ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 12 (Post.14,131)

london swaminathan with his son in opera house

Written by London Swaminathan

Post No. 14,131

Date uploaded in Sydney, Australia – 23 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

pictures taken by london swaminathan

சிட்னி நகர ஆபரா ஹவுஸ்

பிக் பென் மணிக்கூண்டைப் பார்த்தால் லண்டன்  என்று சொல்லிவிடுவோம்; பாரீஸ் நகருக்கு ஜபல் டவர் சின்னம். நியூயூயார்க்கநகருக்கு லிபர்டி சுதந்திராதேவி சின்னம்; அதே போல சிட்னி நகருக்கு ஆபரா ஹவுஸ் சின்னம் ; இது ஆஸ்திரேலியாவையும் நினைவு படுத்தும் சின்னம்.

 Since its grand opening on 20 October 1973, the Opera House has stood as a beacon of artistic expression, leaving an indelible mark on the global stage. Its iconic silhouette has become a symbol of Sydney, and Australia.

இது 1973 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி திறக்கப்பட்டது.

இங்கிலாந்தின் குயின் எலிசபெத் மஹா ராணி திறந்து வைத்தார் அதற்குப்பின்னர் பலமுறை வந்து சென்றார் .

இந்த இடத்தில் பெரிய இன்னிசை நிகழ்சசிகள் நடைபெறும்; அது தவிர கூட்டங்களும் நடைபெறும்; அவைகளுக்கு கட்டண உண்டு ஆனால் இலவசமாக கட்டிடத்தைச் சுற்றி வரலாம்

சில சுவையான செய்திகளைச்  சொல்கிறேன்

முதலில் இதைக் கட்டுவதற்கு எழுபது  லட்சம் ஆஸ்திரேலிய  டாலர் ஆகும் என்று திட்டம் போட்டார்கள்; ஆயினும் கட்டிடத்தை முடிக்க ஒரு கோடி டாலருக்கு மேல் ஆனது.  பெரும்பாலான அத்தொகை லாட்டரி மூலமா கிடைத்துவிட்டது ; லக்கி ப்ரைஸ் என்று சொல்லலாம்

The original cost estimate to build Sydney Opera House was $7 million. The final cost was $102 million and it was largely paid for by a State Lottery.

இந்தக் கட்டிடத்துக்கு வரைபடங்கள் தேவை என்று ஒரு போட்டியை அறிவித்தவுடன் 233 படங்கள் 233 designs வந்தன. இறுதியில் டென்மார்க் நாட்டினைச் சேர்ந்த ஜான் உத்சவ்ன் Jørn Utzon வெற்றி பெற்றார் அவருக்கு 5000 பவுன் பரிசுத்த தொகை கிடைத்தது. இது நடந்த ஆண்டு 1956.

நான்கே ஆண்டுகளில் கட்டி முடிப்போம் என்றார்கள்; ஆனால் ராமர் காட்டுக்குச் சென்ற ஆண்டுகள் ஆயின (14)!

1959 -ல் துவங்கி 1973 ல் முடித்தார்கள் ; பத்தாயிரம் பேர் வேலை பார்த்து முடித்த கட்டிடம் இது.

யுனெஸ்கோ–வின்  உலக பாரம்பரியமிக்க இடங்களில் இதுவும் சேர்க்கப்பட்டுள்ளது.

சுவீடனில் தயாரிக்கப்பட்ட பத்து லட்சத்துக்கு மேலான ஓடுகள்  1-62 ஹெக்டேர் கூரையை அலங்கரிக்கின்றன.

இசைக்கருவிகள் சரியான சுருதியில் இருப்பதற்கு குறிப்பிட்ட வெப்பமும் காற்றின் ஈரப்பதமும் இருக்க வேண்டு; ஆகையால் கச்சேரி மண்டபத்தில் சிட்னி சிம்பனி ஆர்க்கெஸ்ட்ரா இசைக்கும்போது வெப்ப நிலை  22.5 degrees ஆக பராமரிக்கப்படுகிறது .

கட்டிடத்தின் வெப்ப நிலையைப் பராமரிப்பதற்கு துறைமுக கடல் நீர் பயன்படுகிறது கட்டிடத்தைச் சுற்றி கடல் நீர்க்குழாய்கள் செல்கின்றன.  குகாய்களின் நீளம் 35  கிலோமீட்டர்.

ஆண்டுதோறும் ஒரு கோடிக்கும் மேலானோர் ஆபரா ஹவுஸைக் காண்பதற்கு வருகிறார்கள்

famous sydney harbour bridge with london swaminathan

 ஒரு சம்பவத்துக்குப் பின்னர் ஒரு தியேட்டரில் வலை அடிக்க நேரிட்டது; ஒரு இசை நிகழ்ச்சியில் கோழிக் குஞ்சுகளைப் பயன்படுத்தினார்கள்; ஒரு குஞ்சு பறந்து போய் ஒருவரின் இசைக்கருவியில் அமர்ந்து கொண்டது ; பின்னர் சுருதி தப்பி, இசையை தற்காலிகமாக நிறுத்த நேரிட்டது . இது நடந்தது 1980 ஆம் ஆண்டு.

ஆண்டுதோறும் சீனப்   புத்தாண்டினை இங்கு கொண்டாடிவருகிறார்கள்; ஆஸ்திரேலியாவில் இன வாரியாகப்பார்த்தால் வெள்ளைக்காரர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் சீனர்களும் வியட்நாமியரும்தான்!

எப்படிப் போவது ?

The Sydney Opera House is a six-minute walk from Circular Quay, which is regularly served by public buses, trains and ferries to Circular Quay.

சர்குலர் கீ என்னும் இடத்திலிருந்து ஆறு நிமிடங்கள் நடந்தால் ஆபரா ஹவுஸுக்கு வந்துவிடலாம்அந்த இடத்தை ரயில்பஸ்,  கார்படகு சர்வீஸ் மூலம் அடையலாம்.

ஆபரா ஹவுசில் ஏழு மண்டபங்கள் இருக்கின்றன ; அவைகளை வாடகைக்கு எடுத்து  இன்னிசை நிகழ்ச்சிகளையும் வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தலாம்.

picture taken from my ferry in Paramatta River

The Sydney Opera House in Sydney, Australia has seven performance venues: 

  • Concert Hall: The largest venue, with a seating capacity of 2,679
  • Opera Theatre: Seats 1,547
  • Drama Theatre: Seats 544
  • Playhouse: Seats 398
  • Studio Theatre: Seats 364
  • Forecourt: An iconic outdoor space with harbour views
  • Utzon Room: A small, elegant space with excellent acoustics

Each venue has its own rehearsal space. The Sydney Opera House also has restaurants, bars, souvenir shops, and meeting rooms. 

இவை தவிர கூட்டங்களை நடத்தும் சிறிய ஹால்கள், உணவு விடுதி, ரிகர்சல் என்னும் ஒத்திகை பார்க்கும் அறைகள் ,  கடைகளும் உண்டு. ஐயாயிரம் இருக்கைகளுக்கு மேல் இருப்பதால் ஒரே நேரத்தில் பல நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்  .

 நான் படகிலிருந்தும்  உள்ளேசென்றும் எடுத்த படங்களை இணைத்துள்ளேன்.

அவர்களுடைய வெப்சைட்டில் இப்போது நடக்கும் நிகழ்ச்சிகளையும் வரைபடத்தையும் பார்க்கலாம்.

–subham—

Tags- ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 12, சிட்னி நகர ஆபரா ஹவுஸ்

Leave a comment

Leave a comment