ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 7 (Post.14,107)

 Written by London Swaminathan

Post No. 14,107

Date uploaded in Sydney, Australia – 17 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆஸ்திரேலிய மியூஸியத்தில் அரிய ரத்தினங்கள்

பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு முறை சிட்னி நகரிலுள்ள ஆஸ்திரேலிய மியூஸியத்துக்கு நேற்று 16-1-2025 ல் சென்றேன்.

முதலில் நல்ல செய்தி — அனுமதி இலவசம் !

சிட்னியின் நகரப் பகுதியில் உள்ளது ; பஸ் வசதியும் ரயில் வசதியும் உண்டு .

நாங்கள் போனபோது நல்ல கூட்டம் ; மாலை ஐந்து மணி வரைதான் கண்காட்சி .

நான் ஒரு லண்டன்வாலா ; ஆகையால் முதலில் லண்டன் மியூசியங்களை ஒப்பிடுகிறேன் . லண்டனிலும் பிரிட்டிஷ் மியூசியம் விக்டோரியா- ஆல்பர்ட் மியூசியம், சயன்ஸ் மியூசியம் ,நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம் ஆகியவற்றுக்கு நுழைவுக் கட்டணம் இல்லை 

ஆனால் ஆஸ்திரேலிய மியூசியத்தில் உள்ளது போல பழங்குடி மக்களின் விரிவான கலாசாரத்தை அங்கு காணமுடியாது; சிட்னியில் மட்டுமே காண முடியும்.

ஆயினும் லண்டனில் கோஹினூர் வைரம் போன்ற அரச நகைகளைக் காண கட்டணம் உண்டு,  சில மியூசியங்களில் ரத்தினங்களையும் தாதுப் பொருட்களையும் இலவசப் பிரிவில் வைத்திருந்தாலும் சிட்னி போல அத்தனை ரத்தினங்களைக் காண முடியாது ; ஆஸ்திரேலிய மியூசியத்தில் மிகப்பெரிய ரத்தினக் களஞ்சியம் உள்ளது.

ரத்தினைக் கற்கள் , உலோகங்களின் தாதுக்கள், பலவகைக் கற்கள் பற்றி ஆராய்வோருக்கு, அறிய விரும்புவோருக்கு, இது ஒரு அறிவுச் சுரங்கம் .

புகைப்படம் எடுக்கவும் அனுமதி உண்டு .

பிரிட்டிஷ் மியூசியம் போலவே கட்டணம் கொடுத்துப் பார்க்கும் விஷேஷக் காட்சிகளையும் ஏற்பாடு செய்கிறார்கள்; நாங்கள் போனபோது தென் அமெரிக்க நாகரீகக் கண்காட்சி நடந்தது; அதற்கு மட்டும் கட்டணம் உண்டு.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் சென்றபோது பழங்குடிப் பிரிவினை மட்டும் ஆழமாகப் பார்த்தேன் இப்போது மினரல்- தாதுப்  பொருட்கள் பிரிவில் ரத்தினங்களை ஊன்றிப்  பார்த்தேன். பேரக் குழந்தைகள் விளையாடவும் பல விஞ்ஞானக் கருவிகளையும், எலெக்ட்ரானிக் போர்டுகளையும் வைத்துள்ளனர்.

வெளியே உள்ள கடையில் ரத்தினக் கற்களின் விலைகளைப் பார்த்தால் ஆயிரம் முதல் பதினாயிரம் டாலர் வரை விலை உள்ளது ; இதை ஒப்பிடுகையில் உள்ளே உள்ள ரத்தினங்கள் விலை மதிப்பு தெரியும்; ஒளிவிடும் ரத்தினங்களையும் (Fluorescent gems) காட்சிக்கு வைத்துள்ளனர் .

இங்குள்ள பொருட்களில், ரத்தினைக் கற்கள், தாதுக்கள் மட்டுமின்றி வானத்திலிருந்து விழுந்த விண்கற்களும் உள்ளன .

What’s on display?

Minerals: The gallery features over 1,800 rare and spectacular minerals, including gemstones, rare earth minerals, and human-made minerals

Rocks: The gallery includes some of the oldest rocks on Earth

Meteorites: The gallery includes Australian meteorites and tektites

Ornamental minerals: The gallery includes minerals that can be carved, shaped, or polished into decorative objects.

ஏனைய பிரிவுகளில் டைனோஸரஸ் எலும்புக்கூடுகள், ஆஸ்திரேலிய மிருகங்களின் பஞ்சு அடைக்கப்பட்ட பெரிய உருவங்கள், ஆஸ்திரேலியாவைக் கண்டுபிடித்து வளர்ச்சி பெற வைத்தவர்கள், பசிபிக் தீவுகளின் நாகரீகங்கள் முதலியன உள. பள்ளிக்கூட, கல்லூரி மாணவர்களுக்கும் அந்தந்தத் துறையில் ஆராய்சசி செய்வோருக்கும் விருந்து படைக்கும் பிரிவுகள் இவை.

நீங்கள் சென்றால் பழங்குடி கலாசாரத்தையும் 1800 ரத்தினக் கற்களையும் காணத் தவறாதீர்கள்; சிறுவர்களுடன் சென்றால் டைனோஸரஸ் பிரிவு முக்கியமானது. மொத்தத்தில் இரண்டு மணி முதல் மூன்று மணி நேரம் வரை போதும்; மேல் மாடியில் உணவுவிடுதியும் இருக்கிறது.

Opening Hours

Open Daily 10am – 5pm

Wednesdays Until 9pm

Closed Christmas Day

Free General Entry

Address

1 William Street

Sydney NSW 2010

Australia

Phone

+61 2 9320 6000

—SUBHAM—

TAGS- ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள், அதிசயம் பாருங்கள், Part 7,

ஆஸ்திரேலிய மியூஸியம்,  அரிய ரத்தினங்கள்

Leave a comment

Leave a comment