மஹரிஷி பாணினி! – 1 (Post No. 14,051)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,051

Date uploaded in Sydney, Australia – –5 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

29-12-2024 அன்று ஒளிபரப்பான ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை. இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது. 

 மஹரிஷி பாணினி! – 1 

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.

இன்று நாம் சம்ஸ்கிருத மொழியின் இலக்கணத்தை வகுத்து எழுதிய மகரிஷி பாணினி பற்றி சிந்திக்கப் போகிறோம்.

முதன் முதலாக இப்படி ஒரு இலக்கண நூலை வகுத்தவர் இவரே.

பாணினி இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் காந்தாரத்தில் அட்டோக் என்ற நகரில் உள்ள சாலாதுரா என்ற கிராமத்தில் பாணினா என்பவருக்கும் தக்ஷி என்பவருக்கும் மகனாகப் பிறந்தார்.

ஆனால் அவர் தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை பாடலிபுத்ரத்தில் தான் கழித்தார். ஆகவே அறிஞர்கள் அவர் சாலாதுராவில் பிறந்திருந்தாலும் பாடலிபுத்ரத்திலேயே வளர்ந்திருக்கக் கூடும் என்று கருதுகின்றனர்.

ஜைமினி மற்றும் பர்த்ருஹரி பாணினியை ஒரு சிஸ்டா என்று கூறுகின்றனர். சிஸ்டா என்பவர்கள் பிராமணர்களின் ஒரு பிரிவு. அவர்கள் சாஸ்திரங்களை நன்கு கற்றவர்கள். உலக இன்பங்களைத் துறந்தவர்கள். இமயமலையிலும் காலகாவனம் எனப்படும் வங்காள பிராந்திய காடுகளிலும் விந்திய மலையிலும் ஆரவல்லி மலையிலும் வாழ்க்கையைக் கழித்தவர்கள்

இவர் வாழ்ந்த காலம் குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. டாக்டர் கோல்ட்ஸ்டக்கரும் பண்டார்கரும் (Dr. Goldstucker and Bhandarkar) இவர் கிறிஸ்துவுக்கு 500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றனர். ஆனால் வின்சென்ட் ஸ்மித் மற்றும் பெல்வல்கர் (Vincent Smith and Belvelkar) ஆகியோர் கிறிஸ்துவுக்கு 700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கூறுகின்றனர்.

 பாணினி புத்தரைப் பற்றி ஒன்றும் குறிப்பிடாததால் அவர் புத்தர் காலத்திற்கு முன் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறது.

ஸ்மிருதிகளைப் பற்றி அவர் நன்கு அறிந்திருப்பதால் அவர் மனு வாழ்ந்த காலத்திற்குப் பின்னர் வாழ்ந்திருக்கவேண்டும். ஆக அவர் கிறிஸ்துவுக்கு முன்னர் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கவேண்டும் என்று பொதுவான கருத்து நிலவுகிறது.

 பதஞ்சலி பாணினியை தாக்ஸியின் மகனே பாணினி என்று நம்புகிறார். பாணினியை அவர் ஆசார்யர் என்றும் மஹரிஷி என்றும் பகவான் என்றும் அழைக்கிறார்.

ராமபத்ராக்‌க்ஷிதர் என்ற அறிஞர் பாணி என்ற முனிவரின் மகனே பாணினி என்று கூறுகிறார்.

 மிக முக்கியமான இலக்கணகர்த்தாக்கள் தனக்கு முன்னர் இருந்ததாக பாணினி குறிப்பிடுகிறார். இவர்களில் பத்து பேரை அவர் குறிப்பிட்டாலும் கூட அவர்கள் இயற்றிய நூல் ஒன்று கூட நம்மிடையே இன்று இல்லை.

 பாணினி தான் வகுத்த விதி ஒன்று பழைய விதியுடன் ஒத்துப் போகவில்லை என்றால் முந்தைய விதி என்ன என்பதையும் மாற்றாகத் தருகிறார்.

 இலக்கணத்தை வடமொழியில் வ்யாக்ரணம் என்று சொல்கிறோம். இலக்கணம் என்று வழக்கு மொழியில் நாம் கூறுவதிலிருந்து வ்யாக்ரணம் என்பது சற்று மாறுபடுகிறது. லத்தீன் வழியில் பிறந்த இதர மொழிகளின் இலக்கண நூல்கள், எப்படி வாக்கியங்களை அமைப்பது போன்ற விதிகளைக் கூறுகையில் சம்ஸ்கிருத வ்யாக்ரணமானது மொழியின் அறிவியலாக அமைகிறது. Science of Language என்று இதைக் கூறலாம்.

இதில் அடங்கி இருப்பவை: PHONETICS, ETYMOLOGY, ACCENTUATION, SYNTAX, WORD FORMATION BY DECLENSION, CONJUGATION, SEMANTICS.

இவர் எழுதிய நூலின் பெயர் அஷ்டாத்யாயி. பெயரே இது எட்டு அத்தியாயங்களைக் கொண்டது என்பதைத் தெரிவிக்கிறது. இந்த ஒவ்வொரு அத்தியாயமும் நான்கு பாதங்களைக் கொண்டிருக்கிறது.

இது மொத்தம் 3995 சூத்திரங்களைக் கொண்டிருக்கிறது. இது வேதத்தின் அடிப்படையிலானது. தாதுபாடா, கணபாதா, பரிபாஷா, லிங்கானுசாஸனா ஆகிய உப உரைகளைக் கொண்டிருக்கிறது.  சிவபிரானின் அருளால் உத்வேகம் பெற்று அவர் தனது நூலை இயற்றியுள்ளார்,

 சீன யாத்ரீகரான யுவான் சுவாங் உலக மொழிகள் அனைத்தும் பாணினீயத்திலிருந்தே தமது இலக்கணத்தைக் கொண்டுள்ளது என்கிறார்.

 இவரைப் பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு.

பாடலிபுத்ரத்தில் வர்ஸா என்ற அறிஞர் வாழ்ந்து வந்தார். அவரிடமே கல்வி கற்றார் பாணினி. நாளடைவில் வர்ஸாவுக்கு அதிகமான மாணவர்கள் சேர்ந்தனர். அவர்களில் மிகவும் மந்த புத்தி கொண்டவராக பாணினி இருந்தார். ஆனால் அவர் குருவுக்கும் குரு பத்னிக்கும் நல்ல சேவை செய்து வந்தார். குரு பத்னிக்கு பாணினி மீது மிகுந்த அன்பு இருந்தது. அவர் பாணினியை அழைத்து இமயலைக்குச் சென்று சிவனைக் குறித்துத் தவம் இருக்க அறிவுரை வழங்கினார்.

அதன்படியே சிவனைக் குறித்து இமயமலையில் பாணினி தவம் செய்ய சிவன் அவருக்குக் காட்சி தந்து அவரை சம்ஸ்கிருத இலக்கணம் எழுத அருள் பாலித்தார்.

to be continued…………………………………..

***

Leave a comment

Leave a comment