
GNANAMAYAM 19-1-2025 BROADCAST PROGRAMME
ஞானமயம் நிகழ்ச்சியில் சிங்கப்பூர் எழுத்தாளர் லட்சுமியின் சிறப்புப்பேட்டி
GNANAMAYAM BROADCAST FROM THREE CONTINENTS ON SUNDAYS
Gnanamayam Broadcast comes to you via Zoom, Facebook and You Tube at the same time from Asia, Australia and Europe
London Time 12 Noon
Indian Time 5-30 pm (evening)
Sydney, Australia time 11 pm (Night)
19-1-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி
ஆசியா, ஆஸ்திரேலியா , ஐரோப்பா ஆகிய 3 கண்டங்களிலிருந்து வரும் ஒளி/ஒலி பரப்பு; நேரில் காணலாம்; கேட்கலாம்
GNANAMAYAM SUNDAY BROADCAST 19-1-2025
VIA ZOOM, FACE BOOK, YOU TUBE
PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES
***
Prayer
****
World Hindu News in Tamil presented by Vaishnavi Anand from London
***
Bengaluru Nagarajan speaks on VEDANTA DESIKAR.
***
Mrs. Brahannayaki Sathyanarayan speaks on AYODHYA from Bengaluru.
***
Interview with Singapore Writer Dr M S SRI LAKSHMI;
London swaminathan based in Sydney interviews her.
***
Kalyanji anchoring from India.
***
If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.
It is on Every Sunday for one hour.
உலக இந்துமத செய்தி மடல்- லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த்
***
ஆலயம் அறிவோம் வழங்குபவர் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் — -தலைப்பு – அயோத்யா
***
பெங்களூர் நாகராஜன் சொற்பொழிவு – தலைப்பு — வேதாந்த தேசிகர்
***
ஞானமயம் நிகழ்ச்சியில் சிங்கப்பூர் எழுத்தாளர் லட்சுமியின் சிறப்புப்பேட்டி
முனைவர் எம் எஸ் ஶ்ரீ லக்ஷ்மி சாதனைகள் படைப்புகள்
சோ. இலக்குமி, முனைவர் இலக்குமி மீனாட்சிசுந்தரம் என்னும் பெயர்களால் அறியப்பட்ட இவர் முனைவர் எம் எஸ் ஶ்ரீ லக்ஷ்மி என்னும் பெயரால் இப்போது அழைக்கப்படுகிறார்.
இவர் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தேசிய கல்விக்கழகம், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் விரிவுரையாளராகத் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் கற்பித்தவர். மலாய் மொழியையும் நன்கு கற்றவர். மலாய், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் வல்லமை கொண்டவர். மரபுக் கவிஞரும் ஆவார். தமிழ் இலக்கியத் திறனாய்வாளராகத் தமிழகம், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளின் தமிழ் இலக்கியங்களை ஆய்வு செய்த பன்னூலாசிரியராகவும் சிறுவர் இலக்கியப் படைப்பாளியாகவும் திகழ்கிறார்.
இவர் சிங்கப்பூரில் நடைபெற்ற அனைத்துலக எழுத்தாளர் விழாவின் ஏற்பாட்டுக்குழுவில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு பணிகளையும் செய்த இலக்கியத் தொண்டூழியர். நாடக மதிப்பீட்டுக்குழு, ஊடக வளர்ச்சி ஆணையம் ஆகியவற்றிலும் இவர் இலக்கியச் சேவை புரிந்துள்ளார்.
ஆசிரியர் என்ற முறையில் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆறு கட்டுரை நூல்களையும் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழக மாணவர்களுக்கெனச் சிங்கப்பூர், மலேசியத் தமிழ் இலக்கியங்கள் தொடர்பான பாட நூல்களையும் எழுதியுள்ளார். இவர் பத்துக்கும் மேற்பட்ட நூல்களின் பதிப்பாசிரியராகவும், தொகுப்பாசிரியராகவும் விளங்குகிறார். புதிய ஆய்வுக்களங்களில் நாட்டம் கொண்ட இப்பெருமாட்டி முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் இருநூறு ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
சென்னை கம்பன் கழக அ.ச.ஞா. விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது என 30க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்கள் அயலகத் தமிழ்ப் பெண்ணறிஞர்களுக்கென அறிவித்த அம்மா இலக்கிய விருதினை 2018 ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு வழங்கி இவரின் தமிழ்ப் பணியை அங்கீகரித்தது. இவரின் தமிழ்த் தொண்டுக்காக கும்பகோணத்தில் இயங்கும் மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம் 2022ஆம் ஆண்டு தமிழாகரர் என்னும் பட்டமும் 2023 ஆம் ஆண்டு குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தால் செந்தமிழ்த்திலகம் என்னும் பட்டமும் வழங்கப்பட்டது. வளர்தமிழ் மாமணி என்னும் சிறப்புப் பட்டத்தை தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகமும் பாண்டிச்சேரியில் இயங்கும் உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் உலகத்தமிழ் மாமணி என்னும் சிறப்புப்பட்டத்தையும் சென்ற ஆண்டு இவருக்கு வழங்கி உள்ளன. மலேசிய நாட்டில் இந்த் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பன்னாட்டுத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுத் தொடக்கவிழாவில் முத்தமிழ்ப் பேரரசி என்னும் சிறப்புப் பட்டமும் இவருடைய தமிழ்ப்பணியைப் பாராட்டி வழங்கப்பட்டது. இவர் எழுதிய திருநெறிய தமிழ் என்னும் நூல் சேக்கிழார் விருதினை இவருக்கு பெற்றுத் தந்தது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் எட்டாம் நாள் இவரின் தமிழ்த்தொண்டினை அங்கீகரிக்கும் விதமாக வானவில் பண்பாட்டு மையம், சென்னை இவருக்குச் செல்லம்மா பாரதி விருது வழங்கி கவுரவிக்க உள்ளது.
திருநெறிய தமிழ் இவரது 39ஆவது நூல். இந்த ஆண்டு பூந்தோட்டம் என்னும் சிறுவர் கவிதை நூலும் அறிந்ததும் அறியாததும் என்னும் ஆய்வுக்கட்டுரை நூலும் அடுத்த மாதம் வெளிவர உள்ளன.
****
Anchored by London Swaminathan from Sydney and Kalyanji from India.
****
JOIN US ON SUNDAYS.
—subham—
TAGS- SUNDAY 19-1-2025 , Programme, GNANAMAYAM BROADCAST, three continents, Interview, Singapore Writer Lakshmi