ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்தி மடல் 8-12-2024 (Post.13,986)

Written by London Swaminathan

Post No. 13,986

Date uploaded in London – 8 DECEMBER 2024 .             

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

COLLECTED FROM POPULAR DAILIES AND EDITED BY LONDON SWAMINATHAN

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை  வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

அனைவருக்கும் வணக்கம்

இன்று ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் எட்டாம் தேதி 2024-ம் ஆண்டு

*****

அமெரிக்காவில் இந்துக்களைக் கேலி செய்யும் துணிகள் விற்பனை– இந்துக்கள் கண்டனம்

அமெரிக்கா முழுதும் ஊர்தோறும் சூப்பர் மார்க்கெட்டுகளை வைத்துள்ள வால்மார்ட் நிறுவனத்தை இந்துக்கள் பாகிஷ்காரிக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் விரும்புகின்றன. அவர்கள் விற்பனை செய்யும் பெண்களின் , ஆண்களின் உள்ளாடைகள் முதல் காலணிகள் வரை 120 பொருட்களில் பிள்ளையார் படத்தைப் போட்டு அவமதிப்பு செய்துள்ளார்கள். இதை ஒருவர் ட்விட்டர் TWITTER தளத்தில் வெளியிட்டதால் வெளி உலகிற்குத் தெரியவந்தது. இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தபின்னர் அவைகளை விலக்கிக்கொள்வதாக  வால்மார்ட் அறிவித்துள்ளது; ஒவ்வொரு பண்டிகை சீசனிலும் அமெரிக்க நிறுவனங்கள் இந்திய நடிகர் நடிகையர் போல அசிங்கமான மட்டரக  பப்ளிசிட்டி –அதாவது மட்டரகமான விளம்பரம் தேடுவதற்காக== இந்துக்களைக் கிண்டல் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன .

வால்மார்ட் முதலிய கடைகள இந்துக்களை பரிகாசிக்கும் செயல்களை செய்வது இது முதல் தடவை இல்லை ; அவர்களுக்கு இது வாடிக்கை ஆகிவிட்டது; இதன் மூலம் அவர்களுக்கு அந்தக் கடைகளை பற்றிய விளம்பரம் கிடைக்கிறது. இந்துக்கள் சாதுக்களாக இருப்பதால் ஆண்டு தோறும், சீசன் தோறும் இது நடைபெறுகிறது இந்தியாவிலும் இந்து விரோத அரசியல் வாதிகளும் நடிகர், நடிகையரும் இதே உத்தியைக் கையாண்டு இந்துக்களை அவமதிக்கின்றனர்; கண்டனம்  தெரிவித்தவுடன் மன்னித்துவிடுங்கள் என்று சால்ஜாப்பு சொல்வதும்  வழக்க மாகிவிட்டது. அவர்களுக்கு பயங்கர அபராதமும் அதிக தண்டனையும் கொடுத்தால்தான் இத்தகைய அசிங்கமான மட்டரக  பப்ளிசிட்டி தேடுவோரிடமிருந்து இந்துக்களுக்கு விமோசனம்  கிடைக்கும் என்று இந்து சமய பார்வையாளர்கள் கருதுகின்றனர்

XXXXXXX

இந்துத் தலைவர்கள் மீது பிரிட்டிஷ் அரசு தாக்குதல்

பிரிட்டனின் இரண்டு புகழ்பெற்ற இந்துத் தலைவர்களின் கெளரவ விருதுகளை ரத்து செய்து அரசரின் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவர்கள் காலிஸ்தானி ஆதரவாளர்களை எதிர்த்தும்  இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ஆதரித்தும் பேசியதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர் என்று பார்வையையாளர்கள் கூறுகின்றனர்

இந்து கவுன்சில் அணில் பனோத் மற்றும் ரமி ரேஞ்சர் இருவரும் சிபிஇ CBE விருதினை இழக்கின்றனர். பிபிசி தவறான செய்தி வெளியிட்டதும் இதற்கு ஒரு காரணம்.

வங்க தேச இந்துக்கள் மீதான தாக்குதலையும் அவர்கள் கண்டித்தனர் பிரிட்டனில் சுதந்திரமான பேச்சுரிமை பழங்கதையாகிவிட்டது என்றும் இருவரும் கருத்து தெரிவித்தனர்.

பிரிட்டனில் லேபர் அரசு பதவி ஏற்றதிலிருந்து இந்துக்களுக்கு ஆபத்து அதிகரித்து வருகிறது; அரசர் பேரில் விருது வழங்கப்பட்டாலும் அவை அனைத்தும் ஆளும் கட்சியின் சிபாரிஸிலேயே வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

xxxxx

கத்தி முனையில் வங்கதேச இந்துக்கள் – பிரிட்டன் எம்.பி.க்கள் கண்டனம்

வங்க தேசத்தில் நடக்கும் இந்துக்களுக்கு எதிரான வன்முறைக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், ( Barry Gardiner ) பேரி கார்டினர் மற்றும் பிரித்தி படேல் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

கடந்த ஆகஸ்ட் முதல், வங்கதேசம் முழுவதும் 2,000 மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன என்றும், சிறுபான்மை இந்துக்களையே குறிவைத்து வன்முறைகள் நடத்தப்பட்டுள்ளன என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ( Barry Gardiner ) பேரி கார்டினர் கூறினார்

மேலும், தடை செய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி உள்ளிட்ட தீவிரவாத அமைப்புக்கள், இந்துக் கோவில்கள் மற்றும் இந்துக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதையும், இடைக்கால அரசின் அதிகாரிகள் இந்த வன்முறை சம்பவங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்காததையும் ( Barry Gardiner ) பேரி கார்டினர் சுட்டிக் காட்டினார்

மேலும், சின்மய் கிருஷ்ணதாஸ் பிரம்மசாரி கைது செய்யப்பட்டதைக் குறிப்பிட்ட ( Barry Gardiner ) பேரி கார்டினர், வங்க தேசத்தில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்றும் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார் .

*****

வங்க தேசத்தில் கொல்லப்படுகிற இந்துக்கள் மனிதர்களாக தெரியவில்லையா? – முதல்வருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி!

வங்க தேசத்தில் கொல்லப்படுகிற இந்துக்கள் மனிதர்களாக தெரியவில்லையா என  தமிழக முதல்வருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது : “நமது அண்டை நாடான வங்கதேசத்தில் நிகழக்கூடிய அசாதாரண சூழலில், இந்து சமுதாயத்தைச் சார்ந்த அப்பாவி பொதுமக்கள் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகின்றது.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற விதமாக, பாரதிய ஜனதா கட்சி சார்பாக நடைபெற்ற நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, பிற மாநிலங்களில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசாங்கம் அனுமதி மறுத்ததுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

வங்கதேசத்தில் நமது சகோதர சகோதரிகளான இந்து மக்கள் கொல்லப்படுவதை கண்டிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக பாஜக
தொண்டர்கள் மற்றும் தலைவர்களை கைது செய்ததன் மூலம், ‘போலி திராவிட மாடல்’ அரசானது பாசிச அரசு என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்துவிட்டது.

தமிழக முதல்வர் அவர்களே, உக்ரைனிலும், பாலஸ்தீனத்திலும் நடக்கின்ற போர்களில் இறந்து போகிறவர்கள் மட்டும் தான் மனிதர்களா? நமது அண்டை தேசத்தில் அப்பாவிகளாய் கொல்லப்படுகின்ற இந்து மக்கள், உங்கள் கண்களுக்கு மனிதர்களாகத் தெரியவில்லையா?

தொடர்ச்சியாக இதுபோன்ற பாசிச போக்கோடு செயல்பட்டு வரும்  இந்த ‘போலி திராவிட மாடல்’ அரசிற்கும், அதன் கைப்பாவையாக இயங்கி வருகின்ற தமிழக காவல் துறைக்கும், எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

*****

 வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து கோவை சிவானந்தா காலனியில் வங்கதேச இந்து உரிமை மீட்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பாரதீய ஜனதா கட்சியின்  மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது பேட்டியளித்த ஹெச்.ராஜா, வங்கதேசத்தில் நூற்றுக்கணக்கில் இந்துக்கள் கொல்லப்படுவதாக குற்றம்சாட்டினார். இந்து கோயில்கள் தாக்கப்படுவதாகவும், இந்தியர்களின் வர்த்தக நிறுவனங்கள் சேதப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

மறவனேரியில் ஆர்.எஸ்.எஸ் மாநில பொருளாளர் மகேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி அமைப்புகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 170 பேரை போலீசார் கைது செய்து பின்பு விடுவித்தனர்.

 *****

ஐ.நா. தலையிட சின்மயா மிஷன் சுவாமி மித்ரானந்தா வலியுறுத்தல்! 

வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான வன்முறைக்கு முடிவு கட்ட ஐ.நா. தலையிட வேண்டுமென சின்மயா மிஷன் சுவாமி மித்ரானந்தா வலியுறுத்தினார்.

சென்னையில் உள்ள சின்மயா மிஷன் சுவாமி மித்ரானந்த செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்துக்கள் சகிப்புத்தன்மை மிக்கவர்கள் என்றும், அமெரிக்காவில் இந்திய இந்துக்களே அதிக பட்டதாரிகளாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

வங்கதேச இந்துக்கள் அங்கேயே இருக்க வேண்டும் என்றும், வங்கதேச இந்துக்களுக்காக தனி பிராந்தியம் அமைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதனை  ஐ.நா. பரிசீலிக்க வேண்டும் என்றும் சுவாமி மித்ரானந்தா கூறினார்.

*****

இலங்கை ஐ.நா. அலுவலகம் முன் உலக இந்து அமைப்பு பேரவை ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் ஐக்கிய நாடுகள் அலுவலகம் முன்பு, அந்நாட்டு ஆர்ஆர்எஸ் மூத்த தலைவர் விஜயபாலன் தலைமையில் உலக இந்து அமைப்புகளின் பேரவையை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், சொத்துக்களை சூறையாடுதல் போன்ற சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்தும், வங்கதேசத்தில் சிறுபான்மையினராக வாழும் இந்துக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு வழங்க கோரியும் ஆர்ப்பாட்டக்கார்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

**************

சபரிமலை கோவிலில் நடிகர் திலீப்பிற்கு விஐபி தரிசனம் – தேவசம் போர்டு, போலீசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

பிரபல மலையாள நடிகர் திலீப் நேற்று சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு விஐபி தரிசனம் வழங்கப்பட்டதாக கேரள நாளிதழில்  இன்று செய்தி வெளியானது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு காத்திருந்தபோது நடிகர் திலீப்பிற்கு விஐபி தரிசனம் வழங்கப்பட்டதாகவும், அவர் தரிசனத்திற்கான முன்வரிசையில் மாலை கோவில் நடை அடைக்கும்வரை நின்றுள்ளார். இதனால், பிற பக்தர்கள் பல மணிநேரம் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததாகவும், அவர்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளா னதாகதாகவும் செய்தி வெளியானது.

இந்த செய்தியை அடிப்படையாக கொண்டு கேரள ஐகோர்ட்டு இன்று தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, நடிகர் திலீப்பிற்கு சபரிமலைகோவிலில் எந்த அடிப்படையில் விஐபி தரிசன வசதி வழங்கப்பட்டது என்று கோர்ட்டு கேள்வி எழுப்பியது. மேலும், நடிகர் திலீப்பிற்கு விஐபி தரிசனம் வழங்கியதற்கு  சபரிமலை தேவசம் போர்டு மற்றும் போலீசாருக்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.விரிவான அறிக்கை சமர்ப்பிக்க போலீசாருக்கு உத்தரவிட்ட ஐகோர்ட்டு, கோவிலின் சிசிடிவி காட்சிகளை  சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

*****

ராமாயணம்‘: லட்சுமணனாக நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர்

 சென்னை, நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதையை மையமாக வைத்து தயாராகும் ‘ராமாயணம்’ படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். கன்னட நடிகர் யாஷ் ராவணனாக வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

 இந்த படத்தில் அனுமானாக சன்னி தியோல், கும்பகர்ணனாக பாபிதியோல் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில் லட்சுமணனாக பிரபல நடிகர் ரவி துபே நடிக்கிறார். இதனை அவரே தற்போது தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், ‘ரன்பீர் கபூர் போன்ற ஒரு மெகா ஸ்டாருடன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறை. அவர் எனக்கு மூத்த சகோதரர் போன்றவர்’ என்றார்.

ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் ராமாயணம் படத்தின் முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளிக்கும் இரண்டாம் இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக உள்ளது. 

*******

 இந்தியர்கள் குறைந்தது 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்— ஆர் எஸ் எஸ் தலைவர் பேச்சு

மக்கள் தொகை குறைந்தால் சமூகம் இல்லாமல் அழிந்துவிடும் என்றும், இந்தியர்கள் குறைந்தது மூன்று குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்

ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பிறப்பு விகிதம் குறைந்து வருகின்றன. இதனால், அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சலுகைகளை அளிக்கப்படுகின்றன. உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் தற்போது இந்தியா உள்ளது. 2024ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை 138 கோடியிலிருந்து 142 கோடியாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

நாகபுரியில் நூல் வெளியீட்டு விழாவில் பேசுகையில் மோகன் பகவத் கூறியதாவது:- மக்கள் தொகை குறைந்து வருவது கவலை அளிக்கிறது. ஒரு சமூகத்தின் பிறப்பு விகிதம் 2.1 சதவிகிதத்திற்கும் கீழ் குறையும் போது சமூகம் அழிவை எதிர்கொள்கிறது என்று மாடர்ன் டொமகிரபிக் ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.

வெளியில் இருந்து எந்த அச்சுறுத்தலும் தேவையில்லை. தானாகவே அது மறைந்துவிடும். பல மொழிகளும் சமூகங்களும் இல்லாமல் போய்விட்டன. எனவே, நமது மக்கள் தொகை 2.1 சதவிகிதத்திற்கு கீழ் போகக் கூடாது. எனவே இதில் குறைவு ஏற்பட்டால் மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

xxxxxxx

மதமாற்றத்துக்கு பயன்படுத்தப்படும் வெளிநாட்டு நிதி —கோவை ‘ஏ3’ மாநாட்டில் பேச்சு

மதமாற்றத்துக்கு பயன்படுத்தப்படும் வெளிநாட்டு நிதி கோவை ‘ஏ3’ மாநாட்டில் பேச்சு

மதமாற்றத்துக்கு பயன்படுத்தப்படும் வெளிநாட்டு நிதி கோவை ‘ஏ3’ மாநாட்டில் பேச்சு

ADDED : டிச 02, 2024 04:16 AM

தேசம் முதலா அல்லது மதம் முதலா’ எனும் தலைப்பில், தேசியவாதி ஜெரோம் ஆன்டோ பேசியதாவது:

மதமாற்றம் இப்போது எளிதாக நடக்கிறது. ஒருவர் மதமாற்றம் செய்யப்பட்டால், அவர் இந்தியாவுக்கு எதிராக மாற்றப்படுகிறார் என அர்த்தம்.

உங்களது சனாதன நம்பிக்கையை மாற்றுகின்றனர். அவர்களின் கோட்பாடுகள் நம் தர்மத்துக்கு எதிராக உள்ளன. இதனால், சமூக மற்றும் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதி, மதமாற்றத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.

வங்கதேசம் இன்று’ என்ற தலைப்பில், ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று பேசியதாவது:

எத்தனையோ படையெடுப்புகளை தாண்டி, நம் பாரதம் நிலைத்து நிற்கிறது. நமக்கு சுதந்திரம் கிடைக்கும்போது, நாடு வெட்டி பிளக்கப்பட்டது. வீரம் மிக்க சீக்கியர், ஹிந்துக்கள் வசித்த பஞ்சாபில் பாதி மற்றும் லாகூர் நம்மிடமில்லை.

வங்கத்தில் பாதி நம்மிடம் இல்லை. தமிழகம் போல, வங்க மொழி இலக்கிய செழுமை வாய்ந்தது. 1905ல் வங்கப் பிரிவினைக்கு எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து, மத ரீதியாக தனி நாடு கோரி கலவரங்கள் வெடித்தன.

ஹிந்துக்கள் தாக்கப்பட்டனர்; துரத்தப்பட்டனர்.வங்க தேசம், பாகிஸ்தானுடன் இணைந்தபோது, ஹிந்துக்கள் இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர்.

வங்கதேச கலாசாரத்தை பாக்., ராணுவம் அழித்தது. இந்திய ராணுவம் சென்று, வென்று தனி வங்கதேசத்தை உருவாக்கி கொடுத்தது. அங்கு, 1972க்கு பிறகு, 26 சதவீதமாக இருந்த ஹிந்துக்கள் இன்று, 6 சதவீதமாக குறைந்துள்ளனர்.

கோவை: கோவையில் நடைபெற்று வந்த, ‘விழித்திரு, எழுந்திரு, உறுதியாக இரு’ என்ற, ‘ஏ3’ மாநாடு, ஆரோக்கியமான விவாதத்துடன் நிறைவடைந்தது.

****

இந்துக்களுக்கு எதிராக செயல்படும் தமிழக அரசு – இந்து முன்னணி குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்றும்தமிழக அரசின் செயல்பாடு இந்துக்களுக்கு எதிராக உள்ளது என்றும் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.

வங்கதேசத்தில் இந்துக்களின் உரிமைகளை மீட்கக்கோரி, மாவட்டத் தலைநகரங்களில் வரும் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக இந்து முன்னணி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் மற்றும் ஆர்எஸ்எஸ் கோட்டத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய காடேஸ்வரா சுப்பிரமணியம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்றும், உளவுத்துறை சரியாக செயல்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார். மேலும் குற்றவாளிகள் குறித்து காவல்துறையிடம் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதில்லை என்று தெரிவித்த அவர், தமிழக அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .

அடுத்த ஒளிபரப்பு

டிசம்பர்  15 –ஆம் தேதி லண்டன் நேரம் ஒருமணிக்கும் இந்திய நேரம் மாலை ஆறரை மணிக்கும்  நடைபெறும். வணக்கம்.

—-subham—-

TAGS- ஞானமயம் , உலக இந்து செய்தி மடல் 8-12-2024, world hindu news81224

Cartoons from Deccan Chronicle upto 8122024

Followig are beautiful cartoons from the Deccan Chronicle News Paper covered up to 8th December 2024

Posted by London Swaminathan on 8-12-2024

 Cartoons from Deccan Chronicle upto 8 12 2024

–Subham–

Tags- Cartoons 8122024

I am a Broomstick! (Post No.13,985)

Written by London Swaminathan

Post No. 13,985

Date uploaded in London – 8 DECEMBER 2024 .             

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

There was a professional preacher who could rouse strong devotional feelings in the hearts of his hearers whenever he delivered religious discourses; but personally he was not a man of character.

Pained at the kind of life he led, I asked him one day  how it was that he moved so many hears  to devotion, while he himself lived such an unworthy life the man bowed and said ,”Yes, Sir, the broom though a contemptible thing , removes the dust and dirt on the floor and the street”.

Of course I couldn’t answer him.

–Sri Ramakrishna Paramahamsa.

****

You need a proper Teacher!

Sri Ramakrishna Paramahamsa adds one more anecdote to emphasise one must have a proper teacher.

One day I was going through the Panchavati, I heard the frightful croaking of a frog. I guessed it must have been caught by a snake.  When after a long time I was returning by that way, I again heard the same noise. Peeping through the bushes, I saw a water snake with a frog in its mouth. It could neither swallow it nor let it go, and there was no end of agony for the frog.

Then I thought, “Well, had it been the victim of a cobra, it would have been silenced for ever after three croaks at the most (and then there would have been no more suffering for either the frog or the snake.). Bu here the snake’s suffering is almost equal to that of the frog’s.  if an unenlightened man takes upon himself a foolhardiness the responsibility of saving another, there is no end to the misery of both. Neither does the ego of the disciple vanish, nor are his worldly ties cut asunder. If the disciple come under the influence of an unworthy teacher, he never gets liberation. But under a competent teacher the egotism of the Jiva perishes with three croaks.

–Sri Ramakrishna Paramahamsa.

–subham—

Tags- Sri Ramakrishna Paramahamsa, broom, frog, water snake, cobra, proper teacher

மகாராஷ்டிரத்தில் பக்தி மணம் பரப்பிய ஞானேஸ்வர் செய்த அற்புதங்கள் (Post.13,984)

Written by London Swaminathan

Post No. 13,984

Date uploaded in London – 8 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

வேதம் ஓதிய எருமை மாட்டுக்கு சமாதி என்ற கட்டுரை, நேற்று வெளியானது. அது தொடர்பான கட்டுரை இது.

மகாராஷ்டிரத்தில் பக்தி மணம் பரப்பிய ஞானேஸ்வர் செய்த அற்புதங்கள் (Post.13,984)

தமிழ் நாட்டில் நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்களின் சரிதத்தை அறியாதோர் மக்கள் அல்ல; மாக்கள். அதே போல ஞானேஸ்வர் சரிதத்தை அறியாதோர் அறியாமையின் சின்னங்கள்தான். சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் ஏற்றிய தீபம் இன்றும் அழியாமல் சுடர் ஒளி வீசிப் பிரகாசித்துக் கொண்டு இருக்கிறது. ஆண்டுதோறும் இரண்டு தினங்களில் பண்டரீபுரத்துக்கு ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் சாரி சாரியாக பக்தர்கள் கூட்டம் வருவதையும் அவர்களின் பஜனை கோஷங்களையும் இன்றும் கேட்கலாம்; காணலாம். அதுமட்டுமல்ல; ஞானேஸ்வரி என்ற பெயரில் வழங்கும் பகவத் கீதை பேரூரைச் செய்யுட்களை பட்டி தொட்டிகளில் கேட்கலாம். அவரது சீடர்கள் பாடிய அபங்கங்கள் என்னும் கீர்த்தனைகளை மகாராஷ்டிரம் மட்டுமின்றி நாடு முழுதும் நடக்கும் கச்சேரிகளிலும் கேட்கலாம்.

யார் இந்த ஞானேஸ்வர் ?

ஞானேஸ்வரின் தந்தையின் பெயர் — விடோபா அல்லது விட்டல் பந்த்;

தாயின் பெயர்— ருக்மாபாய்;

ஞானேஸ்வரின் சகோதர, சகோதரிகள்- நிவ்ருத்தி நாத் , சோபான தேவ்,  முக்தா பாய்

அவருடைய  காலம் –

நிவ்ருத்தி – 1273 CE

ஞானேஸ்வர் –1275 CE

சோபான —  1277 CE

முக்தாபாய் – 1279 CE

நான்கு அவதாரங்கள்

நிவ்ருத்தி –  சிவனின் அம்சம்

ஞானேஸ்வர் — திருமாலின் அம்சம்

சோபான – பிரம்மாவின் அம்சம்

முக்தாபாய் – சரஸ்வதியின் அம்சம்

*****

ஞானேஸ்வரின் தந்தை விட்டோபாவுக்கு  சிறுவயதிலேயே ஆன்மீக நாட்டம் அதிகம்;பெற்றோர்கள் திருமணம் பற்றிப் பேசியதையும் தட்டிக்கழித்து, தல யாத்திரை செய்வதாகப் புறப்பட்டார். அலங்காவதி என்ற  நகரினை அடைந்த பொழுது  சீதோபந்த் என்பவர் வீட்டில் தங்க இடம் கொடுத்தார். அவருடைய மகள் ருக்மாபாய் விட்டோபா மீது காதல் கொண்டாள்.  விட்டோபா புறப்பட்ட தருணத்தில், பின்னால் ஓடிவந்து என்னைக் கல்யாணம் செய்துகொள் என்று மன்றாடினாள்; அவர் மறுக்கவே கூச்சலும் குழப்பமும் உண்டானது ஆயினும் சம்சார சாகரத்திலிருந்துத் தப்பித்து  காசிக்குச் சென்று ஸ்ரீபாத சுவாமிகள் என்பவரைக் குருவாக ஏற்று தவம் புரிந்தார். அந்த நேரத்தில் ஸ்ரீபாதர் தல யாத்திரைக்குப் புறப்பட்டு அலங்காவதிக்கும் வந்து சேர்ந்தார்; அப்பொழுது தந்தையுடன் சென்ற ருக்மாபாய் அவரை நமஸ்கரித்து கண்ணீருடன் நின்றாள்; கல்யாணம் நடக்க வேண்டும் என்று கெளரி விரதம் இருந்ததன் நற்பயன் கிட்டியது; அவளை பார்த்த ஸ்ரீபாத சுவாமிகள் உனக்குத் திருமணமும் நடக்கும்; நான்கு குழந்தைகளும் பிறக்கும் என்று ஆரூடம் கூறினார். அப்போது அவளது தந்தை சீதோபந்த் முன்னர் நடந்த கதைகளைச் சொன்னார்.

ஸ்ரீபாதருக்குத் தூக்கிவாரிப்போட்டது இவளை மறுத்துவிட்டுச் சென்ற விட்டோபாதான் தன்னிடம் சந்நியாசம் பெற்றவன் என்று அறிந்து காசிக்குச் சென்றவுடன் விட்டோபா, உடனே ஊருக்குப் போய் ருக்மாபாயை மணந்து கொள் என்றார் ;

சுவாமி, துறவறம் ஏற்ற  நான் எப்படி மீண்டும் இல்லறத்தில் புக முடியும்? வேண்டாமே! என்று கெஞ்சினார்.

இது குருவின் கட்டளை; ஆகவே இதை நிறைவேற்றுவதே உன் கடமை என்று வலியுறுத்தவே அவரும் ருக்மாபாயை மணந்தார; நான்கு பிள்ளைகளைப் பெற்றார். அவர்களில் ஒருவர் ஞானேஸ்வர் ; ஊருரே அவர்களை வெறுத்தது. சன்யாசி எப்படி மணக்கலாம் என்று சொல்லி ஜாதிப் பிரஷ்டம் செய்து விலக்கி வைத்தனர். பிரமணர்களுக்குரிய சடங்குகளை செய்துவைக்க மறுத்தனர்; எல்லா வகையிலும் அவமானம் செய்தனர் ;அந்தக்குடும்பமே காட்டுக்குள் குடிசைபோட்டு வசிக்கும் அவல நிலை ஏற்பட்டது.

*******

முதல் அற்புதம்

ஞானேஸ்வர் இறைவனின் அவதாரம்; சிறு வயதிலேயே ஞானி ஆனவர். முதலில் சீதோபந்த்துடன் வாழ்ந்தார் அவருடன் ஒரு விருந்துக்குச் சென்றபொழுது திடீரென பிராமணர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். இல்லறம் ஏற்ற சந்நியாசி வந்திருக்கிறான்; அவனுடன் நாம் சாப்பிடக்கூடாது எல்லோரும் எழுந்து போவோம் என்றார்; உடனே உண்மைப் பிராமணன் யார்? என்ற வாக்குவாதம் துவங்கியது . கைகலப்பு ஏற்படவே ஞானேஸ்வர் தடியை எழுத்துச் சுழற்றினார். எல்லோரும் பயந்து ஓடி ஒளிந்தனர் . பலருக்கு அடியும் விழுந்தது; இதற்குள் மாமனார் சீதோபந்த் மயக்கம் போட்டு விழுந்தார் பிராமணர்கள் அரசனிடம் முறையிடவே விசாரணை துவங்கியது. அரசன் முன்னால் ஞானேஸ்வர் விநிறுத்தப்பட்டார். அவருக்கு வயது எட்டுதான் . அவருடைய ஆன்மீக வாதங்களைக் கேட்ட அரசன் அசந்தே போனான். இவன் சிறுவன் அல்ல; ஞானி என்று அவனை அழைத்து தழுவிக்கொண்டார்.  பொன்னும் பொருளும் கொடுத்து காட்டில் வாழும் அவரது தந்தை விட்டோபாவை அழைத்து வாருங்கள் என்று பல்லக்கினை அனுப்பினார். மந்திரியுடன் குடும்பத்தையே, பிராமண குருவைச் சந்த்தித்து இவர்கள் பிராமணர்களே என்று சர்ட்டிபிகேட் வாங்க அனுப்பினார். பைதான் என்னும்  பிரதிஷ்டான நகருக்குச் சென்ற பொழுது வாக்குவாதம் ஏற்ப்பட்டது. எருமை மாட்டின் தலையில் கை வைத்து வேதம் ஓத வைத்தார் ( இதை முந்தைய கட்டுரையில் கொடுத்து இருக்கிறேன் )

*****

இரண்டாவது அற்புதம்

ஒரு அந்தணர் சிரார்த்தச் சடங்கினைச் செய்வதற்கு காத்திருந்தார்; அந்தணர்கள் உரிய நேரத்தில் வரவில்லை; ஞானேஸ்வர் அங்கே இருந்தார் . விண்ணுலகிலிருந்த பித்ருக்களையே நேராகத் திவசத்திற்கு வந்து சேருமாறு அழைத்தார்.  சச்சித்தானந்த பாலா என்ற இறந்த மனிதரை உயிர் பெறச் செய்தார் ; இப்படி எண்ணற்ற அற்புதங்கள்; அவர் பிறவிச் சித்தர்

ஞானேஸ்வர் புகழ் எங்கும் பரவியது  இருபத்திரண்டு வயதே ஆன அவர் ஏராளமானோரை பக்தர்களாக மாற்றினார்; நிறைய சீடர்களும் சேர்ந்தனர். அவர்களில் குறிப்பிட்டத் தக்கவர் நாமதேவர். ஒரு நாள் சீடர்களை  அழைத்து,  தான் சமாதியில் அமரப் போவதாகவும் செங்கற்களை வைத்துச் சுவர் எழுப்பி மூட வேண்டும் என்றும் சொன்னார்; பக்கதர்களும் சீடர்களும் தயங்கினர்; பின்னர் அவர் வலியுறுத்தவே அப்படியே செய்தனர். புனே நகரில் ஞானேஸ்வர் சமாதி இருக்கிறது .

சகோதர சகோதரிகள் நாலவரும், மதுரை ராமேஸ்வரம் வரை புனித யாத்திரையை மேற்கொண்டனர்.  நாமதேவரும் உடன் சென்றார். வர்கரி சம்பிரதாயத்தை இவர்கள் உருவாக்கினார்.

சமாதிகள் உள்ள இடங்கள்

சோபனா சமாதி- கர்ஹா நதிக்கரையில் சாஸ்வத் ;

நிவ்ருத்தி சமாதி- – த்ரயம்பகம்;

முக்தாபாய் சமாதி- – புயற்காற்றில் ஐம்பூதங்களில் கரைந்தார் ;

ஞானேஸ்வர் சமாதி-  – புனே நகரம்  .

ஞானேஸ்வரின் சகோதரி முக்தாபாயும் , அண்ணன் நிவ்ருத்தியும் தம்பி சோபனா தேவும் பெரிய ஞானிகள்; அவர்கள். அனைவரும் அடுத்தடுத்து சமாதி ஆனார்கள். மகாராஷ்டிர பக்தர்கள் இன்றும் நால்வரையும் வணங்கித் துதி பாடுகின்றனர் ; அவரது கீதங்களும் எங்கும் முழங்குகின்றன.

ஆலந்தீ புனே நகரிலிருந்து பன்னிரெண்டு மைல் தொலைவில் இருக்கிறது .ஆலந்தி(ஆநந்தி என்பதன் மருவு) என்னும் இடத்தில் இருக்கிறது  ஆண்டுதோறும் அங்கிருந்து பல்லாயிரக் கணக்கானோர் யாத்திரை புறப்பட்டு பண்டரீபுரத்துக்குச் செல்கின்றனர்; அது கண்கொள்ளாக் காட்சி. எல்லோரையும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தி விடும்

****

ஞானேஸ்வரி நூலின் சிறப்பு – ஞானேஸ்வரின் நூலுக்கு அவர் இட்ட பெயர் பாவார்த்த தீபிகா ; மக்கள் அதை ஞானேஸ்வரி என்று அழைக்கின்றனர் ; அதில் பத்தாயிரம் சுலோகங்கள் உள்ளன. அது பகவத் கீதையின் விளக்க உரை ஆகும்.

அவர் செய்த வேறு நூல்கள்

ஹரிபாட் – இதில் 28 அபங்கங்கள் / கீர்த்தனைகள் உள.

அம்ருதானுபவ — இது சைவ வேதாந்த காவியம்.

பதிமூன்றாம் வயதிலேயே கீதா ஞானேஸ்வரி விளக்க உரையை எழுதினார்.; ப்ரவாரா நதிக்கரையில் நிவாஸ என்னும் ஊரில் அது நிறைவு பெற்றது

—SUBHAM—

TAGS-  ஞானேஸ்வரி, நிவ்ருத்தி ,ஞானேஸ்வர் ,சோபான ,முக்தாபாய், அற்புதங்கள்

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை – விக்ரம் சாராபாய்! – 1 (Post No.13,983)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.983

Date uploaded in London – 8 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

4-12-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.

வாழ்க்கை வழிகாட்டிகள்!

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை – விக்ரம் சாராபாய்! – 1

ச.நாகராஜன்

விக்ரம் சாராபாய்

உலகம் ஓடுகின்ற ஓட்டத்தில் குறைந்தபட்சம் அனைவருக்கும் சமமாகவாவது ஒருவன் ஓட வேண்டும். பின் தங்கினான் என்றால் அதோ கதி தான்!

தனி மனிதன் நிலையே இப்படி இருக்கும் போது ஒரு நாட்டின் நிலை என்னவாகும்?  விண்வெளியுகத்தில் வேகமாகப் பறக்க வேண்டும். சந்திரனை அடைய வேண்டும், செவ்வாயில் கண் பதிக்க வேண்டும், சந்திர குடியிருப்புக்கு இப்போதிருந்தே திட்டம் தீட்ட வேண்டும். அதற்கான கோடிக்கணக்கான ரூபாய்களைத் திரட்ட வேண்டும், அதற்கும் மேலாக அடுத்த நாடுகளின் தயவை நம்பி இராமல் சொந்த மூளையைக் கொண்டு, நமது நுண்ணறிவை மேம்படுத்தி ஜெயிக்க வேண்டும்; ஜெயித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இந்த வகையில் விண்வெளியுகத்தில் ஆக்கபூர்வமான எதிர்காலம் பற்றிய நுட்பமான தீர்க்கதரிசனப் பார்வையைக் கொண்டு நமது நாட்டை விண்வெளித் திட்டத்தில் வழி நடத்திச் சென்று வெற்றி பெற வைத்த மாபெரும் விஞ்ஞானி விக்ரம் சாராபாய் ஆவார்.

பிறப்பும் இளமையும்

விக்ரம் அம்பாலால் சாராபாய் 1919ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி குஜராத்தில் ஆமதாபாத்தில் ஒரு ஜெய்ன் குடும்பத்தில் பிறந்தார். இயல்பாகவே குடும்பம் வணிகத்தில் சிறந்து ஓங்கி செல்வச்செழிப்புடன் விளங்கியது.

அந்தக் கால வழக்கப்படி அவர் ஒரு மாண்டிஸோரி தனியார் பள்ளியில் படித்தார். படிப்பை முடித்தவுடன் இங்கிருந்து நேராக அவர் கேம்பிரிட்ஜ் சென்றார். 1940ல் செயிண்ட் ஜான் கல்லூரியில் மூன்று டிகிரிகளைப் பெற்றார். சிறந்த இயற்பியல் வல்லுநர் ஆனார். இயற்பியலுடன் கணிதத்திலும் அவர் பேரார்வம் கொண்டிருந்தார்.

காஸ்மிக் கதிர் ஆராய்ச்சி

இரண்டாம் உலகப் போர் தொடங்கவே அவர் இந்தியா திரும்பினார். பங்களூரில் இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸயின்ஸில்  சேர்ந்தார். காஸ்மிக் கதிர்களைப் பற்றி ஆராயத் தொடங்கினார்.

பங்களூர், புனே, இமயமலைப் பகுதிகளுக்குச் சென்று ஆய்வுக்கான குறிப்புகளைச் சேகரித்தார்.

1945இல் அவர் கேம்பிரிட்ஜ் திரும்பினார். 1947-ல் அவர் பிஹெச்டி பட்டத்தைப் பெற்றார்.

அவ்வளவு தான், அவரது ஆராய்ச்சி புதிய வேகத்தில் செல்ல ஆரம்பித்தது. ஆமதாபாத்தில் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை (Physical Reseravh Laboratory) சிறிய அறைகளில் 1947 நவம்பர் 11ம் தேதி தொடங்கினார். 1955ல்அதன் கிளையை காஷ்மீர் குலுமார்க்கில் திறந்தார். அத்தோடு திருவனந்தபுரம் கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வகங்கள் தொடங்கப்பட்டன.

விண்வெளியுகம் ஆரம்பம்

1957ல் ஸ்புட்னிக்-1 விண்வெளியில் பறந்தது. விண்வெளி யுகம் வேகம் பிடித்தது. அதே வருடத்தில் பன்னாட்டு பூகோள இயற்பியல் ஆண்டு கொண்டாடப்பட்டது. அங்கு விக்ரம் சாராபாய் யார் என்பதை உலகம் நன்கு அறிந்தது.

புதிய விண்வெளியுகத்திற்கு இந்தியாவை இட்டுச் செல்ல அவர்  தயார் என்பதை இந்தியா அறிந்து மகிழ்ந்தது.

இந்திய விண்வெளிக் குழு நிறுவப்பட, அதன் தலைவராக நியமிக்கப்பட்டார் விக்ரம் சாராபாய்.

ஹோமி பாபா (1906-1966) அவருக்குத் தனது முழு ஆதரவை வழங்கினார்.

எதற்காக விண்வெளி ஆராய்ச்சி

எதற்காக பல கோடியை விண்ணில் இறைக்க வேண்டும். அதனால் என்ன பயன்? – இப்படி கடும் விமரிசனங்கள் எழுந்தன. இந்த கடுமையான விமரிசனங்களை அவர் எளிதில் எதிர்கொண்டார்.

வானமெங்கும் வைரச்சுரங்கம்

பிரபஞ்சத்தில் நமக்குத் தெரிந்து 750 பில்லியன் அதாவது 75000 கோடி நட்சத்திரத் தொகுதிகள் உள்ளன. சில தொகுதிகளில் நான்கு நட்சத்திரங்களும் சில தொகுதிகளில் லக்ஷக்கணக்கிலும் நட்சத்திரங்கள் உள்ளன.

மொத்தமாக எவ்வளவு என்று கணக்கிட்டவர் இதுவரை யாரும் இல்லை.

இந்த ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு விதமான அபூர்வ வஸ்துவைக் கொண்டுள்ளது. இதன் விலை மதிப்பைக் கணிப்பார் யாருமில்லை.

எரிபொருள் அனைத்தும் பூமியில் தீர்ந்து விடும் கால கட்டத்தில் வானத்தை நோக்க வேண்டிவர்களாக நாம் இருக்கிறோ,ம்.

ஏனெனில் வானமெங்கும் வைரச் சுரங்கங்கள் கொட்டிக் கிடக்கின்றன. லூசி என்ற நட்சத்திரம் முழுவதுமே வைரம் தான்.

நம்மைச் சுற்றிச் சுழலும் குறுங்கோள்களில் ஏராளமான விலை உயர்ந்த தாதுப் பொருள்கள் உள்ளன. வோலடைல் எனப்படும் எளிதில் ஆவியாகும் ஆக்ஸிஜன், நீர் போன்றவையும் உள்ளன.

இந்தக் குறுங்கோள்களில் நூற்றுக் கணக்கானவை காலம் காலமாக சந்திரனில் மோதி தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.

ஆகவே தான் அனைத்து நாடுகளும் சந்திரன் மீது பார்வையைப் பதிக்கின்றன.

சீனா எப்படியாவது இநத ரேஸில் முன்னணியில் இருக்கவேண்டும் என விரும்புகிறது. சீனா சந்திரனுக்கு உரிமை கொண்டாடினால் உலகமே அல்லோலகல்லோலப்படும். இந்தியாவின் நிலை பரிதாபகரமாக ஆகி விடும்.

ஒரு கிலோமீட்டர் அகலம் ஒரு கிலோமீட்டர் நீளம் ஒரு கிலோமீட்டர் உயரமுள்ள ஒரு கனகிலோமீட்டரில் குறுங்கோளில் கிடைக்கும் இரும்பு உலகம் முழுவதற்கும் 15 ஆண்டுகள் போதுமானதாகும்.

சந்திரனில் விண்கற்கள் மோதிய இடங்களில் எல்லாம் பிளாட்டினம் அபரிமிதமாக இருக்கிறது.

ஒரு அவுன்ஸ் பிளாட்டினத்தின் விலை ஆயிரம் டாலர். தங்கத்தை விட விலை அதிகமுள்ள இது துருப்பிடிக்காது. பளபளப்பை இழக்காது.

சந்திர பிளாட்டினம் உலகிற்கு வந்தால் உலகெங்கும் ஒளி வெள்ளம் தான்! கைக்கு அடக்கமான செல்களில் சிறிதளவேயுள்ள பிளாட்டினம் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சும்.

மொத்தத்தில் உலகப் பொருளாதாரத்தையே சந்திரன் மாற்றி விடும்.

யார் இதை முந்தி எடுக்கப்போகிறார்களோ அவர்களே உலகின் தலைமைப் பீடத்தைப் பிடிப்பர்.

ஹீலியம் 3

பிரபல ரஷிய விஞ்ஞானி குக்கின்ஸ்கி என்பவரை நாஸா அழைத்து தனது ஆலோசனைக் குழுவில் இணைத்துக் கொண்டது.

ஏன்?

இவர் சந்திரனில் மட்டுமே அபரிமிதமாகக் கொட்டிக் கிடக்கும் ஒரு பொருளைக் கண்டுபிடித்துக் கூறினார்.

குக்கின்ஸ்கி கூறிய பொருள் ஹீலியம் – 3

இது பூமியில் அவ்வளவாகக் கிடைக்கவில்லை. பூமி முழுவதும் தேடிப் பார்த்தால் கூட கிடைப்பது சில கிலோகிராம் தான்.

சந்திரனில் ஒரு மீட்டர் ஆழத்தில் இது ஏராளமாகக் கிடைக்கிறது என்பது இன்னும் ஒரு சுவையான செய்தி. 

இது ஒருபுறமிருக்க, ஓடுபாதையைத் தேர்ந்தெடுத்து ராக்கட்டை செலுத்துவது, சோதனைகளை செய்து முடிவுகளைப் பெறுவது, விண்வெளி நிலையத்தில் எடையற்ற நிலையில் பறந்தவாறே இருப்பது, உணவு உட்கொள்வது – இவையெல்லாம் மிகப் பெரிய விஷயங்கள்.

இதையெல்லாம் தாண்டினால் பெண்கள் விண்வெளி நிலையத்தில் இருப்பது, விண்வெளியில் செக்ஸ், சந்ததிப் பெருக்கம் ஆகியவை பற்றி சிந்திக்கலாம்.

இவ்வளையும் மனதில் அசை போட்டு காயை நகர்த்தினார் விக்ரம் சாராபாய்.

to be continued………………………….

tags-விக்ரம் சாராபாய்

GNANAMAYAM SUNDAY BROADCAST 8-12-2024


GNANAMAYAM SUNDAY BROADCAST 8-12-2024

TIME:  ONE PM LONDON TIME; 6-30 PM IST

VIA ZOOM, FACE BOOK, YOU TUBE

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

World Hindu News in Tamil presented by Vaishnavi Anand from London

***

Talk by Bengaluru Nagarajan on POET VEMANA

***

Talk by Brahannayaki Sathyanarayan on VAIDHYANATHAM, JYOTIRLINGA SHRINE from Bengaluru

***

Talk GANESH KANNAN , TRAINER AND MUSIC TEACHER.

***

Tiruppugaz songs recorded by Kalyanji

***

Anchored by London Swaminathan

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.


—subham—

TAGS- SUNDAY 8-12-24 BROADCAST

தமிழ் தெரியுமா ? 71224 (Post No.13,982)

Written by London Swaminathan

Post No. 13,982

Date uploaded in London – 7 DECEMBER 2024 .             

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள் !

     1 2
    3  
   4   5 6
 7     
       
 8     
       9 
    10  11

குறுக்கே (இடம் வலமாக செல்க)

1 புலவர் என்பதன் ஸம்ஸ்ருதச்சொல்.

7.திருவாரூர் கோவிலில் உள்ள புகழ் பெற்ற குளம்.

8.சுதந்திரம் வாங்கித் தருவதில் முன்னணியில் நின்றவர் .

9.குதிரை; மாணிக்கவாசகர் கதையில் மிகவும் அடிபடும் சொல்.

10.நன்றாக அடிக்க உதவும் .

************

குறுக்கே (வலம் இடமாக செல்க) ←

1. சூரியன் என்பதன் தமிழ்ச் சொல் ←

6. தோழன் என்பதன் ஸம்ஸ்க்ருதச் சொல் ←

10. புகழ் பெற்ற ராமாயணப் புலவன் ←

*************

மேலிருந்து கீழே செல்க

2.தற்காலப் பொருள்- ஆபாசம், காமம் மிகுதியான ;

4.வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் என்னும் பரிதிமாற் கலைஞர் 125 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய நாடகம் 

5.இந்த மூலிகை மருந்தைச் சாப்பிட்டால் எப்போதும் இளமையாக நீடூழி வாழலாம்

7.கால் கருப்புதான் ; ஆனால் இந்தச் சோழனின் புகழோ வானளாவச் செல்லும்

*************

கீழிருந்து மேலே செல்க Arrow Symbol Clipart | Free Download ...

3. நீதிமன்றத்தில் இருதரப்பில், தன் தரப்பில் பேசுபவர் .Arrow Symbol Clipart | Free Download ...

7.சங்க கால குறுநில மன்னன் ; அவன் தலைநகர் விளங்கில் என்று அகநானூறு செப்பும் Arrow Symbol Clipart | Free Download ...

10. அடுப்பெரிக்க உதவும் Arrow Symbol Clipart | Free Download ...

11. ஜகந்நாதர் தேருக்குப் புகழ்பெற்ற ஊர் Arrow Symbol Clipart | Free Download ...

*************

விடைகள்

ன்திக 1வி 2
  வா 3 
 க 4 கா  5ச 6
க 7லாம்
ரி வ    
கா 8ந்தி ல் 
  ரிப   9ரி
ன்ம்க 10ம்பு 11

—-subham—-

Tags- தமிழ் தெரியுமா,   71224

Hindu Crossword 71224 (Post No.13,981)

Written by London Swaminathan

Post No. 13,981

Date uploaded in London – 7 DECEMBER 2024 .             

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1    2 3   
   4     5 
  6        
   7       
8 9 10 11    
           
           
           
 12         
           
13          

Across

1.—He took Rama, Lakshmana to the forest and then to Mithila. (from one corner to another corner across the square.

4. Great King who built Big Temple in Thanjavur in Tamil Nadu.

6. – same. Equal (short sound); music Veda (long sound )

8.- Part of ….. Chit Ananda

11.–Pround , haughty, arrogant; also pride

12. second wife of Pandu; woman from Madra desa.

13. – Demi gods; attendants of Shiva; literal meaning Knowledge Holders.

*****

Down

1.– Dasaratha’s Kula Guru;

2. – many meanings- Brahma, Goat; Indumati’s husband.

3. exhaustion, fatigue, weariness

5. Personal physician to Buddha.

7.-go upward — Vishnu’s short name

9.—Philosophy

10. – Paternal uncle of Pandavas and Kauravas

****

Pandu’s wife; not Kunti Devi

Answers

V1  I A2 S3   
AI R4AJARAJ5A
S S6AMA A E 
I  H7   M E 
S8AT9 V10 G11ARVI
T A IA   A 
H T D M  K 
A V U  I A 
 M12ADRI  T  
    A    R 
V13IDHYADHARA

—subham—

Tags- Hindu CW, 71224

வேதம் சொன்ன எருமை மாட்டுக்கு சமாதி ! (Post No.13,980)

Written by London Swaminathan

Post No. 13,980

Date uploaded in London – 7 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

மஹாராஷ்டிரத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு அற்புதம் இது. எருமை மாடு வேதம் சொன்னவுடன் பிராமணர்கள் வாயடைத்துப் போய் மிரண்டு விட்டனர்; பின்னர் அந்த எருமை மாட்டுக்கு மரியாதையாக சமாதி காட்டினார்கள்!

தமிழ் நாட்டில்  ஆழ்வார்களையும்களும் , நாயன்மார்களையும் எப்படி எல்லோரும் அறிவார்களோ தைப் போல மகாராஷ்டிரம் முழுவதும் ஞானதேவர் மற்றும் அவருடைய சகோதர ,சகோதரிகள் , சீடர்கள் பெயர்களை எல்லோரும் அறிவார்கள்  .

குருவின் கட்டளையின் பேரில் ஞானதேவரின் தந்தை, துறவறத்தை விட்டு இல்லறத்திற்கு வந்தார். அவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர். அவர்களை மஹாராஷ்டிர பிராமணர்கள் ஜாதியிலிருந்து ஒதுக்கிவிட்டு எந்த சடங்கினையும் செய்ய மறுத்து வந்தனர். காரணம் ? துறவறத்தில் இருந்தவர் எப்படி இல்லறத்துக்குத் திரும்ப முடியும் ? அதற்கு  சாஸ்திரத்தில் சான்றே இல்லையே!

அந்த வட்டார அரசனுக்கு இது தெரிய வந்தது. உடனே வறுமையில் வாடிய அந்தக் குடும்பத்துக்கு பொன்னும் மணியும் கொடுத்து ஆதரித்தான். ஆயினும் பிராமண குருவிடம் சர்டிபிகேட் வாங்கிவந்தால் நல்லது என்று எண்ணி மந்திரியுடன் ஞானேஷ்வர் குடும்பத்தைப் பைதான் / பிரதிஷ்டான நகருக்கு அனுப்பினான். அந்த பிராமண குரு அவர்கள் வருவதற்கு முன்னாலேயே இவர்களைப் பற்றி அறிந்து இருந்தார்; ஏனெனில் இருபது பிராமணர்கள் புகார் மனு கொடுத்திருந்தனர்; ஆகையால் வந்தவுடன் குடும்பத்தின் மீது வெறுப்பைக் கொட்டினார். ஞானேஸ்வர் சின்னப் பையன்; ஞான சம்பந்தர்   போல இறைவனின் வடிவம்; ஆகையால் முறையான வாக்குவாதம் மூலம் பிராமணன் என்பவன் செயல்களினால் பிராமணனா பிறப்பினால் பிராமணனா என்று அடிப்படைக் கேள்வியை எழுப்பினார்.

பகவத் கீதையிலும் தமிழ் வேதமான திருக்குறளிலும் சொன்ன வாதத்தை முன்வைத்தார்; பிறப்பொக்கும் எல்லா உயிரும், செய்தொழிலால்தான் வேற்றுமை என்ற வள்ளுவர், கிருஷ்ணரின் வாதத்தை எடுத்துரைத்தார்  அவர் கேட்பதாக இல்லை. அந்த நேரத்தில் தண்ணீர் பானைகளை சுமந்து கொண்டு ஒரு எருமை வந்தது.

ஞானேஸ்வர் சொன்னார். உங்களுடன் வாதம் செய்வதைவிட இந்த எருமையுடன் வாதம் செய்யலாம். அதற்குள்ள அறிவில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட உங்களுக்கு இல்லையே என்றார். பிராமண குருவுக்குக் கோபம் பொங்கியது ; அடா! சிறுவா!  ஏது சொன்னாய் ?என்னை எருமையுடன் ஒப்பிட்டாயா? இப்போது அந்த எருமையின் அறிவினைக் காட்டாவிடில் உன்னை இங்கேயே வெட்டிப்போடுவேன் என்று வசனம் பேசினார்

சிறுவனான ஞானேஸ்வர் எருமை அருகில் சென்று, அதன் தலையில் கையை வைத்தான். அது நாலு வேதங்களில் இருந்தும் வேத மந்திரங்களை உச்சரித்தன. இதற்குள் பெரிய கூட்டமும் கூடிவிட்டது.எருமை மேலும் சொன்னது:

ஜன்மநா  ஜாயதே சூத்ரஹ கர்மணா ஜாயதே த்விஜஹ

வேதோ முக்யஸ்து விப்ராணாம் ப்ரஹ்ம ஞானம் து ப்ரஹ்மணாம்

பொருள்

ஒருவன் பிறவியில் சூத்திரனானகப் பிறக்கிறான். செய்யும் தொழிலால்தான் அந்தணன் ஆகிறான். உயர்ந்தவர்களுக்கு வேதத்தின் பொருளை  , அதாவது பிரம்மத்தை, அறிவதே குறிக்கோள்; அதனால்தான் அவனை பிராஹ்மணன் என்கிறோம் .

பிராமணனுக்கு இருபிறப்பாளர் என்று பெயர்; இதை சங்கத் தமிழ்ப் பாடல்களிலும் காணலாம். பிறப்பில் எவரும் பிராமணர் இல்லை; வேதம் கற்றவுடன் அவர்களுக்கு இரண்டாவது பிறப்பு வருகிறது இதே போல அவரவர் செய்யும் தொழிலால் அவர்களுக்கு ஜாதி ஏற்படுகிறது

இதை வள்ளுவர்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.—குறள் 972

இது பகவத் கீதையின் மொழிபெயர்ப்பு

चातुर्वर्ण्यं मया सृष्टं गुणकर्मविभागश: |
तस्य कर्तारमपि मां विद्ध्यकर्तारमव्ययम् || 4-13||

சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம விபாகஸ:|

தஸ்ய கர்தாரமபி மாம் வித்ய கர்தாரமவ்யயம்:|| 4-13

பொருள்:

குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களை உண்டாக்கினேன். செயற்கையற்றவனும், அழிவற்றவனுமாகிய நானே அவற்றைச் செய்தவன் என்று உணர்வாய்.4-13

மேற்கூறிய ஜன்மநா  ஜாயதே சூத்ரஹ கர்மணா ஜாயதே த்விஜஹ

ஸ்லோகமும் இதையே சொன்னது.

*****

தாஸி கர்ப்ப ஸமுத் பூதோ நாரதஞ் ச மஹாமுனிஹி

தபஸா ப்ரஹ்மணோத் பூதஹ தஸ்ய ஜாதிம்  ந கல்பயேத்

நாரதர், தாசியின் வயிற்றில் தோன்றியவரே ; ஆயினும் தவம் இயற்றி பிரம்மாவின் குமாரராக ஆனார்; இவருடைய ஜாதி என்ன என்று கற்பனையே செய்ய முடியாது (கூடாது).

****

ஊர்வசீ கர்ப்ப  ஸம்பூதோ வசிஷ்டஸ் ச மஹாமுனிஹி

தபஸா ப்ரஹ்மணோத் பூதஹ தஸ்ய ஜாதிம்  ந கல்பயேத்

ஊர்வசீயின் வயிற்றில் பிறந்த வசிஷ்ட மஹாமுனிவர் தவத்தால் மஹா முனிவர் ஆனார் ;இவருடைய ஜாதி என்ன என்றும் சொல்லவே முடியாது (கூடாது).

****

சுனகீ கர்ப்ப  ஸம்பூதோ செள னககஸ் ச மஹாமுனிஹி

தபஸா ப்ரஹ்மணோத் பூதஹ தஸ்ய ஜாதிம்  ந கல்பயேத்

பெண் நாயின் வயிற்றிலிருந்து தோன்றிய செளனக முனிவர் தவம் செய்து பிரம்ம குமாரர் ஆனார். இவருடைய ஜாதியையும் கற்பனை செய்துவிட முடியாது / கூடாது.

ஒருவன் பிறப்பினால் பிராம்மணன் ஆகிறானா? அல்லது வேதம் முதலிய நூலின்

உண்மைப்பொருளை உணர்ந்து பிரம்மத்தை அறிவதால் பிராம்மணன் ஆகிறானா? என்று ஞானேஸ்வர் கேட்ட கேள்விக்கு மேற்கூறிய நான்கு சம்ஸ்க்ருத ஸ்லோகங்களை சொல்லி எருமை மாடு பதில் சொன்னது  எல்லோரும் இந்த அதிசயத்தைக் கண்டு பிரமித்து நின்றனர்

பிராமண குருவின் நற் சான்றிதழ் தேவையில்லாமேயே எல்லோரும் ஞானேஸ்வரரை அங்கீகரித்தனர்; அவர் எழுதிய ஞானேஸ்வரி என்ற பகவத் கீதை விளக்க உரை, பட்டி தொட்டிகள் எல்லாம் முழங்கின. பாமரரும் படித்தோரும் அதை ஒலித்தனர் .

நிவ்ருத்தி -ஞானதேவ்- சோபாந=  முக்தா  பாய்–  ஏக நாத—நாமதேவ்– துக்காராம் ; ஸமர்த்த ராமதாஸ் கீ ஜெய் —என்ற கோஷம் எல்லா பஜனைகளிலும் இன்றும் முழங்குகிறது !

வேதம் சொன்ன  எருமை மாட்டினை பூமியில் புதைத்து சமாதியும் கட்டினார்கள்; அதை இன்றும் காணலாம் என்று சுவாமி சிவானந்தர்  ஞானியர் வரலாறு என்ற நூலில் செப்புகிறார்[  ஸ்ரீ ஞாந  தேவரின் முழு சரித்திரமும்  ஸ்ரீ மஹா பக்த விஜயம் என்ற லிப்கோ நூலிலும் கிடைக்கும்

—subham—-

Tags- எருமை மாடு, வேதம், சமாதி, ஞானேஸ்வர், ஞானதேவ், மகாராஷ்டிரம்

 மஹரிஷி அரவிந்தரிடமிருந்து 4000 கடிதங்களைப் பெற்றவர்! (Post No.13,979)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.979

Date uploaded in London – 7 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

டிசம்பர் 5 : அரவிந்தர் சமாதி தினம்!

 மஹரிஷி அரவிந்தர் ஜனனம் : 15-8-1872

                         சமாதி   : 5-12-1950

அரவிந்தரின் நகைச்சுவை

மஹரிஷி அரவிந்தரிடமிருந்து 4000 கடிதங்களைப் பெற்றவர்!

ச. நாகராஜன்

நிரோத்பரன்

மகத்தான யோக சாதனையைப் புரிந்து உயரிய ஆற்றலை புவிக்குக் கொண்டு வரும் தீவிர சாதனையில் மஹரிஷி அரவிந்தர் புதுவையில் ஈடுபட்டிருந்தார். அதனால் அவரைப் பார்ப்பது வருடத்தில் நிர்ணயிக்கப்பட்ட சில நாட்களில் மட்டுமே முடியும்.

ஆசிரமத்திற்கு வந்து நீண்டகாலம் வசித்த அணுக்கத் தொண்டர் நிரோத்பரன் என்பவர் ஆவார்.

எடின்பரோவில் மருத்துவக் கல்வி கற்ற நிரோத்பரன் பிரபல இசை விற்பன்னரான திலிப் குமார் ராய் மூலமாக (பாரிஸில் இருந்த போது) அரவிந்தரைப் பற்றிக் கேள்விப்பட்டார்.1930ஆம் ஆண்டு அரவிந்த ஆசிரமம் வந்து அன்னையை தரிசித்தார். பின்னர் பர்மா சென்று  சுமார் இரு ஆண்டுகள் மருத்துவராகத் தொழில் புரிந்தார். பின்னர் யோகத்தில் ஆர்வம் ஏற்படஅரவிந்த ஆசிரமத்திற்குத் திரும்பினார். ஆசிரம டாக்டராகப் பணியாற்றத் துவங்கிய நிரோத் அரவிந்தரை நேரில் பார்க்க முடியாத நிலையில் தன் சந்தேகங்களைக் கடிதம் மூலம் அனுப்பிப் பதிலைப் பெறலானார்.

இப்படியாக சுமார் 4000 அரிய கடிதங்களை அவர் அரவிந்தரிடமிருந்து பெற்றார். சாதாரண அன்றாட வாழ்க்கைக்கான குறிப்பிலிருந்து மிக உயரிய யோக சாதனை ரகசியங்கள் வரை இந்தக் கடிதங்களில் அடங்கியுள்ளதைப் பார்க்கலாம்.

1938ஆம் ஆண்டு அரவிந்தரின் கால் உடையவே நிரோத்பரன் அவருக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்க அழைக்கப்பட்டார். அதிலிருந்து அவருக்கு அரவிந்தருடனான நெருக்கம் அதிகரித்தது.

நிரோத்பரன் 1903ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதி பிறந்தார். 103 ஆண்டுகள் நிறைவாழ்வு வாழ்ந்து 2006ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி மறைந்தார்.

அரவிந்தரின் யோக முறையின் படி வாழப் புகுந்த நிரோத்பரன் பெரும் உயரிய நிலையை அடைந்ததும் ஆச்சரியம் இல்லை; 103 ஆண்டுகள் அவர் வாழ்ந்ததும் ஆச்சரியம் இல்லை.

 12 வருட கால அனுபவங்களை அவர் நினைவு மஞ்சரியாக ‘12 இயர்ஸ் வித் ஸ்ரீ அரவிந்தோ’ (12 years wth sri Aurobindoஎன்ற நூலில் தொகுத்துத் தந்துள்ளார். மஹரிஷியுடன் அவர் பேசிய பேச்சுக்கள் (Talks with Sri Aurobindo) 3 தொகுதிகளாக வெளியாகி உள்ளன. அவரது கடிதப் பொக்கிஷங்களும் கூட (Correspondence with Sri Aurobindo) வெளியாகி உள்ளன.

அவரது வாழ்க்கையின் மிக முக்கியமான பணி – அரவிந்தர் போதித்த ஆன்மீக ரகசியங்களை வெளியிட்டது தான்!

இந்தக் கடித பொக்கிஷத்தில் அரவிந்தரின் உயரிய நகைச்சுவை உணர்வைக் காணாலம். மாதிரிக்காக ஒரு சில நகைச்சுவைப் பகுதிகள் இதோ:

1  

நிரோத்பரன் : இந்த யோகா செய்வதற்கு ஒருவருக்கு சிங்கத்தின் இதயமும், அரவிந்தரின் மனமும், நெப்போலியனின் ஆற்றலும் வேண்டும்,

அரவிந்தர்: அட கடவுளே! அப்படியானால் அந்த லிஸ்டிலிருந்து என்னை எடுத்து விடு. ஏனெனில் எனக்கு சிங்கத்தின் இதயமும். கிடையாது, நெப்போலியனின் ஆற்றலும் கிடையாது.

2

நிரோத்பரன் : ஒரு நம்பகமான இடத்திலிருந்து சுப்ரமெண்டல் இறங்கப்போவது மிக சமீபத்தில் நடக்கும் என்று கேள்விப்படுகிறேன். அது உண்மையா, சார்?

அரவிந்தர்: நம்பகமான இடத்திலிருந்து வந்தது என்பதைக் கேட்க நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். எனக்குப் பெரிய ஆறுதலாக இருக்கிறது.

3

நிரோத்பரன்: நேற்று இரவு ஒரு கவிதையை இயற்ற முயற்சி செய்தேன். அது தோல்வியில் தான் முடிந்தது. முதல் இரண்டு அடிகளிலேயே நான் தூங்கி விட்டேன்.

அரவிந்தர்: நீ அதைத் தோல்வி என்று எப்படிச் சொல்லலாம்? (உடனே தூங்கச் செய்யும்) ஒரு புதிய தூக்கமூட்டியை அல்லவா கண்டுபிடித்திருக்கிறாய்!

4

ஜோதிடத்தைப் பற்றி பேசுகையில் டாக்டர் மணிலால் கூறினார் இப்படி: “நான் ஒரு பணத்தைப் பறிக்கும் ஜோதிடரைச் சந்தித்தேன். ஆனால் அவருக்கு நான் சமாளிக்க முடியாத ஒரு முரட்டுப் பேர்வழி என்பது தெரியாது.

உடனே அரவிந்தர் கூறினார்: அவர் உன்னிடம் வருவதற்கு முன்னர் சனி பகவானைக் கும்பிட்டு வந்திருக்க வேண்டும்.

மணிலால் தொடர்ந்தார்: ஆனால் இன்னொரு ஜோதிடர் இருந்தார். நல்ல மனிதர், ஆனால் இறந்து விட்டார்.

அரவிந்தர்: ஆக இப்போது உயிரோடிருப்பவர் கெட்ட மனிதராக்கும்!

5

நிரோத்பரன் : இந்தப் பெண்களையே அழாமல் இருக்கும்படி தொடமுடியவில்லை. இரக்கமற்ற ராக்ஷஸர்கள் என்று டாக்டர்களை அவர்கள் நினைக்கிறார்கள்.

அரவிந்தர்: நல்லது தானே, எப்பேர்ப்பட்ட டார்லிங், ஏஞ்சல் என்று நினைக்காமல் விடுகிறார்களே!

6

நிரோத்பரன்  ஒரு பெண்மணிக்கு கவிதையால் மன அழுத்தம் ஏற்பட்டு அவளது மாதவிடாய் போக்கில் ஒழுங்கற்ற போக்கு ஏற்பட்டு விட்டது என்று அரவிந்தருக்கு எழுதினார்.

அரவிந்தர்: அட கடவுளே! கவிதையாலா இப்படி சீரற்ற மென்ஸஸ் ஏற்படுகிறது?

நிரோத்பரன்: இல்லை, இல்லை. உடல் சோர்வாலும் மன அழுத்தத்தாலும் தான் ஏற்படுகிறது. அந்தக் கவிதையை உங்களிடம் அனுப்ப வேண்டியிருக்கிறது, இங்கிருந்து அங்குபோக வேண்டியிருக்கிறது. இது போதாதா என்ன மன அழுத்தம் உண்டாக?

அரவிந்தர். நல்ல வேளை என் கவலையைப் போக்கினாய்! கவிதை தான் இந்த சீரற்ற மென்ஸஸுக்குக் காரணம் என்றால் நீயும் திலிப்பும் நிஷ்காந்தாவும் என்ன பாடுபடுவீர்கள் என்று நினைத்தேன்.

(இதில் உள்ள ஆழ்ந்த நகைச்சுவையை நினைத்து நினைத்துச் சிரிக்கலாம்இந்த மூன்று ஆண்களுக்கும் ஒழுங்கற்ற மென்ஸஸ் வந்தால் அவர்கள் கதி என்ன ஆகும்!)

7

சம்பக்லால் கூறினார்: எனது கண்களில் எப்போதும் நீர் வடிகிறது.

அரவிந்தர்; வர்ஜிலுக்கும் இதே போலக் கண்களில் எப்போதும் நீர் வடியும். ஹொரேஸுக்கு எப்போதும் மூச்சு விடக் கஷ்டமாய் இருக்கும். பெருமூச்சு விடுவார். அகஸ்டஸ் சீசர் அரசாட்சியில் இந்த இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்த இலக்கிய ஜாம்பவானான மிசெனஸ், “நான் கண்ணீருக்கும் பெருமூச்சுக்கும் நடுவில் அமர்ந்திருக்கிறேன்” என்று சொன்னார்.

8

அரவிந்தர் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தார். அவர் அருகே இருந்த பலரும் தங்களுக்குள் மெதுவாகப் பேசிக் கொண்டிருந்தனர். திடீரென்று சிரிப்பை அடக்க முடியாமல் சம்பக்லால் எழுந்து அறையை விட்டு வெளியே ஓடினார்.

இதைப் பார்த்த அரவிந்தர், “என்ன தெய்வீக சக்தி இங்கு வந்து இறங்கி விட்டதோ?

என்றார்.

நிரோத்பரன், “சம்பக்லாலுக்கு அடக்க முடியாத சிரிப்பு வந்து விட்டது” என்றார்.

அரவிந்தர்: ஓஹோ! ஆக விஷ்ணுவின் ஆனந்தம் இங்கு இறங்கி விட்டது!

***