ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 11 (Post.14,128)

Written by London Swaminathan

Post No. 14,128

Date uploaded in Sydney, Australia – 22 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 BEACH PICTURES TAKEN BY LONDON SWAMINATHAN 

பத்தாயிரம் கடற்கரைகள்

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 11

ஆஸ்திரேலியா உலகிலேயே ஆறாவது பெரிய நாடு. ஒரு கண்டத்தையே நாடாக  அழைக்கும்  பெருமை உடைத்து இது; மேலும் அழகான கடற்கரைகள் நிரம்பிய நாடு; இதன் கடற்கரையின் நீளம் 36,000 கிலோமீட்டர்கள் .

கிழக்கில் பசிபிக் மஹா சமுத்திரமும் மேற்கிலும் வடக்கிலும் இந்து மஹாசமுத்திரமும் அலைகளை அள்ளிவீசும் அழகான நாடு ;ஜனத்தொகையோ மிகக்குறைவு.

சுற்றுலாப்பயணிகள் செல்லும் பத்தாயிரம் கடற்கரைகள் உள்ளன. சிட்னி நகரிலேயே புகழ்பெற்றன பாண்டி பீச் உள்ளது  அங்கே உள்ளூர்க் கார்களையும் சுற்றுலாப்பயணிகளையும் எப்போதும் காணலாம். இவ்வளவு கடற்கரைகள் இருந்தபோதிலும் நான் சென்றது நாலைந்து கடற்கரைகள்தான் சில இடங்களில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதைக் கண்டேன். கடல் தாவரங்கள் கொத்து கொத்தாக கரை ஒதுங்குவதைக் கண்டேன். கிளிஞ்சல்களும் கிடைக்கின்றன. வட கோடியில் கேர்ன்ஸ் என்னும் இடத்திற்குச் சென்று பவளைப் பாறைகளையும் பார்த்தேன்

சிட்னி நகர பாண்டி பீச் சென்னை மெரீனா கடர்களை போல புகழ்பெற்றது. ஆனால் தைவிட சுத்தமானது; கடை கன்னிகள் இல்லாதது . எல்லா கடலோர சுற்றுலாத் தலங்களிலும் நீர் விளையாட்டுகள் அதிகம்; பள்ளிக்கூடங்களில் நீச்சல் கட்டாய பயிற்சி. இதனால் நீச்சல் தெரியாத சிறுவர்கள், இளைஞர்கள் இல்லை என்றே சொல்லலாம்.  பேட்டை பேட்டையாக  நீச்சல் குளங்களும் உண்டு .

நீர் விளையாட்டுகளுக்காகப் போகும் இளம் ஜோடிகளை எல்லாக் கடற்கைரைகளிலும் காணலாம். அவர்களுக்கு ஆஸ்திரேலியா ஒரு சுவர்க்கம்.

குறிப்பிடத்தக்க சில கடற்கரைகளைக் காண்போம்

Bondi Beach பாண்டி பீச்

Located in Sydney, this iconic beach is known for its sun-drenched sand, surf lessons, and the famous Bondi Icebergs ocean pool.

சிட்னியில் உள்ள பாண்டி  பீச் எளிதில் போகக்கூடியது; ஏராளமான பஸ்கள் நிமிடத்துக்கு நிமிடம் வந்து கொண்டிருக்கும். கற்றகரைய ஒட்டி நீச்சல் குளங்களையும் கட்டியிருக்கிறார்கள்; வெள்ளை மணலில் உட்கார்ந்தது (காதல்) கதைகளை பேசலாம் ஆனால் சன் க்ரீம் போடாமல் ஆஸ்திரேலியர்கள் வர மாட்டார்கள்; இங்கு சூரிய ஒளி மூலம் வரும் தோல் புற்றுநோய் (Sun Cream to prevent Skin Cancer)  அதிகம்.

கடலில் மிதக்க ஆசைப்பட்டால் சர்பிங் பயிற்சியும் பெறலாம் (காசு கொடுத்து) ; ஆஸ்திரேலியாவில் எல்லாம் ஆனை விலை குதிரை விலை ; விலைவாசியில் லண்டனைத் தோற்கடித்துவிடும் லண்டன் விலையை இரண்டால் பெருக்கிக்கொள்க

****

நீலக்கல் வளைகுடா

இது சிட்னிக்கு நேர் எதிர்ப்புறம் 2500 மைல்களுக்கு அப்பால் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ளது ; கடல் நீளம் என்ற வருணனைக்கு பொருத்தமான இடம் ; நிங்களூ Ningaloo Reef. பவளப் பாறைகளையும் காணலாம் 

Turquoise Bay

Located in Cape Range National Park in Western Australia, this beach is known for its bright blue waters and proximity to the Ningaloo Reef.

*****

கின்னஸ் புஸ்தக பீச் – வெள்ளை வெளேர் கடற்கரை

Hyams Beach

Located in Jervis Bay, New South Wales, this beach is known for its white sand, which has been recorded in the Guinness Book of Records as the whitest in the world.

சிட்னி நகரம் இடம்பெற்றுள்ள மாநிலம் நியூ சவுத் வேல்ஸ்; இங்கேயுள்ள ஹையம்ஸ்  பீச்/ கடற்கரை  உலகிலேயே வெண்மணல் உடைய கடற்கரை என்ற தலைப்பில் கின்னஸ் சாதனைப் புஸ்தகத்தில் இடம் பெற்றது.

****

கடற்கரையில் ஒட்டக சவாரி

பாலை வனம் உள்ள மத்தியக் கிழக்கு நாடுகளிலும் இந்தியாவில் ராஜஸ்தான் பாலைவனத்திலும் ஒட்டக சவாரி இருப்பதில் வியப்பில்லை சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் வெள்ளைக்காரர்கள் ஓட்டகங்களைக் கொண்டு  வந்து ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தியதால் இங்கு அரபு நாடுகளை விட ஒட்டக எண்ணிக்கை பெருத்துவிட்டது மேற்கு ஆஸ்திரேலிய கேபிள் பீச் சுப் க்குப் போனால் ஒட்டக சவாரி செய்தவாறே கடலில் சூரியன் அஸ்தமிப்பதையும் காணலாம் ; பதினான்கு மைல் தூரத்துக்கு  வெள்ளை நிறைத்தில் மணல் பிரகாசிக்கும்

Cable Beach

Great for: Camel rides and magical sunsets

The iconic Cable Beach is located in Broome, on the northern border of Western Australia. This beach is famous for its 22km (14mi) of soft white sand, where visitors can enjoy the calm blue water and show-stopper sunsets. Soak up the golden glow on a camel train, where you’ll traverse the beach on the back of a camel during sunset.

*****

கங்காரு பீச்

கடற்கரையில் கங்காருக்களும்  சூரிய ஒளிக்குளியல்  எடுப்பதைக் காண ஆசைப்பட்டால் மேற்கு ஆஸ்திரேலியா லக்கி பெ கடற்கரைக்குப் போகவேண்டும்

Great for: Australia’s famous sunbathing kangaroos

If your idea of a beach day involves hanging out with laid-back kangaroos on dazzling white sand, then Lucky Bay’s name rings true for you. Down in Western Australia’s southwest corner, Lucky Bay is a beautiful crescent of white sand and turquoise water in Cape Le Grand National Park.

****

டால்பின்கள் சீல்களைக் காண

தெற்கு ஆஸ்திரேலிய கங்காரு தீவில் பல அழகான கடற்கரைகள் உள. விவோன் பீச்சுக்குப் போனால் டால்பின்கள், கடல் சிங்கங்கள் எனப்படும் seals and dolphins சீல்கள் ஆகியவற்றைக் காணலாம். 

Vivonne Bay Beach

Great for: Natural beauty and local wildlife

South Australia’s Kangaroo Island is enveloped by picture-perfect beaches, with Vivonne Bay Beach often dubbed the most beautiful. There’s not a lot around this beach – but that’s what makes it so special. Picture an immaculate stretch of sand, crystal-clear waters home to playful seals and dolphins, and miles of unspoiled bush known as the Vivonne Bay Conservation Park.

  ****

BLUE BOTTLE JELLY FISH

MIGHTY PACIFIC OCEAN

SEA WEEDS

ஆயிரக் கணக்காண  பீச்சுகளைப் பட்டியலிட்டு ,போகும் வழி  தங்கும் இடம் , சாப்பிட உணவுவிடுதிகள் முதலியவற்றைப் பட்டியலிட்ட புஸ்தகங்கள் எல்லாக் கடைகளிலும் கிடைக்கும். 

—SUBHAM—

Tags- பத்தாயிரம் கடற்கரைகள், ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 11

Leave a comment

Leave a comment