தெலுங்கு மொழியில் பாகவத நூலை எழுதி அம்மக்களின் நாவிலும் இதயத்திலும் நீங்காத நினைவு பெற்றவர் போதனா.
ஆந்திரத்தில் கடப்பா மாவட்டத்தில் ஒன்றிவிட்டாவில் 600 ஆண்டுகளுக்கு முன்னர் பிராமண குடும்பத்தில் பிறந்தார்.
அவருடைய தந்தையின் பெயர்- கேசனா;
தாயின் பெயர்- லக்ஷ்மியம்மா.
போதனா பிறந்த இடம் , காலம் பற்றி சில கருத்து வேறுபாடுகள் உண்டு தெலுங்கானாவில் உள்ள பம்மெரா கிராமத்தில் பிறந்த தாவும் சொல்லுவார்கள்
அவர் கால அரசர் – Padma Nayaka king of Rachakonda ராசகோண்டாவின் பத்ம நாயக்க.
அவருடைய குரு யார் ?
அவர் சிறு வயதில் அதிகம் கற்கவில்லை. ஒரு நாள் வயலில் மாட்டு மேய்த்துக் கொண்டிருந்தபோது , யோகி ஜிதாநந்தர் அவரைச் சந்தித்து ஞான உபதேசம் செய்தார். அதுமுதற்கொண்டு அவர் ஆன்மீக ஞானம் பெற்றார்.
போதனா என்ன நூல்களை எழுதினார் ?
போதனா தெலுங்கு மொழியில் கவிதை வடிவில் கிருஷ்ணரின் கதை சொல்லும் பாகவதத்தை எழுதினார். அது தவிர நாராயண சதகம், போகினி தாண்டகம், வீரபத்ர விஜயம் ஆகிய நூல்களையும் எழுதினார். ஸ்ரீ சிங்க பூபாலன் என்பவரின் கள்ளக்காதலி மீது இவர் எழுதியது போகினி தாண்டகம்.
இராம பிரானே அவருக்கு தரிசனம் தந்து, பாகவதத்தை எழுதச் சொன்னார். இதை அவரே கவிதையில் எழுதியுமுள்ளார்
పలికెడిది భాగవతమట
పలికించెడి వాడు రామభధృండట నే
పలికిన భవహర మగునట
పలికెద వేరొండు గాథ పలుకగనేల
PalikeDidhi Bhagavatamata
Palikinchedivadu Ramabhadrundata Ne
Palikina Bhavaharamagunata
PalikedaVerondu Gaatha PalukagaNela
Translated it means : “That which is spoken is the Bhagavatam and the one who made me speak/chant this is Lord Rama. The result of chanting this (Bhagavatamata) is ultimate freedom, the Liberation of soul. So, let me sing it, since there is no other story better than this (Bhagavatam).”
முதல் அற்புதம் என்ன ?
போதனாவின் உறவினரின் பெயர் ஸ்ரீநாதர். அவர் வட்டார அரசரின் ஆஸ்தானக் கவிஞர்; பெரிய பண்டிதர். போதனாவைக் காண பல்லக்கில் வந்தார். அப்போது போதனா பாவாதம் எழுதிக் கொண்டிருந்தார்; அவருடைய மகன் மல்லண்ணா , வயலில் உழுது கொண்டிருந்தார் . ஸ்ரீ நாதர் தனது சக்தியைக் காட்டுவதற்காக முன் பக்கத்திலுள்ள பல்லக்குத் தூக்கிகளை நகரச் சொன்னார். அப்படியும் பல்லக்கு முன்னே நகர்ந்தது . உடனே போதனா, நுகத்தடியிலுள்ள ஒரு மாட்டினை அவிழ் த்துவிடு என்று மகனிடம் சொன்னார். இன்னும் ஒரு மாடு வழக்கம்போல உழுதது. பின்னர் ஸ்ரீ நாதர் பின்புறமுள்ள பல்லக்குத் தூக்கிகளையும் விலகுங்கள் என்றார்; அப்படியும் பல்லக்கு அந்தரத்தில் ஊர்ந்து வந்தது. உடனே போதனா தன் மகனிடம் இரண்டாவது மாட்டையும் அவிழ்த்து விடு என்றார் அப்படிச் செய்தபின்னரும் ஏர் தானாகவே உழுது கொண்டிருந்தது; உடனே ஸ்ரீ நாதர் பல்லக்கிலிருந்து இறங்கி அவரிடம் மன்னிப்புக் கோரினார்.
இரண்டாவது அற்புதம் என்ன ?
பாகவத நூலை அரசரிடம் சமப்ப்பித்தால் நல்ல வெகுமதியும் புகழும் கிடைக்கும் என்று போதனாவிடம் ஸ்ரீநாதர் சொன்னார். போதனா பதிலே சொல்லவில்லை; ஆனால் ஸ்ரீநாதர், அரசரிடம் போய் , போதனா வரப்போவதாகச் சொல்லிவிட்டார். பல நாட்கள் ஆகியும் போதனா வராததால் காவலாட்களை ஏவி அவரை இழுத்து வருமாறு அனுப்பினார். ஆனால் அவர்களை பன்றி கள் தாக்கி அழித்தன. வீட்டுக்குத் தீ வைக்கும் படி சேவகர்களை அரசன் அனுப்பினான். ஆனால் மன்னரின் மாளிகையே தீப்பிடித்தது.
மூன்றாவது அற்புதம் என்ன ?
கோபம் கொண்ட அரசன் போதனாவை கிராமத்திலிருந்தே விரட்டினான்; அரசனுடைய செல்வமெல்லாம் அழியத் தொடங்கியது; பின்னர் போதனாவை அழைத்து நிறைய செல்வத்தை அளித்து ஆதரித்தான் .
இவ்வாறு வாழ்நாள் முழுதும் இறைவனே வந்து போதனாவுக்கு உதவினார்.
நான்காவது நிகழ்ச்சி என்ன ?
போதனா எழுதிய பாகவத நூலில் ஒரு தவறு இருப்பது போல ஸ்ரீநாதர் கருத்து தெரிவித்தார் அதாவது கஜேந்திர மோட்சம் அத்தியாயத்தில், விஷ்ணு கையில் சார்ங்கம் இருப்பதாக எழுதவில்லையே என்றார். அவருக்குப் பாடம் கற்பிக்க வேண்டி போதனா ஒரு தந்திரம் செய்தார். ஸ்ரீ நாதரின் மகனை ஓரிடத்தில் பாதுகாப்பாக ஒளித்துவிட்டு , அவர் சாப்பிடும் போது, உங்கள் மகன் பாழுங்கிணற்றில் விழுந்துவிட்டான் என்று போதனா சொன்னார். அவர் பாதி சாப்பாட்டினை நிறுத்திவிட்டுப் பாழுங்கிணற்றுக்கு ஓடிவந்தார். கயிறும், தூக்குவதற்கான கருவிகளும் இல்லாமல் எப்படிக் காப்பாற்றப்போகிறீர்கள்? என்று கேட்டப்போது விழித்தார். பின்னர் மகன் பாதுகாப்பாக இருப்பதைத் தெரிவித்தார்; அப்போது கஜேந்திர மோட்சத்தை விளக்கினார். உங்கள் மகனைக் காப்பாற்ற எந்தவிதக் கருவியும் எடுக்காமல் கிணற்றுக்கு ஒடி வந்தீர்களே ! அதைவிட பக்கதர்களிடையே இறைவனுக்கு கருணையும் அவசரமும் உண்டு; ஆகையால் நான் சார்ங்கம் பற்றிக் குறிப்பிடவில்லை என்றார்.
அவருடைய தெலுங்கு மொழி பாகவதம் அவருக்கு அழியாத புகழை ஈட்டித்தந்தது. பாகவத நூலின் தெலுங்குப் புஸ்தகத்தை ஓடும் கார்ட்டூன் திரைப்படமாக எடுக்க அமெரிக்க நாசா விஞ்ஞானி புட்சா மல்லிக் முயற்சி எடுத்துள்ள செய்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கில நாளேட்டில் வெளியானது
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் THE NEW INDIAN EXPRESS
Updated on:
29 Sep 2019, 5:27 am
As part of keeping Telugu’s beloved poet Pothana’s Bhagavata poems alive for generations to come, a retired scientist of NASA Putcha Mallik is planning to make the animated versions of Telugu Bhagavatham.
Putcha Mallik, who was currently living in Houston, was in touch with Sony for bringing the animated Telugu Bhagavatham.
“Mallik is planning to bring animated versions in Telugu, Kannada, Hindi and English. So that pan-India will know about the greatness of Pothana and Telugu Padyam (metered poetry),” said retired IAS officer MVS Prasad, who was organising various programmes locally to promote Pothana’s magnum opus, along with Mallik.
அற்புத அவதாரமான ஶ்ரீ சத்யசாயிபாபா (தோற்றம் 23-11-1926 சமாதி 24-4-2011) தன் வாழ்நாள் முழுவதும் ஆற்றிய அற்புதங்கள் ஏராளம், ஏராளம்.
உலகெங்கிலுமிருந்து அவரை தரிசிக்க வந்து அவரது பக்தர்களானோர் அனுபவித்த லீலைகளும் ஏராளம்.
இவர்களில் ஒருவர் பிலிஸ் கிறிஸ்டால். (Phyliis Krystal).
இங்கிலாந்தில் லண்டனில் 1914-ம் ஆண்டு பிறந்த கிறிஸ்டால் இந்திய ஆன்மீக மகான்கள் பால் அளவற்ற ஆர்வம் கொண்டவர். ஒரு நாள் அவர் சத்யசாயிபாபாவின் படத்தைத் தற்செயலாகப் பார்க்கவே, அவரைப் பற்றி அறிய ஆர்வம் கொண்டு 1973ம் ஆண்டு தன் கணவருடன் பங்களூரை வந்து அடைந்தார்.
அவரது கணவர் சிட்னி அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் பிரபலமான அட்டர்னி. தம்பதியினருக்கு இரு மகள்கள் உண்டு.
தரிசனத்திற்காக அமர்ந்திருந்த வரிசையில் கிறிஸ்டாலைப் பார்த்த பாபா, நாளைக்கு காலை 9 மணிக்கு பேட்டி அறைக்கு வா, பேண்டுடன் வா” (bring the band) என்றார். கிறிஸ்டாலுக்கு ஒன்றும் புரியவில்லை. பேண்ட் என்றால்..? அவரது குழப்பத்தைப் பார்த்து குறும்பாகப் புன்னகைத்த பாபா HUS-BAND ஹஸ்பெண்ட் என்றார். அனைவரும் சிரித்தனர்.
இப்படி ஆரம்பித்தது பாபாவினுடனான அணுக்கமான தரிசனங்கள்.
ஒரு நாள் பாபா ஒரு திருமணத்தை நடத்தி விட்டு வந்ததாகச் சொன்ன போது சிட்னி தநது மனைவியுடனான 33வது மணநாள் ஜனவரி 30ஆம் தேதி வரவிருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பாபா அன்று அவசியம் அவர்களைப் பார்ப்பதாகத் தெரிவித்தார்.
ஜனவரி 30 வந்தது.
யாரோ ஒருவர் கதவைத் தட்ட யார் என்று பார்த்த கிறிஸ்டாலிடம் ஒருவர், பாபா அவர்களை பார்க்க வரச் சொன்னதாகச் சொன்னார்/ உலகின் ஆகப் பெரும் அதீத உளவியல் விஞ்ஞானிகளான டாக்டர் கார்லிஸ் ஓஸிஸ் மற்றும் டாக்டர் எர்லெண்டர் ஹரால்ட்ஸன் ஆகியோரும் பாபாவால் அழைக்கப்பட்டிருந்தனர்.
கார்லிஸ் ஓஸில் நியூயார்க்கில் உள்ள அமெரிக்க அதீத உளவியல் ஆய்வு மையத்தின் இயக்குநர். (Dr. Karlis Osis Director of the American Society for Psychical Rresearch) ஹரால்ட்ஸன் ரெய்க்ஜவிக்கில் உள்ள ஐஸ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் உளவியில் பிரிவைச் சேர்ந்தவர்.
தொடர்ந்து பாபாவின் அதீத உளவியல் ஆற்றல்களைப் பற்றி ஒரு பெரும் ஆய்வை அவர்கள் மேற்கொண்டிருந்தனர்.
திடீரென்று பாபா சிட்னி -கிறிஸ்டால் தம்பதியின் 33வது திருமண நாளையொட்டி அவர்களுக்கு வைதீக ரீதியிலான ஆன்மீகத் திருமணம் நடத்தப் போவதாக அறிவித்தார்.
சஷ்டியப்த பூர்த்தி என்றால் என்ன என்று அவர்களுக்குப் பின்னால் சிலர் விளக்கினர்.
சிட்னியை அருகில் அழைத்தார் பாபா. இரு விஞ்ஞானிகளும் மிக அருகில் இருந்து உன்னிப்பாக பாபாவைக் கவனிக்கலாயினர்.
தனது கையை வட்டமாகச் சுழற்றிய பாபா ஒரு தங்க மோதிரத்தை அனைவருக்கும் காட்டி சிட்னியிடம் வழங்கினார். சைகை மூலம் கிறிஸ்டாலை அழைத்த பாபா அதை சிட்னியிடமிருந்து வாங்கி சிட்னியின் இடது கை மோதிர விரலில் அணிவிக்கச் சொன்னார்.
பின்னர் தன் கையை விஞ்ஞானிகளும் இதர அனவரும் பார்க்க அது வெறும் கையாக இருப்பதைக் காண்பித்து விட்டு கையைச் சுழற்றினார். ஆ! என்ன அதிசயம். இப்போது அவரது கையில் ஒரு பெரிய நெக்லஸ் ஜொலித்தது. 32 அங்குல நீளம் உள்ள பெரிய அந்த நெக்லஸ் அனைவரையும் கவர்ந்தது. அதில் நவரத்தினங்கள் எட்டு செட் பதிப்பிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு செட்டும் ஒரு தங்க மணியால் பிரிக்கப்பட்டிருந்தது. ஆக மொத்தம் எல்லாமாகச் சேர்ந்து 81 மணிகள்! நெக்லஸின் கீழே பாபாவின் படம் கொண்ட ஒரு டாலர். அதில் உலகின் ஐந்து பெரும் மதங்களின் அடையாளச் சின்னங்கள் சித்தரிக்கப்பட்டிருந்தன. கண்களில் நீர் ததும்ப அதைப் பெற்று அணிந்தார் கிறிஸ்டால். அதைப் புடவையின் உள்ளே இருக்கும்படி அணிய வேண்டும் என்று பாபா அறிவுறுத்தினார். அதை மற்றவர்களுக்குக் காண்பிக்கலாமா என்று கேட்ட கிறிஸ்டாலிடம்,”, தாராளமாக, இவர்கள் உனது சகோதர, சகோதரிகள் தாம்” என்றார் பாபா. நவகிரகங்களின் பாதுகாப்பைத் தரும் நவரத்தினங்கள் இவை என்றார் பாபா.
ஹிந்து முறைப்படி இது மங்கலசூத்ரம் (அல்லது தாலி) எனப்படும் என்பதை கிறிஸ்டால் தம்பதியினர் விளங்கிக் கொண்டனர்.
நெக்லஸை விஞ்ஞானிகள் பார்த்து பிரமித்தனர். விஞ்ஞானிகளைப் பார்த்த பாபா, “இது எப்படி நடந்தது என்று உங்களால் விளக்க முடியுமா?” என்று கேட்டு அவர்களைச் சீண்டினார்.
முடியாது என்று தலையை அசைத்தனர் விஞ்ஞானிகள்.
அவர்கள் தூய்மையான இதயம் கொண்டவர்கள் என்பதால் அவர்களது ஆய்வுக்காகத் தேவையான அளவு வாய்ப்புகளைக் கொடுத்து வருவதாகக் கூறிய பாபா, தனது சங்கல்பத்தினாலேயே அப்படிப்பட்ட பொருள்களைத் தாம் சிருஷ்டிப்பதாகக் கூறினார்.
இதற்கு அறிவியல் ரீதியாக விளக்கத்தை உங்களால் அளிக்க முடியுமா என்று அந்த இரு விஞ்ஞானிகளும் பாபாவைக் கேட்டனர்.
“உலோகாயத விஞ்ஞானம் ஒரு நாளும் இதை அறிய முடியாது. விஞ்ஞானத்தின் எல்லை குறுகிய ஒன்று. அது படைக்கப்பட்ட உலகைத் தாண்டிச் செல்ல முடியாது. விஞ்ஞானம் சோதனைகளை அடிப்படையாகக் கொண்டது. ஆன்மீகமோ அனுபவத்தையும் உள்ளுணர்வையும் அடிப்படையாகக் கொண்டது. ஒரு பெரிய டாக்டரும் கூட சிகிச்சை செய்ய எக்ஸ்ரே உள்ளிட்ட பல சோதனைகளை எடுக்கிறார். ஆனால் எனக்கு எதுவும் தேவையில்லை. நேரடியாக சரியான சிகிச்சையை நான் தந்து விடுவேன்” என்றார் பாபா.
தங்களது சோதனைகள் மற்றும் விதிகளின் படி கட்டுப்பாடான சூழ்நிலையில் பாபா இதைச் செய்து காட்ட வேண்டும் என்று இரு விஞ்ஞானிகளும் வேண்டினர்.
பாபா பொறுமையை இழந்தார். “இதோ உன் மோதிரத்தைப் பார், “ என்று அவர்களில் ஒருவரிடம் சொன்னார். அவர் தனது மோதிரத்தைப் பார்த்தார். அதில் பதிக்கப்பட்டிருந்த படத்தைக் காணோம். கீழே விழுந்து கிடக்கிறதா என்று தேடலானார். அனைவரும் தேடினர். ஆனால் போனது போனது தான். அந்தப் படம் கிடைக்கவில்லை.
“இது எனது எக்ஸ்பரிமெண்ட்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் பாபா.
இரு தினங்கள் கழிந்தன. இரு விஞ்ஞானிகள் உள்ளிட்ட அனைவரும் அழைக்கப்பட, பாபா மோதிரத்தில் படத்தை இழந்தவரைப் பார்த்து, “என்ன படம் கிடைக்கவில்லையா? அது வேண்டுமா?” என்று கேட்டார். அவரிடமிருந்து மோதிரத்தை வாங்கிக் கொண்ட பாபா அதே படம் தான் வேண்டுமா அல்லது வேறு படம் வேண்டுமா என்று கேட்டார்.
அதே படம் தான் வேண்டும் என்று பதில் வந்தது.
உடனே பாபா மோதிரத்தைத் தன் கையில் மடக்கி வைத்துக் கொண்டு மூன்று முறை ஊதினார். கையைத் திறந்தார். என்ன ஆச்சரியம்!
தொலைந்து போயிருந்த அந்தப் படம் இப்போது பதிக்கப்பட்டிருந்தது. நன்கு பிரகாசமாகத் திகழ்ந்த அந்தப் படத்தில் பின்புலம் மட்டும் இப்போது வேறாக இருந்தது.
இரு விஞ்ஞானிகள் உட்பட அனைவரும் ஓவென்று கத்தினர். உஷ் என்று விரலை உதடுகளில் வைத்த பாபா அவர்களின் கூச்சலை மட்டுப்படுத்தச் சொன்னார்.
விஞ்ஞானிகளுக்கே ஒரு எக்ஸ்பெரிமெண்ட் தந்த பாபாவை கிறிஸ்டாலும் சிட்னியும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
தனது அனுபவத்தை சாயிபாபா – தி அல்டிமேட் எக்ஸ்பீரியன்ஸ் என்ற புத்தகமாக எழுதி கிறிஸ்டால் வெளியிட்டார்.
நீண்ட கால அணுக்கத் தொண்டராக இருந்த கிறிஸ்டால் அமெரிக்காவிலிருந்து லண்டன் சென்று தன் இறுதி நாட்களைக் கழித்தார். சிட்னி 1993-ம் ஆண்டு 85-ம் வயதில் மரணமடைந்தார். கிறிஸ்டால் 102 வயது வரை நிறைவாழ்வு வாழ்ந்து 2016-ல் டிசம்பர் 10-ம் நாளன்று காலமானார்.
வாழ்நாள் முழுவதும் தொண்டிற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட சிட்னி-கிறிஸ்டால் தம்பதி மறைந்த பின்னர் அமெரிக்காவில் நிறுவப்பட்ட சிட்னி அண்ட் பிலிப் கிறிஸ்டால் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு அவர்களது தொண்டைத் தொடர்கிறது.
***
ஆதாரம் : Saibaba The Ultimate Experience by Phyllis Krystal (Chapter 13)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Continued from yesterday’s post.
6
In Jatras depicting the life of Krishna , the play commences with the beating of the drums and the loud singing of O Krishna, Come, Come! Oh Dear!. But the man who plays the part of Krishna pays no heed to the noise and goes on complacently, chatting and smoking in the green room behind the stage. But as soon as the noise ceases, and the pious sage Narada, overflowing with love enters the stage with sweet and soft music and summons Krishna to appear, Krishna finds that he can no longer remain indifferent. Hurriedly he then enters the stage. As long as the spiritual aspirant calls on the Lord with mere lip prayers Come O Lord, the Lord does not appear. when the Lord comes the heart of the devotee melts into divine emotion, and all loud utterances cease for ever. The Lod cannot tarry when his devotee calls on Him from the depth of his heart overflowing with profound love.
7
The breeze that comes from the ocean of Brahman affects every heart on which it flows. The ancient sages Sanaka , Sanantana and others were softened by this breeze. The God intoxicated Narada however obviously got the glimpse of the Divine ocean from a distance; and so forgetting his own self, he had been wandering over the world like a mad man , always singing the praise of Lord Hari. Sukadeva, a born ascetic, only touched the water of that ocean thrice with his hand, and ever since he had been rolling about like a child through the fulness of its ecstasy. And the great teacher of the universe Mahadeva, drank three handfuls of water thereof and has since been lying motionless like a corpse, intoxicated with Divine bliss. Who can fathom the depth, or the mysterious power, of this ocean?
8
For this Kali Yuga, Naradiya Bhakti or communion with God by love, devotion, self surrender as practised and preached by the Rishi Narada in enjoined. There is now hardly any time for Karma Yoga i.e. for doing various ritualistic duties laid on man by the scriptures. Don’t you see that the well known decoction of the medicinal roots known as Dashamula -pachana is not the remedy for fevers of the present day? The patient runs the risk of being carried off before the medicine has had time to take effect. Fever mixture is therefore the order of the day.
9
So, I say, in the beginning there is much fuss of Karma. But the more you proceed towards God, the less will it grow. Finally comes the complete renunciation of work and the attainment of Samadhi. Generally, the body does not remain long after the attainment of Samadhi. But in the case of some it remains for the work of teaching the world. Sages like Narada and Divine Incarnations like Sri Chaitanya are examples of this.
After a well is dug some throw away all the spades and baskets, but others preserve them with the idea that they may be of some use to any of their neighbours. Such great souls are moved with pity at the sight of the sufferings of the world. They are not so selfish as to care only for the attainment of Jnana for themselves.
—subham—-
Tags- Narada, Suka Interesting Anecdotes ,by Sri Ramakrishna – part 2
ஜெர்மானிய அறிஞர்கள் சம்ஸ்க்ருத மொழிக்கு மட்டும் சேவை செய்யவில்லை; தமிழ், மலையாளம் போன்ற மொழிகளின் வளர்ச்சிக்கும் உதவினர். ஹெர்மன் குண்டர்ட் என்பவர் வங்காளி, ஹிந்துஸ்தானி, மலையாள, தமிழ் மொழிகளைக் கற்றார். அவர் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக இந்தியாவுக்கு வந்தார். கேரளத்திலுள்ள தலைச் சேரியில் தங்கி கிறிஸ்தவ மதத்தைப் பரப்பினார். அதற்காக மலையாளத்தைக் கற்று பைபிளின் புதிய ஏற்பாட்டு NEW TESTAMENT பகுதியை மலையாள மொழியில் ஆக்கினார்; அத்தோடு மலையாளம்- ஆங்கில அகராதியையும் தயாரித்தார்.
ஹெர்மன் குண்டெர்ட் 1814- ஆம் ஆண்டில் ஜெர்மனியில் உள்ள ஸ்டுட்கார்ட் நகரில் பிறந்தார்; துர்பிங்கன் பல்கலைக்கழகத்தில் சமயம் பற்றி கற்றார். கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக இந்தியாவுக்குச் செல்ல முடிவு செய்து லண்டனில் ஹிந்துஸ்தானி, வங்காளி மொழிகளைக் கற்ருவியது கேரளத்திலுள்ள தலைச்சேரி நகரில் பேசல் BASEL MISSION மிஷனில் பணியாற்றினார் .
1836–ஆம் ஆண்டில் முதலில் திருநெல்வேலிக்கு வந்தார் ; அங்கு மதப் பிரசார வேலையில் இருந்த
போது தமிழ் மொழியைக்கற்று பைபிள் /புதிய ஏற்பாடு தொடர்பான சொற்களை வைத்து கிரேக்க- தமிழ் அகராதியை அச்சிட்டார்.
மங்களுருக்குச் சென்று கன்னட மொழியையும் கற்றார் ; அதற்குப் பின்னர் தலைச்சேரிக்கு வந்தார். அவரும் அவருடைய மனைவியும் மலையாள மக்களைப் போல வாழ வேண்டும் என்று எண்ணி ஒரு குடிசையில் வாழ்ந்தனர். அரிசிச் சோற்றினையும் தினை வகைத் தானியங்களையும் உண்டனர். பின்னர் உடல் நலம் குன்றியவுடன் அந்த உணவுவகைகளைக் கைவிட்டு வழக்கம் போல மாமிச உணவுகளுக்குத் திரும்பினார்கள் கன்னட, மலபார்/ மலையாள ஊர்களில் இரண்டு ஆண்டுகளுக்கு அரசாங்கப் பள்ளி இன்ஸ்பெக்டராகவும் பணிபுரிந்தார். உடல்நலம் குன்றவே 1859 ஆம் ஆண்டில் ஜெர்மனிக்குத் திரும்பினார்.
HERMANN GUNDERT 1814-1893
ஹெர்மன் குண்டர்ட்
பிறந்த தேதி – 4-12-1814
இறந்த தேதி – 25-4-1893
பிறந்த ஊர் – STUDGART ஸ்டுட்கார்ட்
கல்வி கற்ற இடம் – TURBINGEN UNIVERSITY துர்பிங்கன் பல்கலைக்கழகம்
வேலைபார்த்த இடம் – தலைச்சேரி INDIA AND GERMANY/ஜெர்மனி
எழுதிய அல்லது மொழிபெயர்த்த நூல்கள்
பைபிள் புதிய ஏற்பாட்டிலுள்ள கிரேக்க- தமிழ் அகராதி
மலையாள இலக்கணம்
மலையாள கவிதைகள், உரைநடைத் தொகுப்பு
மலையாள கிறிஸ்தவ மதப் பத்திரிகைகள்
மலையாள பழமொழிகள்
பைபிளின் மலையாள மொழிபெயர்ப்பு- புதிய ஏற்பாடு மட்டும்
மலையாள பாடப் புஸ்தகங்கள்
மலையாள — ஆங்கில அகராதி
இவை தவிர ஜெர்மன் ஓரியண்டல் சொசைட்டியின் இதழ்களில் கட்டுரைகள் .
சம்ஸ்க்ருதத்தில் உள்ள தமிழ்ச் சொற்கள் என்ற கட்டுரையில் தாவரங்கள் மற்றும் சில பொருட்கள் எப்படி உரு மாறி வழங்குகின்றன என்று எழுதினார் .
மலையாளிகளிடையே கிறிஸ்தவத்தைப் பரப்புவதற்காக அதன் இலக்கண இலக்கியங்களைக் கற்றுப் பாடல்களையும் எழுதினார்; அதை மலையாள கிறிஸ்தவர்கள் இன்றும் பாடி வருகின்றனர் .
ஜெர்மனிக்குத் திரும்பியவுடன் கிறிஸ்தவத்தைப் பரப்பும் மிஷன் மேகஸின் என்ற பத்திரிகைக்கு ஆசிரியர் ஆனார். அதிலும் அவர் கட்டுரைகளை எழுதினார் . . அப்போதுதான் அவரது சிறந்த படைப்பான மலையாள -ஆங்கில அகராதி (1872) அச்சானது; கோட்டயத்தில் நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் 1973 ஆம் ஆண்டில் அதன் புதிய பதிப்பினை வெளியிட்டார்கள்.
அவர் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டு, 1893 -ஆம் ஆண்டில் இறந்தார்.
அவர் இறந்தாலும் அவருடைய பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் இந்தியத் தொடர்பினை விடாமல் வைத்துக்கொண்டனர். பேரர்களில் ஒருவரான ஹெர்மன் ஹெஸ்ஸே HERMANN HESSE என்பவர் புகழ்பெற்ற ஜெர்மானியக் கவிஞர் ஆவார்.
—-SUBHAM—
TAGS- மலையாள அகராதி , ஹெர்மன் குண்டர்ட், HERMANN GUNDERT
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Kalkionline NOVEMBER 27 கல்கி இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
நவம்பர் 27 பிரபல மின்னல் வேக மன்னன் ப்ருஸ் லீயின் பிறந்த தினம்!
பயிற்சி செய் அல்லது செத்து மடி : ப்ரூஸ் லீயின் அறிவுரை!
ச.நாகராஜன்
மின்னல் வேக மன்னன் என்று உலகெங்கும் பிரசித்தி பெற்ற ப்ரூஸ் லீ (பிறப்பு 27-11-1940 மரணம்: 20-7-1973) தனது விசேஷ தற்காப்புக் கலை உத்திகளால் உலகைக் கவர்ந்தவர். அனைத்து ஆய்வுகளும் வியப்பது அவரது ‘ஒன் இன்ச் பஞ்ச்’ என்பது பற்றித் தான். ஒரு அங்குல தூரத்தில் இருந்து அவர் எதிராளியின் மீது விடும் ஒரு குத்து இடியெனப் பாய்ந்து எதிரிலிருப்பவரை வீழ்த்தும்.
தன் வாழ்நாளில் ப்ரூஸ் லீ யாரிடமும் தோற்றதில்லை.
அவரது வாழ்க்கையில் சுவையான நிகழ்ச்சிகள் ஏராளம் உள்ளன.
அவற்றில் முக்கியமான ஒன்று இது.
ப்ரூஸ் லீக்கு நெருக்கமான நண்பர் ஒருவரிடம் ப்ரூஸ் லீ அவரை வேகமாக ஓடுமாறு வற்புறுத்தினார்.
நடந்தது என்ன என்பதை அந்த நண்பரே தெரிவிக்கிறார் இப்படி:
“தினமும் வேகமாக மூன்று மைல் ஓடுமாறு என்னை ப்ரூஸ் கூறினார்.
இருபத்தியோரு அல்லது இருபத்தியிரண்டு நிமிடங்களில் நாங்கள் மூன்று மைல்களை ஓடிக் கடந்தோம்.
அதாவது ஒரு மைலை ஓடிக் கடக்க சுமார் எட்டு நிமிடங்களே ஆனது. ஆனால் ப்ரூஸ் லீ ஒரு மைல் ஓட எடுத்துக் கொண்ட நேரம் ஆறரை நிமிடங்களே!
ஒரு நாள் காலை அவர் என்னிடம் கூறினார் : ஐந்து நிமிடங்களில் ஓடி ஒரு மைலைக் கடக்கப் போகிறோம்.
உடனே நான் கூறினேன்: ப்ரூஸ். என்னால் ஐந்து நிமிடங்களில் முடியாது. நான் உன்னை விட வயதானவன். என்னால் முடியவே முடியாது.”
உடனே ப்ரூஸ் கூறினார்: மூன்று நிமிடங்கள் ஆனவுடன் நடையை மாற்றுவோம். மீதி இரண்டே நிமிடங்களில் நீ அதை முடித்து விடலாம்.”
உடனே நான் கூறினேன்: “ஓகே. நான் அதை செய்து பார்க்கிறேன்,
மூன்று நிமிடங்கள் ஆனவுடன் நான்காம் மைலில் முயற்சி செய்த போது என்னால் முடியவில்லை.
“ப்ரூஸ்! இன்னும் நான் ஓடினால் எனக்கு மாரடைப்பு தான் வரும். செத்து விடுவேன்.”
உடனே ப்ரூஸ் கூறினார்: செத்துப் போ!”
இதைக் கேட்டு கோபமடைந்த ப்ரூஸின் நண்பர் ஐந்து மைலையும் ஒருவாறாக ஓடிக் கடந்தார்.
பின்னால் குளித்து விட்டு ப்ரூஸ் லீயிடம் இது பற்றிப் பேசினார் அவர்.
“ப்ரூஸ்! நீ ஏன் அப்படிச் சொன்னாய்?”
ப்ரூஸ் லீயிடமிருந்து உடனே பதில் வந்தது :”ஏனென்றால் நீ சாவதே நல்லது. நிஜமாகச் சொல்லப் போனால் நீ உனக்கே ஒரு குறுகிய எல்லையை வைத்துக் கொண்டால் அது உடல் பயிற்சியாகட்டும், வேறு எதுவாகத்தான் இருக்கட்டும், அது உன் வாழ்க்கை முழுவதும் பரவி விடும். அது உன் வேலையில் பரவும், உனது ஒழுக்கப் பண்பில் அது ஊடுருவும். எல்லாவற்றிலும் முழுதுமாக அது பரவி விடும். எதற்கும் எல்லை என்று ஒன்று கிடையவே கிடையாது. மேடுகள் வந்து உன்னைப் பாதிக்கலாம். ஆனால் அங்கேயே நீ நின்று விடக் கூடாது. அதைக் கடந்து நீ செல்ல வேண்டும். அது உன்னைச் சாகடிக்கிறது என்றால் அது நிச்சயமாகச் சாகடிக்கும்.
ஒரு மனிதன் எப்போதுமே தனது எல்லையைக் கடந்து கொண்டே இருக்க வேண்டும்.
ஒன்று எல்லையைக் கடந்து முன்னேறு அல்லது செத்து மடி!”
இதைச் சொல்லி விட்டு ப்ரூஸ் லீ நண்பரை ஆழ்ந்து பார்த்தார்!
அவருக்கு ப்ரூஸ் லீ கூறியது இப்போது புரிந்தது!
நீ வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். வளரவில்லை என்றால் நீ செத்துக் கொண்டிருக்கிறாய் என்று அர்த்தம்.
இது தான் ப்ரூஸ் லீ போதித்த தத்துவம்.
ப்ரூஸ் லீ பற்றி அதிகாரபூர்வமாக எழுதியவர் ஜான் லிட்டில் என்பவர்.
ப்ரூஸ் லீயின் தனிப்பட்ட குறிப்பேடுகளையும், இதர தகவல்களையும் பார்க்க அனுமதிக்கப்பட்ட ஒரே ஒருவர் இவரே.
இவர் எழுதியுள்ள பல சம்பவங்கள் ப்ரூஸ் லீ எப்படிப்பட்டவர் என்பதைக் காட்டும். அவர் குறிப்பிடும் இந்தச் சம்பவம் உலகளாவிய விதத்தில் பிரபலமாகி விட்டது!
“பத்தாயிரம் உதைகளைப் பயிற்சி செய்த ஒருவரைக் கண்டு ஒருபோதும் நான் பயந்ததில்லை; ஆனால் ஒரே உதையை பத்தாயிரம் முறை பயிற்சி செய்பவரைப் பார்த்துத் தான் நான் பயப்படுகிறேன்” என்றார் ப்ரூஸ் லீ.
ஒரு குத்து அல்லது ஒரு உதை, அதை எடுத்துக் கொள்; அதைப் பயிற்சி செய்; அதில் கவனம் செலுத்து; அது உன் திறமையை அதிகரிக்கும். உனது திறனைக் கூட்டுவிக்கும் என்றார் அவர்.
பயிற்சி, பயிற்சி, பயிற்சி – முன்னேற்றம், முன்னேற்றம், முன்னேற்றம் – இதுவே ப்ரூஸ் லீயின் வாழ்க்கைத் தத்துவமாக அமைந்தது. தற்காப்புக் கலைக்கு மட்டுமல்ல; வாழ்க்கையில் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் உதவும் அறிவுரை இது.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Sri Ramakrishna Paramahamsa has spoken about Inter Galactic Space Traveller Narada Muni and young age Gnani Sukar in his teachings. By quoting the great people, he has taught us many spiritual truths. Here are some interesting titbits:
1
Hanuman was blessed with the vision of God both with form and without it( Sakara and Nirakara). But he retained the ego of a servant of god . Such was the case with Narada, Sanaka, Sanandana, and Sanatkumara.
A devotee: Were Narada and others were only Bhaktas or were they Gnanis also?
The Master: Narada and others have attained the highest knowledge (Brahmagnana). But still went on like the murmuring water of the rivulet, talking and singing the praise of God. This shows that they too kept the ego of knowledge, a slight trace of individuality, to mark their separate existence from the Deity, for the purpose of teaching others the saving truths of religion.
2
When the jar is full, it does not make a noise anymore. So the man of realisation too does not talk much. But what then about Narada and others? Yes. Narada, Suka Deva and a few others like them came down several steps after the attainment of Samadhi, and out of mercy and love they taught mankind.
3
Homa Bird
There is a fabled species of birds called HOMA. They live so high up in the heavens and love those high regions so dearly that they never come down to earth. And it is said that they lay eggs in the sky and their young ones are hatched in mid-air as the eggs fall, pulled down by gravity. No sooner these fledgelings find out that they are falling downwards, than they immediately change their course and indistinctively fly upwards towards their home. Men like Narada, Sukadeva, Jesus and Sankaracharya are like these birds. Even in their boyhood they became free from all attachments to the things of the world and betook themselves to the highest regions of True Knowledge and Divine Light.
4
How to pray is the question. Let us pray for the things of the world, but pray like saint Narada.
Narada said to Ramachandra “ O Rama, grant that I may be favoured with Bhakti (love, devotion and self surrender) for Thy Lotus Feet.
Be it so, Narada, said Rama, but will you not ask for anything else?
Narada replied, Lord may it please Thee to grant that I may not be attached by Thy Maya which fascinates the universe.
Ramachandra said one more
Be it so, Narada, said Rama, but will you not ask for anything else?
Narada replied, No Lord, that is all I pray for.
5
Sukadeva was an Urdhvaretas ( a man of complete and unbroken continence); he had never any emission of semen. There was another kind called Dhairyaretas; who had discharge of retas at one time but subsequently practised absolute continence. If a man remains a Dhairyaretas continually for twelve years, he acquires a superhuman power. A new nerve is developed in him. It is called the nerve of intelligence (Medhanadi), and he can remember everything and know everything.