
Post No. 14,102
Date uploaded in Sydney, Australia – 16 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அருணகிரிநாதருக்கு அடுத்தபடியாக முருகனை மிகவும் போற்றி வணங்கியவர் ராமலிங்க சுவாமிகள்தான் ; பாரதியாரின் முருகன் துதிகள் கூட இதற்கு அடுத்த இடத்தில்தான் வரும். பிற்கால சாஹித்யகர்த்தாக்கள் நிறையவே முருகனைப் பாடியிருக்கின்றனர் என்பது உண்மைதான்.
அருட்பிரகாச ராமலிங்க சுவாமிகள் பாடிய கந்தர் சரணப்பத்து பற்றி பலருக்கும் தெரியாது. இது பஜனைகளில் பாடவேண்டிய பாடல். ராக தாளத்துக்கு ஏற்ப வரக்கூடியது மட்டுமல்ல; எளிதில் திரும்பச் சொல்ல வல்லது ; ஆழ்ந்த பொருளும் கொண்டது.
பத்து செய்யுட்களைக் கொண்ட இந்தத் துதியில் சில கண்ணிகளைக் காண்போம் :
சென்னைக் கந்தகோட்டம்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1. அருளார் அமுதே சரணம் சரணம்
அழகா அமலா சரணம் சரணம்
பொருளா எனைஆள் புனிதா சரணம்
பொன்னே மணியே சரணம் சரணம்
மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்
மயில்வா கனனே சரணம் சரணம்
கருணா லயனே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்
2. பண்ணேர் மறையின் பயனே சரணம்
பதியே பரமே சரணம் சரணம்
விண்ணேர் ஒளியே வெளியே சரணம்
வெளியின் விளைவே சரணம் சரணம்
உண்ணேர் உயிரே உணர்வே சரணம்
உருவே அருவே உறவே சரணம்
கண்ணே மணியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்
3. முடியா முதலே சரணம் சரணம்
முருகா குமரா சரணம் சரணம்
வடிவேல் அரசே சரணம் சரணம்
மயிலூர் மணியே சரணம் சரணம்
அடியார்க் கெளியாய் சரணம் சரணம்
அரியாய் பெரியாய் சரணம் சரணம்
கடியாக் கதியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்
****
10. வேதப் பொருளே சரணம் சரணம்
விண்ணோர் பெருமாள் சரணம் சரணம்
போதத் திறனே சரணம் சரணம்
புனைமா மயிலோய் சரணம் சரணம்
நாதத் தொலியே சரணம் சரணம்
நவைஇல் லவனே சரணம் சரணம்
காதுக் கினிதாம் புகழோய் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்
முருகனின் நாமம் வேதப் பொருள் என்பது வள்ளலாரின் துணிபு. அதை இரண்டாவது மற்றும் பத்தாவது செய்யுட்களில் உறுதிப்படுத்துகிறார்.
****

நாலாவது செய்யுளில் காவே தருவே சரணம் சரணம் என்கிறார்; அதாவது மரங்களும் அந்த மரங்கள் நிறைந்த காடும் போன்றவனே என்கிறார்; இது மாணிக்க வாசகரின் ஏகன் அனேகன் என்பது போன்றது ; அவனே ஒருவனாகவும் கோடிக்கணக்கான தெய்வங்களாகவும் நின்று அருளவல்லவன் .
அது மட்டுமல்ல ; பாரதியாரின்
‘காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்,
நோக்குங் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்! “
என்ற வரிகளையும் நினைவுபடுத்தும்.
இதைச் சிறுவர்களுக்கு கற்ப்பிப்பதோடு, பாடப்புஸ்தகங்களிலும் சேர்க்க வேண்டும்
தெய்வமணிமாலையிலுள்ள முப்பத்தொரு பாடல்கள் தெரிந்த அளவுக்கு இது பரவவில்லை .
ஆறாவது செய்யுளில் ஞாலத்து துயர் தீர் நலனே சரணம் என்கிறார் ராமலிங்க சுவாமிகள் ; உலக மக்களின் துயரை நீக்குபவன் முருகன் ; சங்கீத நாராயண சப்த மாத்திரம் விமுக்த துக்காஸ் சுகினோவா பவந்து என்று விஷ்ணு சஹஸ்ரமநாமத்தில் வருகிறது; அதுபோல முருகன் பெயரைச் சொன்ன மாத்திரத்தில் உலகத்துயர் நீங்கும்.
சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை – உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்— என்பதையும் ஒப்பிடலாம்.
சிவாய நம என்று கூறும் ஐந்தெழுத்து மந்திரமே விதியை வெல்லும் உபாயமாகும். அவர்களுக்கு அபாயம் ஒரு நாளும் இல்லை. இதைத் தவிர நாம் மதி / அறிவு என்று நினைக்கும் அனைத்து விஷயங்களும் விதியின் வழியில் தான் செல்லும்.
****

7. நங்கட் கிளியாய் சரணம் சரணம்
நந்தா உயர்சம் பந்தா சரணம்
திங்கட் சடையான் மகனே சரணம்
சிவைதந் தருளும் புதல்வா சரணம்
துங்கச் சுகம்நன் றருள்வோய் சரணம்
சுரர்வாழ்த் திடுநம் துரையே சரணம்
கங்கைக் கொருமா மதலாய் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்
ஏழாவது பாடலில் ஞான சம்பந்தரை நினைவு கூறுவதைக் கவனிக்கவேண்டும்; சம்பந்தப் பெருமானை திரு முருகனின் அவதாரம் என்று ஆன்றோர் கருதுவர் அதைச் வள்ளலாரும் பாடி மகிழ்கிறார் ; வணங்கிப் போற்றுகிறார்
காங்கேயன் என்று முருகனுக்கு ஒரு பெயர்; அதாவது கங்கையின் மைந்தன் ; கங்கையால் தோன்றிய சரவ ணப்பொய்கையில் அவதரித்தவர் ஆதியும் ஏழாவது பாடலில் சொல்கிறார்
சுருங்கச் சொன்னால் பாடலில் வரும் வரிகளைக் கொண்டு பிறப்பு முதல் வள்ளி திருமணம் வரை கதை சொல்லிவிடலாம்.
****
ஒன்பதாவது பாடலில் புகழ்வார் இதயம் புகுவாய் சரணம் என்று முருகனைப் போற்றுகிறார் ;இறைவன் என்பவர் எல்லோர் இருதயத்திலும் உறைவதை உபநிஷத்களும் உரைக்கின்றன. அதை அறிவதற்கு முயற்சி செய்தால் அவன் ஏற்கனவே நம்மிடத்தில் இருப்பதை உணரலாம்
பத்துப் பாடல்களும் கந்தா சரணம் என்று முடிவது பாடலின் முழுப்பொருளை உணர்த்துகிறது.
கந்தகோட்டக் குமரனை, கந்தனை சரணடைவோருக்கு வேறு எதுவும் தேவையில்லை ; மேலும் இதே பாடலில் சிவனே என்றும் வருவதால் தெய்வம் ஒன்றே என்பதை சொல்லாமற் சொல்கிறார் வள்ளலார் .
Sanskrit dictionary
[«previous (G) next»] — Gangeya in Sanskrit glossary
Source: DDSA: The practical Sanskrit-English dictionary
Gāṅgeya (गाङ्गेय).—a. (-yī f.) Being in or on or of the Ganges; स्नातानां शुचिभिस्तोयैर्गाङ्गेयैः प्रयतात्मनाम् (snātānāṃ śucibhistoyairgāṅgeyaiḥ prayatātmanām) Mahābhārata (Bombay) 13.26.31.
-yaḥ 1 Name of Bhīṣma or Kārtikeya.
2) The Hilsa fish.
-yam 1 Gold.
2) The Musta grass.
3) The Dhattūra plant; गाङ्गेयः षण्मुखे भीष्मे जातरूपकशेरुणोः । मुस्तायां पुंनपुंसि स्यात् (gāṅgeyaḥ ṣaṇmukhe bhīṣme jātarūpakaśeruṇoḥ | mustāyāṃ puṃnapuṃsi syāt) Nm.
(from Wisdomlib.org)
–subham—
Tags- கந்தர் சரணப்பத்து , வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை-10