
Post No. 14,143
Date uploaded in Sydney, Australia – 26 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
15ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 15
ஆஸ்திரேலியாவில் பெட்ரோல் விலை , கார் விலை குறைவு !
.webp)
பல நாடுகளை ஒப்பிடுகையில் பெட்ரோல் விலையும், கார் விலையும் ஆஸ்திரேலியாவில் குறைவு. இப்படிச் சொன்னாலும் நீங்கள் வாழும் நகரத்தையும் நீங்கள் வாங்கும் காரின் மாடலையும் பொருத்து விலையில் கொஞ்சம் மாற்றம் இருக்கலாம்.
நான் காரில் பயணம் செய்தபோது ஒரு வினோதத்தைக் கண்டேன். எதிர் எதிராக நாலு பெட்ரோல் ஸ்டேஷன்கள் அல்லது பங்குகள் இருந்தன. ஒரு பெட்ரோல் பங்கில் நீண்ட கார் வரிசை! காரணம் லிட்டருக்கு இரண்டு மூன்று சென்ட்டுகள் முதல் பத்து சென்ட்டுகள் வரை விலை வித்தியாசம் !
தங்கம் விலை மாறுவது போல பெட்ரோல் விலையும் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்.
என்ன வினோதம் என்றால் ஆஸ்திரேலியாவில் நிறைய எண்ணையும் எரி வாயுவும் கிடைத்தாலும் அதைச் சுத்தப்படுத்த போதுமான வசதிகள் இல்லை; இதனால் பெட்ரோலிய எண்ணெயை ஏற்றுமதி செய்து பெட்ரோலை இறக்குமதி செய்கிறது.
ஆஸ்திரேலியா மிகப்பெரிய நாடு; இதில் மேற்கு ஆஸ்திரேலியாவில்தான் அதிக பெட்ரோலியப் பொருட்கள் கிடைக்கின்றன. அங்கு மக்கட்தொகை குறைவு; இதனால் பெரும்பகுதி எண்ணையை சிங்கப்பூர் முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பெட்ரோலாகத் திரும்பப்பெறுகிறது .
ஆஸ்திரலியா டாலர் = 100 சென்ட்டுகள்
கட்டுரையை எழுதும் நேரத்தில்
ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 179.3 cents per litre
டீசல் விலை 182.4 cents per litre
- Petrol (Unleaded): 179.3 cents per litre
- Diesel: 182.4 cents per litre
லண்டனை ஒப்பிடுகையில் இது பாதி விலைதான்!
வெனிசுவேலா , சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக பெட்ரோலியம் உள்ள நாடு ஆஸ்திரேலியா; ஆயினும் சுத்தப்படுத்தும் பணத்தை விட வெளிநாட்டில் வாங்குவது மலிவாக உள்ளது . சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் என்னும் கதைதான் .

கடற்படுகை (BIGHT) வளையத்தில் நிறைய பெட்ரோலியம் புதைந்து கிடக்கிறது ; மேலும் எரி வாயுவாக அதிகம் கிடைக்கிறது .
புதிய பெட்லோலிய படுகைகளைக் கண்டுபிடிக்காவிடில் சுமார் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கே எண்ணையை எடுக்க முடியும்.
ஆஸ்திரேலியாவின் வளைகுடாப் பகுதியில் (BIGHT) நிறைய எண்ணெய் வளம் இருந்தாலும் அங்குள்ள கடல் வாழ் உயிரினங்களை சேதப்படுத்த ஆஸ்திரேலியா விரும்பவில்லை.
GAS PRODUCTION
எரி வாயுவை எடுத்துக்கொண்டால் ஆஸ்திரேலியாவில் விலை மிகவும் குறைவு; காரணம் நிறைய எரிவாயு இயற்கையிலேயே கிடைக்கிறது.
Where does most of Australia’s gas come from?
About 93 per cent of conventional gas resources are located on the North West Shelf with gas produced from the Northern Carnarvon, Browse and Bonaparte basins providing feedstock to seven LNG projects (Gorgon, Wheatstone, North West Shelf, Pluto, Prelude, Ichthys and Darwin).
****
நாடு முழுவதும் 230 நகரங்களில் பத்தாயிரம் பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் இருக்கின்றன.
*****
கார் விலை குறைவு

பல்வேறு கம்பெனிகள் தங்களுடைய கார்களை விற்பனை செய்ய முயல்வதால் கார் விலை மிகவும் குறைவு . வரி விதிப்பிலுள்ள வேறுபாடுகளும் இதற்கு ஒரு காரணம் . அமெரிக்கா, பிரிட்டனை விட , அதே கார் மாடலை இங்கு குறைந்த விலைக்கு வாங்கலாம். .
ஒரு அதிசயமான விஷயம் உலக மலிவு விலை கார் பட்டியலில் இந்தியாதான் முதலிடம் வகிக்கிறது!
| Make/model | Starting price |
| Toyota Tundra Limited | $155,990 |
| Ford F-150 Lariat LWB | $140,945 |
| Mazda CX-90 G50e Azami | $94,630 |
| Kia EV9 GT-Line | $121,000 |
| Mitsubishi Outlander PHEV GSR | $73,790 |
| Hyundai Ioniq 5 N | $110,383 |
| MG Cyberster | $115,000 |
| Isuzu D-Max Blade | $78,900 |
| Nissan Patrol Warrior | $105,160 |
| GWM Tank 500 Ultra Hybrid | $73,990 |
Top 10Jan 26, 2025 00:21 UTC
| Australian Dollar | 1.00 AUD | inv. 1.00 AUD |
| US Dollar | 0.631346 | 1.583918 |
| Euro | 0.601251 | 1.663198 |
| British Pound | 0.506228 | 1.975393 |
| Indian Rupee | 54.405938 | 0.018380 |
| Canadian Dollar | 0.908312 | 1.100943 |
| Singapore Dollar | 0.849830 | 1.176706 |
| Swiss Franc | 0.571956 | 1.748385 |
| Malaysian Ringgit | 2.764033 | 0.361790 |
| Japanese Yen | 98.475925 | 0.010155 |
| Chinese Yuan Renminbi | 4.573375 | 0.218657 |
—SUBHAM—
TAGS- ஆஸ்திரேலியாவில் பெட்ரோல் விலை , கார் விலை குறைவு ! ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!, Part 15