Venkateswara Temple
Post No. 14,124
Date uploaded in Sydney, Australia – 21 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆஸ்திரேலியாவில் 50 இந்துக் கோவில்கள்
சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோனேஷியாவிலுள்ள இந்து வணிகர்கள் முதலில் ஆஸ்திரேலிய பழங்குடி இன மக்களுடன் தொடர்பு கொண்டனர்
ஆஸ்திரேலியாவில் சுமார் ஐம்பது இந்தக் கோவில்கள் இருக்கின்றன மேலும் மேலும் புதிய கோவில்களும் உருவாகிவருகின்றன . இந்துக்கள் வசிக்கும் முக்கிய நகரங்களில் இந்துக்கள் வசிக்கும் இடங்களில் கோவில்களில் நல்ல கூட்டம் வருகிறது மிகப்பெரிய நாடான ஆஸ்திரேலியாவில் கிழக்கு கடற்கரையை ஒட்டியே பெரும்பாலான மக்கள் வசிக்கின்றனர்; இந்துக்க——க்கும் இது பொருந்தும்
கிழக்குக்கடற்கரையை ஒட்டிய சிட்னி நகரில்தான் அதிக இந்துக்கள் வசிக்கின்றனர்; அடுத்தப்படியாக மெல்போர்ன் என்று புள்ளி விவரங்கள் தெரிவி க்கி ன்றன.
இரண்டு பெரிய இந்திய நகரங்களின் ஜனத்தொகைக்குச் சமம்தான் மொத்த ஆஸ்திரேலிய ஜனத்தொகை .270 லட்சம்தான்
Australia’s population was 27,204,809 people at 30 June 2024.
இதில் ஏழு லட்சம்தான் இந்துக்களின் எண்ணிக்கை.
1971 – சுவாமி பிரபுபாத வந்து ஹரே கிருஷ்ணா இயக்கத்தைத் துவக்கினார்.
1977 – The first Hindu temple in Australia, the Sri Mandir Temple, மூன்று இந்துக்கள் சேர்ந்து சிட்னி வட்டாரத்தில் முதல் கோவிலைத் துவக்கினார்கள் ; இதன் பெயர் ஸ்ரீ மந்திர ர்.
மொத்த மக்கட்தொகையில் இந்துக்களின் எண்ணிக்கை மூன்று சதவிகிதத்துக்கும் குறைவுதான் ; பார்லிமெண்டில் 2015– முதல் இந்து உறுப்பினர்கள் சிலர் அங்கம் வகித்து வருகின்றனர்
இதைத்தொடர்ந்து பல கோவில்கள் பல நகரங்களில் கட்டப்பட்டன
ஒவ்வொரு நகரமாகக் காண்போம்
ஹெலன்ஸ்பர்க் என்னுமிடத்திலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில்தான் ஆகம விதிப்படி கட்டப்பட்ட முதல் இந்துக் கோவில். 1985 ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்தது . பின்னர் ஏனைய கோவில்களின் கும்பாபிஷேகம் நடந்தது.
Murugan Temple
சிட்னி முருகன் கோவில்
பிரிஸ்பேன் நகரில் செல்வ விநாயகர் கோவில்
சிட்னி நகர ஸ்ரீ கற்பக விநாயகர்-என்பன குறிப்பிடத் தக்கவை.
மிண்டோ என்னுமிடத்தில் சிவன் கோவில் இருக்கிறது
இவை தவிர நியூசவுத்வேல்ஸ் , சிட்னி வட்டாரத்தில் சாயி மந்திர், ராகவேந்திர சுவாமிகள் மடம், துர்கா கோவில் உள்பட பல சிறிய கோவில்க—-ம் உள்ளன
Sri Venkateswara Temple Helensburgh Limited NSW Australia
4.7(5K) · Hindu temple
Helensburgh NSW · (02) 4214 9080
Sydney Murugan Temple
4.8(4.9K) · Hindu temple
Mays Hill NSW · (02) 9687 1695
Shri Shiva Mandir
4.7(2.4K) · Hindu temple
Minto NSW · (02) 9820 1094
****
இதற்கு அடுத்தபடியாக மெல்போர்ன் நகரினைக் குறிப்பிட்ட வேண்டும் அங்கும் அதிகமாக இந்துக் கோவில்கள் இருக்கின்றன.
மெல்போர்ன் நகரிலுள்ள குறிப்பிட்டத தக்க கோவில்கள்
மெல்போர்ன் முருகன் கோவில் ,வக்ரதுண்ட விநாயகர் கோவில், குஜராத்திகள் சுவாமி நாராயண் மந்திரர், ஷீர்டி சாயி சமஸ்தான, ஸ்ரீ வேங்கட கிருஷ்ண பிருந்தாவனம்
சிவா விஷ்ணு கோவில், துர்கா கோவில், சங்கட மோசன் ஹனுமார் கோவில்.
• BAPS Temple, Melbourne
• Sri Venkata Krishna Brundavana, Melbourne
• Shiva Vishnu Temple, Melbourne
• Durga Temple, Melbourne
• Shirdi Sai Sansthan, Melbourne
• Sankatamochan Hanuman Mandir, Melbourne
• Melbourne Murugan Temple, Melbourne
• Sri Vakrathunda Vinayagar Temple, Melbourne
****
மேற்கு ஆஸ்திரேலியக் கோவில்கள்
சிட்னி நகருக்கு நேர் எதிர்ப்புறம் உள்ளது மேற்கு ஆஸ்திரேலியா ஆகும். இரண்டுக்குமிடையே உள்ள இடைவெளி 2500 மைல்கள்
அங்கு பெர்த் என்னும் நகரில் இந்துக்கள் கணிசமாக வசிக்கின்றனர் . அங்குள்ள ஸ்ரீ ராமர் கோவில்தான் நாட்டிலேயே பெரிய கோவில்.
பெர்த் நகரில் பால முருகன் கோவில், சிவன் கோவில், சுவாமி நாராயண் கோவில் முதலிய கோவில்களும் இருக்கின்றன.
· Perth Ram Temple, Perth (biggest temple in the country)
· Perth Shiva Temple, Perth
· Bala Murugan Temple, Perth
· Shree Swaminarayan Temple, Perth
மெல்போர்ன், விக்ட்டோரியா மாகாணத்தில் உள்ளது . சிட்னி, நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ளது . பெர்த் என்னும் நகரம் மேற்கு ஆஸ்திரேலிய மாகாணத்தில் உள்ளது.
****
நாட்டின் தலைநகர் கான்பெர்ரா; அங்கும் ஹிந்துக் கோவில்கள் இருக்கின்றன.
ஸ்ரீ விஷ்ணு சிவா மந்திர், கான்பெர்ரா சைவ கோவில், ஹிந்து கோவில், ப்ளோரி, ஹரே கிருஷ்ணா கோவில் , சுவாமிநாராயண் கோவில் முதலியன தலை நகர வட்டாரத்தில் Australian Capital Territory ACT இருக்கின்றன.
Mandir Address: BAPS Shri Swaminarayan Mandir, 236 Robin Boyd Cres, Taylor, ACT 2913 Canberra Australia
Hindu Temple Florey
4.7(318) · Hindu temple
Florey ACT · (02) 6259 3057
Sri Vishnu Shiva Mandir
4.7(361) · Hindu temple
Mawson ACT · (02) 6286 6404
Canberra Saiva Temple
4.6(64) · Hindu temple
Torrens ACT · (02) 6286 8919
ISKCON Canberra
Address: 17 Whittle St, Hughes
ACT 2605
****
நான் பார்த்த ஆஸ்திரேலியக் கோவில்கள்
ஆஸ்திரேலியாவில் இந்துக் கோவில்கள்! (Post No. 2501)
Written by london swaminathan
Date: 2 February 2016
இங்கிலாந்தைப் போலவே ஆஸ்திரேலியாவிலும் பல நகரங்களில் தமிழர்களும் ஏனைய வட இந்திய இந்துக்களும் பல கோவில்களைக் கட்டி வழிபடுவதை என்னுடன் பயணம் செய்த நண்பர்கள் மூலம் அறிந்தேன். ஆனால் எனக்கு, இரண்டு கோவில்களுக்குள் மட்டுமே உள்ளே சென்று வழிபடும் பாக்கியம் கிட்டியது. சிட்னியிலுள்ள அம்மன் கோவிலை வெளியிலிருந்து பார்த்துக் கும்பிட்டுவிட்டுப் போனோம்.
சிட்னி முருகன் கோவிலுக்குச் சென்றோம். நல்ல சாந்நித்யம் மிகுந்த கோவில். ஆஸ்திரேலியாவில் உள்ள வீடுகள் லண்டன் வீடுகளைப் போல பல மடங்கு பெரியவை. அது போலவே கோவில்களும் நல்ல விஸ்தாரமாகக் கட்டப்பட்டுள்ளன.
சிட்னி முருகன் கோவில் பிரகாரத்தில் ஒரு பெரிய வெள்ளி மயில் வாகனத்தைக் கண்டு படம்பிடித்தேன். கோவில்கள் என்பன, இந்தியப் பண்பாட்டின் கலாசார மையங்களாக விளங்கி வந்துள்ளன. இப்பொழுதும் அவ்வாறே பல இன்னிசை நிகழ்ச்சிகளுக்கும், பிறந்த நாள் விழா, சஷ்டியப்தபூர்த்தி, கல்யாணம் ஆகியவற்றுக்கும் உறைவிடமாக அமைந்துள்ளன. நாங்கள் சிட்னி முருகன் கோவிலுக்குள் நுழைந்தபோது பலர் சூட்டும் கோட்டுமாக வந்து கொண்டிருந்தனர். காரணம் அருகிலுள்ள மண்டபத்தில் ஒரு கல்யாணம்.
பிரகாரத்தைச் சுற்றி வருகையில் எதிர்வரும் இன்னிசைக் கச்சேரி நோட்டிஸைப் பார்த்து மகிழ்ந்தேன். அவர் ஒரு உள்ளூர் பாடகர் என்பதையும் அறிந்தேன்.அதேபோல சைவ பாடசாலை என்ற போர்டும் பெரிதாகத் தெரிந்தது. நான் வழக்கமாகப் போகும் கோவில்களில் மட்டும் அர்ச்சனை செய்வேன் மற்ற கோவில்களில் உண்டியலில் காசு, பணம் போட்டுவிடுவேன். அவாறு செய்துவிட்டு வெளியே வந்தோம்..
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில்
சிட்னி நகரத்துக்கு வெளியே ஹெலன்ஸ்பர்க் என்னுமிடத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலும் அதை ஒட்டி சிவன் கோவிலும் உள்ளன. ஒரே கோவிலை இரண்டாகப் பிரித்துள்ளனர். இரண்டுக்கும் வெவ்வேறு சைவ , வைஷ்ணவ அர்ச்சகர்கள் இருக்கிறார்கள். இந்தக் கோவிலும் மிகப் பெரிய கோவில். ஊருக்கு வெளியே இருந்தபோதிலும் இங்கும் ஆட்கள் வந்த வண்ணம் இருந்தனர். பல சுற்றுலா இடங்களுக்குப் போகும் வழியிலிருப்பது இதன் சிறப்பு. கோவிலுக்கு எதிர்த்தாற்போல ஒரு மிருகக் காட்சிசாலையும் உள்ளது. அங்கே கட்டணம் கொடுத்து கங்காரு, கோவாலா போன்ற மிருகங்களைப் பார்த்துவிட்டு கோவிலுக்கு வந்தோம்.
இந்தக் கோவிலில் 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள் சிலைகளையும், சுதைகளையும் அழகாக வைத்திருக்கிறார்கள். புகைப்படம் எடுக்கக்கூடாது என்று போர்டு எழுதி வைத்திருப்பதால் அதை மதித்து போட்டோ எடுக்காமல் வந்தேன். ஒரே ஒரு சிற்பத்தை மட்டும் அர்ச்சகரின் அனுமதி பெற்று எடுத்தேன். சிவன், முருகன், பாலாஜி சந்நிதிகள் தனித் தனியே உள்ளன.
கோவில்களை ஆதரிப்பது நமது கடமை.இறைவனை தரிசித்து அருள் பெறுவது நமக்கு நன்மை.
****
My Visit to Sydney Murugan Temple in Australia (Post No.14,050)
Written by London Swaminathan
Post No. 14,050
Date uploaded in Sydney, Australia – 4 January 2025
****
Sri Venkateswara Temple at Helensburgh, Australia (Post No.14,014)
Written by London Swaminathan
Post No. 14,014
Date uploaded in Sydney, Australia – 24 DECEMBER 2024 .
—subham—
Tags–ஆஸ்திரேலியாவில் இந்துக் கோவில்கள், சிட்னி முருகன் கோவில், வெங்கடேஸ்வரா கோவில், கான்பெர்ரா, மெல்போர்ன், பெர்த், சிட்னி , மிண்டோ, ஹெலென்ஸ்பர்க்