ராமாயணத்தில் வரங்கள் (25) குருஜனங்கள் ஆசியால் சபரி ஸ்வர்க்கம் ஏகியது! (Post No.14,042)

Rama blessing Sabari

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,042

Date uploaded in Sydney, Australia – –2 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (25)

ராமாயணத்தில் வரங்கள் (25) குருஜனங்கள் ஆசியால் சபரி ஸ்வர்க்கம் ஏகியது!

ச. நாகராஜன்

.

ஆரண்ய காண்டத்தில் எழுபத்திநான்காவது ஸர்க்கமாக அமைவது சபரி ஸ்வர்க்கமடைவது என்னும் ஸர்க்கம்.

ஶ்ரீ ராமரும்  லக்ஷ்மணரும் கபந்தனால் காண்பிக்கப்பட்ட வழியில் பம்பையை நோக்கிச் சென்று அங்கு சபரியின் அழகான ஆசிரமத்தைக் அடைந்தனர். அவர்கள் அங்கு சபரியைக் கண்டனர்.

சபரி அவ்விருவர்களையும் கை கூப்பித் தொழுது ராமருடைய திருவடிகளில் விழுந்து சேவித்தாள்

ராமர் சபரியை நோக்கி, “உனது தவம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறதா, உனது விரதங்கள் முடிவு பெற்றனவா,  மனத்திருப்தி உனக்கிருக்கிறதா” உள்ளிட்ட கேள்விகளைக் கேட்டார்.

உடனே சபரி, “தேவரீருடைய தரிசனத்தால் இப்பொழுது என்னால் தவத்தின் பயன் அடையப்பட்டது. இப்பொழுது எனது தவம் சபலமாயிற்று. ஆசிரியர்கள் நன்கு பூஜிக்கப்பட்டவர்களாக ஆனார்கள். இப்பொழுது தான் எனது பிறவி வாழ்வுற்றதாக ஆகிறது. ஸ்வர்க்கமும் கிடைக்கப் போகிறது. தேவரீரது குளிர்ந்த கடாக்ஷத்தால் பரிசுத்தையாக ஆகிறேன். தங்களது பிரசாதத்தால் சாச்வதமான உலகங்களை அடையப் போகிறேன்” என்று கூறினாள். பின்னர் தொடர்ந்தாள்;

சித்ரகூடம் த்வயி ப்ராப்தே விமானைரதுலப்ரபை: |

இதஸ்தே திவமாரூடா யானஹம் பர்யசாரிஷம் |\

யான் அஹம் – எவர்களுக்கு நான்

பர்யசாரிஷம் – தொண்டு புரிந்து வந்தேனோ

தே – அவர்கள் (அதாவது சபரியின் குருஜனங்கள்)

இத: – இவ்விடத்திலிருந்து

த்வயி – தேவரீர்

சித்ரகூடம் – சித்ரகூடத்தில்

ப்ராப்தே – எழுந்தருளியபொழுது

அதுலப்ரபை: – ஒப்பற்ற ஒளி கொண்டு விளங்கும்

விமானை: – தெய்வ விமானங்களில் ஏறிக்கொண்டு

திவம் – சுவர்க்கத்திற்கு

ஆரூடா: – எழுந்தருளிவிட்டார்கள்.

தைஸ்சாஹமுக்தா தர்மக்ஞைர்மஹாபாகைர்மஹரிஷிபி: |

ஆகமிஷ்யதி தே ராம: சுபுண்யமிமமாஸ்ரமம் ||

தர்மக்ஞை: = தர்ம ஞானமுடையவர்களும்

மஹாபாகை: – மஹா புண்யாத்மாக்களும்

மஹரிஷிபி: – முனிவர் பெருமான்களுமான

தை: ச – அவர்களாலேயே

அஹம் – நான்

உக்தா: – பின்கண்டவாறு ஆக்ஞாபிக்கப்பட்டேன்

ராம: – ஶ்ரீ ராமர்

சுபுண்யம் – மகா புனிதமான

இமம் தே – இந்த உனது

ஆஸ்ரமம் – ஆசிரமத்தில்

ஆகமிஷ்யதி – எழுந்தருளப்போகிறார்

ச தே ப்ரதிக்ருஹீதவ்ய: சௌமித்ரிசஹிதோதிதி: |

தம் ச த்ருஷ்டா வரான் லோகான்க்ஷயாம்ஸ்த்வம் கமிஷ்யஸி ||

சௌமித்ரி சஹித: – லக்ஷ்மணரோடு கூட

ஸ: – அவர்

தே அதிதி: – உனது அதிதியாய்

ப்ரதிக்ருஹீதவ்ய: – பூஜிக்கப்பட வேண்டியவர்

த்வம் ச தம் – நீயும் அவரை

த்ருஷ்ட்வா – தரிசித்து விட்டு

வரான் லோகான் – சிறந்த உலகங்கள

கமிஷ்யஸி – அடைவாய்

          ஆரண்ய காண்டம் 74-வது ஸர்க்கம் ஸ்லோகங்கள் 14,15,16

புருஷோத்தம! பம்பையின் கரையிலுண்டான பல்வகை கனி கிழங்குகள் தேவரீருக்கென்றே அடியேனால் பரிபாலித்து வைக்கப்பட்டிருக்கிறஹு”

என்று இவ்வாறு சபரி ராமரை நோக்கிக் கூறினாள்.

பின்னர் தனது வனத்தை அவர்களுக்குச் சுற்றிக் காண்பித்தாள்.

ராமர் சபரியை நோக்கி, “உனது மனோரதத்தை நீ அடைவாயாக” என்று கூறினார். உடனே சபரி தனது உடலை அக்னியில் சமர்ப்பணம் செய்து ஸ்வர்க்கத்திற்கு புறப்பட்டாள்.

இங்கு சபரி தொண்டு புரிந்த குருஜனங்கள் அவளுக்கு சுபமான ஆசியைத் தந்தார்களா அல்லது வரத்தை வழங்கினார்களா என்பது சரியாகத் தெரியவில்லை.

என்றாலும் அவர்களின் அனுக்ரஹத்தால் சபரி ராமரை தரிசித்தாள்; ஸ்வர்க்கம் ஏகினாள் என்பது நன்கு தெரிய வருகிறது

***

Leave a comment

Leave a comment