இதில் ராவணனைச் சந்திக்கும் மாரீசன் ஶ்ரீ ராமரது மஹிமையை விரிவாக எடுத்துச் சொல்கிறான்.
அவன் ராவணனிடம் கூறுகிறான்:
“ஒரு காலத்தில் பராக்கிரமத்தோடு உலகங்களுக்கு பயத்தை உண்டுபண்ணுகிறவனாய் இந்த பூமியில் எங்கும் திரிந்தேன். தண்டகாரண்யத்தில் ரிஷி மாமிசங்களைப் புசிக்கின்றவனாகக் காலம் கழித்தேன்.
அப்போது என்னைக் கண்டு பயந்த விஸ்வாமித்திரர் தசரத மஹாராஜாவிடம் சென்று மாரீசனிடம் எனக்குப் பெரும் பயம் ஏற்பட்டிருக்கிறது. யக்ஞம் செய்யும் காலத்தில் ராமன் ஊக்கமுடையவனாக என்னைப் பாதுகாக்கட்டும் என்று வேண்டினார். அவரோ ராமன் பன்னிரெண்டு வயதே நிரம்பிய சிறு பையன். நான் வருகிறேன்: என்றார். ஆனால் விஸ்வாமித்திரரரோ ராமர் சிறு பையனாக இருந்தாலும் மாரீசனை ஒழிக்கும் விஷயத்தில் மஹா ஆற்றல் கொண்டவன். அவனை அழைத்துப் போகிறேன் என்றார்.
விஸ்வாமித்திரருடன் தண்டகாவனம் வந்த ராமர் அப்போதே உதித்த இளம்பிறைச் சந்திரனைப் போலக் காணப்பெற்றார்.
ததோஹம் மேகசங்காசஸ்தப்தகாஞ்சனகுண்டல: |
பலீ தத்தவரோ தர்பாதாஜகாம ததாஸ்ரமம் |\
மேக சங்காச: – மேகத்திற்கு நிகரானவனும்
தப்தகாஞ்சனகுண்டல: – சுத்த பொன் குண்டலங்களை அணிந்தவனும்
ஆயுதங்களைத் தயாரித்துக் கொண்டவனாகிய நான் ஆலோசனையின்ரு புகுபவனாகவே அவனால் பார்க்கப்பட்டேன். அவன் தனுசில் நாணேற்றி ஒரு கூரிய பாணத்தை விடுத்தான். நான் சமுத்திரத்தில் நூறு யோசனை தூரம் தள்ளப்பட்டேன். பிரக்ஞை அற்றவனாக இருந்த நான் நெடுநேரம் கழித்து இலங்கையை அடைந்தேன்.”
இவ்வாறு கூறிய மாரீசன் ராவணனை உயிரைப் பாதுகாக்குமாறும் ராமனுடன் போர் செய்ய வேண்டாமென்றும் அறிவுறுத்துகிறான்.
இந்த இடத்தில் ‘வரங்களைப் பெற்றவனாகிய நான்’ என்று மாரீசன் குறிப்பிடுவதைப் பார்க்கிறோம்.
ஆனால் எப்போது என்ன வரங்களைப் பெற்றான் என்ற விவரங்கள் தரப்படவில்லை.
Date uploaded in Sydney, Australia – 26 DECEMBER 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
After a 55 year gap, I did my third rain Forest visit. This time we, three families , climbed the steep mountains in the Minnamurra rain forest and saw the water falls at the top.
My previous two walks were done in India. As a botany student, we took coaches to Tenkasi Kutralam and Agumbe in Karnataka from Madura College, Madurai (Tamil Nadu) to collect different plants for submission at the B Sc Final Year Examination.
This time the trip was to enjoy the forest sceneries at Minnamurra. We breathed fresh air. But it was 4.2 kilometres walk up and down that took over two hours of continuous walking. As I was the oldest in the group, I was panting. Now and then I had to stop and take rest. The forest is full of Cicadas making unbearable, deafening noise. It must be made by at least million cicadas.
(There are more than 200 Australian species of cicadas, most of which belong to the one large family, the Cicadidae. Cicadas are sometimes known as locusts in Australia, but that term is more correctly applied to certain migratory species of grasshopper. Cicada adults die shortly after mating. Cicadas have an incomplete metamorphosis, meaning eggs hatch into nymphs, which then turn into adults.)
At certain places it was very steep, but the authorities have provided handrails. We saw Chinese and other foreigners were also walking along the narrow path. The scenery was awesome and breath taking. All the trees were very tall with tarzan film like wooden climbers (lianas). But we warned not to touch the wood because of poisonous insects and spiders. The lyre birds were the attraction of this forest. We saw the rarer bird two times.
The tall trees provided us enough shade. Since it was summer time in Australia, the weather was good. We saw hanging orchids from the branching trees. After reaching the top we saw the water falls with little water. But if it is rainy season, one could imagine the water flow.
Now and then the boards installed by the forest department gave us information about the plants and animals.
Here below are some details :
Vehicle day pass – 12 Australian dollars
Last visit 4 pm.
The amphitheatre shape of Minnamurra Falls gives a feeling of enclosure and escape from the outside world. This is one of the few places you can walk through a living forest.
Socket wood
The Illawara Socketwood belongs to an ancient Gondwanan family of trees. The endangered species is found only in the Illawara region, and is restricted to a few locations.
Upto 25 metres tall, with a broad and shady crown and small , pale greenish white flowers, this rain forest tree is especially interesting as it primarily reproduces by cloning itself by suckering from underground rhizomes or stems. Recent research have recorded trees 900 metres away from the parent tree.
Rare species
Threatened species in BUDDEROO NATIONAL PARK (Minnamurra is part of it) include the grey headed flying fox, the southern brown bandicoot, the spotted tailed quoll, the waterfall greenwood orchid, the illawara irene, the Illawarra socketwood and the lesser creeping fern.
(But we saw no animals in our route)
One good thing about this visit is No Entrance Fee; but car parking fee is there. The shop at the entrance sells good mementos.
Where is Minnamura Forest?
From Sydey: 1 hr 58 min (117.8 km) via M1
2 hr 2 min (150.0 km) via Hume Motorway/Remembrance Driveway/M31 and M1
Minnamurra Rainforest
A place where waterfalls tumble into a lush tangle of subtropical forest and vines, and where wallabies and elusive platypuses live alongside bowerbirds and king parrots, the Minnamurra Rainforest is like a Jurassic landscape that time forgot – with a distinct Australian twist. Located at the eastern edge of immense Budderoo National Park, Minnamurra is the gateway to all manner of nature-based activities, from family-friendly walks to clifftop treks.
Rainforest Loop Walk (1.6km, 1 hour)
Traversing a network of suspension bridges, the Rainforest Loop Walk offers an immersive snapshot of the national park, with viewing platforms and interpretive signs illuminating its rich flora and fauna – you’ll spot everything from cabbage palms to banksia, strangler figs to rare orchids. Then discover the animals, butterflies and birds; look out for the elusive lyrebird, practiced in mimicking other avian calls.
(We took the long route, not the loop walk) Waterfalls – 4.2 kilometer walk (Two hours)
Halfway through you’ll see signs to The Falls walk– a detour worth taking. You’ll pass cool streams lined with mossy rocks and feathered ferns, to reach a lookout offering stellar views over the lower and upper Minnamurra Falls.
From Sydney, the drive south toward the Illawarra region of the South Coast weaves along the Grand Pacific Drive, one of the most scenic stretches of road in Australia. Your trip to Minnamurra will take just under two hours. From here, it’s a 20-min drive on to Kiama or 10 mins to Jamberoo, with a wealth of attractions in between.
A rainforest is a forest that receives a lot of rainfall and is characterized by:
· Rainfall
Rainforests receive more than 80 inches of rainfall annually, and in some areas it rains every day
· Canopy
Rainforests have a dense canopy of trees that can form multiple layers
· Biodiversity
Rainforests are home to millions of species of plants and animals, making them some of the most biodiverse ecosystems on Earth
· Climate
Rainforests help regulate the global climate by storing carbon dioxide in the trees and soil, and by releasing water into the atmosphere through transpiration
· Location
Rainforests can be found on every continent except Antarctica, with the largest rainforests in South America and Africa
· Other features
Rainforests are also characterized by high humidity, a moist layer of leaf litter, and the presence of epiphytes and lianas .
Date uploaded in Sydney, Australia – 26 DECEMBER 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;-1
மாலே மணி வண்ணா மார்கழி நீராடுவான்-26
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்-4
Mārgaśīrṣa (मार्गशीर्ष).—m., [mārgaśīrṣaḥ] Name of the ninth month of the Hindu year (corresponding to NovemberDecember) in which the full moon is in the constellation मृगशिरस् (mṛgaśiras); शुक्ले मार्गशिरे पक्षे (śukle mārgaśire pakṣe) Bhāgavata 6.19.2; मासानां मार्गशीर्षोऽहम् (māsānāṃ mārgaśīrṣo’ham) Bhagavadgītā (Bombay) 1.35.
Mārgaśīrṣa (मार्गशीर्ष) or “Mārgaśīrṣa Paurṇamāsī” is the name of a festival that once existed in ancient Kashmir (Kaśmīra) as mentioned in the Nīlamatapurāṇa.—Mārgaśīrṣa Paurṇamāsī proceeds as follows: On this day, a fast to be broken at night after the worship of the moon with white garlands, grains, eatable offerings etc., and the worship of the Brāhmaṇas is prescribed. The Brāhmaṇa lady, the sister, the aunt and the wife of a friend, each is to be honoured with a pair of red clothes.
*****
தமிழ் மாதங்கள் என்று நாம் சொல்லும் எந்த மாதமும் தமிழ்ப் பெயர் இல்லை. ஸம்ஸ்ருத மாதங்களின் பெயர்களைத் தமிழ்ப் படுத்தியுள்ளோம்.
சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி ஆவணி , புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை மாசி பங்குனி ஆகிய பன்னிரெண்டு மாதங்களும் அப்படி வந்தவையே. இதை காஞ்சிப் பெரியார் — மஹாசுவாமிகள் உரையில் அழகாக விளக்கியுள்ளார்
மார்கழி என்பது மார்க்க சீர்ஷ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் திரிபு; மருவு.
இதற்குச் சில பெருமைகள் உண்டு இதை தனுர் மாதம் என்றும் அழைப்போம். ஏனெனில் சூரியன் தானுர் ராசியில் பிரவேசிக்கும் காலம் இது .
மாதங்களில் நான் மார்கழி என்று பகவத் கீதையில் கண்ணன் சொன்னார்.இதையே தமிழ்த் திரைப்பாடல் ஒன்றின் முதல் வரியிலும் காண்கிறோம்.
அப்படி என்ன மார்கழிக்குச் சிறப்பு?
வருடத்தை உத்தராயணம் என்றும் தட்சிணாயனம் என்றும் இந்துக்கள் பிரித்தனர். இதில் தட்சிணாயணத்தின் கடைசி மாதம் மார்கழி. அதாவது உத்தராயணம் ஆரம்பிக்கும் தை மாதத்துக்கு முதல் மாதம். அப்படியானால் அது ஆறு மாத காலம் இரவினை அனுபவிக்கும், உறங்கிக்கொண்டிருந்த தேவர்களின் பிரம்ம முகூர்த்த காலம் மார்கழி.
சூரிய உதயத்துக்கு முன்னுள்ள பிரம்ம முகூர்த்த காலம் தியானத்துக்கும் இறை வழிபாட்டுக்கும் சிறந்தது . ரிஷி முனிவர்களும் அவர்களைப் போல வாழ்க்கை நடத்தும் நிறைய சன்யாசிகளும் பிரம்ம முகூர்த்தத்தில் உறங்குவதில்லை இதைப் பின்பற்றும் இந்துக்கள் மார்கழி முழுவதையும் புனித மாதமாக அனுசரிப்பதோடு அதிகாலையில் அனைவரையும் உசுப்பிவிடுகிறார்கள் தமிழ் நாட்டில் பல கோவில்களில் ஒலிபெருக்கி மூலம் பாடல்களும் — தெய்வீகப் பாடல்களும் –ஒலித்து அனைவரையும் எழுப்பிவிடுகின்றன.
மார்கசீர்ஷ என்பது மார்கழி ஆனது ; மிருகசீர்ஷ நடச்சத்திரம் சந்திரனுடன் கூடிய நாள் மார்க்க சீர்ஷ மாதம் ஆகும். சித்திரா நட்சத்திரத்துடன் சந்திரன் கூடும் மாதத்தை நாம் சித்திரை மாதம் என்பது போலவும் விசாக நட்சத்திரத்துடன் பெளர்ணமி நிகழும் மாதத்தை நாம் வைகாசி என்பது போலவும் ஏற்பட்ட மாதம் இது மிருக = மான் சீர்ஷ/ சிரஸ்= தலை ; இந்த நட்சத்திரத்தை தமிழ் நூல்கள் மான் தலை என்றே அழைக்கும்.
இரவு நேரத்தில் வானத்தை அண்ணாந்து பார்த்தால் நான்கு மூலைகளில் நான்கு பிரகாசமான விண்மீன்களும் கடுவில் கோடு போட்டது போல மூன்று புள்ளிகளையும் காணலாம். இதுவே மான் தலை அல்லது மிருக சீர்ஷம்.
****
ஆண்டாளின் புதிர்
மிருசுக சீர்ஷத்துடன் சந்திரன் பெளர்ணமி ஏற்படுத்தும் மாதம் மார்கழி. ஆனால் ராகவ அய்யாங்கார் போன்றோர் மார்கழித் திருவாதிரை நாட்சத்திரத்தில் ஆண்டாள் முதல் பாசுரத்தைப் பாடியதாகச் சொல்லுவது சரியா? சரியில்லை என்பதே என் கருத்து.
இன்னும் ஒரு புதிர்
மார்கழி மாதத்துக்கு மொத்தம் 29 நாட்கள்தான். ஆண்டாள் பாடியதோ முப்பது பாசுரங்கள் அவர் பெளர்ணமியில் பாடத்துவங்கினால், ஒரு நாளைக்கு ஒரு பாசுரம் என்று கொண்டால், அடுத்த பெளர்ணமி முப்பதாவது நாளன்று வந்து விடும் அது தை மாத பெளர்ணமி ஆக இருக்க வேண்டும். இப்போது நாம் தைப்பூசம் என்று கொண்டாடுகிறோம். ஒருவேளை முப்பதாவது பாடலை பல ஸ்துதி என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
சங்க இலக்கியத்தில் தை நீராடல் என்ற குறிப்பே அதிகம் உள்ளன. ஒருவேளை மார்கழிப் பெளர்ணமியில் துவங்கி தை மாத பெளர்ணமியில் விழா முடிந்திருக்காலாம். மார்கழிக்கு 29 நாட்களே இருப்பதால்தான் இந்தப் பிரச்சினை. ஒருவேளை ஆண்டாள் ஒரே நாளில் இரண்டு ,மூன்று பாடல்களையும் பாடியிருக்கலாம். ஏனெனில் அவர் 3 பாடல்களில் மார்கழியை குறிப்பிடுகிறார் ; தை பற்றிய குறிப்பு எதுவும் இல்லை.
காஷ்மீரி பிராமணர்களும் மார்கழி மாத நோன்பு அனுஷ்டித்ததை காஷ்மீரின் ஆதிகால வரலாற்றைச் சொல்லும் நீலமத புராணத்தில் காணலாம். ஆக காஷ்மீர் முதல் கன்யாகுமாரி வரை மஹாபாரத காலத்திலிருந்தே மார்கசீர்ஷ மாதம் புனிதமானது என்பது உறுதியாகிறது
ஆண்டாளின் காலத்தில் எப்படி கிரக நிலைகள் இருந்தன என்பதையும் கணக்கிற் கொள்ளவேண்டும். இந்துக்களின் பண்டிகைகள் சந்திரனின் நிலையை வாய்த்து அனுசரிக்கப்படுவதால் தீபாவளி கார்த்திகை போன்ற பண்டிகைகளின் காலம் மாறிக்கொண்டே வரும். சூரியனைஅடிப்படையாகக்கொண்ட மகரசங்கராந்தி/ பொங்கல் பண்டிகைகளின் நாட்கள் மாறாது (லீப் வருடம் தவிர)
திருவாதிரை என்பதை இன்றும் மலையாளிகள் ஓணம் பண்டிகை போல பெரிதாகக் கொண்டாடுகிறார்கள்.
ஓணம் எனபது விஷ்ணுவின் நட்சத்திரம் ;ஆதிரை என்பது சிவனின் நட்சத்திரம். இந்த இரண்டு நட்சத்திரங்களுக்கு மட்டுமே திரு என்ற சிறப்பு அடைமொழி உண்டு என்று காஞ்சிப் பெரியவர் (1894-1994) சொற்பொழிவில் குறிப்பிட்டதையும் குறிப்பிடுவது பொருத்தம் காஷ்மீர், தமிழ் நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் ஏதோ ஒருவகையில் கொண்டாடப்பட்ட இந்த மாதம் பீடுடை மாதம் என்பதால்தான் கண்ணனும் மாதங்களில் நான் மார்கழி என்றான் போலும்.
FROM MY 2022 ARTICLE
9.MARKAZI
Markazli (maarkali or maarkazi) is considered a very holy month by the Hindus. The month begins when the sun enters the Hindu zodiacal sign Dhanus (Sagittarius).
This is the ninth month in the Tamil calendar. All the South Indian temples open very early in the morning around 4 AM (Brahma Muhurtham) and start the Abhisheka and Aradhana.
Tamil saint poetess Andal’s Thiruppaavai and Tamil Saivite saint Mankikkavaasagar’s Thiruvempaavaai are sung by Tamil Hindus. Temples do broadcast them in the early morning. People get Ven Pongal (spicy rice) and Sarkkarai Pongal (sweet rice) as Prasad.
Bhajan groups go round the towns in the early morning.
My Experience
As a little boy I used to accompany my father in the Bhajan that goes round Madurai city. There were two women Mrs Raajammaal Sundararaajan and Mrs Seetaalakshmi Baalakrishnan who attracted many young girls and trained them in singing Thiruppaavai.
In front of all the Tamil houses one can see beautiful Kolams( rangolis). Kolaattam and Kummi, two Hindu folk dances are performed in public places by young Hindu girls. The belief is that young girls will get good and handsome husbands if they do practise vow/Vrata during this month.
People go to rivers and tanks to take early morning bath. In villages women make cow dung balls and place flowers of Pumpkin in it. It will be in the middle of the kolam/rangoli in front of the houses.
Since it is a cold month, there is a Tamil proverb saying it is not good for the cattle: Maarkali maathak kulir Maadu Makkalukku Peedai (the cold wind of the month Maarkazi gives distress and illness to cattle and people).
.மார்கழி மாதக் குளிர் மாட்டு மக்களுக்குப் பீடை மார்கழி மாதம் என்பது பீடை மாதம் அல்ல ; பீடுடைய = பெருமைமிக்க மாதம் என்ற விளக்கமும் உண்டு.
Maanikkavasagar festival is held in many Shiva temples. Arudra Darisanam of Nataraja /shiva and Vaikunda Ekaadasi are the most important festivals of this month .
All Shiva and Vishnu temples attract lakhs of people during these days.
End of the month comes Bhogi, festival when Hindus clear all unwanted old stuff and make bonfires. It is Pongal eve.
Tamil Hindus don’t celebrate any auspicious event in Purattasi or Markazi. NO marriages take place in this month.
In addition to festivals, Thyaagaraaja Aaaraadhanaa and Kanchi Paramaachaarya Aaaraadhanaa and Ramana Jayanthi are held during this month.
Dhanur Maatha puja in the temples finish on the last day. Some people celebrate Hanumath Jayanthi.
Vishnu temples celebrate 20 days of festival called Pakal Paththu and Raap Paththu ,meaning 10 Days of Day time Pujas and 10 Days of Night Time Puja.
During Arudra Shiva festival and 20 days of Vishnu festival, idols are taken round the town in processions.
Arudra festival, also known as Thiruvaathirai, is celebrated by Malayalees on a grand scale.
A special dish called sweet Kali accompanied with spicy Koottu is made on Arudra day. Hundreds of Pots of buttery Sweet Pongal/ Sarkkarai Pongal is made in Vishnu Temples on the Koodaarai valli day.
A Hindu Panchaangam (almanac) gives al these days in bold letters.
22-12-2024 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிய உரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.
மாஸ்டர் மஹாஷய்- மஹேந்திரநாத் குப்தா – கதாம்ருதம் அளித்த மகான்! – 2
பரமஹம்ஸரது அறைக்குச் சென்றவுடன் அங்கிருந்த மாஸ்டர் மஹாஷய் எனப்படும் மகேந்திரநாதரை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் பரமஹம்ஸர். அவருடனான உரையாடல் ஆரம்பித்தது. பரமஹம்ஸரோ மௌனமாக இவர்களது உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்தார். பின்னர் எம் அங்கிருந்து விடை பெற்றுச் சென்றவுடன் பரமஹம்ஸர் கூறினார்: “அவர் அத்தனை தேர்வுகளையும் பாஸ் செய்து என்ன பிரயோஜனம்? ஆசிரியர் ஒரு பெண்ணைப் போல வெட்கப்படுகிறார். அவரால் அழுத்தமாகவே பேச முடியவில்லை.”
இப்படியாக விவேகானந்தரை இன்னொருவருடன் மோத விட்டு பரமஹம்ஸர் வேடிக்கை பார்த்து மகிழ்ந்தார்.
ஏராளமான சுவையான சம்பவங்கள் எம் வாழ்வில் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு சங்கடமான தருணத்திலும் குரு தேவர் அவரைக் காப்பாற்றுவதை அவர் கண்கூடாகக் கண்டார். குருதேவர் மீது அவர் அளவிலா பக்தி கொண்டிருந்தார்.
ஒரு சம்பவம் இது.
ஈஸ்வர சந்திர வித்யாசாகர் நடத்திய ஷ்யாம் பஜார் கிளையான மெட்ரோபாலிடன் பள்ளியில் அவர் தலைமை ஆசிரியராக நான்கு வருடங்கள் பணியாற்றி வந்தார். 1886ல் ப்ரமஹம்ஸர் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக ஆனது. அதனால் அடிக்கடி அவரைப் பார்க்கச் செல்வது எம்மின் வழக்கமானது. இதனால் பள்ளியின் வருடாந்திர தேர்வு முடிவுகள் முந்தைய ஆண்டுகளில் வந்தது போல நன்றாக அமையவில்லை. இதை கவனித்த ஈஸ்வர சந்திர வித்யாசாகர் அவரிடம், “ இப்போது நீங்கள் அடிக்கடி பரமஹம்ஸரை தரிசிக்க காஸிபூர் தோட்டத்திற்குச் சென்று விடுகிறீர்கள். அதனால் தான் தேர்வு முடிவுகள் முன்பு போல இல்லாமல் போய் விட்டது” என்றார். குருதேவரைப் பற்றி அவர் கூறியது எம்மிற்குப் பிடிக்கவில்லை. உடனடியாக தன் வேலையை ராஜிநாமா செய்தார். பரஹம்ஸரிடம் நடந்ததைக் கூறினார். பரமஹம்ஸர், ‘நன்றாகச் செய்தாய் நன்றாகச் செய்தாய்’ என்று கூறினார்.
ஆனால் பதினைந்து நாட்களில் வேலையை விட்டதன் விளைவு அவருக்குத் தெரிந்தது. குடும்பத்தில் அடுப்பு பற்ற வைக்கக் கூட முடியாத சூழ்நிலை. இது பொறுக்காத எம் அங்கும் இங்குமாக தனது வீட்டில் முதல் மாடியில் இருந்த வாரந்தாவில் மூன்று மணி நேரம் நடந்து கொண்டிருந்தார். என்ன செய்வது? குழந்தைகளுக்கு எப்படி நான் சாப்பாடு போடுவேன் என்ற கவலை அவரை வாட்டியது. அப்போது கீழேஇருந்து ஒரு குரல் கேட்டது: மஹேந்திர பாபு இருக்கிறாரா?என்று!
கீழே வந்து வந்தவரைச் சந்தித்த போது அவர் சுரேந்திரநாத் பானர்ஜி கொடுத்த ஒரு கடிதத்தைத் தந்தார். ரிப்பன் காலேஜில் புரபஸராக அவரை நியமிக்க உள்ளதாகவும் அதை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் கடிதம் கூறியது. அவர் உடனே சென்று அதை ஏற்றுக் கொண்டார்.
இப்படி அவருக்கு அன்றாட பிரச்சனைகளான தீர்வுக்கும் குருதேவர் தான்; ஆன்மீக உபதேசங்களுக்கும் வழிகாட்டுதலுக்கும் குருதேவர் தான்.
ஒரு முறை குருதேவர் கீதையில் உள்ள மிதமான சாப்பாடு, மிதமான இயக்கம் பற்றிக் கூறி அதைப் பார் என்றார். சுத்த பக்தி கொண்ட எம் குருதேவர் கூறியதை எல்லாம் கடைப்பிடித்தார். மிக உயரிய நிலையை ஆன்மீகத்தில் அடைந்தார்.
ராமகிருஷ்ண கதாம்ருதம்
மகேந்திரநாதர் ராமகிருஷ்ண கதாம்ருதத்தை முதலில் GOSPEL OF SRI RAMAKRISHNA என்று ஆங்கிலத்தில் 1897ஆம் ஆண்டு வெளியிட்டார்.
வங்காள மொழியில் இதன் முதல் பாகம் 1902லும் இரண்டாம் பாகம் 1904லும் மூன்றாம் பாகம் 1908லும் நான்காம் பாகம் 1910லும் ஐந்தாம் பாகம் 1932லும் வெளியானது.
பின்னால் ஏராளமான மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டது.
இந்த கதாம்ருதத்தை உலகிற்கு அளிப்பதற்காகவே அவர் பிறந்தார் போலும்!
ஐந்தாம் பாகத்தின் முடிவை இரவு ஒன்பது மணிக்கு அவர் எழுதி முடித்தார்.
உடனே அவருக்கு தலைவலி ஆரம்பித்தது.
அவருக்குப் பிடித்த பாட்டை அவர் வாய் முணுமுணுக்க ஆரம்பித்தது;
“ஓ! குருவே! அம்மா, என்னை உன் மடியில் ஏந்திக் கொள்”
1932ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான்காம் தேதி சனிக்கிழமையன்று அவர் சமாதி எய்தினார்.
எழுபதாவது வயது முதல் அவர் மிஹிஜம் என்ற இடத்தில் ஒரு குடிலில் வசித்து வந்தார். இரு அறைகள் அங்கு இருந்தன. ஒன்றில் எம் வசித்தார். இன்னொன்று ஸ்டோர் ரூம். வாரந்தாவில் இரு சிறிய அறைகள் இருந்தன. ஒன்று சமையலறை. இன்னொன்று குளியலறை.
இங்கு தனது வாழ்நாள் இறுதி வரை அவர் தன்னைச் சந்தித்த பக்தர்களுக்கெல்லாம் ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரைப் பற்றியும் பல அரிய ஆன்மீக விளக்கங்களையும் தந்து வந்தார்.
அன்னை சாரதா தேவியார் 1853ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி அவதரித்தார். அவர் 1920ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் நாளில் சமாதி அடைந்தார்.
பரமஹஸருடனும் அன்னை சாரதா தேவியாருடனும் அருள் பெற்று வாழ்ந்த நாட்களை மஹேந்திரநாதர் புனிதமாகக் கருதினார்.
மிகுந்த வேதனையுடன் அவர் சில சமயம் புலம்புவதுண்டு இப்படி:
“ அடடா! அன்னை போய் விட்டார். 35 ஆண்டுகள் நம்மை பாதுகாத்தார். ஐந்தே வருடங்கள் தான் ஶ்ரீ ராமகிருஷ்ணரின் அற்புதமான தெய்வீக பாதுகாப்பில் இருந்தோம். ஆனால் அன்னை 35 ஆண்டுகள் நம்மை நன்கு வளர்த்தார். அடடா! அவரும் போய் விட்டாரே!”
இதனால் அவர் மனதளவிலும் உடல் அளவிலும் பாதிக்கப்பட்டார்.
தனிமையில் வாழ மிஹிஜம் நோக்கி வந்து அங்கு வாழலானார்.
மஹேந்திர நாதர் இங்கு தன்னைப் பார்க்க வந்த பக்தர்களிடம் பேசியதை எல்லாம் ஸ்வாமி நித்யாத்மனானந்தா M-The Apostle & the Evangelist என்று ஆங்கிலத்தில் இரு பாகங்களாக வெளியிட்டுள்ளார்.
அற்புதமான ஆன்மீக ரகசியங்களை மஹேந்திரநாதர் விளக்கியுள்ளதை இதில் காணலாம்.
எம் எழுதிய ராமகிருஷ்ண கதாம்ருதம் நூல் பரமஹம்ஸரைப் பற்றிய நுட்பமான விஷயங்களை நமக்குத் தரும் போது அவரைப் பற்றிய விவரங்களை ஸ்வாமி நித்யானந்தர் நூலில் நாம் காணலாம்.
பரமஹம்ஸர், ஸ்வாமி விவேகானந்தர் ஆகியோரைப் பற்றி நமக்கு எம் அளித்த இலக்கிய கொடையை ஒரு நாளும் நம்மால் மறக்க முடியாது.
Date uploaded in Sydney, Australia – 25 DECEMBER 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
London Swaminathan in Kiama, Australia
We went out of Sydney for a three day stay in Shell Cove. It is just less than three-hour drive from Sydney. Spacious guest houses are available there for rent. Seven beaches are in that area alone. We visited almost all beaches. Every beach has a park for little children and water sports for adults. In many beaches fishing is allowed.
Since it is summer time in Australia sun light is available until 8 pm. Restaurants are situated nearer to the beaches. But all the prices, particularly food prices, are expensive. Even coffee is more expensive than London.
One big advantage is availability of cheaper petrol. One litre is 1-75 to 1-80 Australian dollar. (£1= 2 AUD)
****
What is Kiama Blowhole?
The Kiama Blowhole is a blowhole in the town of Kiama, New South Wales, Australia. The name ‘Kiama’ has long been translated as “where the sea makes a noise”. Sea water gushes out through a hole in the rock.
Kiama’s famous Blowhole is the largest in the world, and when the swell is running from the southeast, you’re in for a real treat. The 2.5 metres opening in the rock face has had its plumes of water recorded at heights of over 30 metres!
With multiple accessible viewing platforms, the blowhole can be seen from multiple vantage points.
When it’s really blowing, you can hear an impressive whoosh sound and often feel the spray of the ocean. Don’t miss a visit to the Little Blowhole, which is more consistent than the big blowhole and equally stunning to observe. Their foundations were formed from volcanic lava flows about 260 million years ago (that’s 100 million years before the dinosaurs). Eventually it was the ocean’s power that created what we see today – eroding the softer strata rock to create the vertical blowhole.
The best time to visit Kiama Blowhole in New South Wales, Australia is during high tide and when there is a south-east swell, typically in spring and autumn:
Tides: High tide increases the chances of seeing impressive water sprays and eruptions.
Swell: A south-east swell is ideal for seeing the blowhole in all its glory.
Time of day: Visit during sunrise or sunset to see the coastal scenery in a golden light.
By googling high tide time, you may plan your visit.
This landmark has attracted people to the region for over 100 years, and the first sightings were recorded by George Bass when he anchored his whaleboat in the sheltered bay, now known as Kiama Harbour, in December 1797. It is now estimated to attract 900,000 visitors each year.
There is a light house, adding beauty to the beach.
The distance between Sydney and Kiama blowhole is 125 kms.
Most of the beaches and tourist attractions are free. Only attractions in big cities have entrance charge and car parking charges.
The beaches are well maintained and clean. Dogs are banned from many beaches but people violate the rules and bring their dogs.
–subham—
Tags- Kiama blowhole, My visit, beaches, Shell cove
Date uploaded in Sydney, Australia – 25 DECEMBER 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆண்டாள் காலத்தை ஏழாம் நூற்றாண்டு என்றும் ஒன்பதாம் நூற்றாண்டு என்றும் இணைய தளங்களிலும் நூல்களிலும் எழுதியிருப்பதைக் காணலாம். மு.ராகவையங்கார் என்பவர் அந்தக் காலத்தில் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையில் 9-ஆம் நூற்றாண்டு என்று நிரூபித்தார். ஆயினும் ஆண்டாள் மற்றும் அவரது வளர்ப்புத் தந்தையான பெரியாழ்வார் என்னும் விஷ்ணுசித்தர் காலத்திய பாண்டிய மன்னர் யார் என்பதிலும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆக, இந்த இரண்டு குழப்பங்களும் நீடிக்கின்றன.
எப்படிக் கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன் என்ற வரி சிலப்பதிகார மன்னர் காலம் பற்றிய புதிருக்கு விடை கண்டதோ அதே போல ஆண்டாளும் ஒரு வரியைத் திருப்பாவையில் பாடியதால் அவரை இரு நூறு அல்லது முன்னூறு ஆண்டு வட்டத்துக்குள் வைக்க முடிகிறது .
புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்;
வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று;
புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே,
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.- பாடல் 13
ஆண்டாள் மிகப்பெரிய அறிஞர். அவருக்கு A to Z (Astronomy to Zoology) அஸ்ட்ரானாமி /வானவியல் முதல் சூவாலஜி என்னும் விலங்கியல் வரை எல்லாம் தெரியும்; அவைகளை பாடலிலும் பாடியிருப்பதால் அவரது பேரறிவினை நாம் மெச்ச முடிகிறது. சிங்கம் பற்றி அவர் பாடியது அவருடைய விலங்கியல் அறிவினைக் காட்டுகிறது; நகைகள் மற்றும் திருமண முறை பற்றி வரிசைக் கிரமத்தில் நாச்சியார் திருமொழியில் பாடி இருப்பதால் அவருடைய உலகியல் அறிவினை நாம் அறிய முடிகிறது மார்கழி பற்றி நான்குத் திருப்பாவைப் பாடல்களில் பாடியிருப்பதால் அவருடை கால ஞானத்தைTime Sense நாம் அறிகிறோம். தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி மழை பெய்ய வேண்டுவதால் அவரது தேசபக்கத்தியையும் லோகா சமஸ்தா சுகினோ பயந்து என்ற நல்ல ஞானிகளின் குணத்தையும் காண முடிகிறது. அவள் டீன் ஏஜ் கேர்ள் Teen Age Girl அல்ல. சம்பந்தர் போல பிறவி ஞானி .
வியாழன் என்றால் ஜூபிடர்JUPITER என்னும் பிருஹஸ்பதி/ குரு கிரகம். வெள்ளி என்றால் சுக்ரன் என்னும் வீனஸ்VENUS அல்லது வெள்ளி கிரகம். இந்த இரண்டையும் வானத்தில் காணலாம். இதில் வெள்ளி மட்டும் சில காலத்தில் விடி வெள்ளியாக சூரிய உதயத்துக்கு முன்னரும் சில காலத்தில் சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னரும் தோன்றும். ஆண்டாள் அதிகாலைப் பொழுதில் தோழிகளை எழுப்பச் சென்றபோது வெள்ளி உதயமாகி வியாழன் அஸ்தமனமானதைக் கண்டார் உடனே இதை பாடலில் குறிப்பிட்டுத் தோழிகளே எழுந்திருங்கள் என்று பாடுகிறார். வானவியல் தெரிந்தவர்கள் இது கிபி. 600 முதல் கி.பி 900 வரை 4 முறை நிகழந்ததைக் கொண்டு அவரை 300 ஆண்டு கால வட்டத்திற்குள் வைக்கின்றார்கள்.
(Reference 1- திருப்பாவை பதின்மூன்றாவது பாசுரத்தில் ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’ என்ற ஒரு சொற்றொடார் வருகிறது. இந்த சொற்றொடரை வைத்துக்கொண்டு மகாவித்துவான் முகவை ராகவ ஐயங்கார் (1878-1960), ஆண்டாள் தமது திருப்பாவையின் பதின்மூன்றாம் பாசுரம் பாடி அருளிய நாளன்று நிலவிய வானவியல் அமைப்புகளை ஆழ்ந்து ஆராய்ந்து திருப்பாவையின் காலத்தை கி.பி. 885 அல்லது கி.பி. 886 என தோராயமாக நிர்ணயம் செய்துள்ளார். தமது ஆய்வு முடிவுகளை ‘ஆழ்வார்கள் காலநிலை‘ என்னும் நூலில் பதிவு செய்துள்ளார்.)
(Reference 2 ஆண்டாள் திருப்பாவை பாடி அருளிய காலம்
வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிய அபூர்வ வானியல் நிகழ்வு கி.பி. 885 நவம்பர் 25 மற்றும் கி.பி. 886 டிசம்பர் 24 ஆகிய இரண்டு ஆண்டுகளில் வெள்ளியும் வியாழனும் எதிரெதிரே தோன்றி மறையும் நிகழ்வு துல்லியமாக நிகழ்ந்துள்ளபடியால் இந்த தேதிகளில் ஒன்று மட்டும் ஆண்டாள் பாடி அருளிய திருப்பாவை 13 ஆம் பாசுரம் பாடிய நாளாக இருக்க வாய்ப்புள்ளது.)
*****
ஆயினும் எவரும், மொழியியல் ரீதியில் (Linguistic approach) அவரை அணுகவில்லை ; இதற்கு அதிக மொழியியல் ஞானம் தேவை. அதாவது ஒரு மொழி வளர்ந்து கொண்டே இருக்கும்; இப்பொழுது கபிலர் பாடலையும் கம்பன் பாடலையும் கண்ணதாசன் பாடலையும் ஒரு தமிழ் தெரிந்த தமிழனிடம் கொடுத்தால், அவைகளை எளிதில் கால வரிசைப்படுத்திவிடுவான். இதே போல ஆண்டாள் பாடலையும் கம்பன் பாடலையும் அருகருகே வைத்தால் சொற்களைக் கொண்டும், பாடலின் யாப்பு இலக்கணத்தைக் கொண்டும் அவர் சொல்லும் கருத்தினைக் கொண்டும் காலத்தைக் கண்டு பிடிக்கலாம்.
ஆண்டாளைப் போல திருவெம்பாவை பாடிய மாணிக்க வாசகர் காலம் பற்றிய புதிரும் தீர்ந்தபாடில்லை. காளிதாசனை அறிஞர்கள் எழுநூறு ஆண்டு வட்டத்தில் வைக்கின்றனர். இந்திய வரலாறு புதிர்கள் நிறைந்தது; மாணிக்க வாசகர் நால்வரில் முதலாமவர் என்று நான் என்னுடைய ஆராய்ச்சியில் காட்டியுள்ளேன். அவர் கணபதி பற்றியோ, லிங்கம் பற்றியோ பாடவில்லை. அதே போல . காளிதாசநும் கணபதி பற்றிப் பாடவில்லை இது போன்ற குறிப்புகளும் பாடல் நடையும் ஒரு வகையில் காலத்தைக் கணிக்க உதவும்.
ஆண்டாளும் பறை , தட்டொளி, ஆந்தனை, உக்கம் போன்ற பல புதிய சொற்களைக் கையாள்கிறார்.
திருப்பாவைக்கும் திருவெம்பாவைக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளதால் ஆண்டாளைக் காலத்தால் முந்தியவர் என்றே நான் கருதுகிறேன். அதாவது, அவரை மாணிக்க வாசகருக்கு அருகில் வைக்கவேண்டும் ஆறாவது ஏழாவது நூற்றாண்டு என்றே கருத வேண்டும்.
மேலை நாடுகளில் கவிஞர்களின் சொற்களையும் பாடல்களையும் கம்பியூட்டரில் கொடுத்து காலத்தைக் கணிக்கின்றனர். அதே போல ஆண்டாளின் திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய இரண்டு நூல்களையும் கம்ப்யூட்டரில் கொடுத்து ஏனைய நூல்களுடன் ஆராயலாம். இந்தத் துறையை தமிழ் பல்கலைக் கழகம் அல்லது தனிப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் செய்யலாம். கம்ப்யூட்டர் அறிவுடன் தமிழ் மொழி அறிவும் இருந்தால் சரியான முடிவுக்கு வரமுடியும். இவ்வாறு கொடுக்காமலேயே திருப்பாவையையும் திருவெம்பாவையையும் ஒப்பிடுகையில் இருவரின் காலமும் அருகருகே இருப்பதை நான் காண்கிறேன் .
****
ஆண்டாள் போடும் இன்னுமொரு புதிர்
மார்கழி மாதம் முதல் நாள் பௌர்ணமி திதியுடன் கூடிய திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆண்டாள் தமது திருப்பாவையின் முதல் பாசுரமான ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்’ என்று தொடங்கும் பாசுரத்தைப் பாடியருளியுள்ளார் என்பது ஒரு கருத்து. இது சரியென்றால் அவர் முப்பது பாடல்களையும் பாடி முடிக்கும் நாளன்று அடுத்த பௌர்ணமி திதி வந்திருக்க வேண்டும் அது தைப்பூச பௌர்ணமி திதியாக இருக்கவேண்டும் ; இதற்கிடையில் பொங்கல் என்னும் மகர சங்கராந்தி முடிந்திருக்கவேண்டும் ; மார்கழி என்பது ஸம்ஸ்க்ருதச் சொல்லின் மருவு; இவைகளை அடுத்த கட்டுரையில் காண்போம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
22-12-2024 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிய உரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.
மாஸ்டர் மஹாஷய்- மஹேந்திரநாத் குப்தா – கதாம்ருதம் அளித்த மகான்! – 1
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.
இன்று நாம் ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரை உலகம் அறிய வழி வகுத்தவரான திரு மகேந்ந்திரநாத் குப்தா அவர்களைப் பற்றி சிந்திக்கப் போகிறோம்..
பரமஹம்ஸர் அவரை மாஸ்டர் என்று அழைப்பார். ஆகவே அவரை அனைவரும் மரியாதையுடன் மாஸ்டர் மஹாஷய் என்று கூறுவர்.
அவர் எம் என்றே அனைவராலும் அறியப்பட்டார்; அறியப்படுகிறார்.
‘எம்’ என்றே அவர் அனைத்து ஆன்மீக விஷயங்களையும் எழுதுவது வழக்கம்.
அவருக்கு இன்னும் சில புனைப்பெயர்கள் உண்டு – மணி, மோஹினி மோஹன், பக்தர் – இப்படியெல்லாம் அவர் ராமகிருஷ்ண கதாம்ருதத்தில் அறிமுகப்படுத்தப்படுவார்.
1854ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று அவர் பிறந்தார். அன்று நாக பஞ்சமி தினம். சதயம் அவரது நக்ஷத்திரம்.
நான்கு ஆண்கள், நான்கு பெண்கள் ஆக எட்டுக் குழந்தைகளில் மூன்றாவதாக அவர் பிறந்தார். அவரது தந்தையார் மதுசூதன் குப்தாவும் தாயார் ஸ்வர்ணமயி தேவியும் இயல்பாகவே தெய்வ பக்தி நிரம்ப உடைய எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மதுசூதன் குப்தா கல்கத்தா உயர் நீதி மன்றத்தில் வேலை பார்த்து வந்தார்.
மகேந்திரநாதர் இளமையில் ஒரு பாடசாலையில் ஒரு குருவிடம் கல்வி கற்றார். பின்னர் ஒரு பள்ளியில் சேர்ந்து படித்தார். அவர் 1867ம் ஆண்டு எட்டாம் வகுப்பில் படிக்கும் போது அவருக்கு வயது 13. அப்போது முதல் அவர் டயரி எழுதுவதை தனது வழக்கமாகக் கொண்டார். இப்படி ஒரு நாட்குறிப்பை தினமும் எழுத வேண்டும் என்று அவரிடம் யாரும் சொல்லவில்லை. தானாக ஆரம்பித்தார் இந்த நற்பழக்கத்தை. இதன் பலன் 15 ஆண்டுகள் கழித்து அவர் 1882 பிப்ரவரி மாதம் 25ம் தேதி பரமஹம்ஸரைச் சந்தித்த போது தான் தெரிய வந்தது. தனது நாட்குறிப்பில் ராமகிருஷ்ண பரமஹம்ஸரை சந்திக்கும்போதெல்லாம் அங்கு நடப்பது அனைத்தையும் நாட்குறிப்பில் எழுதலானார்.
இதுவே ஶ்ரீ ராமகிருஷ்ண கதாம்ருதமாகப் பரிணமித்தது
கல்கத்தா பல்கலைக் கழக நுழைவுத் தேர்வில் எம் இரண்டாவதாக வந்தார். தனது எப்.ஏ தேர்வில் ஐந்தாவதாகவும் பி.ஏ. தேர்வில் மூன்றாவதாகவும் அவர் வந்தார். பின்னர் சட்டப்படிப்பை அவர் மேற்கொண்டார். அப்போது ஹிந்து சாஸ்திரங்களை சம்ஸ்கிருத மொழியிலேயே படித்துக் கரைத்துக் குடித்தார். அத்துடன் ஆங்கில இலக்கியம், தத்துவம் ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்றார். இத்துடன் ஜைன மத, புத்த மத நூல்களைக் கற்றார். ஜோதிடத்தையும் ஆயுர்வேதத்தையும் கற்று அவற்றிலும் அவர் நிபுணரானார்.
தனது படிப்பை முடிக்கும் முன்பேயே அவர் வேலை பார்க்க நேர்ந்தது. அவர் முதலில் பிரிட்டிஷ் வணிக நிறுவனத்தில் வேலை பார்த்தவர் பின் கல்வித் துறைக்குத் திரும்பினார். ஜெஸூர் மாவட்டத்தில் நரெய்ல் உயர்நிலைப் பள்ளியில் அவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் கல்கத்தா திரும்பி வந்து அங்கு பல பள்ளிகளிலும் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்.
1873ஆம் ஆண்டு பி. ஏ. படிக்கும் போது அவர் நிகுஞ்சா தேவி என்னும் அம்மையாரை மணந்தார்.
காலம் வேகமாகச் செல்லும் போது அவரது குடும்பத்தில் ஏராளமான சண்டைகள் நிகழ்ந்தன. இதனால் மிகவும் மன உளைச்சலை அடைந்த எம் வீட்டை விட்டுப் புறப்படத் தயார் ஆனார். அவரைப் புரிந்து கொண்ட அவரது மனைவியும் கூட வரத் தயார் ஆனார். அது ஒரு சனிக்கிழமை.இரவு ஒரு வாடகை வண்டியைப் பிடித்து அவர்கள் செல்லும் போது வண்டியின் ஒரு சக்கரம் முறிந்தது. நண்பர் ஒருவர் வீட்டில் அவர் அடைக்கலம் புக நேர்ந்தது. மறு நாள் ஞாயிற்றுக்கிழமை தனது சொந்தக்காரரான சித்தேஸ்வரனுடன் ஒவ்வொரு பூங்காவாக அவர் செல்ல ஆரம்பித்தார். பல பூங்காக்களில் அலைந்து திரிந்த போது சித்தேஸ்வரன், “இன்னும் ஒரு பூங்கா நதிக்கரையில் இருக்கிறது., அங்கே ஒரு பரமஹம்ஸர் இருக்கிறார். அங்கே போவோமா? என்று கேட்க இருவரும் அங்கு சென்றனர்.
கங்கைக் கரைத் தோட்டம். ரோஜா மலர்களின் கூட்டம். மகேந்திரநாதர் மெய் சிலிர்த்தார். பரமஹம்ஸரின் அறைக்கு வெளியே சென்று நின்றார். பின்னர் உள்ளே நுழைந்த போது, ராமகிருஷ்ண பரமஹம்ஸர்,”ஹரி அல்லது ராமா என்ற பெயரைக் கேட்டவுடன் உங்களுக்கு மயிர்க்கூச்சல் எடுக்க வேண்டும். நீங்கள் சந்தியா உள்ளிட்ட எந்த சடங்குகளையும் செய்ய வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
அவரைப் பார்த்த எம் இவரே சுகதேவர் என்று நிச்சயித்தார். அன்புடன் பரமஹம்ஸர் அவரை யார் என்று விசாரித்தார்.
அன்று முதல் பரமஹம்ஸரைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை ‘எம்’மால். ஒரு வாரத்திலேயே அவர் பரமஹம்ஸரின் அணுக்கத் தொண்டராக ஆகி விட்டார்.
ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் 1836ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் நாள் அவதரித்தார். 1886ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி சமாதி எய்தினார்.
பரமஹம்ஸருடன் சந்திப்பு
1882ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதன்முதலாக அவர் தக்ஷிணேஸ்வரத்தில் ராமகிருஷ்ண பரமஹம்ஸரைச் சந்தித்தார். இதற்குச் சில மாதங்கள் முன்னரேயே நரேந்திரன், அதாவது ஸ்வாமி விவேகானந்தர் பரமஹம்ஸரிடம் வந்து விட்டார்.
விவேகானந்தர் கூறும் ஒரு சம்பவம் இது:
ஒரு நாள் அவர் பரமஹம்ஸருடன் தக்ஷிணேஸ்வரத்தில் இரவில் தங்கி இருந்தார். பஞ்சவடியில் அவர் அமர்ந்திருந்த போது திடீரென்று பரமஹம்ஸர் அவரிடம் வந்தார். சிரித்துக் கொண்டே அவரது கையை பிடித்துக் கொண்டார். பிறகு அவரைப் பார்த்து, “உனது புத்திகூர்மையும் கற்ற விஷயங்களும் இன்று சோதனைக்குள்ளாகப் போகிறது. நீ இரண்டரை தேர்வுகளைத் தான் பாஸ் செய்திருக்கிறாய். மூன்றரை தேர்வுகளைப் பார்த்த ஒரு ஆசிரியர் இங்கு வந்திருக்கிறார். வா, பார்ப்போம், அவருடனான உரையாடலில் நீ எந்த அளவு இருக்கிறாய் என்று பார்ப்போம்” என்றார்.
விருப்பத்துடனேயோ அல்லது விருப்பமில்லாமலோ விவேகானந்தர் அவருடன் செல்ல வேண்டி இருந்தது.
This temple is one hour drive from Sydney.58 min (54.7 km) via Princes Hwy/A1 and M1
We went to the temple on 23-12-2024 and had good Darshan of Lord Shiva and Lord Vishnu in two shrines adjacent to each other. Temple is well maintained; photography inside the temple is not allowed which is very good; all temples must follow this. Siva has goddess Tripurasundari in the nearby shrine ,so do Vishnu has Mahalakshmi near by. All Hindu Gods from Ganesh to Hanuman, Skanda/Muruga are worshipped. We saw six priests serving the devotees with Vibhuti, Kunkum and Theertham (holy water). They welcomed everyone. Behind the temple was a canteen run by the temple. We paid and got Curd rice, Samaosa and vegetable rolls. All soft drinks such as rose milk, mango lassi coffee tea etc. are available. Spacious car park is there. We saw constant flow of devotees that included Tamils, North Indians, Nepalis, few white people. 100 percent recommended. People in our group put money in the Hundi/money box.
Main shrines have Shiva in Linga form and Vishnu in Tirupati Balaji form.
(Free Prasadam was also kept in the outside Prakara (open corridor; we did not go there).
Special parking slot was there for Car Puja; I understand those who buy new cars come here and do this puja with the help pf the temple priests.
We saw places to break coconuts like we have in all Ganesh temples in Tamil Nadu
Temple Address
1 Temple Road, Helensburgh, NSW, Australia, New South Wales
(02) 4214 9080
contactus@svtsydney.org
Three families in three cars with grandchildren visited the temple after a three day stay in Shell Cove (Shell Harbour). Three we hired a six bed room house with three bath rooms and plenty of space in kitchen, reception and garden.
The temple has got many sculptures showing Vishnu Avatars and Shiva leelas; it gives good opportunity to children to learn more about Hindu mythology. Navagraha (Nine Heavenly Bodies) shrine described the significance of those on the walls nearby. 63 Nayanmar statues, Nalvar statues are also there. My grandchildren asked questions about all the big statues. so it is good to go with enough information and stories for children.
Temple authorities also can produce small brochures to explain statues all briefly.
*******
Another Place to visit
Nan Tien Buddha Temple
When one goes to see Venkateswara Temple, it is better to include Nan Tien Buddhist temple with huge temple complex and beautiful and colorful Buddha states. During my Australian visit ten years ago, we went there. Since it is closed on Mondays we could not visit it on 23rd December, 2024. Better to check the opening hours of all places you visit before you travel. Good Vegetarian meal is sold there in the huge canteen. It is approximately 90 Kms from Sydney.
1h 24m (89.4 km)
via Princes Hwy/A1 and M1
-subham—
Tags- My visit, Venkateswara Temple, Helensburg, Australia
ஆண்டாளும் ஏனைய ஆழ்வார்களும் பல சொற்களையும் பெயர்களையும் மொழியியல் ரீதியில் மாற்றி எழுதியுள்ளனர். இந்த ஸ்பெல்லிங் மாற்றங்கள், சந்தி/ புணர்ச்சி விதிகள் ஸம்ஸ்க்ருதத்தைப் போன்ற விதிகளைப் பின்பற்றுகின்றன. உலகிலேயே இன்றுவரை புணர்ச்சி வீதிகளுடன் வாக்கியங்களை எழுதும் முறை சம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் மட்டுமே உள்ளதால் இந்த இரண்டு மொழிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதில் ஐயமில்லை. ஆனால் எப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியன தனிப்பட்ட விதிகளைப் பின்பற்றுகின்றனவோ அது போல தமிழும் ஸம்ஸ்க்ருதமும் தனிப்பட்ட விதிகளைப்பின்பற்றுகின்றன. இந்திய மொழிகள் அகர வரிசையிலும் (alphabetical order) , அகராதி அமைப்பிலும் (dictionary), வாக்கிய அமைப்பிலும் (Sentence Construction) கிட்டட்டத்தட்ட ஒரே அமைப்பினை உடையன. உலகிலேயே மிகப்பெரிய நாடுகளில் ஒன்று என்பதாலும் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை உடையதாலும் அதிக ஜனத்தொகை உடையதாலும் வெளிநாட்டுப்படையெடுப்புகளாலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. உலகில் பல மொழிகளும் நம்முடைய விதிகளைப் பின்பற்றுவது இந்துக்களின் குடியேற்ற வழிகளைக் காட்டுகின்றன. நாம் பரப்பிய பண்பாட்டின் எச்ச சொச்சங்களை அங்கே காண முடிகிறது. உலகில் பழைய மொழிகளில் சம்ஸ்க்ருதம் ஒன்றில் மட்டுமே ‘ஜ’ என்னும் எழுத்து உள்ளது . இது எப்படி ‘ய’ ஆக மாறுகிறது என்பதைக் கண்டால் இந்துக்களின் செல்வாக்கு பரவிய இடங்களை எளிதில் அறியலாம்.
****
இப்பொழுது ஆண்டாள் லிங்குஸ்டிக்ஸ் — மொழியியல் பற்றிக் காண்போம்
சம்ஸ்க்ருதத்தில் ஆ என்ற ஒலியில் முடியும் சொற்களைத் தமிழ்ப் படுத்தும்போது ஐ என்ற ஒலியில் முடிப்போம் :
பகவத் கீதா – கீதை
சீதா – சீதை
கோதா – கோதை
கோதா என்ற சொல் ரிக் வேதத்திலேயே 1-4-2 இருக்கிறது
மாலா – மாலை; ராதா = ராதை
****
விஷ்ணுசித்தர் /ன் என்பது பெரியாழ்வாரின் பெயர்
விஷ்ணுசித்தர் /ன்= விட்டுசித்தன்
ஷ்ணு= ட்டு
பூனை என்ற விலங்கினைக் குறிக்க சங்க இலக்கியம் முழுதும் பூசை என்றுதான் எழுதுவார்கள் ;
வண்டி என்பதைச் சொல்ல பாண்டில் என்றுதான் எழுதினார்கள்.
மாயோன் மேய காடுறையுலகமும் – என்ற தொல்காப்பிய வரிக்கு எழுதிய உரைகளிலும் முல்லை நிலப் பறவை கருடன் என்பதைச் சொல்லும்போது இப்படித் தமிழ்ப் படுத்தியுள்ளனர் .
கலுழன் = கருடன் L=R
கலுழன் = கருடன் L=D
கலுழன் = கருடன் GALUZAN=GARUDAN
****
ஆழ்வார் பாடல்களில் ஒடித்து என்பதை ஓசித்து என்று பாடி இருப்பதைக் காண்கிறோம்.
டி = சி D=S
சம்ஸ்க்ருத எழுத்துக்களை தமிழ்ப் படுத்தும் இடங்களில் இதை மேலும் காணலாம்
பாஷை = பாடை D=S
விஷயம் = விடயம்D=S
இந்த மாற்றங்கள் உலகெங்கிலும் காணப்படுகின்றன ; குறிப்பாக ஆர் =எல் = டி R=L=D மாற்றங்களையும் டி= எஸ் D=Sமாற்றங்களையும் காணலாம்
ஆங்கிலத்தில் டி T என்பதை எஸ் S என்று உச்சகரிப்பதை நூற்றுக் கண கான சொற்களில் காண்கிறோம் TION=SION
*****
திருப்பாவை 10
துளசி = துழாய் Tulsi= Tuzaay
நாற்றத் துழாய்முடி நாராயணன் — என்ற வரி பத்தாவது பாடலில் வருகிறது
*****
இப்போது ஒரு கேள்வியை எழுப்புவோம்
தமிழர்களைப் பார்த்து இப்படி ஆங்கிலேயர்கள் செய்தார்களா அல்லது ஆங்கிலேயர்களைப் பார்த்து தமிழர்கள் இப்படிச் செய்தார்களா ; இரண்டும் இல்லை.
மொழிகள் மாற்றாரின் செல்வாக்கு இல்லாமலேயே இப்படி மாறும் என்றே சொல்லவேண்டும் ;ஷன் SION என்பதை TION என்று ஆங்கிலேயர்கள் சொல்வது ஓசித்து = ஒடித்து என்பதைப் போன்றதே.
*****
Tulasī (तुलसी) refers to the “holy basil” துளசி என்பதை ஏன் துழாய் என்று தமிழுக்கே உரித்தான சிறப்பு ழ கரத்துடன் மாற்றினர் என்று புரியவில்லை; அதே போல கருடன் என்பதையும் ஏன் கலுழன் என்று கஷ்டப்படுத்தினர் (!!!) என்றும் புரியவில்லை!
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது தேவாரத் திருத்தலங்களில் தென்கரைத் தலங்களில் 25வது தலமாக அமையும் திருவலஞ்சுழி தலமாகும்
இத்திருத்தலம் தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சுவாமிமலைக்குத் தெற்கில் இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும் கும்பகோணம் தஞ்சாவூர் பஸ் மார்க்கத்தில் கும்பகோணத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
திருஞானசம்பந்தரால் மூன்று பதிகங்களாலும் திருநாவுக்கரசரால் இரண்டு பதிகங்களாலும் பாடி பரவப்பட்ட இந்தத் தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு.
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும் போது அதில் கடும் விஷம் தோன்றியது. இதனால் அஞ்சிய தேவர்கள் சிவபிரானைச் சரண் புக அவர் இந்தக் காரியத்தை விக்னேஸ்வரர் பூஜையின்றித் தொடங்கியதால் இப்படி ஏற்பட்டது என்று கூறி விக்னேஸ்வரரைத் துதிக்கச் சொன்னார். உடனே தேவர்கள் கடல் நுரையினால் ஒரு விநாயகரை உருவாக்கி அதற்கு பூஜை செய்தனர். பின்னர் பாற்கடலைக் கடைந்து பயனை அடைந்தனர். தேவேந்திரன் அந்த விநாயகரை தான் தினமும் பூஜை செய்வதற்காக எடுத்துக் கொண்டு ஒவ்வொரு தலமாகச் சென்று வருகையில் இந்தத் தலத்தில் பூஜை செய்து விநாயகரை எடுக்க முயலும் போது அவனால் முடியவில்லை.
தேவேந்திரனை விநாயக சதுர்த்தி தோறும் இங்கு வந்து பூஜை செய்யுமாறு விநாயகர் அருள் பாலித்தார்.
கடல் நுரையினால் உருவாக்கப்பட்டதால் இந்த விநாயகர் வெள்ளை வெளேரென்று காட்சி தருகிறார். ஆகவே இவர் ஸ்வேத விநாயகர் என்ற பெயரைப் பெற்றார். இவருக்கு அபிஷேகம் கிடையாது; ஆனால் பச்சைக் கற்பூரம் சார்த்தி வழிபாடு நடக்கிறது.
இந்த ஆலயத்தை தேவேந்திரன் ஆணையிட விஸ்வகர்மா அமைத்ததாக ஐதீகம் கூறுகிறது.
இந்தத் தலத்திற்கு சக்தி வனம், தக்ஷிணாவர்த்தம், திரிணாவர்த்தம் என்ற பெயர்களும் உண்டு.
இன்னொரு வரலாறு இந்தத் தலத்தின் இன்னொரு சிறப்பை விளக்குகிறது.
முன்னொரு காலத்தில் ஆதிசேஷன் பூமியைப் பிளந்து வெளியே வரும் போது ஒரு பெரும் பள்ளம் பூமியில் ஏற்பட்டது. காவிரி நதி இந்த பில துவாரத்தில் இறங்கியது. இதைக் கண்ட சோழமன்னன் மனம் கலங்கினான். அப்போது வானில் ஒரு அசரீரி எழுந்தது. ஒரு மன்னனோ அல்லது முனிவரோ இந்த பள்ளத்தில் இறங்கி பலியிட்டுக் கொண்டால் பள்ளமானது மூடி பழைய நிலை ஏற்படும் என்று அந்த அசரீரி கூறவே அங்கு தவம் புரிந்து வந்த ஹேரண்ட முனிவர் என்பவர் தான் பலியாவதாக அரசனிடம் தெரிவித்தார். அப்படியே அவர் பள்ளத்தில் இறங்க பள்ளம் மூடியது. காவிரி மேலெழும்பி ஓட ஆரம்பித்தது. காவிரி இந்தத் தலத்தை வலமாகச் சுற்றி ஓடியதால் இது திருவலஞ்சுழி என்ற பெயரைப் பெற்றது.
இக்கோவிலில் நாம் ஹேரண்ட முனிவரின் சிலையைக் காணலாம்.
இந்தப் பள்ளத்திலிருந்து எழுந்த ஆதிசேஷன் மஹா சிவராத்திரி அன்று நான்கு யாமத்திலும் நான்கு தலங்களுக்குச் சென்று வழிபட்டான். அந்தத் தலங்களில் இந்த திருவலஞ்சுழியும் ஒரு தலமாகும்.
இங்கு ஆவணி மாதம் 9ம் நாளன்று இந்திர பூஜை வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
இங்குள்ள ஆலயத்தில் ஐந்து நிலைகளுடன் கூடிய பிரம்மாண்டமான ராஜ கோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தில் மூன்று பிரகாரங்கள் உள்ளன. ராஜகோபுரத்தின் பின்புறம் திருக்குளம் அமைந்துள்ளது. அடுத்த கோபுர வாயிலில் கொடி மரமும் நந்தி மண்டபமும் உள்ளன. அதன்பின் ஸ்வேத விநாயகர் சந்நிதி உள்ளது. இங்குள்ள மண்டபம் சித்திர வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது.
வாயிலின் அருகே சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரே கல்லால் அமைந்த ஒரு கருங்கல் பலகணி உள்ளது. சுமார் 9 அடி உயரமும் 7 அடி அகலமும் உள்ள இந்த ஜன்னலில் 16 துளைகள் உள்ளன.
வடக்கில் அலங்கார மண்டபமும், அதை அடுத்து உள்ள சுற்றில் நிறைபணி மண்டபமும் உள்ளது.
தெற்கே மடப்பள்ளியும் வடக்கே உற்சவ மண்டபமும் உட்பிரகாரத்தில் தெற்கே லிங்கங்கள், நவசக்தி மூர்த்தங்களும் மேற்கில் வலஞ்சுழி விநாயகரையும் காணலாம். இங்கு நவ கிரகங்கள் இல்லை. ஆனால் சனீஸ்வரனுக்கு தனி சந்நிதி உள்ளது.
மூன்றாவது வெளி பிரகாரத்தில் தென்புறத்தில் அம்பிகையின் சந்நிதி உள்ளது. சதுர்புஜங்களுடன் அம்பிகை கம்பீரமாக வீற்றிருப்பதைக் கண்டு தரிசிக்கலாம்.
ஆலயத்தில் ஏராளமான நுணுக்கமான வேலைப்பாடுகள் அமைந்துள்ள சிற்பங்களைக் கண்டு களிக்கலாம்.
நக்கீரர் இயற்றிய திருவலஞ்சுழி மும்மணிக்கோவை என்ற நூலாலும் பெரிய புராணம் மற்றும் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களாலும் இந்தத் தலத்தின் பெருமையை அறியலாம்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் வலஞ்சுழி நாதரும் அம்பிகை பெரியநாயகியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.