ராமாயணத்தில் வரங்கள் (26) துந்துபி பெற்ற வரம்! (Post No.14,035) 

Rama killing the demons

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,035

Date uploaded in Sydney, Australia – 31 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (26)

ராமாயணத்தில் வரங்கள் (26) துந்துபி என்ற அசுரன் பெற்ற வரம்!

ச. நாகராஜன்

.

ஆரண்ய காண்டத்தில் வரங்களைப் பார்த்ததைத் தொடர்ந்து இப்போது நாம் கிஷ்கிந்தா காண்டத்தில் விவரிக்கப்பட்டுள்ள வரங்களைக் குறித்துப் பார்க்கலாம்.

கிஷ்கிந்தா காண்டத்தில் பதினோராவது ஸர்க்கமாக அமைவது வாலியின் பராக்ரமத்தை வர்ணிப்பது என்ற ஸர்க்கமாகும்.

சுக்ரீவனுடன் நட்பு கொண்ட ராமர் அவனுக்கு உதவி செய்ய விழைந்தார்.

உற்சாகம் கொண்ட சுக்ரீவன் அவரைப் போற்றிப் புகழ்ந்தான்.

பின்னர் வாலியின் பராக்ரமம் பற்றி ராமருக்கு விரிவாக எடுத்துரைக்க ஆரம்பித்தான். 

சூர்யோதயத்திற்கு முன்பேயே மேற்கு சமுத்திரத்திலிருந்து கிழக்கு சமுத்திரத்திற்கும் தெற்கு சமுத்திரத்திலிருந்து வடக்கு சமுத்திரத்திற்கும் வாலி அனாயாசமாகத் தாண்டிச் செல்வதுண்டு. மலைகளின் உச்சியில் ஏறி கொடுமுடிகளை செருக்குடன் பிடுங்கி எறிவதுண்டு.

பராக்கிரமசாலியான துந்துபி என்ற ஒரு அரக்கன் எருமை உருவம் தரித்து ஆயிரம் யானை பலத்தைக் கொண்டிருந்தான்.

ஸ வீர்யோத்ஸேகதுஷ்டாத்மா வரதானாஸ்ட மோஹித: |

ஜகாம சுமஹாகாய: சமுத்ரம் சரிதாம் பதிம் |\

வீர்யோத்ஸேக துஷ்டாத்மா – பலத்தின் கர்வத்தால் துஷ்ட ஸ்வபாவமுடையனும்

வரதானாத் – வரம் பெற்றதால்

மோஹித: – தலைக்கனம் பிடித்தவனும்

சுமஹாகாய: ச – பேருருவமும் உடையவனுமான

ஸ: – அவன்

சரிதாம் – நதிகளுக்கு எல்லாம்

பதிம் – அரசனான

சமுத்ரம் – சமுத்திரத்திற்கு

ஜகாம – சென்றான்

சமுத்திரத்தைப் போர் புரிய துந்துபி அழைக்க சமுத்திரம் அவனுடன் தன்னால் போரிட இயலாது என்று கூறி இமயமலைக்குச் சென்று அந்த மலையுடன் போரிடலாம் என்று கூறியது. உடனே இமயமலை சென்ற துந்துபி இமயமலையைப் போருக்கு அழைக்க இமயமலை தன்னால் துந்துபியுடன் போரிட முடியாது என்று தன் இயலாமையைத் தெரிவித்தது.

இப்படி துந்துபியைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்த சுக்ரீவன் துந்துபியைப் பற்றித் தொடர்ந்து விவரித்தான்.

சமுத்திரத்தாலும் இமயமலையாலும் தன்னுடன் போரிட முடியாது என்று துந்துபி அறிந்து கொண்டான்.

அவனுடன் போரிடத் தக்கவன் வாலியே என்று இமயமலை கூற, கிஷ்கிந்தை சென்று வாலியுடன் போர் புரிந்து துந்துபி மரணமடைந்தான்.

மேலே உள்ள ஸ்லோகத்தில் கூறியபடி

இங்கு சுக்ரீவன் பேசுகையில் ‘வர தானாத்’  என்று கூறுவதைப் பார்க்கலாம்.

துந்துபி வரம் பெற்றதால் தலைக் கனம் கொண்டவனாக ஆனதை சுக்ரீவன் குறிப்பிடுகிறான்.

ஆனால் எப்படிப்பட்ட வரங்கள், யாரால் அவனுக்கு வழங்கப்பட்டன என்ற விவரங்கள் இங்கு காணப்படவில்லை.

என்றாலும் கூட அவன் வரம் பெற்ற செய்தியை நாம் அறிகிறோம்.

***

Leave a comment

Leave a comment