ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 8 (Post No.14,110)

Written by London Swaminathan

Post No. 14,110

Date uploaded in Sydney, Australia – 18 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Boomerang

பழங்குடி மக்களின் வினோத ஆயுதங்களும் இசைக் கருவிகளும்

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 8

ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் ஒன்றுமறியாத அப்பாவிகள் ; குடியேறிய வெள்ளைக்காரர்கள் அவர்களைப் படுகொலை செய்து குவித்தனர். கொலைக் குற்றவாளிகளை விட மோசமாக நடத்தி கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பூட்டி ஒருவரோடு ஒருவரை  சங்கிலியால் பிணைத்தனர். அவர்களுடைய நிலங்களையெல்லாம் பிடுங்கிக் கொண்டனர்.

இப்பொழுது ஆஸ்திரேலியாவில் எங்கு சென்றாலும் அவர்களுடைய பெயர்களை எழுதி  இது அவர்களுக்குச் சொந்தமானது என்பதை நாங்கள் நன்றியுடன் நினைவு கூறுகிறோம் என்று எழுதிப்போட்டுள்ளனர். எல்லாக் கல்வி நிறுவனங்களிலும் பொது இடங்களிலும், கட்டிடங்களிலும்பெரிய சூப்பர் ஸ்டோர்களிளிலும், ஷாப்பிங் மால்களிலும்  , இந்த மன்னிப்புக் கேட்கும் தொனியைக் காணலாம்; படிக்கலாம்.

அந்தமான் தீவு ஜாரவா இன மக்கள் அல்லது ஆப்ரிக்க காட்டுவாசிகள் போல மனிதர்களைத் தாக்கியதாக வரலாறு இல்லை; அவர்களுடைய நிலத்தில் வீடு கட்டி வசித்த போதும் பண்ணைகளை அமைத்தபோதும் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்களைப் பற்றிய விநோதச் செய்திகள் :

·         Age

Aboriginal Australians are one of the oldest living populations in the world, having lived in Australia for over 65,000 years. 

·         Language

There are over 250 distinct language groups among Aboriginal Australians

வெவ்வேறு இனமக்கள் வெவ்வேறு 250 மொழிகளைப் பேசுகின்றனர் வெவ்வேறு பெயர்களைக் கொண்டுள்ளனர் இதிலிருந்து அவர்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் ஒரே இடத்திலிருந்து குடியேறவில்லை என்று தெரிகிறது.

ஐரோப்பா கண்டத்தைவிட ஆஸ்திரேலியா பெரியது ; ஆகையால் பல மொழிகள் இருப்பதில்  வியப்பில்லை; அவர்களுக்கு எழுத்துக்கள் இல்லாததாலும் குறைவான ஜனத்தொகையாலும் பல மொழிகள் அழிந்துவிட்டன.

கதைகள் ,பாடல்கள் மூலம் இவர்கள் காலம் காலமாக பண்பாட்டினைப் பாதுகாத்து வருகின்றனர் ஆஸ்திரேலியா முழுதும் பேட்டைகளின் பெயர்களும் வீதிகளும் பழைய பழங்குடி இன மொழிகளில் இருக்கின்றன.  .

இவர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையினை நடத்தினார்கள்

அவர்கள் 40 முதல் 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு வந்துவிட்டனர்; வெள்ளைக்காரர்கள் வந்து 250 ஆண்டுகள்தான் ஆகிறது .

அவர்கள் உருவாக்கிய பூமராங் விஷ்ணுவின் சுதர்சன சக்கரம் போன்றது ; எதிரியைத் தாக்கிவிட்டுத் திரும்பி வந்துவிடும்!

அவர்கள் தனக்கென்று டிட்ஜரீடு என்ற இசைக் கருவிகளையும் உருவாக்கி ஆடிப்பாடி மகிழ்ந்தனர் ; காட்டு விலங்குகளை வேட்டையாடி புசித்தனர்.

பழங்குடி மக்களின் ஓவியங்கழும் வடிவங்களும் வேறு எதனுடனும் ஒப்பிட முடியாதவை. அவர்கள் உடலில் விபூதி போல வெள்ளைப் பொடிகளை வரி வரியாகப்  பூசுகின்ற்னர்.

சில வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் பார்க்கையில் இந்து மதத்துக்கு நெருங்கி வருகின்றனர் .

எண்ணிக்கையைப் பார்க்கையில் குடியேறிய வெள்ளைக்காரர்களை விட மிகவும் குறைவு.

·         Smoking ceremonies

Smoking ceremonies are used in rituals to cleanse people and areas of bad spirits. 

·         Marn Grook

Aboriginal Australians played Marn Grook, a game using possum hide as a ball, long before it inspired Australian Rules Football

இந்துக்களைப்போல தீ மூட்டி கெட்ட ஆவிகளை விரட்டுகின்றனர். இது இந்துக்களின் யாக யக்ஞங்களைப் போன்றது.

கால் பந்து போல ஒரு விளையாட்டினையும் கண்டுபிடித்தனர். போஸ்ஸம் என்னும் விலங்கின் தோலினைக்கொண்டு பந்துகளை செய்தனர் .இந்துப் பெண்களின் பூப்பந்து விளையாட்டினை இது நினைவு படுத்தும்.

இப்போது இந்த நாட்டிற்குள்ள ஆஸ்திரேலியா என்ற பெயர் வெள்ளை ஆக்கிரமிப்பாளர்கள் கொடுத்த பெயர் ஆகும். இந்தச் சொல்லுக்கு தெற்கேயுள்ள நிலப்பரப்பு என்பது பொருள் ஆகும்

Europeans called it ‘New Holland’—a name penned by Dutch seafarer Abel Tasman in 1644.The Latin term for ‘Australia’ is ‘Terra Australis Incognita,’ which means “unknown southern land,” but it had a respected name by First Nations peoples long before.

Western Australia’s Kimberley region uses the word ‘Bandaiyan’ to refer to the country.

பெரிய நிலப்பரப்பு என்பதால் ஒரே பெயர் முதலில் இல்லை; மேற்கு ஆஸ்திரேலிய கிம்பர்லி மக்கள் பண்டையன் என்ற பெயரைப் பயன்படுத்தினர் இது பழமை என்னும் தமிழ்ச் சொல்லிலிருந்து வந்திருக்கலாம்

பண்டைய = புராதன= பழமையான

தர்மம் ,புண்ணியம் போன்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களை எப்படி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முடியாதோ அது போல பல பழங்குடி இன  மக்களின் சொற்களுக்கு ஆழமான பொருள் உண்டு; ஒரே ஆங்கிலச் சொல்லால் விளக்க முடியாது.

*******

My Old Article Attached

ஆஸ்திரேலியப் பழங்குடி கலாசாரத்தில் ‘அக்னி’ (Post No. 2523)

Research Article written by london swaminathan

Post No. 2523; Date: 9th February 2016

இந்துக்களின் வேதத்தில் இந்திரனுக்கு அடுத்தபடியாக, அதிகம் போற்றப்படுபவர் அக்னி பகவான். வேத காலத்தில் வீட்டிலும், அரண்மனைகளிலும், கோவில்களிலும் 400 வகையான யாக, யக்ஞங்கள் நடத்தப்பட்டன. ஆஸ்திரேலியப் பழங்குடிகள் அக்னி வழிபாடு செய்யாவிட்டாலும், இந்துக்களைப் போல, தீயை ஒரு புனிதப் பொருளாகவே கருதினர். மேலும் ஒரு ஒற்றுமை. வேத கால பிராமணர்கள், மந்திரம் சொல்லி, அரணிக்கட்டையை வைத்து தீயை மர ஓட்டைகளிலிருந்து கடைந்தெடுத்தது போலவே பழங்குடி மக்களும் செய்தனர். ஆயினும் இவ்வழக்கம் இந்தியா, ஆஸ்திரேலியா தவிர மாயா நாகரீகத்தில் கூட உள்ளது. ஆக, யார் யாரிடமிருந்து கடன் வாங்கினர் என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயமே.

அக்னியை உண்டாக்க பழங்குடியினர், அரணியைப் போல வுள்ள கருவிகளையே பயன்படுத்தினர். அவர்கள், இதற்காகப் பலவகைக் கருவிகளைச் செய்து, தீக்குச்சி போலத் தோன்றும் பெரிய குச்சிகளையும் வைத்திருந்தனர். தீப்பொறி வந்தவுடன் அதைக் கொளுத்திக் கொள்வர்.

எதையும் வீணடிக்காதே

நான் சிட்னி மியூசியத்தில், ஆஸ்திரேலிய பிரிவை பார்த்துக் கொண்டிருக்கையில் எனது கவனத்தை ஈர்த்த மற்றொரு விஷயம் – எதையும் வீணடிக்காதே என்ற பழங்குடி மக்களின் வாசகமாகும்.

இந்துக்கள், எல்லா பொருள்களையும் கடவுளின் பொருளாகப் பார்ப்பதால் எதையும் வீணடிக்கமாட்டார்கள். ‘ஈஸாவாஸ்யம் இதம் சர்வம்’ – என்று உபநிஷதம் கூறுவதால், காலையில் படுக்கையிருந்து எழுந்து பூமி  மீது பாதங்களை வைக்கும் முன் ‘பாத ஸ்பர்சம் க்ஷமஸ்வமே’ (கால்களை உன் மீது வைக்கிறேன்; மன்னிப்பாயாக) என்று சொல்லித்தான் வைப்பர். கிணறு வெட்டுகையிலும், நிலத்தை உழும்போதும் பூமாதேவியிடம் மன்னிப்புக் கேட்பர். இப்படிக் காடு மலை, ஆறு, குளம், செடி கொடி, தோப்பு, துறவு எல்லாவற்றையும் ஈசனின் படைப்பாகப் பார்ப்பதால் எதையும் வீணடிக்க மாட்டார்கள். அளவுக்கு அதிகமாகச் சுரண்ட மாட்டார்கள். மிருகங்களைக்கூட, நாட்டிற்குள் நுழைந்து தொல்லை கொடுக்கையில் மட்டுமே வேட்டையாடுவர். சிட்னி மியூசியத்தில் இந்தக் கருத்தை பழங்குடி மக்களும் எழுதிவைத்தது சிந்தனையின் ஒருமைப்பாட்டைக் காட்டி நின்றது.

நீ நாட்டைப் போற்று, அது உன்னைப் போற்றும்!

என் கவனத்தை ஈர்த்த மற்றொரு போர்டு, நீ நாட்டைக் கவனி, அது உன்னைக் கவனிக்கும் – என்பதாகும். தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ( நீ அறத்தைக் காத்தால், அறம் உன்னைக் காக்கும்) என்ற இந்துமதக் கருத்தை இது பிரதிபலிக்கிறது. ஆஸ்திரேஇயப் பழங்குடி மக்கள், ‘நாடு’ என்று சொல்லுவது, அவர்களுடைய குழுக்களையாகும். ஆகநாம் மற்றவர்களைக் காப்பாற்றினால், அந்த  தர்மமே நம்மைக்  காக்கும் என்றும், இருக்கும் இயற்கை வளத்தை மிதமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் எண்ணுகின்றனர்.

ஒரு பழங்குடி மக்களிடையே இப்படி உயர்ந்த சிந்தனை இருப்பது அவர்களுடைய பழைய இந்துமத அடிப்படையைக் காட்டுவதாகவே எனக்குத் தோன்றியது. அதர்வண வேத பூமி சூக்தத்தில் மிக உயர்ந்த கருத்துக்கள் இருப்பதைக் காணலாம்.

அவர்களுடைய, மொழி, நடை உடை பாவனை போன்ற அனைத்தையும் காண்கையில் இது உறுதிப் படுகிறது.

இந்தியப் பழங்குடி மக்களிடையேயும் இப்படி இருப்பதைக் காணலாம். ஆயினும் 60,000 ஆண்டுகளாகத் தனித்து வாழ்ந்த இனங்கள் ஆகையால் பல வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்..

—subahm—

Tags-பழங்குடி மக்கள், வினோத ஆயுதங்கள், இசைக் கருவிகள், ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம், பாருங்கள்!- Part 8

Leave a comment

Leave a comment