

Post No. 14,136
Date uploaded in Sydney, Australia – 24 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சிரிக்கும் பறவை கூகாபர்ரா ;கொண்டையுள்ள காக்காட்டு; தமிழ்ப் பெயருள்ள கோமாளிப் பறவை !
EMU BIRDS



ஆஸ்திரேலியாவின் வினோத விலங்குகளான கங்காரு, வல்லபி, கோவாலா, பிளாட்டிபஸ், எகிட்ணா, ஓபோஸ்ஸம் , பண்டிகூட் பற்றிக் கண்டோம் . இதே போல பறவைகளிலும் விநோதப் பறவைகள் ஆஸ்திரேலியாவில் மட்டுமே வசிக்கின்றன. அருகாமையிலுள்ள நியூகினி, நியூசிலாந்து ஆகியவற்றுக்கும் சிலர் கொண்டு சென்றதால் அங்கும் காணக்கிடக்கின்றன.
ஆஸ்திரேலியாவில் மரம் இல்லாத பகுதிகள் பாலைவனமும் நகரின் மையப்பகுதி மட்டுமே. ஆகையால் உயர்ந்த — மிக உயர்ந்த – மரங்களில் பறவைகள் சுகமாக வசிக்கின்றன. பேட்டைக்குப் பேட்டை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளை ரிசர்வ் என்று போர்டு போட்டிருப்பார்கள்; பூங்காங்களும் உண்டு ;ஆகையால் பறவைகளை —வண்ண வண்ண கிளிகள் , மிக மிக சிறிய சிட்டுக்குருவிகள் கூக்கபரராக்கள், புறாக்கள் ஆகியவற்றைக் காணலாம். காக்காட்டு என்ற வெள்ளைப் பறவை மஞ்சள் கொண்டையுடன் அழகாகக் காட்சி தரும். ஆனால் யாருக்கும் பிடிக்காது; அதிக இரைச்சல் உள்ள பறவை. இந்திய காகங்கள் போல எங்கும் திரியும் இவை தவிர கொண்டையுள்ள புறா, புஷ் டர்கி எனப்படும் வான்கோழி ஆகியவையும் எங்கும் திரியும் பறவைப் பிரியர்களுக்கு சொர்க்க பூமி இது..


வீட்டுத் தோட்டங்களில் பறவைகளுக்கு இரை போட தனியே சின்னப் பானைகளைத் தொங்க விட்டிருப்பார்கள்; அதில் தானியங்களைப் போட்டால் வண்ணக்கிளிகள் நிறைய வருகின்றன. ஐபிஸ் எனப்படும் எகிப்திய கொக்குகளும் , கடலோரமாக பெலிகன், கடற் கழுகுகளும் எப்போதும் இருக்கும். எல்லா ஏரிகளிலும் வாத்து, குள்ள வாத்து ஆகியவற்றையும் காணலாம். பறவைகள் பற்றி அறியாதோரும் இருபது வகைப் பறவைகளையாவது தினமும் பார்த்துவிடுவார்கள். ஆஸ்திரேலியா முழுதும் இவை வசிக்கின்றன
****
சிற்சில பறவைகளை மட்டும் காண்போம்
எமு
எமு என்னும் பறவைகள் மிகப் பெரியவை; ஆஸ்திரேலியாவுக்கே உரித்தான பறவை. இதனால் கங்காருவுடன் இதையும் ஆஸ்திரேலிய தேசீய சின்னத்தில் காணலாம் இந்தப் பறவைகளை இப்பொழுது இந்தியா உள்பட பல நாடுகளில் பண்ணைகளில் வளர்க்கிறார்கள்.
ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான டாஸ்மேனியா தீவிலிருந்து எல்லா எமு பறவைகளையும் வெள்ளைக்கார ஆக்கிரமிப்பாளர்கள் கொன்று குவித்ததால் அங்கு எமு பறவைகள் அறவே அழிந்துவிட்டன . உலகில் மிகப்பெரிய பறவை ஆஸ்ட்ரிச். அதற்கு அடுத்த பெரிய பறவை எமு.
***
கூக்காபர்ரா என் சிரிக்கிறது ?

இவை மீன்கொத்தி வகைப் பறவைகள் ; பாம்பு, பல்லி முதல் சிறு பூச்சிகள் வரை எல்லாவற்றையும் தின்னும். விக்கல் எடுப்பது போல சப்தம் போடும்; இறுதியில் ஹாஹாஹா என்று முடியும் இதனால் இவைகளை சிரிக்கும் பறவைகள் என்றழைப்பார்கள் . வீடுகளில் பொறுமையாக அமர்ந்து பூச்சியைக் கண்டவுடன் பாய்ந்து பிடிக்கும். சில வகை கூக்காபர்ரா ஒரு அடிக்கு மேல் வளரும். மனிதர்களுடன் கூச்சமில்லாமல் பழகும். கையில் உணவு வைத்திருந்தால் வந்து அமரும்.
****
காக்காட்டு
கிளி போல மூக்கு; மயில் போல கொண்டை ; கொக்குபோல வெண்மை ; சிட்னி நகரம் முழுதும் காணலாம். இப்போது இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் தீவுகள் வரை பரவியுள்ளன பெரும்பாலும் விதைகள் கொட்டைகள் பழங்கள் பூக்களையே சாப்பிடும்; பூச்சிகளையும் உண்ணும் மரப்பொந்துகளில் வசிக்கும் இவைகளில் நாற்பதுக்கும் மேலான வகைகள் இருப்பதால் இளம் சிவப்பு, கருப்பு காக்காட்டுகளையும் பார்க்கலா.ம் கர்ண கடூ ரமான சப்தம் உடையவை இந்தியக் குயில்களுக்கு நேர் எதிர்ப்பதம்!
***
வண்ணக் கிளிகள்
நாம் ராஜ நாகம் என்று சொல்லுவது போல ராஜ கிளிகள் உண்டு; அவை பஞ்சவர்ணக் கிளிகள் ; பழங்கள், கொட்டைகள் தானியங்களை உண்ணும்; பல வீட்டுத் தோட்டங்களிலும் இவைகளுக்கு உணவு படைக்கிறார்கள் கிழக்கு ஆஸ்திரேலியா முழுதும் இவை இருக்கின்றன
*****

சர்க்கஸ் செய்யும் கலா pink Galahs பறவை
கிள்ளை—மேலும் ஒரு தமிழ்ச் சொல்
ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் கிளா kilaa (கிளி) என்றனர். அதை வெள்ளைக்காரர்கள் pink Galahs கலா ஆக்கிவிட்டார்கள் இவை இளம் சிவப்பு கழுத்துடையவை. விதைகளை உண்டு வாழும். ஆயிரக் கணக்கில் கூட்டமாகப் பறந்து போகும் .கிளி/கிள்ளை என்ற தமிழ்ச் சொல் ஆஸ்திரேலியா வரை பறந்து வந்துள்ளது என்றும் சொல்லலாம் ; ஆஸ்திரேலிய கொச்சை மொழியில் கலா Galahs என்றால் கோமாளி; இந்தப் பறவையின் பெயரை அப்படிப் பயன்படுத்தக் காரணம் கலா Galahs பறவை நிறைய சர்க்கஸ் வேலைகளை செய்யும்; தலை கீழாகத் தொங்கும்; கம்பி வழியே சறுக்கி விழும்.
*****
கருப்பு அன்னம் The black swan (Cygnus atratus)


தென் கிழக்கு தென் மேற்கு ஆஸ்திரேலியாவில் காணப்படும் கருப்பு அன்னம் மேற்கு ஆஸ்திரேலியாவின் சின்னம் ஆகும்; நம்ப முடியாதது என்ற பொருளில் ஐரோப்பியர்கள் இதை பயன்படுத்தினர். ஏனென்றால் அன்னப்பறவைகள் உலகம் முழுதும் வெள்ளை நிறத்தில் இருக்கையில் கருப்பு நிறத்தில் எப்படி அன்னம் இருக்க முடியும் என்று கேலி செய்து நடக்க முடியாதது, நம்பக்கூடாதது என்ற பொருளில் பிளாக் ஸ்வான் என்ற சொல்லை பயன்படுத்தினர்; இந்த அதிசய பறவை ஆஸ்திரேலியாவில் வாழ்கிறது. அதிசயம் என்னவென்றால் பறக்கும்போது வெள்ளை இறக்கை தெரியும்.
இது அன்னப் பறவை வகை என்றாலும் கருப்பு இறக்கைகளையும் சிவப்பு மூக்கையும் கொண்டது. பறக்கும்போது அடிப்புற வெள்ளை இறக்கை தெரியும். ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு குடியேற்றம் செய்யும் நீரில் வாழும் பெரிய பறவை . ஆஸ்திரேலியாவின் தென்பகுதியில் சுத்த நீர், உப்பு நீர், கலங்கிய நீர் எல்லாவற்றிலும் வாழ்கின்றன..
****
ஐபிஸ் கொக்குகள் IBIS
இவை நீண்ட மூக்கு உடைய நீர்ப்பறவைகள் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர் இது ஆஸ்திரேலியாவில் இல்லை. புதிய குடியேறிகள்!!
ஆறு சென்டிமீட்டர் அளவேயுள்ள குருவிகள் முதல் பெரிய — அதாவது — இந்தியா முதலிய இடங்களில் காணும்– சைஸ் வரையுள்ள நூற்றுக்கணக்கான வகைகள் ஆஸ்திரேலியாவில் மட்டும் காணப்படுகின்றன. இதில் நீல நிறக்குருவிகளும் வால் பிளவுட குருவிகளும் அடங்கும். அத்தனை வகைப் பறவைகளையும் ஆஸ்திரேலிய மியூசியத்தில் மேல் மாடியிலுள்ள படங்களில் காணலாம்.
–subham—
Tags– சிரிக்கும் பறவை கூகாபர்ரா , காக்காட்டு; தமிழ்ப் பெயருள்ள கோமாளிப் பறவை ! ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம், பாருங்கள்!- Part 13