ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 3 (Post.14,082)

ORCHID FLOWERS OF AUSTRALIA

Written by London Swaminathan

Post No. 14,082

Date uploaded in Sydney, Australia – 12 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

மருந்து மரங்கள்

பல தாவரங்களை பழங்குடி மக்கள் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்துவது குறிப்பிடத் தக்கது

ஆஸ்திரேலியாவில் விசித்திரமான விலங்குகள் மட்டுமின்றி விநோதத் தாவரங்களும் இருக்கின்றன. இந்த நாட்டிற்குள் அனுமதியின்றி புதிய தாவரங்களையோ விதைகளையோ எவரும் கொண்டுவர முடியாது; வெளிநாட்டுப் பயணிகள் விமானத்தில் நிரப்பவேண்டிய அட்டைகளைலும் இது பற்றிய கேள்விகள் இருக்கும் அவைகளில் YES எஸ் /இருக்கிறது  என்று சொன்னால் கஸ்டம்ஸ் அதிகாரிகள் உங்களை முழு அளவு சோதனை செய்வார்கள்; ஆஸ்திரேலியாவின் தனிப்பட்ட புறச்சகுழலைக் காப்பாற்ற இந்த நடவடிக்கை ; சாலையின் இரு மருங்கிலும் இந்தியாவின் கேரள மாநிலம் போல மரங்கள், செடிகள் இருக்கும்; ஒரே வித்தியாசம்; இங்கே மிக உயரமான மரங்கள் .

நாம் எல்லோரும் யூகாலிப்டஸ் என்னும் தலைவலித்  தைலத்தை உபயோகிக்கிறோம். இந்த யூகாலிப்டஸ் மரத்தையும் இந்தியாவில் காணலாம்; ஆனால் இதில் 900 வகைகள் உண்டு என்பது நமக்குத் தெரியாது. அவைகளில் ஐம்பது வகை மரங்களின் இலைகளை மட்டுமே கோவாலா என்னும் ஆஸ்திரேலிய மரக்கரடிகள் சாப்பிடுகின்றன. அவைகளுக்குக்கூட இதன் வேறுபாடுகளும் வகைகளும் தெரியும்!

Australia enjoys an estimated 24,000 species of Australian native plants.

ஆஸ்திரேலியாவில் மட்டும் 24,000 வகை புதிய வகைத் தாவரங்கள் இருக்கின்றன. இவை அதிக தண்ணீரும் ,உரங்களும் இல்லாமல் வீட்டுத் தோட்டங்களில் கூட வளரும் ;புறச்சூழலைக் காப்பதோடு இந்த கண்டத்துக்கே உரிய விலங்குகள் பறவைகளையும் இவை காப்பாற்றுகின்றன.

ஆஸ்திரேலிய அதிசயங்களில் ஒன்று உலகிலேயே உயரமான மரம் ஆகும் யூகாலிப்டஸ் மரம். இதன் உயரம் 330 அடி. இதன் பெயர் செஞ்சூரியன் டாஸ்மேனியா தீவில் கண்டுபிடிக்கப்பட்டது. யூகலிப்டஸ் கோந்து போன்ற திரவத்தைச் சுரப்பதால் இவைகளை கோந்து மரம் . Gum trees got their name from their gummy tree sap என்றும் சொல்லுவார்கள்;  அவற்றின் அடி மரம்  சேதப்படுகையில் கோந்து போன்ற பசையைச் சுரக்கின்றன.

மலர்களில் இதழ்கள் இலலாமல் மகரந்த கேசரம் மட்டும் நீட்டிக்கொண்டு இருக்கும் விதைகளும் உண்டு.

Gum tree leaves are full of a substance called cineole.

அவை சுரக்கும் சினியோல் என்னும் ரசாயனம் மனிதர்களுக்கு விஷம் போன்றது கோவாலா, போஸ்ஸம் போன்ற பிராணிகள் மட்டுமே அதைத் தாங்கி நிற்கும்

இந்த சினியோல் இருப்பதால்தான்  பூச்சிகளை விரட்டவும் தலைவலி  உடல் வலியைப் போக்கவும் நாம் இதைப்  பயன்படுத்துகிறோம்.

The best didgeridoos are made from eucalyptus wood.

ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் இந்த வகை மரத்திலிருந்துதான் டிட்ஜரீடு  இசைக் கருவிகளைத் தயாரிக்கின்றனர்.

இவைகளில் பெரும்பாலான வகை மரங்கள் பசுமையாகக் காணப்படும்.

இவைகளில் மிகவும் அரிய வகையை நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடித்தனர் பனியுக மரம் என்று  அதற்குப் பெயர் இதுவரை அவ்வகையில் ஆறு மரங்களைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

****

தாய்ப் பால் தரும் அதிசய தாவரம் !

புகழ்பெற்ற சிட்னி நகரம் இருக்கும் மாகாணம் நியூ சவுத் வேல்ஸ் ; அதன் தேசீய சின்னம் வரதா மலர் ; 125 ஆண்டுகளுக்கு முன்னர் இதுதான் ஆஸ்திரேலிய தேசீய மலராகவும் இருந்தது

இதை வரம் தரும் மரம் என்றாலும் பொருந்தும். காரணம் என்னெவெனில் தாய்ப் பால் இல்லாத, கிடைக்காத பெண்கள் இதன் தேனையே குழந்தைகளுக்கு கொடுத்து வளர்க்கின்றனர் நாம் இப்போது பால் பவுடர் கலந்து கொடுப்பது போல இவைகளைக் குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள் பழங்குடி மக்கள்.

இதில் வைட்டமின் சி சத்து அதிகம் இருக்கிறது; பெரும்பாலும் செவ்வண்ண பூக்களுடன் இருந்தாலும் பல நிறங்களில் வளரும் செடிகளும் உண்டு தேன் சுரப்பதால் நிறைய பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் இது உணவு ஆகிறது. மன அழுத்தம் மனக் கவலையைப் போக்கவும் இதன் தேன் பயன்படுகிறது .

 Aboriginal mothers would use the nectar of the Waratah as an alternative food source for babies not getting enough milk from mothers or when weening off the breast. The nectar was also used to relieve anxiety and stress.

இவைகளில் ஐந்து வகைகள் உள. இவைகளின் ஒரு குணம்  காட்டுத் தீயையும் கடந்து வாழ்வதாகும் . 

****

டைனசோரஸ் மிருகங்களைவிடப் பழமையான மரங்கள்

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசரஸ்  என்ற ராட்சத மிருகங்கள் பூமியிலிருந்து மறைந்தன. அந்தக் காலத்தில் வாழ்ந்த தாவரங்கள் கிரேவில்லியாஸ் எனப்படும் சிலந்தி மலர் மரங்களாகும் இவ்வகை மலர்கள் கண்டங்கள் உடைந்து பிரியும் முன்னிருந்த கோண்ட் வானா (காண்டவ வனம் என்பதன் மருவு)   நிலப்பரப்பினைச் சேர்ந்தவை இப்போது தென் ஆப்பிரிக்காவிலும் இவ்வகை செடிகள்  இருப்பதால் இதைக் கண்டு பிடித்தனர்

இவைகளில் முன்னூறு வகை உண்டு.

 Grevilleas have an ancestry older than dinosaurs

Australian native grevilleas, also known as spider flowers, include more than 300 species.

சிலந்தியின் கால்களை போல நான்கு குழல்வடிவ இதழ்கள நீட்டிக்கொண்டிருக்கும்

Grevilleas have an ancestry older than dinosaurs. They originated on the super-continent Gondwana, and are closely related to banksias, waratahs, and the proteas of Southern Africa.

இந்த மலர்களில் இனிய திரவம் சுரப்பதால் பழங்குடி மக்கள், இவைகளிலிருந்து  பானங்களைத் தயாரிக்கிறார்கள்

ஆனால் இந்த மலர் வகைகளில் சில விஷம் உள்ளவை ஆகையால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். சில்கி ஓக் silky oak (Grevillea Rrobusta)  என்னும் விஷ சத்துள்ள மரம் முப்பது மீட்டர் உயரத்துக்கு வளரும்.

Some types or cultivars of grevillea have poisonous nectar that contains cyanide.

பறவைகளும் பட்டுப்பூச்சிகளும் தேனீக்களும் இந்த மலர்களை நாடி வந்து வட்டமிடுகின்றன.

****

பியர் பானம் தரும் மரம்

Hop bush was used for brewing beer

ஹாப் புஷ் என்னும் தாவரம் ஆஸ்திரேலியா ,முழுதும் வளர்கின்றன. கசப்பான விதைகளை எடுத்து குடி பானம் தயாரித்தனர்

பழங்குடி மக்களில் சிலர் இதை வலி நிவாரணியாகவும் பயன்படுத்துகின்றனர். .

இது விரைவில் வளரும் தாவரம் என்பதோடு தேனை அதிகம் சுரப்பதால் தேனீ வளர்ப்போரும் இதை வளர்க்கின்றனர்.

****

The Lily Pilly ‘லில்லி  பில்லி ’ என்னும் செடிகளில் பல வகைகள் உள்ளன. இவற்றின் பழ ங்களை சாப்பிட்டாலாம்; ஜாம் செய்யலாம் . பலவகை நோய்களுக்கும் இது மருந்து. வேலியில் வளரும்; இதில் பறவைகளும் கூடு கட்டி வசிக்கின்றன .

****

கங்காரு பாதம் Kangaroo paws (Anigozanthos sp.)

இன்னொரு செடிக்குப் பெயர் கங்காரு பாதம் இவற்றின் மலர்கள் கங்காரு பாதம் போல இருக்கும் ; இந்த மலர் மேற்கு ஆஸ்திரேலிய மாகாணத்தின் தேசீய மலர்.

இவைகளின் கிழங்குகளை பழங்குடி மக்கள் உணவாகச் சாப்பிடுகிறார்கள்; அவற்றில் ஸ்டார்ச் என்னும் மாவுச் சத்து அதிகம் இருக்கிறது. இவைகளை மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர் .

இவைகளை பல்வேறு பழங்குடி மக்கள் பல பெயர்களில் அழைக்கின்றனர்  அவை Nollamara’, ‘Kurulbrang’ and ‘Yonga Marra’.

நல்ல மர்ரா , எங்க மர்ரா குருளைபரங்கா .

இவைகள் தமிழ்ச்  சொற்களாகவும் இருக்கலாம்.

நல்ல மரம் எங்கள் மரம் என்று தொனிப்பதைக் கவனிக்கவும்.

****

ஆஸ்திரேலிய ஜிவந்தி /ஜவந்திப் பூ டெய்சி everlasting daisy/(Xerochrysum).இவை பட்டுப்பூச்சிகளுக்கும் தேனீக்களுக்கும்  உதவும் மலர்ச் செடிகள்.  இவைகளின் மகரந்தத்துக்குள் தூள் பல பூச்சிகளுக்கு உணவாகும் .

***

பாட்டில் பிரஷ் The bottlebrush (Callistemon) is medicinal

பாட்டில்களைச் சுத்தப்படுத்துவதற்கு நாம் பயன்படுத்தும் பிரஷ் போல இருப்பதால் இவைகளை இப்படி அழைக்கிறார்கள் ; ஆயினும் பழங்குடி மக்களின் மொழியில் வேறு பெயர்கள்.

இவைகளில் ஐம்பது வகைகள் இருக்கின்றன இவைகளை மருந்தாகவும் உபயோகிக்கின்றனர். காக்காட்டு போன்ற பறவைகளும் , குருவிகளும் இவற்றின் விதைகளை சாப்பிடும்.  பூக்களில் தேனும் சுரப்பதால் அவைகளும் தேன்சிட்டுகளுக்கு உணவு.

இவை கடினமான வலுவான தாவரங்கள் என்பதால் எளிதில் அழியாது பாக்டீரியா, வைரஸ், பூஞ்சக்காளான் , தொற்றுக் கிருமிகளால் வரும் நோய்களுக்கு இவற்றைக் காலாகாலமாகப் பயன்படுத்துகின்றனர். bacterial, fungal, viral and parasite infections.

****

ஆயிரம் வகை கருவேல மரங்கள் . There are over 1000 types of Australian wattle (Acacia) இந்தியாவிலும் முள் உள்ள வேல மரங்கள் பல வகை; இதே போல ஆஸ்திரேலியாவிலும் ஆயிரம் வகைகள் இருக்கின்றன; தாவர இயல் படித்தோர் இதை அகேஷியா குடும்பம் என்பர் 

ஒரு வகை பொன்னிற மலர்கள் உடைய அகேஷியா மரத்தின் பூக்கள்தான் ஆஸ்திரேலியாவின் தேசீய மலர்ச் சின்னம் இந்தியாவுக்கு தாமரை மலர் இருப்பது போல .

The Golden Wattle (Acacia pycnantha) is Australia’s national floral emblem


ஆஸ்திரேலியாவில்  காட்டுத்  தீ  அடிக்கடி  ஏற்படுகிறது  அத்தகைய  இடங்களில்  உடனே  வளர்வது  இந்த வேல மர  வகைதான்.

எறும்புகளுக்கும்  வேல மரங்களுக்கும்  தனி உறவு உள்ளது  ; இதன் விதைகளை எறும்புகள் தங்கள் வசிப்பிடங்களுக்குக் கொண்டு சென்று, மேலேயுள்ள எண்ணைப்பத சதையை மட்டும் சாப்பிட்டுவிட்டு விதைகளை விட்டுவிடும்; அவை மீண்டும் முளைக்கின்றன.  பறவைகளும் வண்டுகளும் தேனீக்களும் இந்த மலர்களை நாடிவருகினறன

வேல மரங்கள்   நைட்ரஜன் வாயுவை ஈர்த்து வேர்களில் சேமித்து உரமாகவும் அளிக்கின்றன.

****

இரவு ராணி பான்ஸ்கியா

The Native banksias are nocturnal

இந்த வகை மலர்ச் செடிகளில்  173 Banksia வகைகள் இருக்கின்றன. பெரும்பாலானவை ஆஸ்திரேலியாவில் மட்டுமே உள; மரங்களாக வளரும் இவை இரவி வு  நேரத்தில் மணத்தைப் பரப்புவதால் வவ்வால் முதல் ஓபோசம்வரை இரவு நேரத்தில் உலவும் பிராணிகள்  (Honey Possum, pygmy possums, gliders, and bats) அங்கே வருகின்றன. பல வண்ண மலர்களில் உள்ள தேனை உறிஞ்சசுகின்றன; இவைகளில் சில வகை தரைகளை ஒட்டி வளரும் cockatoos, காக்காட்டு பறவைகள் மலரின் பல பகுதிகளையும் விதைகளையும் உண்ணும்.

பழங்குடி மக்கள் இவைகளின் மலர்த் தேனை அருந்துவதோடு ஒரு வித பானத்தைத் தயாரிக்கவும் மலர்களைப் பயன்படுத்துகின்றன. மருந்தாகவும் உபயோகிக்கின்றனர்.

வீட்டில் ரொட்டியைச் சுட்டால், ரோஸ்ட் செய்தால் என்ன மணம் வருமோ அந்த மணத்தை மலர்கள் வெளியிடுகின்றன !

****

There are 107 orchid genera containing more than 1200 species growing in Australia. Most are unique to this country.

ஆஸ்திரேலிய ஆர்க்கிட் மலர்கள்

ஆர்க்கிட் மலர்கள் , மழை வனக் காடுகளில் மட்டுமே வளரும்  இப்போது பலரும் விற்பனைக்காகவும் அழகிற்காகவும் வளர்ப்பதால் அரிய தாவரங்கள் எளிதில் கிடைக்கின்றன. 107 பிரிவுகளை சேர்ந்த எண்ணூறு வகைகளை தாவர ஆர்வலர்கள் வளர்க்கின்றனர் இவைகளில் பெரும்பாலானவை இந்த நாட்டுத் தாவரங்கள் ஆகும்.

இவைகளில் பெரும்பாலானவை மரக்கிளைகளில் உள்ள இடுக்குகளிலும் பாறை இடுக்குகளிலும் வளரும்; வேர்கள் தொங்கிக் கொண்டிருக்கும். ஒவ்வொரு ஆண்டும் காடுகளில் பத்து புதிய வகை ஆர்க்கிட் மலர்களைக் கண்டு பிடிக்கிறார்கள்;

—subham—

Tags- வினோத தாவரங்கள், யூகலிப்டஸ், தாய்ப்பால், பியர், தேன், ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 3, மருந்து மரங்கள்

Leave a comment

Leave a comment