
Post No. 14,122
Date uploaded in Sydney, Australia – 21 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்! வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை 14
29. அக்கச்சி
1. வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
மயில்குயில் ஆச்சுதடி – அக்கச்சி
மயில்குயில் ஆச்சுதடி.
2. துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும்
வள்ளலைக் கண்டேனடி – அக்கச்சி
வள்ளலைக் கண்டேனடி.
3. சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்
சோதியைக் கண்டேனடி – அக்கச்சி
சோதியைக் கண்டேனடி.
4. பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் மன்றாடும்
ஐயரைக் கண்டேனடி – அக்கச்சி
ஐயரைக் கண்டேனடி.

இந்தப்பாடலில் வள்ளலாரின் ஆன்மீகப் பயணத்தைக் காண்கிறோம்.
பிரபல பாகவதர்கள் அனைவரும் மாண்டு ராகத்தில் பாடிய அருமையான பாடல் இது . அக்கச்சி என்பது அக்காள் என்ற பொருளில் வருகிறது
முதலில் மயில் என்னும் மாயக் காட்சி நீங்கி ஓம்கார ஒலியைக் கேட்கிறார்- குயில் மூலமாக .
வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
மயில்குயில் ஆச்சுதடி – அக்கச்சி
மயில்குயில் ஆச்சுதடி.
வானம் என்பது சிதாகாசம். மயிலாடக் கண்டேன் என்பது சிதாகாச ஞானக் காட்சி; சிவக் காட்சியுமாம். சிவத்தைக் கண்டு சத்தியைத் தரிசித்தமை விளங்க, “மயில் குயில் ஆச்சுதடி” என்று விளம்புகின்றாள். மயிலை விந்து என்றும், குயிலை நாதம் என்றும் கூறுவதுண்டு. இங்கே மயில் குயிலானதாகக் குறிக்கப்படுகின்றது. இனிமையான இசை போன்ற குயிலின் ஒலி பிரணவ நாதத்திற்கு ஒரு அடையாளமாம். அகத்தில் உள்ளது நிலையான ஒளி. ஆடும் மயில் ஆகும். அதுவே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு, நாத வண்ணமாகிப் புறத்தில் சதா சுற்றிக் கொண்டேயிருக்கின்றது.என்று சுவாமி சரவணானந்தா எழுதியுள்ளார்.

***
இரண்டாவது கண்ணியில் அருணகிரிநாதர் போல பேசா அனுபூதி கிடைத்ததை பாடுகிறார் ; உபநிஷத்துக்களும் எங்கு சொற்கள் செல்லாதோ, வார்த்தைகளை விளக்கமுடியாதோ அதுவே பிரமம் என்கிறது முதலில் ஆடுவர்; பாடுவர்; ஏனையோருக்கும் அதை எடுத்துரைப்பர்; ஒரு நிலையை அடைந்தவுடன் துள்ளல்– அதாவது ஆட்டபாட்டம் எல்லாம் அடங்கிவிடும் எப்போது ? மன்றில் ஆடிக்கொண்டிருக்கும் அமபலவாவணனைக் கண்டவுடன்.
****
மூன்றாவது கண்ணியில் சந்யாச நிலையை அடைந்தைக் காட்டுகிறார். சன்யாசம் எடுப்போர் எல்லா வேற்றுமைகளையும் நீக்கி, பிறப்பொக்கும் எல்லா உயிரும் என்ற நிலையை அடைவார்கள்; அவர்களுக்கு சொந்த உறவினர் இல்லை;. சாதி சமயம் இல்லை; எல்லோரும் சமம்; எவருக்கும் அருள்பாலிப்பார்; அது பயன்தருவது அவரவர் ஏற்கும் கொள்கலனைப் பொருத்தது அதாவது வினைப்பயனைப் ஒத்தது. அதுபோல வள்ளலாரும் சாதி சமய வேற்றுமைகளை அகற்றி உயர்நிலையை அடைந்ததைக் காட்டும் வரிகள் இவை .
அந்த நிலையில் அவர்கள் காண்பது ஜோதி.
இதனால்தான் உபநிஷத்தும் தாமஸோ மா ஜ்யோதிர் கமய என்று இயம்பியது .
மஹாத்மா காந்தியும் உண்மையே கடவுள் என்பார் ; உண்மைஎது என்பதை நம் மனச் சாட்சியே சொல்லும். மனுவும் கூட முதலில் அற நூல்களை பின்பற்று; அது புரியாவிட்டால் ஆன்றோர்கள் வாக்கினை கவனி; அதிலும் மனக்குழப்பம் ஏற்பட்டால் உன் மனச் சாட்சிப்படி நடந்து கொள் என்று மனு விளம்பினார் இப்படி அவர் பகர்ந்ததற்கு காரணம் சூது வாது, களவு காமம் கொலை , கோபம் எல்லாவற்றிலும் எது சரி என்பதை நம் மனச்சாட்சி சொல்லும் அதையும் மீறி நாம் தவறுசெய்தால் அதன் தீய பலனை அனுபவிக்கிறோம்.
பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் என்பது அசததோமா சத் கமய என்ற உபநிஷத் வாக்கியம் ஆகும்; மாயத்தை உண்மையென நம்பியது பொய்- அதாவது அசத்தியம் . ஸத் என்பது உண்மைப்பொருள் பற்றிய ஞானம்
பொய்யை/- மாயத்தை- ஒழித்து வள்ளலார் உயர் நிலையை அடைந்ததை இந்தச் சிறிய பாடல் கற்பிக்கிறது இதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால்
பிருகதாரண்யக உபநிஷாத மந்திரம் :
ஓம் அஸதோ மா ஸத் கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர் மா அம்ருதம் கமய
ஓம் சாந்தி(ஸ்) சாந்தி( ஸ்) சாந்திஹி
அறியாமையிலிருந்து என்னை மெய்யான ஞானத்துக்கு அழைத்துச் செல்;
இருளிலிருந்து என்னை ஒளிக்கு அழைத்துச் செல்;
பிறப்பு – இறப்பு என்னும் சூழலிலிருந்து என்னை மரணமில்லாப் பெருவாழ்வு நிலைக்கு அழைத்துச் செல் – என்பதாகும்.

ॐ असतो मा सद्गमय ।
तमसो मा ज्योतिर्गमय ।
मृत्योर्मा अमृतं गमय ।
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
Om Asato Maa Sad-Gamaya |
Tamaso Maa Jyotir-Gamaya |
Mrtyor-Maa Amrtam Gamaya |
Om Shaantih Shaantih Shaantih ||
Meaning:
1: Om, (O Lord) From (the Phenomenal World of) Unreality, make me go (i.e. Lead me) towards the Reality (of Eternal Self),
2: From the Darkness (of Ignorance), make me go (i.e. Lead me) towards the Light (of Spiritual Knowledge),
3: From (the World of) Mortality (of Material Attachment), make me go (i.e. Lead me) towards the World of Immortality (of Self-Realization),
4: Om, Peace, Peace, Peace.
இருளிலிருந்து என்னி ஒளிக்கு ழைத்துச் செல்வாயாகுக என்பது இதன் பொருள்; அறியாமை என்பதே இருள்.
—-SUBHAM—
Tags–வானத்தின் மீது மயிலாடக் கண்டேன், வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை -14