Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அகராதி என்பது வெளிநாட்டு சம்ஸ்க்ருத அறிஞர்களுக்கு இன்றியமையாத நூலாக இருக்கிறது; இதைத் தயாரித்தவர் ஆட்டோ வான் போத்லிங்க்Otto von Böhtlingk. அவர் ரஷ்யாவிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் 1815– ஆம் ஆண்டில் பிறந்தார்.
அவர் தயாரித்த சம்ஸ்க்ருத அகராதி மிகப்பெரியது; அதில் நிறைய மேற்கோள்களையும் கொடுத்துள்ளார். ஜெர்மன் மொழியில் வெளியானது; பின்னர் ஆங்கிலத்திலும் வெளியானது. அதில் பல பிழைகள் இருந்ததால் அவரே திருத்திய பதிப்புகளையும் வெளியிட்டார். Otto von Böhtlingk 1815-1904 ஆட்டோ வான் போத்லிங்க்ரஷ்யாவில் பிறந்த ஜெர்மானிய சம்ஸ்க்ருத அறிஞர் ; இவருக்கு சம்ஸ்க்ருதம், ரஷ்யன், ஜெர்மன், அராபிய பாரசீக மொழிகளும் தெரியும்
அவர் செய்த இன்னுமொரு குறிப்பிடத்தக்க பணி, பாணினியின் சம்ஸ்க்ருத இலக்கண நூலை வியாக்கியானங்களுடன் வெளியிட்டதாகும்.
ரஷ்யாவில் பிறந்தாலும் குடும்பத்தின் பின்னணி காரணமாக ஜெர்மன் குடிமகன் ஆனார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரிலேயே ஜெர்மன் பள்ளியில் சேர்ந்து படித்தார் பின்னர் பான் , பெர்லின் நகர்களுக்கு வந்து சம்ஸ்க்ருதம் கற்றார் . பாப் மற்றும் வான் ஸ்லேகல் ஆகியோர் சம கால அறிஞர்கள் ஆவர்.
அவர் பல நிறுவ னங்களில் (Royal Academy of Sciences)உறுப்பினராக நியமிக்கப்பட்டாலும் எந்தப் பணியினையும் ஏற்காமல் முழு நேரத்தையும் ஆராய்ச்சியிலும் எழுத்திலும் செலவிட்டார் ஜெர்மனியிலுள்ள ஜேனா, லெய்ப்சிக் நகரங்களுக்கும் சென்று பணிகளைத் தொடர்ந்தார் மரணப்படுக்கையில் இருந்த போதும் இந்து மத வேதம் பற்றி கட்டுரை எழுதினார்; அவர் 1-4-1904-ல் இறந்தார்.
பாணினியின் அஷ்டாத்யாயீ நூலை இந்திய அறிஞர்களின் பாஷ்யங்களுடன் முதலில் ஜெர்மன் மொழியில் வெளியிட்டார். பின்னர் அதற்கான அறிமுகம் , விளக்கங்களை எழுதினார் . ஜெர்மன் மொழியிலேயே விளக்கங்களை எழுதிச் சேர்த்தார் தாது பாடம், பாணினியின் சொற்கள் இண்டெக்ஸ் ஆகியனவும் பின்னர் சேர்க்கப்பட்டன. சம்ஸ்க்ருதம் பயிலுவோருக்கு இது உதவியாய் இருந்தது
13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வோபதேவரின் முக்தபோதா என்ற இலக்கண நூலினையும் போத்லிங்க் வெளியிட்டார்.
நிறைய கட்டுரைகளையும் எழுதி பாணினீயத்தை விளக்கினார். சைபீரிய மொழிகள் பற்றியும் எழுதினார்.
காளிதாசரின் சாகுந்தலத்தையும் சூத்ரகரின் மிருச்சகக்கடிகத்தையும் எடிட் செய்து வெளியிட்டார் .
· அவர் எழுதிய அல்லது எடிட் செய்து வெளியிட்ட நூல்கள் :
· Über die Sprache der Jakuten (Saint Petersburg, 1851)
· Indische Sprüche, a series of Sanskrit apothegms and proverbial verses (2nd ed. in 3 parts, Saint Petersburg, 1870–1873, to which an index was published by Blau, Leipzig, 1893)
· a critical examination and translation of the ChandogyaUpanishad (Saint Petersburg, 1889)
Sanskrit-German dictionary, Sanskrit-Wörterbuch (7 vols., Saint Petersburg, 1853–1875; shortened ed. (without citations) 7 vols, Saint Petersburg, 1879–1889), which with the assistance of his two friends, Rudolf Roth (d. 1895) and Albrecht Weber (b. 1825), was completed in 23 years.
He also published several smaller treatises, notably one on Vedic accent, Über den Accent im Sanskrit (1843).
வேதத்திலுள்ள உச்சரிப்பு முறைகளை விளக்கி முதல் முதலில் ஜெர்மன் மொழியில் எழுதிய பெருமையும் இவருக்குண்டு.
இவருடைய மாபெரும் சம்ஸ்க்ருத அகராதியை— இவர் மீண்டும் மீண்டும் திருத்தி வெளியிட— 23 ஆண்டுகள் ஆயின. இது 7+7 தொகுதிகளைக் கொண்டது.
–SUBHAM—
ஆட்டோ வான் போத்லிங்க், சம்ஸ்க்ருத அகராதி, செயின்ட் பீட்டர்ஸ்பர்க், Otto von Böhtlingk
ஆரண்ய காண்டத்தில் ஐந்தாவது ஸர்க்கமாக அமையும் ‘ சரபங்கர் அக்னிப் பிரவேசம் செய்வது” என்ற ஸர்க்கத்தில் சரபங்கர் ராமரிடம் அனைத்தையும் அர்ப்பணிப்பதைச் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம்.
சரபங்கரின் அர்ப்பணிப்பை அவர் ஶ்ரீ ராமரிடம் இவ்விதம் கூறுகிறார்:
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்
1
2
3
4
5
6
7
8
9
10
1.இந்த நாடகத்தில் இந்த ஒன்பது சுவைகளும் உண்டு
2.இந்த உலோகத்தைக் கீழே போட்டால் பொறுக்க முடியாது!
3.சாப்பிட்டால் சுவையாக இருக்கும்
4.ஷேக்ஸ்பியர் எழுதிய ஜூலியஸ் சீசர், ரோமியோ அன்ட் ஜூலியட், ஒதெல்லோ, மாக்பெத், ஹாம்லெட் ஆகியநாடகங்களில் இது மிகுதி.
5.அசெளகரியமான நிலை. சாப்பிட்ட பிறகு சிலருக்கு வயிறு கனமாக உப்பியது போல் இருக்கும். இன்னும் சிலருக்கு சாப்பிடாமலே கூட இத்தகைய உணர்வு இருக்கும். வயிற்றில் அதிகப்படியான வாயு உற்பத்தியாவதால் இந்நிலை உண்டாகிறது.
6.ஆபாசம், வெறுப்பு
7.வெற்றி பெற்றவுடன் மன்னர்கள் இதை முழக்குவார்கள்
8.இன்பப் பேச்சு, காமச் சேட்டை.
9 பூந்தாது (சூடாமணி நிகண்டு)
தேன் (பிங். )
கள் (சூடாமணி நிகண்டு)
தேனீ (பிங். )
வண்டு (சூடாமணி நிகண்டு)
10.சில மூலிகைகளின் சாற்றை அப்படியே பச்சை நெடியுடன் பருகாமல், அதே சமயம் அடுப்பில் வைத்துக் காய்ச்சாமல், சற்றே சூடு செய்ய, ஓர் இரும்புக்கரண்டியை நெருப்பில் காய்ச்சி, அதை பச்சை மூலிகைச் சாற்றில் பலமுறை தோய்த்து எடுத்து அந்தச் சாற்றைச் சூடாக்குவது ஒரு சித்த/ஆயுர்வேத மருத்துவ முறை…இப்படித் தயார் செய்யப்பட்ட மூலிகையின் ………………….ஆகும்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Sri Ramakrishna Paramahamsa is teaching us spiritual truths through dogs and cats. Let us look at some doggy and catty matters.
1
A disciple once asked Sri Ramakrishna how he was to conquer lust; for, though he was passing his days in religious contemplation, evil thoughts were arising in his mind from time to time. To him the Master said : “There was a man who had a pet dog. He used to caress it, carry it in about his arms, play with it and kiss it. A wise man, seeing this foolish behaviour of his, warned him not to lavish such affection on a dog. For it was, after all, an irrational brute, and might bite him one day. The owner took the warning to heart and putting away the dog from his arms, resolved never again to fondle or caress it. But the animal could not at first understand the change in his master and would run to him frequently to be taken up and caressed. Beaten several times, the dog at last ceased to trouble his master anymore. Such indeed is your condition. The dog that you have been cherishing so long in your bosom will not easily leave you, though you may wish to be rid of it. However, there is no harm in it. Do not caress the dog anymore but give it a good beating whenever it approaches you to be fondled, and in course of time you will be altogether free from its importunities.’
2
The cat catches her kitten with her teeth, and they are not hurt; but when a mouse is so caught, it dies. Thus, Maya never kills the devotee, though it destroys others.
3
The young of a monkey cling to its mother tightly, when she moves about. The kitten on the other hand does not do so but mews piteously, and the mother grasps it by the neck. If the young of the monkey lets go its hold of its mother, it falls and gets hurt. This is because it relies upon its own strength. But the kitten runs no such risk, as the mother herself carries it about from place to place. Such is the difference between self-reliance and entire resignation to the will of God.
4
Again Sri Ramakrishna Paramahamsa used the cat and monkey illustration and said the following:
Similarly, the aspirant who follows the path of Knowledge or path of selfless work depends upon his own effort to attain salvation. On the other hand, the aspirant who follows the path of Love knows that the Lord is the disposer of everything; so with perfect confidence he resigns himself entirely to His mercy. The former is like the young of a monkey and latter like the kitten.
—subham—
Tags- devotee, monkey, cat, kitten, young, Sri Ramakrishna Paramahamsa
ஜெர்மானிய அறிஞர் Theodor Benfey(1809-1881) தியோடர் பென்பே, உலகப் புகழ்பெற்ற பஞ்ச தந்திரக் கதைகளை பற்றிய புதிய செய்திகளை நமக்கு அளிக்கிறார்.
பஞ்ச தந்திரக் கதைகளில் பதிமூன்று பகுதிகள் இருந்ததாகவும் அவைகள் அழிந்துபோய் இப்போது ஐந்து பகுதிகள் மட்டுமே இருப்பதாகவும் பென்பே சொல்கிறார்.
உலகிலுள்ள எல்லா விலங்குகள் (Fables) பற்றிய நீதிக் கதைகளையும் விரிவாக ஆராய்ந்து ஒப்பிட்டு நூல்களை எழுதிய அவர், எல்லாக் கதைகளும் இந்தியாவிலிருந்தே சென்றதாகவும் உறுதிபட மொழிகிறார் .
மங்கோலியர்களும் இந்தியக் கதைகளை பரப்பியதாக புதிய செய்தியையும் பென்பே பகிர்கிறார்.
அவர் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டது தென் இந்தியாவில் வழங்கி வந்த ஸம்ஸ்க்ருதச் சுவடிகள் ஆகும்.
சாமவேதத்தையும் ஆராய்ந்து நூல் வெளியிட்டார்
****
இதோ அவரது வரலாறு:
தியோடர் பென்பே(1809-1881) , ஒரு ஈடு இணையற்ற ஜெர்மானிய அறிஞர்; அவர் சம்ஸ்க்ருத மொழி மற்றும் மொழியியல் தொடர்பான நானூறு நூல்களை எழுதியுள்ளார்.
உலகில் வழங்கும் விலங்குகள் தொடர்பான எல்லா நீதிக் கதைகளையும் ஒப்பிட்ட பின்னர், அவை அனைத்தும் இந்தியாவிலிருந்து சென்றவைதான் என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்கிறார்.
அவர் ஜெர்மனியில் கோட்டிங்கன் நகருக்கு அருகில் 1809– ஆம் ஆண்டு பிறந்தார்; அவருடைய தந்தை ஒரு வணிகர். ஆயினும் யூத மத நூல்களை மகனுக்கு கற்பித்தார். தால்முட் நூலைக் கற்றவுடன் எபிரேய/ ஹீப்ரு மொழியில் ஆராய்ச்சி நடத்தினார் பின்னர் கிரேக்கம் , லத்தீன் மொழிகளைக் கற்று சம்ஸ்க்ருத மொழியின்பால் ஆர்வத்தைச் செலுத்தினார்
அவர் கோட்டிங்கன், மூனிச் நகர்களில் கல்வி கற்றார்
மத்தியதரைக்கடல் பண்பாடு பற்றிய ஆராய்ச்சிக்கு அவர் டாக்டர் பட்டம் பேராறு. பல இடங்களில் பேராசிரியர் வேலை பார்த்துவிட்டு கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் வாழ்நாளின் இறுதிவரை பேராசிரியர் பணியில் இருந்தார் ரஷிய மொழியையும் கற்றார்
பாரிஸ் பெர்லின் முதலிய நகரங்களில் அவருக்கு கெளரவ பதவிகள் அளிக்கப்பட்டன. கிரேக்கச் சொற்களின் மூலம்/ வேர் என்ற நூலை வெளியிட்டார்; எகிப்திய செமிட்டிக் மொழிகளையும் ஒப்பிட்டார்.
சாமவேதத்தை மொழி பெயர்த்து பிற்சேர்க்கையாக சொல் பொருள் விளக்கத்தையும் சேர்த்தார்; அந்த நூல் இன்றுவரை பயன்படுத்தப்படுகிறது.
சம்ஸ்க்ருத மொழியை விளக்க அவர் எழுதிய நூலில் பாணினியின் அரிய இலக்கண நூலை எளிதாக விளக்கினார்
முக்கியமான மொழிகளை அறிந்ததால், ஈசாப் கதைகளைப் போல உள்ள எல்லா மொழிக் கதைகளையும் ஒப்பிட்டு உலகில் இந்தியாதான் இவைகளை அளித்தது என்றார்; மங்கோலிய மொழியில் வேதாளக் கதைகள் மொழி பெயர்க்கப்பட்டதைப் படித்து பல புதிய ஆதாரங்களை முன்வைத்தார். இதன் மூலமாக மங்கோலியர்கள் செய்த பங்கு பணியை முதல் தடவையாக உலகிற்கு காட்டினார்; அது வரை அராபிய, பாரசீக மொழிகளில் பஞ்ச தந்திரம் இருந்ததை மட்டுமே உலகம் அறிந்து இருந்தது. சிரியா மொழியில் பஞ்ச தந்திரக் கதைகள் இருப்பதையும் கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்தார்..
****
· Theodor Benfeyதியோடர் பென்பே (1809-1881)
· பிறந்த தேதி – 28 January 1809
· இறந்த தேதி – 26 June 1881
· பிறந்த ஊர் – கோட்டிங்கன் நகருக்கு அருகில்
· கல்வி கற்ற இடம் – TURBINGEN UNIVERSITY துர்பிங்கன் பல்கலைக்கழகம்
· வேலைபார்த்த இடம் – பிராங்க்பர்ட், ஹைடல்பர்க்கோட்டிங்கன்பேராசிரியர்
·
· Selected works: தியோடர் பென்பே எழுதிய அல்லது மொழிபெயர்த்த நூல்கள்
· De Liguris, 1828, Ph.D. thesis.
· Observationes ad Anacreontis Fragmenta Genuina (Observations on Anacreontis and Genuine Fragments), 1830. Venia Legendi dissertation.
· Über die Monatsnamen einiger alten Völker (Month Names of Ancient Peoples), 1836, in collaboration with Moritz A. Stern.
· Griechisches Wurzellexikon (Lexicon of Greek Roots), 1839.
· Über das Verhältniss der ägyptischen Sprache zum semitischen Sprachstamm (On the relationship of the Egyptian language to the Semitic language group), 1844
· The Cuneiform Inscriptions, 1847.
· The Hymns of Sama-Veda, 1848.
· The History of Oriental Philosophy in Germany, 1868.
· A Practical Grammar of the Sanskrit Language for the Use of Early Students, 1868.
· A Sanskrit-English Dictionary: With References to the Best Edition of Sanskrit Author and Etymologies and Comparisons of Cognate Words Chiefly in Greek, Latin, Gothic and Anglo-Saxon, 1866.
வேதங்களில் உள்ள இலக்கணத்தை விரிவாக ஆராய துவங்கினார்; ஆனால் அந்தப் பணியை முடிப்பதற்குள் அவரது ஆவி பிரிந்தது .
அவர் எழுதிய நூற்றுக்கணக்கான நூல்களில் பஞ்ச தந்திர கதை ஆராய்ச்சியும், சாமவேத ஆராய்ச்சியும் முதலிடம் வகிக்கின்றன.
–subham—
Tags- சாமவேதம், ஆராய்ச்சி, பஞ்ச தந்திரம், ஜெர்மானிய அறிஞர், தியோடர் பென்பே, Theodor Benfey,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
8-12-2024 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பட்ட உரை
ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.
ஆலயம் அறிவோம்! – வைத்யநாத் தாம்!
வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
சௌராஷ்ட்ரே சோமநாதம் ச ஶ்ரீசைலே மல்லிகார்ஜுனம் |
உஜ்ஜயின்யாம் மஹாகாலம் ஓம்காரமமலேஸ்வரம் ||
பரல்யாம் வைத்யநாதம் ச டாகின்யாம் பீமசங்கரம் |
சேது பந்தே து ராமேஷம் நாகேஷம் தாருகாவனே ||
வாரணாஸ்யாம் து விஸ்வேஷம் த்ரயம்பகம் கௌதமி தடே |
ஹிமாலயே து கேதாரம் க்ருஷ்மேஷம் ச சிவாலயே ||
ஏதானி ஜோதிர்லிங்கானி சாயம்ப்ராத படேந் நர: |
சப்தஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரேண வினஷ்யதி ||
த்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்பதாவது தலமாக அமையும் வைத்யநாத் தாம் தலமாகும். தாம் என்றால் க்ஷேத்ரம் என்று பொருள் இந்தத் தலத்திற்கு பைத்யநாத், பஜிநாத், வைஜிநாத் தாம் என்ற பெயர்களும் உண்டு. இது தேவகார் என்னும் நகரத்தில் அமைந்துள்ளது. கர் என்றால் இல்லம் என்று பொருள். ஆக தேவகார் என்றால தேவர்களின் வீடு என்று பொருள்.
த்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம் கூறுகின்ற படி இந்த ஜோதிர்லிங்க தலங்களின் பெயரை உச்சரித்தாலாயே ஏழு ஜன்மங்கள் செய்த பாவம் முற்றிலும் நீங்கும் என்பது உறுதி!
இத்திருத்தலம் ஜார்கண்ட் மாநிலத்தில் தேவகார் நகரில் ஜெசிடி ரயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ளது. இந்த ரயில் நிலையம் வைத்யநாத் தாம் ரயில் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஹௌரா- பாட்னா- டெல்லி ரயில் பாதையில் அமைந்துள்ளது. ராஞ்சி, கொல்கத்தா, ஜாம்ஷெட்பூர், பகலூர் பாட்னா ஆகிய நகரங்களில் இருந்து பஸ் வசதிகளும் உண்டு..
இறைவன் திருநாமம் : ஶ்ரீ வைத்யநாதர்_
இறைவி திருநாமம் : பார்வதி
தீர்த்தம் : பார்வதி தீர்த்தம்
இத்தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு.
இந்தத் தலம் 51 சக்தி பீடங்களில் முக்கியமான பீடமாகவும் அமைகிறது. தேவியின் இதயம் விழுந்த இடமாக இத்தலம் அமைகிறது.
விஷ்ணுவின் சுதர்ஸன சக்கரம் இந்தத் தலத்தைக் கட்டியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது.
சிவன் திருவாதிரை நட்சத்திர நாளனறு ஒரே இரவில் ஜோதிர்லிங்கமாக மாறியதாக புராண வரலாறு கூறுகிறது.
இராவணன் இந்தத் தலத்தில் வந்து சிவபிரானை நோக்கிக் கடும் தவம் புரிந்தான். தரிசனம் தனக்குக் கிடைக்காத காரணத்தால் தன் தலையை ஒவ்வொன்றாக அரிந்து இட்டான். ஒன்பது தலைகள் இடப்பட்ட நிலையில், பத்தாவது தலையை அரிந்திட கத்தி கழுத்தில் பதிந்த போது, சிவபிரான் தரிசனம் தந்து அருளினார். சிவபிரானிடம் லிங்கத் திருமேனி ஒன்றை வழிபாட்டிற்காக வேண்டி அதைப் பெற்றான் அவன்.
இதனால் ஏற்படும் விபரீத விளைவை உணர்ந்த திருமால் அவன் முன் தோன்றி,”லிங்கத்தைப் பெற்றாயே. சிவனிடமிருந்து வாளைப் பெறவில்லையே. அதை அல்லவோ பெற வேண்டும்” என்று கூற இராவணன் லிங்கத்தைக் கிழே வைத்து மீண்டும் தவம் புரிந்து வாளைப் பெற்றான்.
பின்னர் முன் வைத்த லிங்கத்தை எடுக்க முயன்ற போது அது அந்த இடத்தை விட்டுப் பெயராமல் அங்கேயே நிலையாக வேரூன்றி விட்டது. அதை எடுக்க எடுக்க அது கீழே அமிழ்ந்தது. சிவபிரான், “இனி யாம் இங்கேயே எழுந்தருளி இருப்போம்” என்று கூற இராவணன் அங்கிருந்து அகன்றான்.
அந்த நிலையில் சிவபிரான் தரையோடு தரையாக திருமுடி மட்டும் சிறிது தெரியக்கூடிய அளவில் காட்சி தருகிறார்.
இராவணனது வெட்டுப்பட்ட காயம் நீங்கவும் அவனது பத்து தலைகளும் பழைய நிலையில் மீண்டும் பொருந்தவும் சிவபிரான் அருளியதால் அவர் ஶ்ரீ வைத்யநாதர் என்ற பெயரைப் பெற்றார்.
வைத்யநாதரின் பிரதான கோவிலைத் தவிர இங்கு 21 இதர கோவில்களும் உள்ளன. பார்வதி, கணேசர், ப்ரம்மா, காலபைரவர், ஹனுமான், சரஸ்வதி, சூர்யா, ராம, லக்ஷ்மணர்,ஜானகி, கங்கா காளி, அன்னபூரணி, லக்ஷ்மி நாராயணர் ஆகியோருக்கான தனி சந்நிதிகள் உண்டு.
ஸ்வாமி கோவில் மற்றும் அம்மன் கோவில் விமானங்கள் பெரிதாகவும் சுமார் 150 அடி உயரம் உள்ளதாகவும் அமைந்துள்ளன. சுவாமியின் விமான ஸ்தூபியிலிருந்து அம்மனின் ஸ்தூபிக்கு சிவப்பு, பச்சை,மஞ்சள் நிறங்களில் அகலமான நாடாக்கள் கட்டப்பட்டுள்ளன.
இவை மிக அழகாக இருக்கும். இது பிரார்த்தனைக்காரர்கள் நிறைவேற்றிக் கொள்ளும் பிராத்தனைகளுள் ஒன்றாக அமைகிறது.
எல்லா நோய்கள் தீர்வதற்கும் இங்கு பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொண்டு நோய் நீங்கப் பெறுகிறார்கள். சில நாட்கள் இங்கேயே தங்கி தங்கள் விரதங்களை பல பக்தர்கள் முடிக்கின்றனர்.
பக்தர்கள் இங்குள்ள மகிமை வாய்ந்த பார்வதி குண்ட் எனப்படும் பார்வதி தீர்த்தத்தில் எண்ணெய் ஸ்நானம் செய்து ஈர ஆடையோடு கும்பிடுதண்டம், அங்கபிரதக்ஷிணம் முதலியனவற்றைச் செய்கின்றனர். அபிஷேக சாமான்களையும், நைவேத்திய பொருள்களையும் காவடி கட்டி எடுத்துச் செல்வது மரபாக இருக்கிறது.
ஆண்டுக்கு குறைந்தபட்சமாக இங்கு எண்பது லட்சம் யாத்ரீகர்கள் வருகின்றனர். ஆவணி மாதத்தில் நடைபெறும் ச்ராவண மேளாவின் போது பல லட்சம் பக்தர்கள் இங்கு திரள்கின்றனர். பக்தர்கள் தேவகாரிலிருந்து 108 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுல்தான் கஞ்சிலிருந்து கங்கை நதி நீரைக் கொண்டு வந்து இங்குள்ள சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர்.
பக்தர்கள் தங்க ஊருக்குள் பல மடங்களும், சத்திரங்களும் உள்ளன. காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை தினமும் தரிசனம் செய்யலாம்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஶ்ரீ வைத்யநாதரும் அம்பிகை பார்வதி தேவியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
4-12-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.
வாழ்க்கை வழிகாட்டிகள்!
இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை – விக்ரம் சாராபாய்! – 2
ச.நாகராஜன்
.பெரும் சாதனை – இஸ்ரோ உருவாக்கம்
திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள தும்பாவில் ராக்கட் லாஞ்சிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டது. அரபிக் கடலில் தும்பா (ஈக்வேடர் எனப்படும்) நிலநடுக்கோடு அருகே அமைந்த இடம்.
சோடியம் வேப்பர் நிரப்பிய இந்தியாவின் முதல் ராக்கெட் 1963 நவம்பர் 21ம் தேதி ஏவப்பட்டது.
இஸ்ரோவை நிறுவி இந்தியா விண்வெளித் துறையில் கால் பதித்தது.
இதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. நுட்பமாகத் திட்டங்கள் தீட்டப்பட வேண்டியதாக இருந்தது. புதிய கட்டிடங்கள், சாலைகள், தகவல் தொடர்பு சாதனங்கள்,ஏவுதளம், சோதனை ஓட்ட அமைப்பு இதைச் செய்ய வல்ல நிபுணர் குழு என பிரம்மாண்டமான செயல் திட்டம் நுட்பமாகச் செயல்படுத்தப்பட்டு வெற்றியைத் தந்தது.
உடனடியாக பிரம்மாண்டமான ஒரு விரிவாக்கத்தை விக்ரம் செய்ய ஆரம்பித்தார்.
1965ல் ஐ.நா இந்திய விண்வெளி ஏவுதளத்திற்கு அங்கீகாரம் வழங்கியது.
இடையில் ஹோமி பாபா திடீரென்று விமான விபத்தில் மரணம் அடையவே விக்ரம் அடாமிக் எனர்ஜி கமிஷனின் தலைவராக ஆனார்.
அவரது தீவிர முயற்சியினால் 1975ல் (அவரது மறைவுக்குப் பின்னர்)
ஆர்யபட்டா ரஷிய உதவியுடன் விண்ணில் ஏவப்பட்டது.
வெற்றி மேல் வெற்றி
அன்று ஆரம்பித்த விண்வெளிப் பயணத்தில் உயர உயரச் சென்று கொண்டே இருக்கிறோம்.
இந்தியாவில் நாமாகவே வடிவமைக்கும் நமது சாடலைட்டுகள் விண்ணில் ஏவப்படுகின்றன. அடுத்த நாடுகளிலிருந்தும் வரும் சாடலைட்டுகளையும் அவர்கள் வேண்டுகோளின் பேரில் விண்ணில் ஏவ இஸ்ரோ வழி செய்கிறது.
சந்திரனில் தண்ணீர் இருக்கிறது என்பதை உலகிற்கு முதலில் நிரூபித்த நாடாக இந்தியா ஆனது. செவ்வாயை நோக்கிக் கண்ணைப் பதிக்கிறது.
சந்திரனுக்கு ஒரு விண்வெளி வீரரைத் தேர்வு செய்து பயிற்சி தந்து வருகிறது.
இவை அனைத்திற்கும் காரணம் விக்ரம் சாராபாய் அவர்களே!
விருதுகள்
1966ல் அவர் பத்ம பூஷன் விருதைப் பெற்றார். பத்ம விபூஷண் விருது அவர் மறைவிற்குப் பிறகு 1972-ல் வழங்கப்பட்டது. 1969 ஆம் ஆண்டு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதை அவர் பெற்றார்.
இரு வகை மனிதர்கள்
விக்ரம் சாராபாய் பற்றிய ஏராளமான சுவையான நிகழ்ச்சிகளை அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
அவை ஒவ்வொன்றும் அவரது புதியதொரு பரிமாணத்தை எடுத்துக் காட்டும்.
அவரது மகள் மல்லிகா சாராபாய் பரத நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்திப் பெயர் பெற்றவர். அவர் ஒரு நடிகையும் கூட! தன் தந்தையைப் பற்றி விழா ஒன்றில் அவர் கூறிய சம்பவம் இது.
மல்லிகா பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது இரண்டு மாணவர்கள் தங்களுக்குள் அவர் யாருடைய கேர்ள்-ப்ரண்ட் என்பது பற்றி விவாதிக்க ஆரம்பித்தனர். விவாதம் பெரிய சண்டையாக ஆகி ஒரு மாணவர் இன்னொருவரைக் கத்தியால் குத்தி விட்டார்.
விஷயம் பெரிதாகி விடவே விக்ரம் சாராபாய் பள்ளிக்கு அழைக்கப்பட்டார். பள்ளியின் பிரின்ஸிபால் விக்ரமின் சகோதரியான லீலாபென் தான்!
பிரின்ஸிபாலின் அறைக்குள் நுழைந்த வேகத்தில் திரும்பி வந்தார் விக்ரம், சிரித்துக் கொண்டே.
அவர் தனது மகளிடம் கூறினார்; “மல்லிகா, இந்த மீட்டிங் இவ்வளவு சீக்கிரம் முடிந்து விடும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நீ ஒரு குற்றமும் செய்யாத போது நீ தான் காரணம் என்று உன் மீது குற்றம் சுமத்துவது அர்த்தமற்றது. ஒன்று தெரிந்து கொள்! இந்த உலகத்தில் இரண்டு வகையான மனிதர்கள் உள்ளனர். முதல் வகையினர் தான் எப்படி இருக்கிறோமோ அப்படியே வாழ்ந்து கொண்டிருப்பர். அவர்கள் எதைப் பற்றியும் கேள்வி கேட்க மாட்டார்கள். வசதியாக தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை செய்து கொண்டே இருப்பார்கள்.
இரண்டாவது வகையினர் தங்கள் வாழ்க்கையைத் தங்கள் வழியில் அமைத்துக் கொள்பவர்கள். அவர்கள் தங்களுக்கு எது உண்மை என்று படுகிறதோ அந்த வழியில் செல்வார்கள்.
நான் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவன். இந்த வழி தான் என் வாழக்கை எப்படிப்பட்டது என்பதைக் காண்பிக்கிறது.
இந்த வழிகாட்டுதலை மனமுவந்து ஏற்றுக் கொண்டார் மல்லிகா.
.
தந்தையிடமிருந்து அரிய வழிகாட்டுதலைப் பெற்ற மல்லிகா பின்னால் பிரபலமானதில் ஆச்சரியமே இல்லை!
மறைவு
30 டிசம்பர் 1971ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த போது தூக்கத்திலே அவரது ஆவி பிரிந்தது. இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று போற்றப்படும் அவரது அகால மரணம் இந்தியாவிற்கு பெரும் இழப்பாக ஆனது.
கற்களைத் தாங்கத் தயார்
விக்ரம் சராபாய் எதிர்கொண்ட எதிர்ப்புக் கணைகள் எவ்வளவோ; அதை அவர் பொருட்படுத்தியதே இல்லை. அவர் கூறிய கூற்றுக்களில் சில;
சிலர் விண்வெளி திட்டங்களைப் பற்றிக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நமக்கோ நமது குறிக்கோளில் எந்தவித சந்தேகமும் இல்லை.
சத்தத்திற்கு நடுவில் நல்லை இசையைக் கேட்பவன் மிகப் பெரும் சாதனைகளைச் செய்ய முடியும்.
எனது நண்பர் விக்ரம் சராபாய் என்னிடம் சொன்னார்: கூட்டத்திற்கு மேலே நீ நிற்கும் போது உன் மீது எறியப்படும் கற்களைத் தாங்கிக் கொள்ள நீ தயாராக இருக்க வேண்டும்.
இந்தியாவை சாதனை படைக்க வைத்த விக்ரம் சாராபாயை விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று கூறுவதில் அதிசயம் ஒன்றும் இல்லையே!
World Hindu News in Tamil presented by Vaishnavi Anand from London
Thiruppugaz
Talk by Brahannayaki Sathyanarayan on VAIDHYANATHAM, JYOTIRLINGA SHRINE from Bengaluru
***
Talk by Bengaluru Nagarajan on POET VEMANA
***
Talk GANESH KANNAN , TRAINER AND MUSIC TEACHER.
***
Tiruppugaz songs recorded by Kalyanji
***
Anchored by London Swaminathan
If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.
It is on Every Sunday for one hour.
—subham—
SPECIAL BRAOADCAST ON ZOOM, YOU TUBE ON 13-12-2024
Grand Thiruppugaz Festival via You Tube & Facebook by Gnanamayam
‘Tamaso Ma Jyotir Gamaya’
Lead me from Darkness to Light’
Let us Light the Lamp of Wisdom by Singing the Glory of Lord Skanda on December 13,2024- The Grand Karthikai Festival Day.
Gnanamayam is organising this event on line.
Please send your recorded video clips to
the following e mail; it may be from any of the works done by Sri Arunagirinathar such as Thiruupucaz. Kanthar Anubhuthi , Kanthar Alankaram. We will play it on 13-12-2024
வேலும் மயிலும் துணை, வேலும் மயிலும் துணை என்று இடையுறாது ஓதி, வேண்டிய பேறு பெற்றோர் பலர்.
இணையம் மூலம் நடைபெறும்
இவ்விழாவில் குருமுதல்வர்கள் ஆசியுரைகளும், உலகளாவிய இசைக்கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சிகளும் பாகவதர்களின் பிரவசனங்களும்
சைவ அறிஞர்களின் சொற்பொழிவுகளும் நடைபெறும்.
முருகன் அடியார்கள் அவர்களின் குழந்தைகளை கையில் வேலுடன் முருகர் அலங்காரம் செய்து, முருகன் பாடலை பாடச் செய்து தீபத்திருநாளை சிறப்பாக கொண்டாடி கந்தன் திருவடியில் சமர்ப்பிப்போம்.
வேலையும் மயிலையும் நினைப்பதால் அங்ஞானம் நீங்கி மெய்ஞானம் பெற்று நீண்ட ஆயுளும் சகல பேறுகளும் கிடைக்கும் எனபது திண்ணம்.