Post No. 14,118
Date uploaded in Sydney, Australia – –20 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
19-1-2025 அன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஓளிபரப்பப்பட்ட உரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.
ஶ்ரீ வேதாந்த தேசிகர் – 1
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களே, வணக்கம் நமஸ்காரம்.
வைணவத்திற்கு புதிய ஏற்றம் தந்தவரும், அற்புதமான நூல்களைப் படைத்தவருமான ஶ்ரீ வேதாந்த தேசிகரைப் பற்றி இன்று சற்று சிந்திப்போம்.
1268ஆம் ஆண்டு விபவ வருடம் புரட்டாசி மாதம் சிரவண
நட்சத்திரத்தில் புதன்கிழமையன்று அனந்த சூரியார் – தோத்தாத்திரி அம்மையார் தம்பதிகளுக்கு காஞ்சிபுரத்தில் உள்ள தூப்புல் என்னும் ஊரில் வேதாந்த தேசிகர் அவதரித்தார். இவருக்கு வேங்கடநாதன் என்று பெயரிடப்பட்டது.
தூப்புல் நிகமாந்த தேசிகன், தூப்புல் பிள்ளை, உபயவேதாந்தாசாரியார்
உள்ளிட்ட பல பெயர்கள் இவருக்கு உண்டு.
வைஷ்ணவ ஆசார்யர்களில் மிக உயரிய ஸ்தானத்தை வகிப்பவரான இவர் திருமலை வேங்கடவனின் கோவில் மணியின் அம்சமாகப் பிறந்தவர்.
வேதாந்த தேசிகர் 101 ஆண்டுகள் வாழ்ந்தார்.
சுமார் 126க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றிய இவர் நான்கு மொழிகளில்
நல்ல பாண்டித்தியம் பெற்றவர்.
இவரது நூல்கள் சிலவற்றை இங்கு பார்ப்போம். நூலினூடே அவரது வரலாறையும் ஆங்காங்கே நாம் அறிந்து கொள்ளலாம்.
1) ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்
இதில் 33 செய்யுள்கள் உள்ளன. இதுவே வேதாந்த தேசிகரின் முதல்
துதியாகும். கருட பகவானே ஹயக்ரீவ மந்திரத்தை வேதாந்த
தேசிகருக்கு உபதேசித்தார் என்பது கர்ண பரம்பரையாக வழங்கி வரும்
செய்தி. இந்த மந்திரத்தில் சித்தி அடைந்த அவர் ஹயக்ரீவரின்
தரிசனத்தை திருவஹிந்திபுரத்தில் நேரடியாகப் பெற்றார். அப்போது
இவருக்கு வயது 20 தான்!
.
2) ஸ்ரீ தசாவதார ஸ்தோத்திரம்
ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்ற வேதாந்த தேசிகர் அங்கு தசாவதார
சந்நிதியில் தசாவதாரங்களையும் தொழுத பின்னர் இயற்றிய
ஸ்தோத்திரம் இது. இதில் 13 ஸ்லோகங்கள் உள்ளன. பத்து
அவதாரங்கள் எடுத்த உயர் பரம்பொருளான விஷ்ணுவே ஸ்ரீ ரங்கநாதர்
என தேசிகர் இதில் கூறி அருள்கிறார்.
3) ஸ்ரீ பகவத் தியான சோபனம்
இது 12 செய்யுள்களைக் கொண்டுள்ளது. இதில் வேதாந்த தேசிகர்
ரங்கநாதரை பாதாதிகேசம் விவரிக்கிறார்.
4) அபிஸ்தவம்
29 ஸ்லோக்ங்களைக் கொண்டுள்ள இது கி.பி.1327ஆம் ஆண்டு
வாக்கில் இயற்றப்பட்டதாகும். அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவனான
மாலிக்காபூர் தென்னிந்தியாவின் மீது படையெடுத்து ஆலயங்களை அழித்தான்.
ஏராளமான ஹிந்துக்களை – ஆண்கள், பெண்கள், குழந்தைகள்
உள்ளிட்டோரைக் – கொன்று குவித்தான். அந்தக் கொள்ளையனிடமிருந்து ஸ்ரீ
ரங்கநாதரின் தெய்வச் சிலையைக் காக்க விரும்பிய பிள்ளை லோகாசார்யர்
உற்சவமூர்த்தியை எடுத்துக் கொண்டு சென்றார். ஆனால் வழியில் காளையார்
கோவிலில் அவர் இறந்தார்.
வேதாந்ததேசிகரும் ஸ்ரீ ரங்கத்தை விட்டுக் கிளம்பி மேலகோட்டில் சிலகாலம்
தங்கி இருந்தார். அப்போது அவர் இந்த அபிஸ்தவத்தை இயற்றினார். இதில் 29
ஸ்லோகங்கள் உள்ளன.
இறைவனைத் தனது ஆயுதங்களை எடுத்துப் பயன்படுத்தி பக்தர்களை
முரட்டுக் கொள்ளையரிடமிருந்து காக்க வேண்டும் என்று மனமுருக இதில்
வேதாந்த தேசிகர் வேண்டுகிறார்.
ஸ்ரீ ரங்கநாதரின் மூர்த்தி சிலை பல இடங்களிலும் சுற்றியலைந்த பின்னர்
திருப்பதியை வந்தடைந்தது. 1370-71 ஆண்டு வாக்கில் அது ஹிந்து
தளகர்த்தரும் பெரும் வீரருமான கோபண்ணாவின் அரிய முயற்சியால் ஸ்ரீ
ரங்கம் வந்து சேர்ந்தது. இடையில் சிறிது காலம் மட்டும் அது செஞ்சியில்
இருந்தது.
இந்த அபிஸ்தவத்தைக் கூறுவோரை, “பயத்தை விடு; உன்னை நல்லது
வந்தடையும்: (பயம் த்யஜத, பத்ரமித்யபிதயத்)” என்று கூறி கருணையின்
திருவுருவான கேசவன் காப்பாற்றுவார் என்று இறுதி ஸ்லோகமான 29வது
ஸ்லோகத்தில் தேசிகன் உறுதிபடக் கூ3333றுகிறார்.
இது அவரது 60ஆம் வயது கடந்து விட்ட நிலையில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.
5) ஸ்ரீ தயா சதகம்
108 சம்ஸ்கிருத பாடல்கள் அடங்கியுள்ள நூல் ஸ்ரீ தயா சதகம்.
வெங்கடேஸ்வரனின் தயை ஒரு தேவதையாக உருவகப்படுத்திப்
பாடப்பட்ட பாடல்கள் இவை.
6) ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத்
இதில் 51 சம்ஸ்கிருத செய்யுள்கள் உள்ளன. காஞ்சியில்
எழுந்தருளியுள்ள காஞ்சி வரதராஜப் பெருமாளை இதில் தேசிகர் போற்றித்
துதிக்கிறார்.
7) வைராக்ய பஞ்சகம்
ஆறு சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியுள்ள வைராக்ய பஞ்சகத்தில் முதல்
ஐந்து ஸ்லோகங்களால் உலகில் மதிக்கப்படும் செல்வத்தை மதிக்காமல்
இறைவனின் அருள் ஒன்றையே செல்வம் என மதிக்கும் வேதாந்த தேசிகரின்
அருள் உள்ளம் புலப்படுகிறது.
8) சரணாகதி தீபிகா
சம்ஸ்கிருதத்தில் அமைந்துள்ள இதில் 59 செய்யுள்கள் உள்ளன. சரணாகதி
ப்ரபத்தி என்பது வைஷ்ணவ தர்மத்தின் ஒரு முக்கிய அம்சமாகும்.
சரணாகதியே முக்திக்கான வழி.
9) ஸ்ரீ வேகாசேது ஸ்தோத்ரம்
10 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியுள்ள ஸ்தோத்ரம் இது. வேகா என்ற
நதியின் மீது சேது (அணை) கட்டியவர் பற்றிய புகழ் மாலை இது.
10) ஸ்ரீ அஷ்டபுஜாஷ்டகம்
இந்த ஸ்தோத்திரம் 10 ஸ்லோகங்களைக் கொண்டது.
காஞ்சியில் பிரம்மா ஒரு யாகம் செய்ய ஆரம்பித்தார். அதைத் தடுக்க
அசுரர்கள் முயன்றனர். உடனே ஆதி கேசவப் பெருமாள் எட்டு கரங்களைக்
கொண்டு அவர்களை அழித்தார்.
ஆழ்வார்கள் இந்த ஸ்தலத்தை அட்டபுயக்கரம் எனக் குறிப்பிடுகின்றனர். இது
108 வைணவத் தலங்களுள் ஒன்று. காஞ்சிபுரத்தில் காஞ்சி வரதராஜப்
பெருமாள் கோவிலிலிருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் இது உள்ளது.
11) ஸ்ரீ காமாசிகாஷ்டகம்
9 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ஸ்ரீ காமாசிகாஷ்டகம்.
காமாசிகா என்பதை காம + ஆசிகா என்று பிரித்துப் பொருள் கொள்ள
வேண்டும். தனது சொந்த விருப்பத்தின் பேரில் எழுந்தருளியிருப்பவன் என்ற
பொருள் கொள்ள வைக்கும் இது.
இறைவன் அழகிய சிங்கர் எழுந்தருளி இருக்கும் இடம் காஞ்சிக்குத் தெற்கே
உள்ள திருவேளுக்கை என்ற ஸ்தலமாகும்.
ஆழ்வார்களால் பாடப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் இதுவும் ஒன்று.
வேள் என்றால் ஆசை என்று அர்த்தம். ஆசையுடன் இங்கு இருப்பதால் வேள்
+ இருக்கை = வேளிருக்கை என்ற பெயரை இந்த தலம் பெற்றது.
காலப்போக்கில் இது வேளுக்கையாக மாறி விட்டது
12) ஸ்ரீ பரமார்த்த ஸ்துதி
10 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் கொண்ட துதி ஸ்ரீ பரமார்த்த ஸ்துதி.
காஞ்சிக்கு மேற்கே 7 மைல் தொலைவில் உள்ள தலம் திருப்புட்குழி. 108
வைணவத் திருத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். இது
ஜடாயு பறவைக்கு மோட்சமளித்து இறுதிச் சடங்குகளை ராமர் செய்த இடம்
இது தான்.
ஆகவே திரு + புள் (பறவை) + குழி = திருப்புட்குழி என்ற பெயரைப் பெற்றது.
கோவிலுக்கு எதிர்ப்புறத்தில் ஜடாயு சந்நிதி உள்ளது.
to be continued……………….
***