அந்தப் பேரழகியின் அழகு தான் அழகு;  ஸ்டைலு தான் ஸ்டைலு! (Post.14,113)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,113

Date uploaded in Sydney, Australia – –19 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

கல்கி ஆன் லைனில் 10-1-25 அன்று பிரசுரிக்கப்பட கட்டுரை

TRENDING TALK OF THE WORLD

அந்தப் பேரழகியின் அழகு தான் அழகு;  ஸ்டைலு தான் ஸ்டைலு!

 ச. நாகராஜன் 

கோல்டன் க்ளோப் விருதுகள் அகில உலக திரைப்பட மற்றும் தொலைக்காட்சி  நடிக நடிகையர், கலைஞர்களுக்குத் தரப்படும் பெருமை மிக்க விருதாகும்.1944ல் தொடங்கப்பட்ட இது வருடா வருடம் ஜனவரி மாதம் வழங்கப்படுகிறது.

இதைப் பெற்றவர்களுக்கான  மதிப்பே தனி தான். 85 நாடுகளில் உள்ள 334 பொழுதுபோக்கு பகுதிகளை எழுதிவரும் பத்திரிகையாளர்கள் வெற்றி பெற்றவரைத் தேர்ந்தெடுப்பர். 2025 ஜனவரி 5ம் தேதி நடந்த விழாவை உலகமே கண்டு ரசித்தது. இந்த விழாவில் உலகில் உள்ளோர் அனைவரும் கவனிப்பது இதற்கு வரும் நடிகையர் மற்றும் பிரபலங்களின் ஸ்டைலைத் தான்.

இந்த வருடம் இந்தத் தருணத்தில் அனைவரின் நினைவிலும் தவழ்ந்தவர் ஸ்டைல் ராணி மர்லின் மன்ரோ தான். உலக பத்திரிகைகள் அனைத்தும் அவரை நினைவு கூர்ந்து அவரைப் பற்றி எழுதியுள்ளன.

ஒரு பெண்ணுக்கான நெருங்கிய தோழிகள் வைரமும் ஸ்டைலும் தான் என்பது உலகப் பழமொழி.

இந்த ஸ்டைலில் அதிசயமான உயரத்தில் ஏறி இறங்கவே இறங்காத ஒரே பேரழகி மர்லின் தான்.

மர்லினின் மரணத்தின் போது அவர் ஐந்து அடி ஐந்தரை அங்குல உயரம் இருந்தார். எடை 117 பவுண்டுகள். அவரது உடல் அளவு 37-23-36      

இது ஸ்டுடியோ தெரிவித்த அளவு அவரது ஆடை தயாரிப்பாளர் தந் அளவு : 35-22-35 இந்த அளவு இருக்கும் அழகியை ஹவர்க்ளாஸ் ஃபிகர் (hourglass figure) என்பார்கள். இப்படிப்பட்ட பேரழகி உலகிலேயே இல்லை!

மர்லின் மன்ரோ செவன் இயர் இட்ச் என்ற படத்தில் அணிந்த வெண்ணிற ஆடை 2011ஆம் ஆண்டு ஏலத்திற்கு விடப்பட்ட போது அதை டெபி ரெய்னால்ட்ஸ் நாற்பத்திமூன்று லட்சம் டாலர் (இன்றைய மதிப்பு 36 கோடியே 89 லட்சத்து 74,400 ரூபாய்) கொடுத்து வாங்கினார்.

நார்மா ஜீன் என்பது அவர் இயற்பெயர். (பிறப்பு 1-6-1926 மறைவு: 5-8-1962) இளம் வயதில் அவர் அரசை நம்பி வயிறு வளர்க்க வேண்டிய அனாதை ஆனார். அவரது பேரழகை பிரமிப்புடன் கண்ட சிலர், மன அடிமை ஆக்கும் மைண்ட் டாக்டர்களின் கட்டுப்பாட்டில் அவரை சிக்க வைத்தனர். அழகு சிகிச்சை ஒன்றை மேற்கொண்ட அவர் ‘அழகி’யிலிருந்து பேரழகியாக மாறினார். மர்லின் மன்ரோ என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். பட வாய்ப்புகள் வந்து குவிந்தன. ஹாலிவுட்டையே அவர் வருகை ஒரு கலக்கு கலக்கி விட்டது..

‘ஜென்டில்மென் ப்ரிஃபெர் ப்ளாண்ட்ஸ்’ என்ற படத்தில் தன் அழகு மூலம் எதையும் சாதித்துக் கொள்ள விரும்பும் ஒரு அழகியாக மர்லின் தோற்றமளித்தார். ஆனால் நிஜ வாழ்க்கையிலும் அவர் இதையே செய்ய வேண்டும் என ‘மைண்ட் டாக்டர்கள்’ அவருக்குக் கூறி வந்தனர். இதனால் அவர் வாழ்க்கையே துயரமான ஒன்றாக மாறியது அவர் மரணம் எப்படி ஏற்பட்டது என்பது இன்று வரை யாருக்கும் நிஜமாகத் தெரியவில்லை.

 வருடா வருடம் ஸ்டைல் ராணிகள் வருவார்கள்; போவார்கள். ஆனால் என்றுமுள்ள ஒரே ஸ்டைல் ராணி மர்லின் தான். 

அவர் அழகு அழகு தான்; ஸ்டைலு ஸ்டைலு தான்! அதை விஞ்ச ஒருவரும் இன்று வரை இல்லை.

அதைத் தான்  க்ளோபல் அவார்டின் போது அனைவரும் பேசிக் கொண்டனர்.

**

Leave a comment

Leave a comment