்
படியிலே உழல்கின்ற குடியிலே ஒருவனாப்
பண்ணாமல் ஆண்டருளுவாய்
****
ஜனவரி 30 வியாழக் கிழமை
நான்கொண்ட விரதம்நின் அடிஅலால் பிறர்தம்மை
நாடாமை ஆகும் இந்த
நல்விரத மாம்கனியை இன்மைஎனும் ஒருதுட்ட
நாய்வந்து கவ்விஅந்தோ
தான்கொண்டு போவதினி என்செய்வேன்
ஜனவரி 31 வெள்ளிக் கிழமை
தளராமை என்னும்ஒருகைத்
தடிகொண் டடிக்கவோ வலியிலேன் சிறியனேன்
தன்முகம் பார்த்தருளுவாய்
வான்கொண்ட தெள்அமுத வாரியே மிகுகருனை
மழையே மழைக்கொண்டலே
வள்ளலே என்இருகண் மணியேஎன் இன்பமே
மயில்ஏறு மாணிக்கமே
தான்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.
*****
MY OLD ARTICLES /POSTS
வள்ளலார் பொன் மொழிகள்- அக்டோபர் 2021 காலண்டர் (Post No.10,154) 29 September 2021
****
மேலும் 30 வள்ளலார் பொன்மொழிகள்; நவம்பர் 2021 நற்சிந்தனை காலண்டர் (10,280) October 31, 2021
****
டிசம்பர் 2021 காலண்டர் – 31 வள்ளலார் பொன்மொழிகள் (Post No.10,386) November 28, 2021
****
—-Subham—-
Tags- வள்ளலார் , பொன்மொழிகள் , அருட்பிரகாச ராமலிங்க சுவாமிகள்