ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 2 (Post No.14,078)

Written by London Swaminathan

Post No. 14,078

Date uploaded in Sydney, Australia – 11 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 2

ஆஸ்திரேலியாவின் வினோத விலங்குகள்

1.கங்காரு

2.வல்லபி

3.பிளாட்டிபஸ்

4.கோவாலா 

5.டிங்கோ

கங்காரு ஆஸ்திரேலியாவின் தேசீய விலங்கு. தபால்தலைகளில் இதைக் காணலாம்.

இது ஆஸ்திரேலியாவில் மட்டும் காணப்படும் பிராணி..

பின்னங்கால்களால் மிக அதிக தூரம் தாவிச் செல்லும் விலங்கு. அதுமட்டுமல்ல ; குட்டிகளை தனது வயிற்றுப் பகுதியில் சுமந்து செல்லும் மிருகம்.இது தாண்டும் தொலைவு – ஒரே தாவலில் முப்பது அடிகள் ; பத்து அடி உயரத்துக்கு எழும்பிக் குதிக்கும். மணிக்கு நாற்பது மைல் வேகத்தில் பாயும் .

ஆறு முதல் எட்டு அடி உயரத்துக்கு வளரும் ; ஆண் விலங்குதான் பெரியது; எடை 200 பவுண்டுகள் .

இவ்வளவு பெரிய சக்தி வாய்ந்த மிருகம் வெஜிட்டேரியன் ; தாவரங்களையே உண்ணும்; பசுக்களைப் போல வயிறு படைத்தவை ; விழுங்கிய பொருட்களை மீண்டும் வாய்க்குள் கக்கி ஜீரணம் செய்கின்றன.

இவைகளில் நான்கு வகைகள் உண்டு. சிவப்பு, சாம்பல் நிறம் என்று பிரிக்கிறார்கள்

பெரும்பாலான கங்காருக்கள் இடது கையர்கள் ; வல து கையை பப் பிரயோகத்துக்கு  மட்டும் பயன்படுத்தும் .

இவை நல்ல நீச்சல் வீரர்கள் ; டிங்கோ என்னும் மிருகங்களிடமிருந்து தப்பிக்க நீரில் குதிக்கும். சில நேரங்களில் அவைகளை நீருக்குள் ஏமாற்றி அழைத்து சிறிய முன் கைகளால் குத்து விடும். அப்போது அதன் விசை 270 பவுண்டு.

கங்காருக்கள் பெரிய கரடிகளைப்போல பலம் கொண்டவை.

மனிதர்கள் செய்யும் படுகொலைகள்

கங்காரு மாமிசமும் தோலும் மிகவும் மதிப்பு உடையவை. ஆண்டுதோறும் லட்சக் கணக்கில் இவைகளைக் கொன்று எழுபது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். ஆஸ்திரேலிய அரசு இந்தப் படுகொலைக்கு கோட்டா நிர்ணயிக்கிறது . ஆண்டுக்கு ஐம்பது லட்சம் கங்காருகளைக் கொல்ல லாம் என்று ஆஸ்திரேலிய அரசு கோட்டா நிர்ணயித்துள்ளது

கண்களில் ஒளியை வீசி அவைகளைக் குருடாக்கி சுட்டுக்கொல்கிறார்கள் ; அனாதையாக்கப்பட்ட குட்டி (joeys) களை  குத்திக் கொன்று மகிழ்கிறார்கள் பாதகர்கள்

The animals are temporarily blinded by a light before hunters cruelly shoot them, sometimes leaving them to bleed out, while orphaned joeys are bludgeoned or suffer an agonizing death due to the elements or starvation.

சில நாடுகள் கங்காரு படுகொலைகளைத் தடுப்பதற்காக தோல், மாமிச இறக்குமதிக்கு தடை போட்டுள்ளன.

இவை சுமார் எட்டு ஆண்டுகள்தான் வாழும்; மிருகக்காட்சி சாலைகளில் 25 ஆண்டுகள் வரை வாழ்கின்றன

Kangaroos

Family

Macropodidae

Genus

Macropus

The word kangaroo derives from ‘Gangurru’, the name given to Eastern Grey Kangaroos by the Guuga Yimithirr people of Far North Queensland.

ஆஸ்திரேலியாவின் மாகாணங்களில் ஒன்று குயின்ஸ்லாந்து ; அங்கு வாழ்ந்த பழங்குடி மக்கள் இதை கங்கரு என்று அழைத்தனர்.

வல்லபி wallaby என்றால் என்ன ?

இவையும் கங்காரு இனத்தைச் சேர்ந்தவை; ஆனால் அளவில் சிறியவை .

சிவப்பு கங்காரு 90 கிலோ எடைக்கு வளரும் வல்லபிக்கள் wallaby 20 கிலோ எடையே இருக்கும்.

வல்லபிக்கள் மூன்று அடி உயரம் மட்டும் வளரும். இப்பொழுது ஆஸ்திரேலியாவுக்கு வெளியிலும் இவைகளைக் காணலாம் நியூசிலாந்து, நியூகினி மற்றும் அமெரிக்காவின் ஹவாய் முதலிய தீவுகளில் இவை வசிக்கின்றன.

****

பிளாட்டிபஸ் என்னும் விலங்கு

Platypus

Scientific name: Ornithorhynchus anatinus

Alternative name/s:

Duck-billed Platypus

ஆஸ்திரேலியாவின் வினோத விலங்கு; வாத்து போல மூக்கு இருக்கும்; நீரில் வாழும்; முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். துவக்க காலத்தில் ஐரோப்பியர்களை திகைக்கவைத்த விலங்கு இது ; இப்படி ஒரு பிராணியே இருக்க முடியாது; இது ஒரு போலி ; கற்பனை என்றும் பல அறிஞர்கள் எழுதினார்கள்;

இவை டாஸ்மேனியா என்னும் ஆஸ்திரேலியா தீவு முழுதும் வசிக்கின்றன; மேலும் விக்டோரியா, குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ் மாகாணங்களிலும் காணப்படுகின்றன. கண்ணை மூடிக்கொண்டு நீரில் பாய்ந்து மூக்கினை மட்டும் பயன்படுத்தி நீரில் வாழும் பூச்சி புழுக்களையும் அவைகளின் முட்டைகளையும் உண்கின்றன.

இறால் போன்றவைகளையும் சாப்பிடும்; இதை வளர்ப்போர் மீன் வகை உணவுகளையும் கொடுக்கின்றனர்  இவை நிழல் உள்ள கரைகளில் வளை தோண்டி அவைகளில் வாழும் . முதலைகளும் கழுகுகளும் பாம்புகளும் இதன் எதிரிகள் ; இவை இருபது ஆண்டுகள் வரை வாழ்கின்றன

இதனளவு  – நாற்பது சென்டிமீட்டர் ; சுமார் ஒன்றரை அடி.

****

கோவாலா

ஆஸ்திரேலியாவில் மட்டும் வாழும் அரிய விலங்கு.

யூகாலிப்டஸ் மரங்களில் வாழ்ந்து அதன் இலைகளை உண்கின்றன. பார்ப்பதற்கு தேவாங்கு அல்லது கரடிக்குட்டி போல இருக்கும். மிகவும் சாதுவான மிருகம். இவைகளைப் பாதுகாப்பதற்காக ஆண்டுதோறும் மே மாதம் மூன்றாம் தேதி  கோவாலா தினம் கொண்டாடப்படுகிறது..

ஒரு அதிசயம் என்னவென்றால் மனிதர்களைப்  போல இவைகளுக்கும் கைரேகைப் பதிவுகள் இருக்கின்றன. நமது கட்டைவிரலில் ஒவ்வொருவருக்கும் தனியான கோடுகள் இருப்பது போல இவைகளுக்கும் உள்ளன Koalas Have Fingerprints.

கோவாலா என்றால் தண்ணீர் குடிக்காது No Drink என்று பழங்குடி மக்களின் பாஷையில் பொருள்; இவை அரிதாகவே தண்ணீர் குடிக்கின்றன.

இவைகள் யூகாலிப்டஸ் எண்ணெய் அல்லது இலை போன்ற வாசனையை வெளியிடுகின்றன. ஏனெனில் அந்த இலைதான் இவைகளின் ஒரே உணவு.

உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு என்ற பழமொழி இவை   களுகுத்தான் பொருந்தும்; ஒரு நாளைக்கு ஒரு கிலோ இலைகளை சாப்பிவிட்டுவிட்டு சுமார் இருபது மணி நேரம் உறங்குகின்றன. யூகாலிப்டஸ் மரக் குடும்பத்தில் 900 வகை மரங்கள் இருந்த போதிலும் இவை ஐம்பது வகை மரங்களையே நாடுகின்றன. அவைகளிலுள்ள விஷத்தை முறித்து , நார்ச்சத்தை விலக்கி உண்ணும் சக்தி இவைகளுள்ளன.

இவை ஒவ்வொன்றும் தனித்து வாழும் இயல்புடையவை ; ஆண்கள், தனக்கென எல்லையை நிர்ணயிக்கின்றன; அவைகளைச் சுற்றி பெண் கோவாலாக்கள் வசிக்கின்றன.

மரங்களில் வாழ்வதால் இவற்றின் தோலும் கைகளும் அதற்கேற்ப வலுவாக குஷன் போல அமைந்துள்ளன .

கங்காரு போலவே இவைகளுக்கும் வயிற்றுக்கு வெளியே பைகள் உண்டு; பிறந்த குட்டிகள் ஆறுமாதம் வரை தாயின் பையில் வளரும். அடுத்த ஆறுமாதம் தாயின் முதுகில் அல்லது வயிற்றுப் பகுதியில் தொற்றிக் கொண்டிருக்கும். .

இவை 13 முதல் 18 ஆண்டுகள் வரை வாழ்கின்றன.

****

டிங்கோ The dingo

டிங்கோ என்னும் பிராணி நாய் வகையைச் சேர்ந்தவை; ஆனால் கூட்டமாகச் சேர்ந்து வேட்டையாடி மற்ற பிராணிகளைச்  சாப்பிடுகின்றன. மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆஸ்திரேலியா முழுதும் பரவிவிட்டன.

இவை கங்காரு, பன்றி  முதல்  பல்லி, பறவைகள் வரை எல்லா வற்றையும் வேட்டையாடி உண்கின்றன.  அரிதாகவே பழங்களைச்  சாப்பிடும்.

பொன்னிறம் அல்லது பழுப்பு நிறம் கொண்டவை. ஓநாய் குடும்பத்தைச் சேராவிட்டாலும் பொதுவாக ஊளையிடும்; எச்சரிக்கை செய்ய மட்டும் நாய்களை போல குரைக்கும். பத்து ஆண்டுகள் வரை வாழ்கின்றன ; ஆண்டுக்கு ஒரே முறை மட்டும் ஆறு குட்டிகள் வரை ஈனும் ; எல்லா டிங்கோக்களும் இனப்பெருக்கம் செய்வதுமில்லை!

காடுகளிலும் வறண்ட பாலைவனப்  பகுதிகளிலும் வசிக்கினறன.

****

வாம்பெட், எகிட்னா

இவை தவிர வாம்பெட்எகிட்னா முதலிய வினோத மிருகங்களும் ஆஸ்திரேலியாவில் வசிக்கின்றன.

ஒவொன்றுக்கும் வேறு எங்கும் காணாத தனிப்பட்ட வழக்கமும் குணாதிசயங்களும் இருக்கின்றன.

முப்பது ஆண்டுகள் வரை வாழும் வாம்பேட்களில் மூன்று வகை உண்டு.

இவைகளை என்ஜினீயர்கள் என்றும் சொல்லலாம். பூமிக்கு அடியில் வளை தோண்டி வாழும் விலங்கு இது .கங்காரு போல வயிற்றில் குட்டிகளை வைத்து வளர்க்கும்.. சுமார் மூன்று அடி உயரம்; முப்பது கிலோ வரை எடை உடையவை ; புல் பூண்டுகளை சாப்பிடுகின்றன.

எகிட்னாக்கள் முள்ளம்போன்றி போல இருக்கும்; ஆனால் பிளாட்டிபஸ் போல முட்டையிட்டு குஞ்சு  பொறித்துப் பாலூட்டும் அதிசய விலங்குகள் ஆகும்.

எகிட்னாக்கள் எறும்புகளைத் தின்னும் ; அவை கிடைக்காவிட்டால் புழுப் பூச்சிகளையும் உண்ணும்.

சுமார் 20 ஆண்டுகள் மட்டுமே வாழும் இவை பாதுகாப்பாக மனிதர்கள் வளர்க்கும் இடங்களில் 50 ஆண்டுகள் வரை வாழ்கின்றன.

—-subham—

Tags :ஆஸ்திரேலியா, வினோத விலங்குகள் ,கங்காரு

.வல்லபி,பிளாட்டிபஸ் ,கோவாலா,   டிங்கோ, வாம்பேட் , எகிட்னா, ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள், அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 2

Leave a comment

Leave a comment