
Post No. 14,084
Date uploaded in Sydney, Australia – –13 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
19-12-24 கல்கி ஆன் லைன் இதழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை
Space News Latest
விண்வெளி ஆர்வலர்களே, சந்திர வாட்சை அணியலாம், இப்போது!
ச. நாகராஜன்

விண்வெளி ஆர்வலர்களுக்கு ஒரு நற்செய்தி!
1969ம் ஆண்டு அபல்லோ 11 விண்கலத்தில் சென்ற விண்வெளி வீரர்களின் அனுபவத்தை அப்படியே பெற ஒரு புதிய கைக்கடிகாரம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சந்திர கடிகாரத்தின் (MOON WATCH) அளவு 38.1 x 44.2 x13.05 mm தான். விலை 818 டாலர்கள்.
இரண்டு வண்ணத்தில் இதன் ஸ்ட்ராப் கிடைக்கிறது.
ஐந்து வருட காலம் கஷ்டப்பட்டு உழைத்து இது தயாரிக்கப்பட்டிருக்கிறது.
சந்திரனை நோக்கிச் சென்ற அபல்லோ 11 விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் சென்ற போது அனைத்து விதமான தகவல் தொடர்புக்கும் தகவல் பரிமாற்றத்திற்கும் இரண்டு ப்ரீஃப் கேஸ் அளவுள்ள கம்ப்யூட்டர்கள் அவர்களுக்கு அளிக்கப்பட்டன. இரண்டு பெரிய அறைகள் தேவைப்படுகின்ற அளவு இருந்த கம்ப்யூட்டர்கள் விண்வெளிப் பயணத்திற்காக அதே திறனுடன் இந்தச் சிறிய அளவில் தயாரிக்கப்பட்டன.
இந்தச் சிறிய சாதனங்களை வைத்துத் தான் அவர்கள் வெற்றிகரமாகப் பயணத்தை முடித்தார்கள்.
ஐம்பத்தைந்து வருடங்கள் கழித்து அபல்லோ இன்ஸ்ட்ருமென்ட்ஸ் என்ற நிறுவனம் இந்த அபல்லோ கைடன்ஸ் கம்ப்யூட்டரை (AGC – Apollo Guidance Computer) கையில் அணிந்து கொள்ளும் ரிஸ்ட் வாட்ச் அளவுக்குச் செய்வதில் வெற்றி கண்டு விட்டது. யார் வேண்டுமானாலும் இதை இப்போது கையில் அணிந்து கொள்ளலாம். டிஸ்க் கீ என்று உச்சரிக்கப்படும் டிஸ்ப்ளே கீ போர்டு சிஸ்டம் (DSKY – Display and Keyboad System) ஒன்றை வைத்துத் தான் விண்வெளி வீரர்கள் ஆணைகளைப் பிறப்பித்தார்கள். இதை அணிபவர்கள் அவர்களைப் போலவே பேசிக் கொள்ளலாம்;சந்திரனுக்குப் பறக்கலாம்! (ராக்கெட், விண்கலம் இல்லாமல் தான்!)
அபல்லோ இன்ஸ்ட்ருமெண்ட்ஸின் உயர் தலைமை அதிகாரியான மார்க் க்ளேடன் (Mark Clayton) அபல்லோ விண்வெளி வீரர்கள் உபயோகித்தது போல ஒன்றை ஆப்பீள் வாட்சாக உருவாக்க முடியுமா என்று சிந்தித்துக் கொண்டே இருந்தார். அவர் ஒரு விண்வெளி ஆர்வலர். சிந்தித்ததைச் செயலில் கொண்டு வந்தார்.
ஒரிஜினல் வரைபடங்களை வாங்கிய ஒரு பெரும் குழு இதைத் தயாரிக்க ஆர்மபித்தது. இதில் இரண்டு ஃபார்முலா 1 பொறியாளர்களும் இணைந்தனர்..
ஆயிரக்கணக்கான பஞ்ச் கார்டுகளை விண்வெளியில் எப்படி உபயோகிக்க முடியும்? ஆகவே இதை உருவாக்கிய நிபுணர்கள் எண்களைப் பயன்படுத்தினர். இந்த நம்பர்களே பெயர்ச்சொல் (NOUNS) மற்றும் வினைச்சொல் (VERBS) ஆகிய குறியூடுகளைக் குறிக்க உதவின.
இதன் மூலம் கடிகாரத்தில் மணியையும் அவ்வப்பொழுது மாற்றிக் கொள்ளலாம். 200 வினைச்சொல் மற்றும் பெயர்ச்சொற்கள் அப்போது உபயோகிக்கப்பட்டன.
4:6:1 என்ற ஸ்கேல் அளவில் இது சுருக்கப்பட்டு இப்போதுள்ள கடிகார அளவில் சந்தைக்கு வருகிறது.
இதை அணிந்து கொண்டு தங்கள் கம்ப்யூட்டரில் விண்ணில் ஏவப்படும் விண்கல மாதிரியான ஸ்பேஸ் ஃப்ளைட் சிமுலேடருடன் இதை இணைத்து விண்ணில் பறக்க ஆரம்பிக்கலாம்.
இதன் உள்ளே இருக்கும் எல் ஈ டி விளக்குகள் விண்வெளி வீரர்கள் உபயோகித்தபோது எந்த வண்ணத்தில் ஒளி வந்ததோ அதே போல வருவதற்காக பில்டர்களும் இதில் அமைக்கப்பட்டுள்ளன.
அபல்லோ 11 விண்கலமானது 1969 ஜூலை மாதம் 16ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இது 1969 ஜூலை மாதம் 24ம் தேதி பூமிக்குத் திரும்பியது.
இதில் தான் சந்திரனில் முதலில் காலடி பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனுக்கு ஏகினார். அவருடன் மைக்கேல் காலின்ஸும் எட்வின் ஆல்ட்ரினும் சென்றனர்.
ஜூலை மாதம் 20ம் தேதி இரவு 10.56க்கு நிலவில் இறங்கி ஆர்ம்ஸ்ட்ராங் நடந்தார். புதிய சரித்திரத்தைப் படைத்தார்!
1969ல் விண்வெளி வீரர்கள் விண்வெளிக்குப் பறந்த அனுபவத்தை 55 ஆண்டுகளுக்கும் பின் கையில் கடிகாரம் அணிந்து கொண்டே பெற முடியும் என்பது ஒரு அறிவியல் அதிசயம் அல்லவா?
***