Date uploaded in Sydney, Australia – 28 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 16
பாரமேட்டா நதியில் படகு சவாரி
SWAMINATHAN IN OPERA HOUSE
லண்டன் மாநகருக்கு வந்தால் தேம்ஸ் நதியில் படகு சவாரி செய்ய வேண்டும் ; முக்கிய இடங்களைப் பார்க்க கிரீனிச் வரை செல்ல வேண்டும் . பாரீஸ் சென்றால் செயின் நதியில் படகு சவாரி செய்ய வேண்டும் ; முக்கிய இடங்களைப் பார்க்க .வேண்டும்;
நியூயார்க் சென்றால் லிபர்டி சுதந்திர தேவி சிலையைப் பார்க்க கடலில் படகு சவாரி செய்ய வேண்டும் ; அதே போல சிட்னி நகருக்கு வந்தால் பாரமேட்டா நதியில் படகு சவாரி செய்து எல்லா இடங்களையும் பார்ப்பது அவசியமாகும்.
இவை அனைத்தையும் செய்த நான், நேற்று 27=ம் தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள பாரமேட்டா நதியில் படகு சவாரி செய்தேன். ஆபரா ஹவுஸ் வரை சென்று முக்கிய இடங்களைப் பார்த்தேன். பத்து ஆண்டுகளுக்கு முன்னர் செய்த சவாரியை விட இப்போது அதிக விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது .
இந்தப் படகுகள் பெரி FERRY எனப்படும் சிறிய கப்பல்களைப் போன்றவை 100 முதல் 300 ஆட்கள் வரை அமர்ந்து செல்லலாம்
The Parramatta River is one of Sydney’s most iconic waterways. It extends from Blacktown Creek in the west to where it meets the Lane Cove River in the east and flows into Sydney Harbour.
FERRY
பாரமேட்டா என்ற போர்டினை சிட்னி செல்லும் எல்லா சாலைச் சந்திப்புகளிலும் காணலாம்; இது ஆஸ்திரேலியா ஆதிவாசிகளின் மூலம் உண்டான பெயர் ; பல நதிகள் கூடி சிட்னி துறைமுகத்தில் விழும் நதிக்கும் இதே பெயர்; இதில் பல சிறிய ஓடை. கள் கலக்கின்றன ; கலங்கலான தண்ணீர் ஆனாலும் நிறைய மீன் வளம் உடையது இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளைக்கார ஆக்கிரம்பிப்பாளர்கள் ஆஸ்திரேலியாவைக் கைப்பற்றுவதற்கு முன்னர் நாலு இன ஆஸ்த்திரேலியப் பழங்குடியினர்- ஆதி வாசிகள் இங்கே வசித்து வந்தனர் அவர்களுக்குத் தேவையான நண்டு , மீன் வகைகள், நீர்ப்பறவைகள் அங்கே கிடைத்தன. அதை வேட்டையாடி சாப்பிட்டனர்.
பாரமேட்டா என்றால் நதியின் அல்லது நீரோட்டத்தின் தலைப்பகுதி என்று பொருள். வெள்ளைக்கார ஆக்கிரமிப்பாளர்கள் றோஸ் ஹில் என்று பெயர் சூட்டினர்; அது நீடிக்கவில்லை இது கடலில் கலக்குமிடத்தில் உப்பு ஈறாக மாறுகிறது ; மலை மற்றும் ஆற்று வெள்ளத்தின் அளவைப்பொருத்து உப்பு நீர் மாறிக்கொண்டே வரும். முகத்துவாரத்தில் விலங்கு மீன்களும் வாழ்கின்றன. நதியின் பாதையில் பல இடங்களில் மீன்பிடிப்போரைக் காணலாம் .
இதில் படகில் சவாரி செய்ய பெரிய FERRYக்கள் பத்து அல்லது பதினைந்து நிமிட இடைவெளியில் சென்று கொண்டே இருக்கும். ரயிலில் சென்றால் டிக்கெட்டுகளை வாங்குவது போல இதற்கும் டிக்கெட் உண்டு ; நாங்கள் படகில் ஏறிய ஸ்டேஷனிலிருந்து சர்குலர் கீ என்னும் ஸ்டேஷன் வரை செல்ல பத்து டாலர் டிக்கெட் வாங்கினோம். சுமார் ஒரு மணி நேரரத்தில் சர்குலர் கீ துறையை அடைந்தோம் அங்குதான் சிட்னி ஹார்பர் பாலமும் ஆபரா ஹவுஸும் உள்ளன. புகழ்பெற்ற தாவரவியல் பூங்காவும் உள்ளது . நீண்ட தூரம் நடந்து சென்றால் வழி நெடுகிலும் சுற்றுலாப்பயணிகள் கூட்டத்தையும் உணவு விடுதிகளையும் கலைப்பொருட்கள், நினைவுப் பொருட்களை விற்கும் கடைகளையும் காணலாம்.
SYDNEY HARBOUR BRIDGE
முன்னர் சொன்னதைப்போல ஆஸ்திரேலியாவில் பெட்ரோல் விலை கார் விலையைத் தவிர வேறு எல்லா விலைகளும் மிக மிக அதிகம்! இதற்கு ஆஸ்திரேலியாவின் இறக்குமதிக் கட்டுப்பாடுகள்தான் காரணம்.
படகு சவாரியின் பொது நூற்றுக்கணக்கான கப்பல்களையும் படகுகளையும் பார்த்துக்கொண்டே போகலாம். இரு புறமும் புகைப்படமும் எடுக்கலாம்.
பெரி FERRY என்னும் சிறிய கப்பல்களில் மேல் அடுக்கும் கீழ் அடுக்கும் உள்ளன . வெய்யிலைப் பொருட்படுத்தாதவர்கள் மேல் அடுக்கில் உட்காரலாம் .
லோக்கல் ரயில்கள் செல்லும் முக்கிய ஸ்டேஷன்களின் பாதையில் செல்வதால் அதே ஸ்டேஷன் பெயர்கள் இருக்கும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் பல இடங்களை ரயில் அல்லது பெரி FERRY மூலம் அடையலாம் படகு மூலம் சென்றால் அரிய காட்சிகளைக் கண்டுகொண்டே பயணம் செய்யலாம் ; நல்ல சுகமான காற்றினையும் அனுபவிக்கலாம் .
சிட்னி நகருக்கும் ,பிரிஸ்பேன் நகருக்கும் வருவோர் கட்டாயம் படகு சவாரி செய்ய வேண்டும்; யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் .
பொதுமக்களுக்கான பெரி FERRY சர்வீஸுடன் தனி படகுகளும் உண்டு; அவைகளைக் கூடுதல் பணம் கொடுத்து வாடகைக்கு எடுக்கலாம்..
சிட்னி ஆபரா ஹவுஸைப் பார்த்த பின்னர் அருகிலுள்ள தாவரவியல் பூங்கா, சிட்னி ஹார்பர் பிரிட்ஜ் (பாலம்) ஆகியவற்றையும் பார்க்கலாம். இரண்டுக்கும் அனுமதி- இலவசம்.
ஆப்ரா ஹவுஸையும் உள்ளே நுழைந்து பார்க்கலாம். அனுமதி இலவசம். ஆயினும் கச்சேரி, முதலிய நிகழ்ச்சிகள் நடக்கும் அரங்குகளைப் பார்ப்பதற்கு கட்டணம் உண்டு; நாற்பது டாலருக்கு மேல் கொடுத்து டிக்கெட் வாங்கினால் ஒரு மணி நேரத்துக்குச் சுற்றிக் காண்பிப்பார்கள்; நிகழச்சிகளுக்குச் செல்ல தனியே டிக்கெட் வாங்க வேண்டும்.
—subham—
Tags- ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 16, பாரமேட்டா நதி, படகு சவாரி, பெரி FERRY சர்வீஸ், ஆபரா ஹவுஸ்
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களே, சிறப்பு விருந்தினராக வருகை புரிந்திருக்கும் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் அவர்களே,
வணக்கம் நமஸ்காரம்.
எளிய தமிழில் இனிய பாடல்களைப் பாடி அருளி அதைப் பட்டி தொட்டிகளில் எல்லாம் பாட வைத்த சிறந்த சிவ பக்தர் பட்டினத்தார் என்று நாடெல்லாம் அறியும் திருவெண்காட்டு அடிகளைப் பற்றி இன்று சிறிது சிந்திப்போம்.
ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியார் இவர்.
காவரிப்பூம்பட்டினம் – பூம்புகார்என்று அறியப்படும் பல்லவனேஸ்வரம் தமிழ்நாட்டில் உள்ள சம்பந்தர் பாடல் பெற்ற காவிரி வடகரை சிவத்தலங்களில் ஒன்றாகும்.
அங்கு சிவநேயர் என்று ஒரு பணக்கார வணிகர் வாழ்ந்து வந்தார். அவருக்கும் ஞானகலை என்ற அவருடைய கற்புடைய மனைவிக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இறைவனின் அருளால் பிறந்த அந்தக் குழந்தைக்குத் திருவெண்காடு என்ற ஊரில் தங்கி திருவெண்காடர் என்ற பெயரை அவர்கள் இட்டனர்.
பதினாறு வயது ஆகும் போது அவருக்கு சிவசிதம்பரம் செட்டியார் மற்றும் சிவகாமி அம்மையாரின் மகளான சிவகலை என்ற பெண்ணுக்கு மணம் முடித்து வைத்தனர். தன் மனைவியுடன் நன்கு வாழ்ந்த திருவெண்காடர் வணிகத்தில் திறமையுடன் செயல்பட்டார்.
வணிகத்தில் கிடைத்த பெரும்பொருளைக் கொண்டு சிவனடியார்களுக்கு அமுது படைத்து அவர்களை நன்கு உபசரித்து அவர் வாழ்க்கையை நன்கு நடத்தி வந்தார். அவருக்கு புத்திரன் பிறக்கவில்லை என்ற வருத்தம் இருந்தது.
இதே காலத்தில் திருவிடைமருதூரில் மகாலிங்கப் பெருமானை சிவசர்மர் என்பவர் வழிபாடு செய்து வந்தார். அவரது வறுமையைப் போக்கத் திருவுள்ளம் கொண்டார் சிவபிரான். மருதவாணர் என்ற பிராம்மண பிரம்மசாரியாகத் தோன்றி அவரிடம் வந்து தன்னை விற்றுப் பொருள் அடையுமாறு சிவசர்மரிடம் கூறினார்.
சிவசர்மர் மருதவாணருடன் காவிரிப்பூம்பட்டினம் சென்று திருவெண்காடரிடம் மருதவாணனை விலையாகக் கொடுத்து பெரும் பொருள் அடைந்து மகிழ்ந்தார். மருதவாணனைத் தன் புதல்வனென திருவெண்காடர் வளர்க்க ஆரம்பித்தார்.
மருதவாணன் வணிகத்தில் பெரும் பொருளை ஈட்டிக் காட்டித் தன் தந்தையை மகிழ்வித்தான். தான் ஈட்டிய பொருளைக் கோவில் பணிக்கும் சிவனடியார்களுக்கும் செலவிட்டான் அவன். ஒரு சமயம் எரு மூட்டைகளை வாங்கிக் கொண்டு கப்பலில் ஊர் திரும்புகையில் கப்பல் திசை மாறிப் போயிற்று.
உடன் வந்த வணிகர்கள் தங்களிடம் இருந்த விறகு தீர்ந்து போனதால் மருதவாணனிடம் இருந்த எரு மூட்டைகளைக் கடனாகக் கேட்டுப் பெற்றனர்.
ஊர் வந்தவுடன் தருவதாக உறுதிச் சீட்டையும் எழுதி மருதவாணனிடம் கொடுத்தனர். ஊர் வந்து சேர்ந்த அவர்கள் திருவெண்காடரிடம் மருதவாணன் வீணாகப் பொருளைச் செலவிட்டதாகக் கூறினர். திருவெண்காடர் மருதவாணன் கொண்டு வந்த வரட்டிகளுள் ஒன்றை எடுத்துச் சோதித்துப் பார்த்தார். அதனுள் ஒரு மாணிக்க மணி இருந்ததைக் கண்டு திகைத்தார்; வியந்தார்.
இதை அறிந்த வணிகர்கள் தாம் கடனாகப் பெற்ற எரு மூட்டைகளின் விலை மதிப்பை எண்ணிக் கவலை கொண்டனர். அவர்கள் சென்றபின் திருவெண்காடர் எல்லா வரட்டிகளையும் சோதித்தார். ஒன்றிலும் கூட மணி இல்லை. பெரிதும் வருத்தமுற்ற அவர் மருதவாணனைத் தனி அறை ஒன்றில் பூட்டி வைத்தார்.
திருவெண்காடரின் மனைவி சிவகலை தன் வளர்ப்பு மகனான மருதவாணனைக் காணச் சென்றார். கதவைத் திறந்த அவர் அங்கு சிவபெருமானும் பார்வதி தேவியும் நடுவில் முருகப்பெருமானுடன் இருந்த தெய்வீகக் காட்சியைக் கண்டு வியந்தார். உடனே இதை அந்த அம்மையார் தன் கணவரிடம் சொன்னார். உடனே திருவெண்காடர் அறையைத் திறந்து பார்த்தார். அங்கே மருதவாணன் மட்டும் தனியே இருப்பதைப் பார்த்தார்.
இது ஒரு தெய்வீகத் திருவிளையாடல் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட திருவெண்காடர் தனது பிழையைப் பொறுக்குமாறு வேண்ட மருதவாணன் மெய்நூல் பொருளை அவருக்கு உபதேசித்தான். என்றாலும் உலகப்பற்று அவரை விட்டு நீங்கவில்லை. இதை நீக்குவதற்காக மருதவாணன் காது அற்ற ஒரு ஊசியை எடுத்து இழை பிரித்த நூலுடன் பட்டுத் துணியில் மடித்து ஒரு பெட்டியில் வைத்து அந்தப் பெட்டியை திருவெண்காடரின் மனைவி கையில் கொடுத்து, “உமது கணவருக்கு உரிய பொருள் இது” என்று கூறினான். இதைக் கூறிவிட்டு மருதவாணன் மறைந்தான்.
அதைப் பார்த்த திருவெண்காடர் இறைவனது திருக்குறிப்பை உணர்ந்தார். நிலையில்லா உலக வாழ்வைப் பற்றி நன்கு உணர்ந்த அவர் உலகைத் துறந்து துறவற நெறியினை மேற்கொண்டார்.
செய்தியைக் கேள்விப்பட்ட மன்னன் அவரிடம் வந்து, “இதனால் நீர் பெற்ற பயன் என்ன” என்று கேட்க,” நீர் நிற்கவும் யாம் இருக்கவும் பெற்ற தன்மையே அது” என்று திருவெண்காடர் பதில் கூறினார்.
பல வீடுகளிலும் பிச்சை எடுத்து தெருக்களில் படுத்து உறங்கும் திருவெண்காடரது நிலையைக் கண்ட அவரது உறவினர்கள் அவர் மீது வெறுப்புக் கொண்டு அவரது தமக்கை மூலம் நஞ்சு கலந்த அப்பம் ஒன்றை உண்பதற்காகக் கொடுத்து அனுப்பினர். அதனை உணர்ந்த திருவெண்காடர் “தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்” என்று சொல்லி அந்த அப்பத்தை வீட்டின் வாசலில் செருகினார். வீடு தீப்பற்றி எரிந்தது.
அவரை அனைவரும் பட்டினத்தார் என்று அறியலாயினர்.
அடிகள் இப்படியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த நாட்களில் அவரது தாயார் இறந்தார். அவரது ஈமச் சடங்கைச் செய்ய எங்கிருந்தாலும் நான் வருவேன் என்று முன்னம் வாக்களித்தபடி சரியான நேரத்தில் அவர் சுடுகாட்டினை அடைந்தார். அங்கு அவர் உறவினர்கள் சிதையில் அடுக்கி இருந்த காய்ந்த விற்குகளை அகற்றி விட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் அடுக்கிப் பத்துப் பாடல்களைப் பாடினார். என்ன அதிசயம். தீ கொழுந்துவிட்டு எரிய ஆர்மபித்தது.
உள்ளத்தை நெகிழ வைக்கும் அந்தப் பத்துப் பாடல்களில் நான்கு பாடல்களைக் காண்போம்.
Gave an interview; London swaminathan based in Sydney interviewed him.
About Pustakaco.in
Founded in Bengaluru in 2014, Pustaka is a multimodal publishing company that publishes paperback, audiobook, and e-book formats. The company published more than 2500 paperbacks, 400 audiobooks, and 10,500 e-books as of December 2024. The Pustaka platform employs cutting-edge technologies and comprises a website, a mobile application available on both Android and iOS, as well as a dashboard designed for authors.
Through an effective partnership with well-known ebook channels including Amazon Kindle, GoogleBooks, Everand, Overdrive, Pratilipi, and StoryTel, Pustaka maximises revenue for the authors. Pustaka has collaborations with StoryTel, GoogleBooks, Amazon Audible, KukuFM, and Overdrive for audiobooks. In addition to physical sales through stalls in various book fairs, the paperbacks are available on the Pustaka website, Amazon, and Flipkart.
Pustaka has gained the trust of numerous authors by obtaining appropriate copyrights and paying royalties on time. The authors can monitor transactions across all ebook, audiobook, and paperback channels via a sophisticated and transparent dashboard.
About Rajesh Devadas:
Rajesh Devadas brings in 26+ years of IT experience with 17+ years at Hewlett Packard, Bangalore (until April 2014). Rajesh is currently managing an e-commerce platform for e-books (http://www.pustaka.co.in) which publishes e-books in regional languages.
Apart from ebooks publishing, Rajesh is a training consultant to Manipal ProLearn, StackRoute [a NIIT company] and engages in corporate trainings. He also plays cloud architect role at Logus, Bangalore on consulting basis for a large financial company in Europe. Rajesh holds a Ph.D. and Masters degree in Computer Applications from Madurai Kamaraj University. Rajesh currently resides and works out of Bangalore.
He currently lives in Bangalore and Dindigul and he has wife and 2 kids.
***
Kalyanji anchoring from India.
***
If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.
It is on Every Sunday for one hour.
புஸ்தக வெளியீட்டில் பெரும் புரட்சி செய்துவரும் டாக்டர் ராஜேஷ் தேவதாஸுடன் சிறப்புப்பேட்டி
****
உலக இந்துமத செய்தி மடல்- லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த்
Date uploaded in Sydney, Australia – 27 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
(collected from popular national newspapers and edited by me)
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளைவாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
அனைவருக்கும் வணக்கம்
இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 26–ம் தேதி 2025-ம் ஆண்டு
****
அனைவர்க்கும் இந்தியக் குடியரசு தின வாழ்த்துக்கள் ; ஆஸ்திரேலியா தின வாழ்த்துக்களும் உரித்தாகுக .
*****
முதலில் கும்ப மேளா செய்திகள் :
கங்கையில் புனித நீராடினார் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்
உ.பி., மாநிலம் பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் ஜனவரி 22-ஆம் தேதி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது அமைச்சர்களுடன் கங்கையில் புனித நீராடினார்.
கங்கை, யமுனை, மற்றும் புராணங்களில் கூறப்படும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். தவிர வெளிநாட்டினர், துறவிகள், ஆன்மிகவாதிகள் என தினம் தினம் லட்சக்கணக்கானோர் பிரயாக்ராஜ் நகரில் கூடி கங்கை நதியில் புனித நீராடி வருகின்றனர்.
திரிவேணி சங்கத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது 54 அமைச்சர்களுடன் கங்கையில் புனித நீராடினார். அவர்களுடன் அரசு உயரதிகாரிகளும் புனித நீராடினர்.
இதுவரை சுமார் 10 கோடி பேர் கும்பமேளாவிற்கு வருகை தந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
கும்பமேளாவில் சிருங்கேரி சங்கராசார்யார்
சிருங்கேரி சங்கராசார்யார் வட இந்தியாவுக்கு விஜயம் செய்து மஹா கும்பமேளாவில் பங்கேற்கிறார்.
சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ, சுவாமிகள் ஜனவரி 16ம் தேதி முதல் பிப்ரவரி 13ம் தேதி வரை வட இந்தியாவில் விஜய யாத்திரை செய்கிறார்
பிரயாக்ராஜ் சிருங்கேரி மட கிளையில், ஸ்ரீ சாரதாம்பாள், கணபதி, ஆதிசங்கரர் எழுந்தருளி இருக்கும் கோவிலின் கும்பாபிஷேகத்தையும் சுவாமிகள் நடத்தி வைக்கிறார்.
பிரயாக்ராஜ் நகரில் ,ஜனவரி 24-ம் தேதி முதல் 30ஆம் தேதி வரை
ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர பூஜையும் செய்கிறரர் கும்பமேளாவில் சுவாமிகள் புனித நீராடுகிறார்.
.ஜனவரி 31ம் தேதி வாரணாசி சென்றடைகிறார்.
காசியில் அன்னபூர்ணா கோவிலின் கும்பாபிஷேகம், வேத சம்மேளனம் ஆகியவை ஸ்ரீ மடம் சார்பாக நடைபெற உள்ளன.
பிப்., 9 ல் அயோத்தி செல்லும் சுவாமிகள் 11-ம் தேதி வரை அயோத்தியில் தங்கி ஸ்ரீ ராமர் கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார். பின்னர், 11ம் தேதி கோரக்பூர் சென்றடைந்து பின் பிப்., 13ல் சிருங்கேரி வந்தடைகிறார்.
****
மேலும் ஒரு நற்செய்தி
கும்பமேளாவிற்கு வருகை தரும் மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் நாராயண் சேவா சன்ஸ்தான் என்ற தனியார் தொண்டு நிறுவனம் செயலாற்றி வருகிறதுஒரு செயற்கை உடல் பாகத்தின் விலை சுமார் ரூ.90,000 ..இந்த செயற்கை உறுப்புகளை மகா கும்பமேளாவிற்கு வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு நாராயணசேவா சன்ஸ்தான் தொண்டு நிறுவனம் இலவசமாக வழங்கி வருகிறது. மேலும் அவர்களுக்கான சிகிச்சைகளையும் இலவசமாக வழங்குகிறது.
****
வள்ளலார் சர்வதேச மைய பணிக்கு உச்சநீதிமன்றம் தடை!
வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் சத்திய ஞானசபை அருகே உள்ள பெருவெளியில் 100 கோடி ரூபாய் மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மற்றும் பாஜக ஆன்மிக ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் வினோத் ராகவேந்திரா, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
அதனை விசாரித்த நீதிமன்றம், Site-A, Site-B என இரண்டாக பிரித்து Site-B பகுதியில் கட்டுமான பணிகளை தொடர தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க கோரி வினோத் ராகவேந்திரா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வள்ளலார் சர்வதேச மைய SITE-B கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
*****
பிராமணர்களை இழிவுபடுத்துவதா? பொன்முடிக்கு ஹிந்து அமைப்பு கண்டனம்
மதுரை: ‘ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலைகண்ணன் அளித்த பேட்டி:தி.மு.க., சட்டத்துறை மாநாட்டில் அமைச்சர் பொன்முடி, பிராமணர்களை இழிவுபடுத்தும்விதமாக பேசியுள்ளார்; அது கண்டிக்கத்தக்கது. நீதிபதிகள், வழக்கறிஞர்களாக வேறு ஜாதியினர் வரக்கூடாது என, எந்த பிராமணரும் சொல்லவில்லை. அவர்கள் படிக்கக் கூடாதென்றும் தடுக்கவில்லை. அம்பேத்கருக்கு குருவாக இருந்தவர் பிராமணர்.
பிராமணர்கள் மற்ற சமூகத்தினரை முன்னேறவிடவில்லை என பொய்யான குற்றச்சாட்டை அமைச்சர் வைத்தது, திட்டமிட்ட பேச்சு.
தி.மு.க.,வுக்கு வரவு செலவு பார்க்க ஆடிட்டராக, தேர்தல் வெற்றி பெற ஆலோசகராக, கட்சி நிகழ்ச்சி முதல் பிறப்பு, இறப்பு வரை அனைத்து குடும்ப நிகழ்ச்சிகளுக்கும் பிராமணர்கள் தேவை. ஆனால், மேடையேறினால் பிராமணர்கள் கசக்கிறார்கள்.தேச பக்தியுள்ள பிராமணரை வந்தேறிகள் என்கின்றனர். இதுதான் சமூக நல்லிணக்கமா?
தாழ்த்தப்பட்ட சமூகத்தை தவறாக பேசினால் எப்படி பி.சி.ஆர்., சட்டம் பாய்கிறதோ, அதேபோல, பிராமணர் சமூகத்தை தவறாக பேசினாலும் பாயும் வகையில், புதிய சட்டம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு சோலைக்கண்ணன் கூறினார்.
*****
திருப்பதியிலிரூந்து வரும் சுவையான செய்தி
திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இலவசமாக அன்னபிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. வழக்கமாக சாம்பார், ரசம், மோர், பொரியல் போன்றவை தான் அன்ன பிரசாத மெனுவில் இடம் பிடித்திருக்கும். இது தவிர இரவு உணவின் போது உப்புமா, சப்பாத்தி, கற்கண்டு சாதம் போன்றவைகளும் வழங்கப்படுவது உண்டு. ரதசப்தமி நாளான பிப்ரவரி 4ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு மசால் வடையுடன் அன்னதானம் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது
இன்னுமொரு செய்தி
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு
சென்னையை சேர்ந்த வர்தமான் ஜெயின் என்ற பக்தர் ரூ.6 கோடியை நன்கொடையாக வழங்கி உள்ளார்.
வர்தமான் ஜெயின் தனது மனைவியுடன் சென்று பெருமாளைத் தரிசனம் செய்த பிறகு, திருப்பதி தேவஸ்தான அதிகாரி செளத்ரியிடம், ரூ.6 கோடிக்கான டி.டி. யை வழங்கினார்.
****
இலவச டோக்கன் பற்றிய அறிவிப்பு
பெருமாளைத் தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு முன்பு போலவே எந்த நாளுக்கு தரிசன டோக்கன் வேண்டுமோ அந்த நாளிலேயே தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட (டைம் ஸ்லாட் டோக்கன்) டோக்கன்கள் வழங்கப்படும் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
****
கோவில் நகரங்களில் மதுவுக்கு தடை- ம.பி.,யில் புதிய அறிவிப்பு
மத்தியபிரதேசத்தில், ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த தலங்களாக கருதப்படும் 17 நகரங்களில் மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்தியபிரதேசத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளில் அம்மாநில பாரதீய ஜனதா கட்சி அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக, 17 ஆன்மிக நகரங்களில் மதுவுக்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் மோகன் யாதவ் கூறி உள்ளார். நரசிங்கபூர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்ற போது இதை தெரிவித்தார்.
முதல்வர் மோகன் யாதவ் மேலும் கூறியதாவது; ஆன்மிக நகரங்களின் புனிதத்தை காக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப மத்திய பிரதேச மாநிலத்தில் எங்கெல்லாம் ராமர், கிருஷ்ணர் கோவில்கள் உள்ளதோ அங்கெல்லாம் மதுபானம் தடை செய்யப்படுகிறது என்று மோகன் யாதவ் கூறினார்.
***
சபரிமலை வருமானம் அதிகரிப்பு: கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.80 கோடி அதிகம்
சபரிமலையில், மகரவிளக்கு சீசனில் வருமானம் ரூ.440 கோடி கிடைத்து உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.80 கோடி கூடுதல் . கேரள மாநில தேவசம் போர்டு துறை அமைச்சர் வாசவன் கூறியுள்ளார்
மகர விளக்கு காலத்தில் சபரிமலைக்கு கிடைத்த வருமானம் ரூ.440 கோடியாக அதிகரித்து உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 80 கோடி ரூபாய் அதிகம் ஆகும். இக்காலகட்டத்தில் 6 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஒரு நாளில் அதிகபட்சமாக 1.8 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பம்பை முதல் சன்னிதானம் வரை ROPE WAY ‘ரோப் வே’ திட்ட கட்டுமான பணிகள் அடுத்த மாதம் தொடங்கும்.ரூ.250 கோடியிலான இந்த திட்டம் 1½ ஆண்டுகளில் முடிக்கப்படும். ‘ரோப் வே’ சரக்குகளை கொண்டு வரவும், வயதான, நோய்வாய்பட்ட பக்தர்களை அழைத்து வரவும் பயன்படுத்தப்படும். பக்தர்களை சுமந்து செல்லும் டோலி சேவை ரத்து செய்யப்படும் என்றும் அமைச்சர் வாசவன் பகர்ந்தார்.
*****
கோமியம் விவாதம்
சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி கோமியம் குறித்து சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்று வைரலானது. இது பெரிதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கிளம்பிய விவாதத்தில் எதிரும் புதிருமாகப் பலரும் பேசி வருகின்றனர். திராவிடப் பத்திரிகைகள் அவர் பேசியதை வேண்டுமென்றே திரித்து வெளியிட்டு வருகின்றன . கோமியம் என்பது பசு மாட்டின் சிறுநீர் ஆகும்
அவர் மீண்டும் இது பற்றிக்கூறியபோது தானே கோமியம் அடங்கிய பஞ்ச கவ்யத்தைச் சாப்பிட்டிருப்பதாகவும் இதில் ஆபத்து எதுவும் இல்லை என்றும் விளக்கியுள்ளார்.
காமகோடி சொன்னது புதியது இல்லை. சித்த ஆயுர்வேத மருத்துவ முறைகளில் எழுதப்பட்ட உண்மையை அவர் மீண்டும் எடுத்துரைத்துள்ளார் .
பசுவின் கோமியம் டாஸ்மாக்கைவிட மோசமானது இல்லை என பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஆயுர்வேதத்தில் பசுவின் கோமியம், அமிர்த நீர் என சொல்லப்பட்டிருக்கிறது. 80 வகையான நோய்களுக்கு பசுவின் கோமியம் மருந்தாக உள்ளது; .மாட்டு சாணம் கிருமி நாசினி என்றால், மாட்டு கோமியத்திலும் கிருமி நாசினி இருக்கிறது. மாட்டுக்கறியை சாப்பிடுகிறார்கள், மாட்டுச் சாணத்தை பயன்படுத்துகிறார்கள். விஞ்ஞான பூர்வ அமிர்த நீரான கோமியத்தை பயன்படுத்தக்கூடாது என ஏன் கூறுகிறார்கள்?
கோமியத்தில் ஆராய்ச்சி பூர்வமாக, நுண்ணுயிர் கிருமிகளை தடுப்பதை கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதனால்தான் வீட்டின் முன் தெளிப்பார்கள்.
எல்லா மிருகங்களையும் நாம் சொல்லவில்லை. பசுவின் சிறுநீருக்கு இந்த குணம் இருக்கிறது என்று ஆராய்ச்சி பூர்வமாக சொல்வதாகவும் மியான்மர் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இதை எடுத்துக் கொள்கிறார்கள். இதை ஒட்டுமொத்தமாக புறந்தள்ள முடியாது. ஆயுர்வேதத்தில் மருந்தாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
80 வகையான நோய்களுக்கு இதை பயன்படுத்தலாம் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. அதில் அவர் (காமகோடி) சொன்ன காய்ச்சல் 80 வகைகளில் ஒன்றாக இருந்திருக்கலாம்.காமகோடி ஒரு அறிவுப்பூர்வமாக விஞ்ஞானபூர்வமாக ஒரு தொழில்நுட்பக் கல்லூரியை தலைமை தாங்கி கொண்டிருப்பவர் சும்மா சொல்வாரா?
என் உணவு என் உரிமை என்று சொல்கிறீர்கள். ஒரு இடத்தில் மாட்டு இறைச்சிக் கொண்டு வீசுகிறீர்கள். விஞ்ஞானபூர்வமாக அது மருந்து என்று சொல்லும் போது ஏன் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்?
பாரதீய ஜனதா கட்சி இல்லையென்றால் இந்திய பண்பாட்டு முறையில் எது சொன்னாலும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அவருக்கு என்ன உள்நோக்கம் இருக்க முடியும்? பஞ்சகவியம் என்பது ‘அமேசானில்’ கிடைக்கிறது. அதனால் இது அறிவியல் புறமாக நிரூபிக்கப்பட்டது. நான் அல்லோபதி படித்த டாக்டர். ஆனால் ஆயுஷ் integrated medicine ல் நம்பிக்கை இருக்கிறது.
.தமிழகத்தில் கோமியம் விற்பனை தூவங்கினால் மதுபானம் விற்பனை குறையும் என்று நினைக்கிறார்களா? ஒருவேளை அப்படி நினைக்கிறார்களோ என்னவோ? கோமியம் ஒன்றும் டாஸ்மாக்கை விட கெட்டதில்லை என்று நினைக்கிறேன். அதனால் டாஸ்மாக் பற்றி கவலைப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
*****
தைப்பூசத் திருவிழா –பாதயாத்திரை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிப்ரவரி 11-ஆம் தேதி தைப்பூச விழா நடைபெறபோகிறது , நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து வேண்டுதலை நிறைவேற்றிச் செல்வதால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் 18 அடி உயரத்தில் பறந்தபடி பறவை காவடி எடுத்து பக்தி பரவசத்துடன் ஆடியது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.
பழனி பால தண்டாயுதபானி கோவிலிலும் வரும் பிப்ரவரி மாதம் தைப்பூசம் திருவிழா நடைபெறுகிறது. இதனையொட்டி சாத்தான்குளம் ஸ்ரீ தண்டாயுதபாணி பழனி ஆண்டவர் திருக்கோவிலில் இருந்து பழனி மலை முருகன் கோவிலுக்கு காவடி எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை அருகிலுள்ள திருப்பரங்குன்றம் மலையில் தொல்லியல் துறை கட்டுப் பாட்டிலுள்ள குகைகளை சேதப்படுத்தியவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவர்களைத் தேடி வருகின்றனர் திருப்பரங்குன்றம் மலையில் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் சமணர் குகை மற்றும் குகை கோயில்கள் உள்ளன.
குகைகளில் அடையாளம் தெரியாத சில சமூக விரோதிகள், பச்சை நிற பெயின்ட்டை அடித்து அந்த இடத்தைச் சேதப்படுத்தி இருப்பது பராமரிப்புப் பணியின்போது தெரிந்தது. இது தொடர்பாக திருமயம் வட்ட தொல்லியல் துறை உதவி அலுவலர் சங்கர் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்துக்கு புகார் மனு அனுப்பினார். அதன் பேரில் குகைகளை சேதப்படுத்திய நபர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.
இன்னுமொரு செய்தி
”திருப்பரங்குன்றத்திற்கு அப்துல் சமது, நவாஸ் கனி வந்தது சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் செயல்,” என, திருப்பரங்குன்றத்தில் பாரதீய ஜனதா கட்சி சட்டசபை குழு தலை வர் எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இங்கு மலைமீதுள்ள காசிவிஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்ய நயினார் நாகேந்திரன், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வந்தனர். பின், நயினார் நாகேந்திரன் கூறியதாவது:
எம்.எல்.ஏ., அப்துல் சமது – எம்.பி., நவாஸ்கனி திருப்பரங்குன்றம் மலையில் ஆய்வு செய்துள்ளனர். இது, பதட்டமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. நான் கூட இங்கே வந்திருக்க மாட்டேன். அவர்கள் வந்ததால், நாங்களும் வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.. மலை மேல் முன்னர் அசைவம் சமைத்தது கிடையாது. புதிய பழக்கத்தை ஏற்படுத்த வேண்டாம். இதற்கு முன் என்ன பழக்கம் இருந்ததோ அதைக் கடைப்பிடிப்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை.
அவர்கள் இது எங்கள் மலை, எங்களுக்கு சொந்தம். இப்பழக்கத்தை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம் என்பது, சட்டம் – ஒழுங்கை சீர்கெடுக்கும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
காடேஸ்வர சுப்ரமணியம் கூறுகையில், ”மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்,” என்றார்.
*****
திருப்பரங்குன்றம் செல்லக்கூடாது; மதுரை ஆதினத்துக்கு போலீஸ் தடை
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த மலையில் இருக்கும் தர்காவில், ஆடு, கோழி பலியிடுவோம் என்று கூறி, இஸ்லாமிய அமைப்பினர் சிலர் கிளம்பிய நிலையில் போலீசார் அதற்கு தடை விதித்தனர்.
எனினும், அவர்களில் சிலர், அசைவ உணவுகளை கொண்டு சென்று மலை உச்சியில் படிக்கட்டுகளில் வைத்து உண்ட படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இது, பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹிந்து அமைப்பினர் கடும் கண்டனமும் தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்ல மதுரை ஆதினம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால் போலீசார் அதற்கு அனுமதி மறுத்து விட்டனர். கோவிலுக்குச் செல்ல மதுரை ஆதினத்துக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வண்ணம், அங்கு போலீசார் பாதுகாப்பு பணியிலும், கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
Date uploaded in Sydney, Australia — 27 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
லண்டன், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து 26-1-2025 அன்று ஒளிபரப்பப்பட்ட ஞானமயம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற உரை.
ஆலயம் அறிவோம்!
வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
பூவினுக்கு அருங் கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அருங் கலம் அரன் அஞ்சு ஆடுதல்
கோவினுக்கு அருங் கலம் கோட்டம் இல்லது
நாவினுக்கு அருங் கலம் நமச்சிவாயவே
திருநாவுக்கரசர் திருவடி போற்றி!
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது தென்காசி திருத்தலமாகும்.
தமிழ்நாட்டில் திருநெல்வேலியிலிருந்து 53 கிலோமீட்டர் தொலைவில் இந்தத் திருத்தலம் உள்ளது.
இறைவர் : காசி விஸ்வநாதர்
இறைவி : உலகம்மை நாயகி
பொங்கி வரும் குற்றால நீர்வீழ்ச்சியிலிருந்து உருவாகி ஒடும் சிற்றாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம். திருக்குற்றாலத்திற்கு ஆறு கிலோமீட்டர் முன்னதாகவே இந்தத் திருத்தலம் அமைந்துள்ளது.
இங்குள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் எழுந்தது குறித்து சுவையான ஒரு வரலாறு உண்டு.
பிற்காலப் பாண்டிய மன்னர்களில் பெரிதும் போற்றப்பட்டு நல்லாட்சி செய்தவன் பராக்கிரம பாண்டியன். கி.பி. 1422ம் ஆண்டு வாக்கில் இவன் தென்காசியைத் தலைமை இடமாகக் கொண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றான்.
அவன் வடக்கில் காசி சென்று விஸ்வநாதரைத் தரிசிக்க விழைந்த போது அவன் கனவில் சிவபிரான் தோன்றி எனக்கு தென்காசியில் ஒரு கோவில் கட்டுக என்று அருள் பாலித்துக் கூறினார்.
உடனே 15 ஏக்கர் பரப்பளவில் சுமார் 17 ஆண்டுகளில் மிகப் பெரும் கோவிலை அமைத்தான் பராக்கிரம பாண்டியன்.
ஒன்பது நிலைகள் கொண்ட இந்த கோபுரத்தின் உயரம் 178 அடி ஆகும்.
கோவிலின் முகப்பில் இரு யானைகள் உள்ளன. அடுத்து உள்ள திறந்த வெளியைத் தாண்டியதும் திருவோலக்க மண்டபம் உள்ளது. இங்கு நவகிரகங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு கிழக்கு நோக்கி காட்சி அளிக்கின்றன.
வேறெங்கும் காண முடியாத தமிழணங்கின் சிலைகள் இங்கு உள்ளன.
ஊர்த்துவ தாண்டவர், வீரபத்திரர், அக்கினி வீரபத்திரர், காளி, மன்மதன், ரதி ஆகியோரின் திருவுருவங்கள் அற்புத வேலைப்பாடுகள் கொண்டவை.
ஒரே வளாகத்துக்குள் சிவன் கோவிலை அடுத்து உலகம்மை திருக்கோவிலும், பால முருகன் கோவிலும் அமைந்துள்ளது.
திருஓலக்க மண்டபத்தை அடுத்து நந்தி மண்டபம் உள்ளது. அதை அடுத்து மணி மண்டபம் அமைந்துள்ளது.
இங்குள்ள மண்டபத்தில் உள்ள திருமாலின் கையில் கரும்பு இருப்பது இங்குள்ள ஒரு புதுமையாகும்.
ஶ்ரீ ராமர், அனுமன், சீதை, வாலி, சுக்ரீவன், கண்ணன், மார்க்கண்டேயர் சிவலிங்கத்தைத் தழுவுதல் உள்ளிட்ட ஏராளமான காட்சிகள் கல்லிலே கலைவண்ணமாக மிளிர்கின்றன.
மணிமண்டபத்தை அடுத்து மகா மண்டபம் உள்ளது. அங்கும் ஏராளமான சிற்பங்கள் உள்ளன. அதை அடுத்து அமைந்திருக்கும் கர்பக்ரஹத்தில் தான் காசி விஸ்வநாதர் எழுந்தருளியுள்ளார்.
இங்கு கன்னி விநாயகர் கோவில் கொண்டுள்ளார். கோயிலைச் சுற்றி உள்ள வீதிகளில் சுந்தர விநாயகர், செண்பக விநாயகர், வெயிலுகந்த விநாயகர், அம்பல விநாயகர், மெய்கண்ட விநாயகர் எனப் பல விநாயகர்களை தரிசிக்கலாம்,.
இங்குள்ள ஜுரதேவர் மூன்று கால், மூன்று கைகளுடன் காட்சி அளிக்கிறார். ஜுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து இவரது நெற்றியில் மிளகு பற்று இட்டு, குளித்து, காய்ச்சலைப் போக்கிக் கொள்வது மரபாகிறது.
வடக்கே காசியில் கங்கையில் குளித்தால் முக்தி, ஆனால் தென்காசியில் பிறந்தாலே முக்தி என்பது ஐதீகம்.
இந்த தென்காசி தலத்திற்கு சச்சிதானந்தபுரம், முத்துத் தாண்டவ நல்லூர், ஆனந்த கூத்தனூர், சைவ மூதூர், தென்புலியூர், குயின் குடி, செண்பகப் பொழில், சித்தர் வாசம், சிவ மணவூர், சப்த மாதர் ஊர், சித்திர மூல ஸ்தானம், மயிலை குடி, கேசிகை உள்ளிட்ட பல பெயர்கள் உண்டு.
கோவிலை அமைத்த பராக்கிரம பாண்டியன் சிறந்த சிவ பக்தன். இந்தக் கோவிலில் ஏதேனும் பின்னொருகாலத்தில் பழுது ஏற்படுமாயின் அப்போது அதை நீக்கி கோவிலைப் புரப்பார்களுக்கு இப்போதே பணிந்து வணங்குகிறேன் என்று ஒரு பாடலாக கல்வெட்டில் செதுக்கி வைத்தான் அவன்.
ஆராயினும் இந்தத் தென்காசி மேவும் பொன் ஆலயத்து
வாராததோர் குறம் வந்தால் அப்போது அங்கு வந்து அதனை
நேராகவேயொழித்துப் புரப்பார்களை நீதியுடன்
பாரோர் அறியப் பணிந்தேன் பராக்கிரம பாண்டியனே
என்பது அவனது கல்வெட்டுச் செய்யுள் ஆகும்.
இன்னொரு பாடலில் இக்கோவிலில் ‘திரி சேர் விளக்கு’ எனக் காப்பவர்களின் பாதம் பணிகின்றேன் என்கிறான் பெரும் மன்னன்.
அரிகேசரிமன் பராக்ரம மாறன் அருளால்
வரி சேர் பொழில் அணி தென்காசிக் கோயில் வகுத்து,
வலம்புரி சேர் கடல் புவி போற்ற வைத்தேன்,
அன்பு பூண்டு இதனைத் திரி சேர் விளக்கெனக் காப்பார்
பொற்பாதம் என் சென்னியதே
என்பது அவனது பாடல் ஆகும்.
பராக்ரம பாண்டியனைப் பற்றிய ஏராளமான பாடல்கள் அவனது சிவபக்தியை வியந்து பாராட்டுகின்றன.
காலப்போக்கில் 250 ஆண்டுகளுக்கு முன்னர் தீவிபத்து ஏற்பட்டு இடி விழுந்து கோபுரம் இரண்டாகப் பிளந்தது. சமீப காலத்தில் 1982ல் திருப்பணி துவங்கி 1990இல் நிறைவுற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பல்லாண்டுகளாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் காசி விஸ்வநாதரும் உலகம்மை நாயகியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
KALKIONLINEல் 16-1-25 அன்று பிரசுரிக்கப்பட்ட கட்டுரை!
LATERAL THINKING
மாற்றி யோசிக்கும் திறன் கொண்டவரா நீங்கள்? இதோ சில கேள்விகள்!
ச.நாகராஜன்
லேடரல் திங்கிங் (Lateral Thinking) எனப்படும் மாற்றி யோசிக்கும் திறன் கொண்டவரா நீங்கள்?
தர்க்கரீதியாக யோசிக்கும் திறமை உங்களிடம் இருக்கிறதா? இதோ சில கேள்விகள். இதற்குச் சரியான பதிலை நீங்கள் அளித்து விட்டால் நீங்கள் தர்க்கரீதியில் சூப்பராக சிந்தித்து வெற்றி பெறுபவர் என்று சொல்லி விடலாம்.
1. மூன்று பல்புகளும் மூன்று ஸ்விட்சுகளும்
மாடியில் உள்ள அறையில் மூன்று பல்புகள் உள்ளன. மாடிப்படியின் கீழே மூன்று ஸ்விட்சுகள் உள்ளன. ஒவ்வொரு பல்புக்கும் ஒரு ஸ்விட்ச். நீங்கள் ஸ்விட்சைப் போட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.
ஒரே ஒரு முறை நீங்கள் மாடிக்குச் செல்லலாம்.எந்த ஸ்விட்ச் எந்த பல்புக்கு என்று எப்படி அறிந்து கொள்வீர்கள்? வழியைச் சொல்லுங்கள் பார்ப்போம்.
விடை:
ஒரே ஒரு பல்பின் ஸ்விட்சை முதலில் போடுங்கள். சில நிமிடங்கள் காத்திருங்கள். பின்னர் அதை அணைத்து விட்டு அடுத்த ஸ்விட்சைப் போடுங்கள்.
இப்போது மாடிக்குச் செல்லுங்கள். எரிந்து கொண்டிருக்கும் பல்புக்கான ஸ்விட்ச் எது என்று இப்போது தெளிவாக உங்களுக்குத் தெரியும்.
அடுத்த இரண்டு பல்புகளின் மீது கையை வைத்துப் பாருங்கள். எது சூடாக இருக்கிறதோ அது தான் நீங்கள் முதலில் போட்ட ஸ்விட்சினால் எரிந்து கொண்டிருந்த பல்பாகும். மீதி இருப்பது மூன்றாவது பல்பும் அதற்கான ஸ்விட்சும் தான்!
என்ன சுலபம் தானே!
2. பத்தாம் மாடி போக முடியாதது ஏன்?
பத்தாவது மாடியில் வசிக்கும் ஒருவர் தினமும் காலையில் வேலைக்குப் போகும் போது லிப்டை இயக்கி கீழே க்ரவுண்ட் ஃப்ளோருக்கு வந்து விடுவார். ஆனால் வேலை முடிந்து மாலையில் மேலே போகும் போதோ அவர் ஏழாவது மாடி வரை தான் போவார். அங்கிருந்து படி ஏறி பத்தாவது மாடியில் உள்ள தனது ஃப்ளாட்டுக்குப் போவார். மற்றவர்கள் இருந்தாலோ அல்லது மழை பெய்யும் நாட்களிலோ அவர் நேராக பத்தாவது மாடிக்குப் போவார். இது ஏன்? விளக்க முடியுமா?
விடை: அவர் மிக மிகக் குள்ளமானவர். அவர் கை 7 என்ற லிப்டின் எண் வரை தான் தொட முடியும். ஆகவே தனியாக தான் வரும் போது ஏழாம் மாடி வரை அவர் போவார். மற்றவர்கள் இருந்தால் அவர்கள் 10 என்ற எண்ணை அவருக்காக இயக்கி விடுவார்கள. மழை பெய்யும் நாட்களில் தன் குடையை வைத்து பத்து என்ற எண்ணை அமுக்கி விடுவார்.
3. இரட்டையரில் ஒருவரா இல்லையா?
ஒரே மாதிரி இருக்கும் இரண்டு பேரைப் பார்த்தபோது ஒருவர் அவர்களை நோக்கி, “நீங்கள் இரண்டு பேரும் இரட்டைப் பிறவிகளா?” என்று கேட்டார். அவர்கள் இல்லை என்றனர். சரி உங்கள் பிறந்த தேதி என்ன? என்று கேட்டார் அவர். இருவரும் ஒரே தேதியைச் சொன்னார்கள். நேரம்? என்று கேட்டார். அதே நேரம் தான்!
உங்கள் இருவருக்கும் ஒரே அம்மா தானே? என்று கேட்டார் அவர். ஆமாம் என்றனர் அவர்கள்.
குழம்பிப் போனார் கேள்வி கேட்டவர். பதில் என்ன சார், சொல்லுங்களேன்.
விடை: நாங்கள் இரட்டைப் பிறவிகள் இல்லை. நாங்கள் மூன்று பேர் ஒரே நாளில் ஒரே சமயத்தில் எங்கள் அம்மாவுக்குப் பிறந்தோம் என்றார்கள் அவர்கள். இரட்டைப்பிறவி இல்லை என்று அவர்கள் கூறியது உண்மை தானே!
சற்று ஆழ்ந்து மாற்றி யோசித்தால் விடை தானே வரும், இல்லையா!
Date uploaded in Sydney, Australia – 26 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
15ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 15
ஆஸ்திரேலியாவில் பெட்ரோல் விலை , கார் விலை குறைவு !
பல நாடுகளை ஒப்பிடுகையில் பெட்ரோல் விலையும், கார் விலையும் ஆஸ்திரேலியாவில் குறைவு. இப்படிச் சொன்னாலும் நீங்கள் வாழும் நகரத்தையும் நீங்கள் வாங்கும் காரின் மாடலையும் பொருத்து விலையில் கொஞ்சம் மாற்றம் இருக்கலாம்.
நான் காரில் பயணம் செய்தபோது ஒரு வினோதத்தைக் கண்டேன். எதிர் எதிராக நாலு பெட்ரோல் ஸ்டேஷன்கள் அல்லது பங்குகள் இருந்தன. ஒரு பெட்ரோல் பங்கில் நீண்ட கார் வரிசை! காரணம் லிட்டருக்கு இரண்டு மூன்று சென்ட்டுகள் முதல் பத்து சென்ட்டுகள் வரை விலை வித்தியாசம் !
தங்கம் விலை மாறுவது போல பெட்ரோல் விலையும் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்.
என்ன வினோதம் என்றால் ஆஸ்திரேலியாவில் நிறைய எண்ணையும் எரி வாயுவும் கிடைத்தாலும் அதைச் சுத்தப்படுத்த போதுமான வசதிகள் இல்லை; இதனால் பெட்ரோலிய எண்ணெயை ஏற்றுமதி செய்து பெட்ரோலை இறக்குமதி செய்கிறது.
ஆஸ்திரேலியா மிகப்பெரிய நாடு; இதில் மேற்கு ஆஸ்திரேலியாவில்தான் அதிக பெட்ரோலியப் பொருட்கள் கிடைக்கின்றன. அங்கு மக்கட்தொகை குறைவு; இதனால் பெரும்பகுதி எண்ணையை சிங்கப்பூர் முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பெட்ரோலாகத் திரும்பப்பெறுகிறது .
ஆஸ்திரலியா டாலர் = 100 சென்ட்டுகள்
கட்டுரையை எழுதும் நேரத்தில்
ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 179.3 cents per litre
டீசல் விலை 182.4 cents per litre
Petrol (Unleaded): 179.3 cents per litre
Diesel: 182.4 cents per litre
லண்டனை ஒப்பிடுகையில் இது பாதி விலைதான்!
வெனிசுவேலா , சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக பெட்ரோலியம் உள்ள நாடு ஆஸ்திரேலியா; ஆயினும் சுத்தப்படுத்தும் பணத்தை விட வெளிநாட்டில் வாங்குவது மலிவாக உள்ளது . சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் என்னும் கதைதான் .
கடற்படுகை (BIGHT) வளையத்தில் நிறைய பெட்ரோலியம் புதைந்து கிடக்கிறது ; மேலும் எரி வாயுவாக அதிகம் கிடைக்கிறது .
புதிய பெட்லோலிய படுகைகளைக் கண்டுபிடிக்காவிடில் சுமார் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கே எண்ணையை எடுக்க முடியும்.
ஆஸ்திரேலியாவின் வளைகுடாப் பகுதியில் (BIGHT) நிறைய எண்ணெய் வளம் இருந்தாலும் அங்குள்ள கடல் வாழ் உயிரினங்களை சேதப்படுத்த ஆஸ்திரேலியா விரும்பவில்லை.
GAS PRODUCTION
எரி வாயுவை எடுத்துக்கொண்டால் ஆஸ்திரேலியாவில் விலை மிகவும் குறைவு; காரணம் நிறைய எரிவாயு இயற்கையிலேயே கிடைக்கிறது.
Where does most of Australia’s gas come from?
About 93 per cent of conventional gas resources are located on the North West Shelf with gas produced from the Northern Carnarvon, Browse and Bonaparte basins providing feedstock to seven LNG projects (Gorgon, Wheatstone, North West Shelf, Pluto, Prelude, Ichthys and Darwin).
****
நாடு முழுவதும் 230 நகரங்களில் பத்தாயிரம் பெட்ரோல் நிரப்பும்நிலையங்கள் இருக்கின்றன.
*****
கார் விலை குறைவு
பல்வேறு கம்பெனிகள் தங்களுடைய கார்களை விற்பனை செய்ய முயல்வதால் கார் விலை மிகவும் குறைவு .வரி விதிப்பிலுள்ள வேறுபாடுகளும் இதற்கு ஒரு காரணம் .அமெரிக்கா, பிரிட்டனை விட , அதே கார் மாடலை இங்கு குறைந்த விலைக்கு வாங்கலாம். .
ஒரு அதிசயமான விஷயம் உலக மலிவு விலை கார் பட்டியலில் இந்தியாதான் முதலிடம் வகிக்கிறது!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சௌபாக்யம் அடைய, சங்கடங்கள் விலக, மஹாபாதகம் நசிய ஒரு எளிய வழி இதோ!
ச. நாகராஜன்
மனித வாழ்க்கையில் ஆணாகவோ பெண்ணாகவோ பிறந்தால் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் ஏராளம், ஏராளம்.
இவையெல்லாவற்றையும் எப்படி நீக்கி நாம் வாழ்க்கையில் முன்னேறுவது? சௌபாக்கியத்தை அடைவது?
இதற்கான எளிய வழியை நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
அதைப் பார்ப்போம்.
சௌபாக்யம் அடைய!
சௌபாக்யம் என்றால் என்ன?
ஐஸ்வர்யம்(பணம்,சொத்து), வீரம் அல்லது வலிமை, புகழ், அழகு, ஞானம், வைராக்யம் ஆகியவையே சௌபாக்யம் எனப்படும்.
லலிதா சஹஸ்ரநாமத்தில் 117வது நாமமாக அமைவது பக்த சௌபாக்யதாயினி என்ற நாமம். பக்தர்களுக்கு சகலவிதமான சௌபாக்கியத்தையும் கொடுப்பவள் என்று இதற்கு அர்த்தம்.
பகம் என்றால் ஶ்ரீ, காமம், மாஹாத்ம்யம், வீர்யம், யத்னம், அர்கம் (பிரகாசம்), கீர்த்தி ஆகியவற்றிற்குப் பெயராகும். இவைகளுக்கெல்லாம் லலிதாம்பிகை இருப்பிடமாகையால் ஸுபகா என்று அவளுக்குப் பெயர். அவளுடைய இயல்பான தன்மையே சௌபாக்யம்.
மங்களகரமான காரியங்களில் பயன்படுத்துவதால் அஸ்வத்த மரம், முளை விட்ட ஜீரகம், கொத்துமல்லி, இரண்டும், பசும்பால் (அதன் பேதங்களான தயிர், வெண்ணெய், நெய் உட்பட) மஞ்சள் நிறமான வஸ்துக்கள், புஷ்பம் உப்பு ஆகிய எட்டும் சௌபாக்யாஷ்டகம் என்று சொல்லப்படும்.
ஸூஷ்டு என்றால் சிறந்த என்று பொருள் பாக்கியம் என்றால் நியதி அல்லது அதிர்ஷ்டம். அதை உடைய பாக்கியம் சௌபாக்யம். இதை பக்தர்களுக்குக் கொடுப்பவள். அதாவது பக்தர்கள் எதிர்பார்க்காத ஐஸ்வர்யங்களைத் தருபவள் லலிதாம்பிகை. அம்பாளின் நாமங்கள் அனைத்தும் தருபவையாகும்.
ஆதி சங்கரர் சௌந்தர்ய லஹரியில் தேவியின் பூஜை மஹிமை பற்றிச் சொல்லும் போது ஸௌபாக்ய ஜநநீம் என்று கூறியருள்கிறார்.
இதை 5ம் ஸ்லோகத்திலும் மீண்டும் 51வது ஸ்லோகத்திலும் கூறி அருள்கிறார். சர்வ ஜன வசீகரணத்திற்கும் கீர்த்தி அடைவதற்கும் உச்சரிக்க வேண்டிய ஸ்லோகங்கள் இவை. இதில் ஸௌபாக்ய ஜனனீ என்று அவர் கூறுவது உற்று நோக்கத் தக்கதாகும். (நனனீ – தாய்; தாயினி – வழங்குபவள்)
இன்னும் பல அர்த்தங்கள் ஸௌபாக்யம் என்ற சொல்லுக்கு உள்ளது.
இதைப் பெற எளிய வழி. தினமும் காலை நேரத்தில்
உமா உஷா வைதேஹீ ரமா கங்கேதி பஞ்சகம் |\
ப்ராதரேவ ஸ்மரோந்நித்யம் சௌபாக்யவர்ததே சதா ||
என்று உச்சரிப்பதேயாகும்!
உமா, உஷா, வைதேஹீ, ரமா, கங்கா என்ற ஐந்து நாமங்களையும் காலையில் உச்சரிப்பவர் என்றுமே சௌபாக்யத்துடனேயே இருப்பர் என்பது இதன் பொருள்
சங்கடங்கள் நீங்க
ஒருவரைப் பார்த்து வாழ்க்கையில் நீங்கள் அடையும் சங்கடங்களைச் சொல்லுங்கள் என்றால் ஒரு பெரிய பட்டியல் வரும். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பட்டியல் வரும். ஆகவே சங்கடங்களைப் பற்றிய விளக்கமே தேவை இல்லை. அனைவருக்கும் இது புரியும்.
ஆகவே சங்கடங்களை விலக்க ஒரு எளிய வழி:
தினமும் காலை நேரத்தில்,
ஹரம் ஹரிம் ஹரிச்சந்த்ரம் ஹனுமந்தம் ஹலாயுதம் |
பஞ்சகம் வை ஸ்மரோந்நித்யம் கோர சங்கட நாசனம் ||
என்று உச்சரிப்பதேயாகும்.
ஹரன், ஹரி, ஹரிச்சந்திரன், ஹனுமந்தன், ஹலாயுதன் ஆகிய ஐந்து பேரையும் உச்சரித்தால் கோரமான சங்கடங்கள் விலகும் என்பது இதன் பொருள்.
மஹாபாதகம் நசிந்து போக
மஹாபாதகங்களை நினைத்தாலேயே நடுக்கம் வரும். அவை எவை?
அந்தணரை (அந்தணர் உள்ளிட்டோரை) கொலை செய்வது, தங்கம் (உள்ளிட்டவற்றை) திருடுவது, மது அருந்துவது, குரு மனைவி (அல்லது இன்னொருவர் மனைவி)யுடன் தகாத உறவு கொள்வது), மேலே சொன்ன பாதகங்களைச் செய்தோருடன் தொடர்பு கொள்வது ஆகியவை பஞ்சமகா பாதகம் என்று சாந்தோக்ய உபநிடதமும் உஸான ஸ்மிருதியும் கூறுகின்றன.
காம, க்ரோத, லோப, மோஹ, மத, மாத்ஸர்யம், அஹங்காரம் ஆகிய ஏழும் சப்த தோஷங்கள் என்று கூறப்படுகின்றன.
இப்படி பல பாதகங்களும் தோஷங்களும் நம்மைச் சொல்லொணா துன்பங்களை அனுபவிக்க வைக்கும்.
இந்த மஹாபாதகம் நசிக்க ஒரு எளிய வழி – தினமும் காலையில்
அஹல்யா த்ரௌபதி தாரா குந்தி மண்டோதரி ததா |
பஞ்சகம் நாம ஸ்மரேந்நித்யம் மஹாபாதக நாஸனம் ||
என்று உச்சரிப்பதேயாகும்.
அஹல்யா, த்ரௌபதி,தாரா, குந்தி, மண்டோதரி ஆகிய ஐந்து நாமங்களையும் உச்சரித்தால் மஹாபாதகம் நசியும் என்பது இதன் பொருள்.
அஹல்யா,தாரா, மண்டோதரி, சீதா, த்ரௌபதி என்று உச்சரிக்கலாம் என இன்னொரு ஸ்லோகம் மூலம் அறிகிறோம்.
ஆக இந்த மூன்று ஸ்லோகங்களையும் சில விநாடிகளில் கூறினால் நமது வாழ்க்கையில் சௌபாக்யம் பெறலாம்; சந்தோஷமாக கீர்த்தியுடன் வாழலாம்! இது ஆன்றோர் வாக்கு.
,இவற்றைக் காலையில் தினமும் உச்சரித்து, பலனை அடைந்து, இது சரிதான் என்பதை மெய்ப்பிக்க வேண்டியது நாம் தானே!
அந்தஸ்து, பால், இனம், ஜாதி, பணம் எதுவும் தேவையில்லை இவற்றை உச்சரிக்க! மனம் இருந்தால் மார்க்கமுண்டு -சில விநாடிகள் போதும் நாம் வளமாக வாழ! செய்வோம். செழிப்போம்!