அந்தப் பேரழகியின் அழகு தான் அழகு;  ஸ்டைலு தான் ஸ்டைலு! (Post.14,113)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,113

Date uploaded in Sydney, Australia – –19 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

கல்கி ஆன் லைனில் 10-1-25 அன்று பிரசுரிக்கப்பட கட்டுரை

TRENDING TALK OF THE WORLD

அந்தப் பேரழகியின் அழகு தான் அழகு;  ஸ்டைலு தான் ஸ்டைலு!

 ச. நாகராஜன் 

கோல்டன் க்ளோப் விருதுகள் அகில உலக திரைப்பட மற்றும் தொலைக்காட்சி  நடிக நடிகையர், கலைஞர்களுக்குத் தரப்படும் பெருமை மிக்க விருதாகும்.1944ல் தொடங்கப்பட்ட இது வருடா வருடம் ஜனவரி மாதம் வழங்கப்படுகிறது.

இதைப் பெற்றவர்களுக்கான  மதிப்பே தனி தான். 85 நாடுகளில் உள்ள 334 பொழுதுபோக்கு பகுதிகளை எழுதிவரும் பத்திரிகையாளர்கள் வெற்றி பெற்றவரைத் தேர்ந்தெடுப்பர். 2025 ஜனவரி 5ம் தேதி நடந்த விழாவை உலகமே கண்டு ரசித்தது. இந்த விழாவில் உலகில் உள்ளோர் அனைவரும் கவனிப்பது இதற்கு வரும் நடிகையர் மற்றும் பிரபலங்களின் ஸ்டைலைத் தான்.

இந்த வருடம் இந்தத் தருணத்தில் அனைவரின் நினைவிலும் தவழ்ந்தவர் ஸ்டைல் ராணி மர்லின் மன்ரோ தான். உலக பத்திரிகைகள் அனைத்தும் அவரை நினைவு கூர்ந்து அவரைப் பற்றி எழுதியுள்ளன.

ஒரு பெண்ணுக்கான நெருங்கிய தோழிகள் வைரமும் ஸ்டைலும் தான் என்பது உலகப் பழமொழி.

இந்த ஸ்டைலில் அதிசயமான உயரத்தில் ஏறி இறங்கவே இறங்காத ஒரே பேரழகி மர்லின் தான்.

மர்லினின் மரணத்தின் போது அவர் ஐந்து அடி ஐந்தரை அங்குல உயரம் இருந்தார். எடை 117 பவுண்டுகள். அவரது உடல் அளவு 37-23-36      

இது ஸ்டுடியோ தெரிவித்த அளவு அவரது ஆடை தயாரிப்பாளர் தந் அளவு : 35-22-35 இந்த அளவு இருக்கும் அழகியை ஹவர்க்ளாஸ் ஃபிகர் (hourglass figure) என்பார்கள். இப்படிப்பட்ட பேரழகி உலகிலேயே இல்லை!

மர்லின் மன்ரோ செவன் இயர் இட்ச் என்ற படத்தில் அணிந்த வெண்ணிற ஆடை 2011ஆம் ஆண்டு ஏலத்திற்கு விடப்பட்ட போது அதை டெபி ரெய்னால்ட்ஸ் நாற்பத்திமூன்று லட்சம் டாலர் (இன்றைய மதிப்பு 36 கோடியே 89 லட்சத்து 74,400 ரூபாய்) கொடுத்து வாங்கினார்.

நார்மா ஜீன் என்பது அவர் இயற்பெயர். (பிறப்பு 1-6-1926 மறைவு: 5-8-1962) இளம் வயதில் அவர் அரசை நம்பி வயிறு வளர்க்க வேண்டிய அனாதை ஆனார். அவரது பேரழகை பிரமிப்புடன் கண்ட சிலர், மன அடிமை ஆக்கும் மைண்ட் டாக்டர்களின் கட்டுப்பாட்டில் அவரை சிக்க வைத்தனர். அழகு சிகிச்சை ஒன்றை மேற்கொண்ட அவர் ‘அழகி’யிலிருந்து பேரழகியாக மாறினார். மர்லின் மன்ரோ என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். பட வாய்ப்புகள் வந்து குவிந்தன. ஹாலிவுட்டையே அவர் வருகை ஒரு கலக்கு கலக்கி விட்டது..

‘ஜென்டில்மென் ப்ரிஃபெர் ப்ளாண்ட்ஸ்’ என்ற படத்தில் தன் அழகு மூலம் எதையும் சாதித்துக் கொள்ள விரும்பும் ஒரு அழகியாக மர்லின் தோற்றமளித்தார். ஆனால் நிஜ வாழ்க்கையிலும் அவர் இதையே செய்ய வேண்டும் என ‘மைண்ட் டாக்டர்கள்’ அவருக்குக் கூறி வந்தனர். இதனால் அவர் வாழ்க்கையே துயரமான ஒன்றாக மாறியது அவர் மரணம் எப்படி ஏற்பட்டது என்பது இன்று வரை யாருக்கும் நிஜமாகத் தெரியவில்லை.

 வருடா வருடம் ஸ்டைல் ராணிகள் வருவார்கள்; போவார்கள். ஆனால் என்றுமுள்ள ஒரே ஸ்டைல் ராணி மர்லின் தான். 

அவர் அழகு அழகு தான்; ஸ்டைலு ஸ்டைலு தான்! அதை விஞ்ச ஒருவரும் இன்று வரை இல்லை.

அதைத் தான்  க்ளோபல் அவார்டின் போது அனைவரும் பேசிக் கொண்டனர்.

**

தமிழ் தெரியுமா ?1812025 (14,112)

Written by London Swaminathan

Post No. 14,112

Date uploaded in Sydney, Australia – 18 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்

Across

1.சைவர்களுக்கு இதுதான் கோவில்

 3.இயற்பெயர் சித்தார்த்தன் right to left,

 4. இது இல்லாத உணவுப்பண்டம் குப்பையிலே right to left , 

5. சரஸ்வதி மஹாலைத் தஞ்சசையில் தோற்றுவித்தவர் 

 6. ஒளி , என்பதன் ஸம்ஸ்க்ருத்ச் சொல்; சபரி மலையில் பொங்கல் அன்று தோன்றும் right to left

Down

1. எட்டு வகை சித்திகளை அடைந்தோர்  

2. பிரம்மாவின் தொழில்

3. குதிரை

4. ஊட்டி go down 

4. நாம் வாழும் பெருநிலப்பரப்புArrow Symbol Clipart | Free Download ... ,  go up

5. சுஸ்ருதர் போல ஆயுர்வேத நூலை யாத்தவர் go up Arrow Symbol Clipart | Free Download ...,

6. ரத்தம் இல்லாவிடில் உடலில் ஏற்படும் நோய்Arrow Symbol Clipart | Free Download ... go up

18-1-25

 1      2  
       
       
     3    4Arrow Symbol Clipart | Free Download ...
       
       
  5Arrow Symbol Clipart | Free Download ...      6Arrow Symbol Clipart | Free Download ...

விடைகள்

சி 1 ம்ப2ம்
 த்  டை 
 த  ப் 
 ர்த்பு 3ப்உ4
 க   
 ர  வி கை
ச5 போஜிதிசோ 6

—subham—

Tags Tamil CW, 1812025

அரசே நான் வேண்டுதல் கேட்டு அருள்; வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை-12 (Post.14,111)

Written by London Swaminathan

Post No. 14,111

Date uploaded in Sydney, Australia – 18 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும் – என்று துவங்கும்  ராமலிங்க சுவாமிகளின் பாடலைத் தொடர்ந்து ஆராய்வோம் .

ஐந்தாவது பாடலில் மூன்றாவது முறையாக இறந்து போனவர்களை உயிர்ப்பிக்கும் சக்தியை வள்ளலார் வேண்டுகிறார்; வள்ளுவர் போல வள்ளலாரும் கொல்லாமையை வலியுறுத்துகிறார்

வள்ளுவரையும் வள்ளலாரையும் பற்றிப்  பேசுவதற்கு வெஜிட்டேரியன் களுக்கு மட்டுமே உரிமை உள்ளது ; ஏனையோர் பாசாங்கு செய்யும், தன்னைத்தானே ஏமாற்றி உலகையும் ஏமாற்றும், கடையவர்கள் என்பதில் ஐயமில்லை.

5. அரைசேநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகமகிழ்தல்வேண்டும்

வரைசேர்எவ் வுலகமும்ஓர் ஒழுக்கமுறல் வேண்டும்

மடிந்தாரை மீளவும்நான் வருவித்தல் வேண்டும்

புரைசேரும் கொலைநெறியும் புலைநெறியும் சிறிதும்

பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்துவத்தல் வேண்டும்

உரைசேர்மெய்த் திருவடிவில் எந்தாயும் நானும்

ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.

*****

6. அடிகேள்நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

அண்டமெலாம் பிண்டமெலாம் கண்டுகொளல் வேண்டும்

துடிசேர்எவ் வுலகமும்எத் தேவரும்எவ் வுயிரும்

சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும்

படிவானும் படைத்தல்முதல் ஐந்தொழிலும் ஞானம்

படைத்தல்முதல் ஐந்தொழிலும் நான்புரிதல் வேண்டும்

ஒடியாத திருவடிவில் எந்தாயும் நானும்

ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.

ஆறாவது பாடலில் தான் உருவாக்கிய சுத்த சிவ சன்மார்க்கத்தைப் பரப்பும் சக்தியை வள்ளலார் வேண்டுகிறார் ; சித்தர்களைப் போல படைக்கும் சக்தியையும் வேண்டுகிறார் .

பாம்பாட்டிச் சித்தர் பாடலின் தாக்கத்தினை இந்தச் செய்யுளில்  காணலாம் ; சொற்களில் கூட ஒற்றுமை இருப்பதால் அந்த சித்தர் பாடலினை எதிரொலிக்கும் பாடல் இது என்பதில் ஐயமில்லை ;இதோ அந்த சித்தர் பாடல் :

செப்பரிய மூன்றுலகுஞ் செம்பொன் னாக்குவோம்

செங்கதிரைத் தண்கதிராய்ச் செய்து விடுவோம்

இப்பெரிய உலகத்தை இல்லாமற் செய்வோம்

எங்கள் வல்ல பங்கண்டுநீ யாடு பாம்பே.

32:

வேதன்செய்த சிருஷ்டிகள்போல் வேறுசெய்குவோம்

வேதனையு மெங்கள் கீழே மேவச் செய்குவோம்

நாதனுடன் சமமாக நாங்களும் வாழ்வோம்

நாங்கள் செய்யும் செய்கையிதென் றாடு பாம்பே.

33:

அறுபத்து நாலுகலை யாவு மறிந்தோம்

அதற்குமே லொருகலை யான தறிந்தோம்

மறுபற்றுச் சற்றுமில்லா மனமு முடையோம்

மன்னனே யாசானென் றாடு பாம்பே.

34:

சிறுபுலி யானையாளி சிங்க முதலாய்ச்

சிற்றடிக்குக் குற்றேவல் செய்யச் சொல்லுவோம்

வீறுபெருங் கடவுளை எங்களுடனே

விளையாடச் செய்குவோமென் றாடு பாம்பே.– பாம்பாட்டிச் சித்தர்

*****

7. அம்மாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

ஆணவம்ஆ தியமுழுதும் அறுத்துநிற்றல் வேண்டும்

இம்மாலைத் தத்துவங்கள் எல்லாம்என் வசத்தே

இயங்கிஒரு தீமையும்இல் லாதிருத்தல் வேண்டும்

எம்மான்நான் வேண்டுதல்வேண் டாமையறல் வேண்டும்

ஏகசிவ போகஅனு போகம்உறல் வேண்டும்

தம்மானத் திருவடிவில் எந்தாயும் நானும்

சார்ந்துகலந் தோங்குகின்ற தன்மையும்வேண் டுவனே.

ஏழாவது பாடலில் தாயைக் குறிப்பிடுகிறார் ; அம்மா என்று ஜெகன் மாதாவை, ஜகஜ்ஜனனியை அழைத்து தீய குணங்களை மாய்க்க   வேண்டுகிறார் வள்ளலார்.

*****

8. அச்சாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

ஆறந்த நிலைகளெலாம் அறிந்தடைதல் வேண்டும்

எச்சார்பும் ஆகிஉயிர்க் கிதம்புரிதல் வேண்டும்

எனைஅடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும்

இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே

எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்

உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும்

உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும்வேண் டுவனே.

எட்டாவது பாடலில் யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற திருமூலரின் கருத்தினைப் பார்க்கிறோம்.

****

9. அறிவாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

ஐந்தொழில்நான் புரிந்துலகில் அருள்விளக்கல் வேண்டும்

செறியாத கரணமெலாம் செறித்தடக்கல் வேண்டும்

சித்தாந்த வேதாந்தப் பொதுசிறத்தல் வேண்டும்

எறியாதென் எண்ணமெலாம் இனிதருளல் வேண்டும்

எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்களித்தல் வேண்டும்

பிறியாதென் னொடுகலந்து நீஇருத்தல் வேண்டும்

பெருமான்நின் தனைப்பாடி ஆடுதல்வேண் டுவனே.

ஒன்பதாவது பாடலில் மீண்டும் பாம்பாட்டிச் சித்தரின் கருத்தினை வள்ளலார் எதிரொலிக்கிறார் அபூர்வ சக்திகளை வேண்டுகிறார்.

****

10. அருளாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும்

மருளாய உலகமெலாம் மருள்நீங்கி ஞான

மன்றிடத்தே வள்ளல்உனை வாழ்த்தியிடல் வேண்டும்

இருளாமை உறல்வேண்டும் எனைஅடுத்தார் சுகம்வாய்ந்

திடல்வேண்டும் எவ்வுயிரும் இன்படைதல் வேண்டும்

பொருளாம்ஓர் திருவடிவில் உடையாயும் நானும்

புணர்ந்துகலந் தொன்றாகிப் பொருந்துதல்வேண் டுவனே.

பத்தாவது பாடலில் திருமூலர் மற்றும் பராதியாரைப் போல உலகம் முழுதும் வாழ வேண்டும்லோகா சமஸ்தா சுகினோ பவந்து என்று வள்ளலார் கூறுகிறார்.

*****

11. அமலாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

ஆடிநிற்குஞ் சேவடியைப் பாடிநிற்க வேண்டும்

எமனாதித் தடைஎன்றும் எய்தாமை வேண்டும்

எல்லாம்செய் வல்லதிறன் எனக்களித்தல் வேண்டும்

கமையாதி அடைந்துயிர்கள் எல்லாம்சன் மார்க்கம்

காதலித்தே திருப்பொதுவைக் களித்தேத்தல் வேண்டும்

விமலாதி உடையஒரு திருவடிவில் யானும்

விமலாநீ யுங்கலந்தே விளங்குதல்வேண் டுவனே.

கடைசியாக வரும் பதினோராவது பாடலில் எல்லாம் செய்யும் திறனோடு சன்மார்க்கத்தைப் பரப்பும் சக்தியை வேண்டுகிறார். வள்ளலாரது கோரிக்கைகளில் சன்மார்க்கக் கோரிக்கை நிறைவேறியது என்றே சொல்ல வேண்டும்; இன்று நாம் எல்லோரும் வள்ளலாரைப் பற்றியும் சன்மார்க்கம் பற்றியும் பேசுகிறோம்; பாடுகிறோம்; போற்றுகிறோம்.

—SUBHAM—

Tags- அரசே,  அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள்; வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை-12

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 8 (Post No.14,110)

Written by London Swaminathan

Post No. 14,110

Date uploaded in Sydney, Australia – 18 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Boomerang

பழங்குடி மக்களின் வினோத ஆயுதங்களும் இசைக் கருவிகளும்

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 8

ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் ஒன்றுமறியாத அப்பாவிகள் ; குடியேறிய வெள்ளைக்காரர்கள் அவர்களைப் படுகொலை செய்து குவித்தனர். கொலைக் குற்றவாளிகளை விட மோசமாக நடத்தி கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பூட்டி ஒருவரோடு ஒருவரை  சங்கிலியால் பிணைத்தனர். அவர்களுடைய நிலங்களையெல்லாம் பிடுங்கிக் கொண்டனர்.

இப்பொழுது ஆஸ்திரேலியாவில் எங்கு சென்றாலும் அவர்களுடைய பெயர்களை எழுதி  இது அவர்களுக்குச் சொந்தமானது என்பதை நாங்கள் நன்றியுடன் நினைவு கூறுகிறோம் என்று எழுதிப்போட்டுள்ளனர். எல்லாக் கல்வி நிறுவனங்களிலும் பொது இடங்களிலும், கட்டிடங்களிலும்பெரிய சூப்பர் ஸ்டோர்களிளிலும், ஷாப்பிங் மால்களிலும்  , இந்த மன்னிப்புக் கேட்கும் தொனியைக் காணலாம்; படிக்கலாம்.

அந்தமான் தீவு ஜாரவா இன மக்கள் அல்லது ஆப்ரிக்க காட்டுவாசிகள் போல மனிதர்களைத் தாக்கியதாக வரலாறு இல்லை; அவர்களுடைய நிலத்தில் வீடு கட்டி வசித்த போதும் பண்ணைகளை அமைத்தபோதும் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்களைப் பற்றிய விநோதச் செய்திகள் :

·         Age

Aboriginal Australians are one of the oldest living populations in the world, having lived in Australia for over 65,000 years. 

·         Language

There are over 250 distinct language groups among Aboriginal Australians

வெவ்வேறு இனமக்கள் வெவ்வேறு 250 மொழிகளைப் பேசுகின்றனர் வெவ்வேறு பெயர்களைக் கொண்டுள்ளனர் இதிலிருந்து அவர்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் ஒரே இடத்திலிருந்து குடியேறவில்லை என்று தெரிகிறது.

ஐரோப்பா கண்டத்தைவிட ஆஸ்திரேலியா பெரியது ; ஆகையால் பல மொழிகள் இருப்பதில்  வியப்பில்லை; அவர்களுக்கு எழுத்துக்கள் இல்லாததாலும் குறைவான ஜனத்தொகையாலும் பல மொழிகள் அழிந்துவிட்டன.

கதைகள் ,பாடல்கள் மூலம் இவர்கள் காலம் காலமாக பண்பாட்டினைப் பாதுகாத்து வருகின்றனர் ஆஸ்திரேலியா முழுதும் பேட்டைகளின் பெயர்களும் வீதிகளும் பழைய பழங்குடி இன மொழிகளில் இருக்கின்றன.  .

இவர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையினை நடத்தினார்கள்

அவர்கள் 40 முதல் 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு வந்துவிட்டனர்; வெள்ளைக்காரர்கள் வந்து 250 ஆண்டுகள்தான் ஆகிறது .

அவர்கள் உருவாக்கிய பூமராங் விஷ்ணுவின் சுதர்சன சக்கரம் போன்றது ; எதிரியைத் தாக்கிவிட்டுத் திரும்பி வந்துவிடும்!

அவர்கள் தனக்கென்று டிட்ஜரீடு என்ற இசைக் கருவிகளையும் உருவாக்கி ஆடிப்பாடி மகிழ்ந்தனர் ; காட்டு விலங்குகளை வேட்டையாடி புசித்தனர்.

பழங்குடி மக்களின் ஓவியங்கழும் வடிவங்களும் வேறு எதனுடனும் ஒப்பிட முடியாதவை. அவர்கள் உடலில் விபூதி போல வெள்ளைப் பொடிகளை வரி வரியாகப்  பூசுகின்ற்னர்.

சில வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் பார்க்கையில் இந்து மதத்துக்கு நெருங்கி வருகின்றனர் .

எண்ணிக்கையைப் பார்க்கையில் குடியேறிய வெள்ளைக்காரர்களை விட மிகவும் குறைவு.

·         Smoking ceremonies

Smoking ceremonies are used in rituals to cleanse people and areas of bad spirits. 

·         Marn Grook

Aboriginal Australians played Marn Grook, a game using possum hide as a ball, long before it inspired Australian Rules Football

இந்துக்களைப்போல தீ மூட்டி கெட்ட ஆவிகளை விரட்டுகின்றனர். இது இந்துக்களின் யாக யக்ஞங்களைப் போன்றது.

கால் பந்து போல ஒரு விளையாட்டினையும் கண்டுபிடித்தனர். போஸ்ஸம் என்னும் விலங்கின் தோலினைக்கொண்டு பந்துகளை செய்தனர் .இந்துப் பெண்களின் பூப்பந்து விளையாட்டினை இது நினைவு படுத்தும்.

இப்போது இந்த நாட்டிற்குள்ள ஆஸ்திரேலியா என்ற பெயர் வெள்ளை ஆக்கிரமிப்பாளர்கள் கொடுத்த பெயர் ஆகும். இந்தச் சொல்லுக்கு தெற்கேயுள்ள நிலப்பரப்பு என்பது பொருள் ஆகும்

Europeans called it ‘New Holland’—a name penned by Dutch seafarer Abel Tasman in 1644.The Latin term for ‘Australia’ is ‘Terra Australis Incognita,’ which means “unknown southern land,” but it had a respected name by First Nations peoples long before.

Western Australia’s Kimberley region uses the word ‘Bandaiyan’ to refer to the country.

பெரிய நிலப்பரப்பு என்பதால் ஒரே பெயர் முதலில் இல்லை; மேற்கு ஆஸ்திரேலிய கிம்பர்லி மக்கள் பண்டையன் என்ற பெயரைப் பயன்படுத்தினர் இது பழமை என்னும் தமிழ்ச் சொல்லிலிருந்து வந்திருக்கலாம்

பண்டைய = புராதன= பழமையான

தர்மம் ,புண்ணியம் போன்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களை எப்படி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முடியாதோ அது போல பல பழங்குடி இன  மக்களின் சொற்களுக்கு ஆழமான பொருள் உண்டு; ஒரே ஆங்கிலச் சொல்லால் விளக்க முடியாது.

*******

My Old Article Attached

ஆஸ்திரேலியப் பழங்குடி கலாசாரத்தில் ‘அக்னி’ (Post No. 2523)

Research Article written by london swaminathan

Post No. 2523; Date: 9th February 2016

இந்துக்களின் வேதத்தில் இந்திரனுக்கு அடுத்தபடியாக, அதிகம் போற்றப்படுபவர் அக்னி பகவான். வேத காலத்தில் வீட்டிலும், அரண்மனைகளிலும், கோவில்களிலும் 400 வகையான யாக, யக்ஞங்கள் நடத்தப்பட்டன. ஆஸ்திரேலியப் பழங்குடிகள் அக்னி வழிபாடு செய்யாவிட்டாலும், இந்துக்களைப் போல, தீயை ஒரு புனிதப் பொருளாகவே கருதினர். மேலும் ஒரு ஒற்றுமை. வேத கால பிராமணர்கள், மந்திரம் சொல்லி, அரணிக்கட்டையை வைத்து தீயை மர ஓட்டைகளிலிருந்து கடைந்தெடுத்தது போலவே பழங்குடி மக்களும் செய்தனர். ஆயினும் இவ்வழக்கம் இந்தியா, ஆஸ்திரேலியா தவிர மாயா நாகரீகத்தில் கூட உள்ளது. ஆக, யார் யாரிடமிருந்து கடன் வாங்கினர் என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயமே.

அக்னியை உண்டாக்க பழங்குடியினர், அரணியைப் போல வுள்ள கருவிகளையே பயன்படுத்தினர். அவர்கள், இதற்காகப் பலவகைக் கருவிகளைச் செய்து, தீக்குச்சி போலத் தோன்றும் பெரிய குச்சிகளையும் வைத்திருந்தனர். தீப்பொறி வந்தவுடன் அதைக் கொளுத்திக் கொள்வர்.

எதையும் வீணடிக்காதே

நான் சிட்னி மியூசியத்தில், ஆஸ்திரேலிய பிரிவை பார்த்துக் கொண்டிருக்கையில் எனது கவனத்தை ஈர்த்த மற்றொரு விஷயம் – எதையும் வீணடிக்காதே என்ற பழங்குடி மக்களின் வாசகமாகும்.

இந்துக்கள், எல்லா பொருள்களையும் கடவுளின் பொருளாகப் பார்ப்பதால் எதையும் வீணடிக்கமாட்டார்கள். ‘ஈஸாவாஸ்யம் இதம் சர்வம்’ – என்று உபநிஷதம் கூறுவதால், காலையில் படுக்கையிருந்து எழுந்து பூமி  மீது பாதங்களை வைக்கும் முன் ‘பாத ஸ்பர்சம் க்ஷமஸ்வமே’ (கால்களை உன் மீது வைக்கிறேன்; மன்னிப்பாயாக) என்று சொல்லித்தான் வைப்பர். கிணறு வெட்டுகையிலும், நிலத்தை உழும்போதும் பூமாதேவியிடம் மன்னிப்புக் கேட்பர். இப்படிக் காடு மலை, ஆறு, குளம், செடி கொடி, தோப்பு, துறவு எல்லாவற்றையும் ஈசனின் படைப்பாகப் பார்ப்பதால் எதையும் வீணடிக்க மாட்டார்கள். அளவுக்கு அதிகமாகச் சுரண்ட மாட்டார்கள். மிருகங்களைக்கூட, நாட்டிற்குள் நுழைந்து தொல்லை கொடுக்கையில் மட்டுமே வேட்டையாடுவர். சிட்னி மியூசியத்தில் இந்தக் கருத்தை பழங்குடி மக்களும் எழுதிவைத்தது சிந்தனையின் ஒருமைப்பாட்டைக் காட்டி நின்றது.

நீ நாட்டைப் போற்று, அது உன்னைப் போற்றும்!

என் கவனத்தை ஈர்த்த மற்றொரு போர்டு, நீ நாட்டைக் கவனி, அது உன்னைக் கவனிக்கும் – என்பதாகும். தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ( நீ அறத்தைக் காத்தால், அறம் உன்னைக் காக்கும்) என்ற இந்துமதக் கருத்தை இது பிரதிபலிக்கிறது. ஆஸ்திரேஇயப் பழங்குடி மக்கள், ‘நாடு’ என்று சொல்லுவது, அவர்களுடைய குழுக்களையாகும். ஆகநாம் மற்றவர்களைக் காப்பாற்றினால், அந்த  தர்மமே நம்மைக்  காக்கும் என்றும், இருக்கும் இயற்கை வளத்தை மிதமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் எண்ணுகின்றனர்.

ஒரு பழங்குடி மக்களிடையே இப்படி உயர்ந்த சிந்தனை இருப்பது அவர்களுடைய பழைய இந்துமத அடிப்படையைக் காட்டுவதாகவே எனக்குத் தோன்றியது. அதர்வண வேத பூமி சூக்தத்தில் மிக உயர்ந்த கருத்துக்கள் இருப்பதைக் காணலாம்.

அவர்களுடைய, மொழி, நடை உடை பாவனை போன்ற அனைத்தையும் காண்கையில் இது உறுதிப் படுகிறது.

இந்தியப் பழங்குடி மக்களிடையேயும் இப்படி இருப்பதைக் காணலாம். ஆயினும் 60,000 ஆண்டுகளாகத் தனித்து வாழ்ந்த இனங்கள் ஆகையால் பல வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்..

—subahm—

Tags-பழங்குடி மக்கள், வினோத ஆயுதங்கள், இசைக் கருவிகள், ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம், பாருங்கள்!- Part 8

முதல் அமெரிக்க விண்வெளி வீராங்கனை சாலி ரைட் பற்றிய திரைப்படம்! (Post No.14,109)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,109

Date uploaded in Sydney, Australia – –18 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

19-12-24 கல்கி ஆன் லைனில் வெளியான கட்டுரை

 விண்வெளி வீராங்கனை பற்றி சுடச்சுட ஒரு செய்தி

முதல் அமெரிக்க விண்வெளி வீராங்கனை சாலி ரைட் பற்றிய திரைப்படம்!

ச. நாகராஜன்

விண்வெளி ஆர்வலர்களுக்கு ஒரு குதூகலமான புத்தாண்டு நற்செய்தி வந்து விட்டது!

அமெரிக்காவின் முதல் விண்வெளிப் பெண்மணியான சாலி ரைட் பற்றிய ஒரு டாகுமெண்டரி திரைப்படம் 2025 சன்டான்ஸ் பிலிம் பெஸ்டிவலில் (Sundance Film Festival) இடம் பெறுகிறது. இது அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான உடாவின் தலைநகரான சால்ட் லேக் சிடியில் (Salt. Lake City, Utah) 2025 ஜனவரி 23 முதல் பிப்ரவரி 2ம் தேதி முடிய நடக்கவிருக்கும் திரைப்படத் திருவிழாவில் திரையிடப்படும்.

சன்டான்ஸ் இன்ஸ்டிடியூட் என்பது வளர்ந்து வரும் திரைப்படக் கலைஞர்களை உலகிற்கு இனம் காண்பிக்கவும் அவர்களை ஊக்குவிக்கவும் அவர்களுக்கு நிதி உதவி அளிக்கவும் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு நிறுவனம்.

1981ல் ராபர்ட் ரெட்போர்ட் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த லாப நோக்கமற்ற நிறுவனம் 1985 முதல் வளர்ந்து வரும் கலைஞர்கள் எடுத்த திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து இந்தத் திருவிழாவில் திரையிட்டு வருகிறது.

சுமார் 30 லட்சம் டாலர் (இந்திய ரூபாயில் இருநூற்றி ஐம்பத்து நாலரை கோடி ரூபாய்) நிதி உதவியை இது வரை இந்த நிறுவனம் வளர்ந்து வரும் திரைப்படக் கலைஞர்களுக்கு அளித்துள்ளது.

சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்கள் 2025ல் திரையிடப்படுகின்றன.

அவற்றில் சாலி ரைட் பற்றிய திரைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சாலியின் விண்வெளி மற்றும் பூமி வாழ்க்கையை சித்தரிக்கும் இதில் அவரது நெருங்கிய நண்பர்கள், சகாக்கள் ஆகியோரது பேட்டிகளும் இடம் பெறுகிறது.

உண்மையான சாலி ரைட் யார் என்பதை இந்தப் படத்தைப் பார்த்துப் புரிந்து கொள்வதோடு ஒரு உண்மையான ஹீரோயின் எதையெதையெல்லாம் தியாகம் செய்து தனது எல்லையைக் கடக்க முடியும் என்பதை இந்தப் படம் சித்தரிக்கும்.

இதில் இதுவரை வெளி உலகம் அறிந்திராத மறைக்கப்பட்ட  அவரது நீண்ட கால லெஸ்பியன் காதல் வாழ்க்கையும் இடம் பெறுகிறது.

 டாம் ஓஷாகுனெஸ்ஸி என்ற அவரது தோழியுடனான அவரது உறவு அவர் மறையும் வரை யாருக்கும் தெரியாது.

“தனது நெருங்கிய நண்பர்களிடமிருந்து கூட இவர் அதை மறைத்தார் – இதுவரை பார்த்திராத கோடிக் கணக்கான மக்களின் நலனுக்காக” என்கிறார் இந்தத் திரைப்படத்தை இயக்கிய கிறிஸ்டின் காஸ்டான்டினி. இந்தப் படமானது நேஷனல் ஜியாகிராபிக் டாகுமெண்டரி தயாரிக்கும் படம் என்பது குறிப்பிடத்தகுந்தது,


கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1951-ம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி பிறந்தார் சாலி ரைட்.

நல்ல சூழ்நிலையில் வளர்ந்த சாலி ரைட் டென்னிஸ் விளையாடுவதில் சிறந்து விளங்கியதோடு. அறிவியலில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். விண்வெளி என்றால் போதும் அடங்காத ஆர்வத்துடன் அனைத்துச் செய்திகளையும் கவனிப்பார்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா 1977ல் விண்வெளி செல்ல விரும்புவோருக்கு அழைப்பு விடுத்தது.

பெண்களையும் விண்வெளிக்கு நாஸா அனுப்ப இருக்கும் செய்தியைப் பார்த்தவுடன், அவர் நாஸாவிற்கு தனது விண்ணப்பத்தை அனுப்பி விட்டார்.

1977, ஜூன் மாத இறுதியில் நாஸா 8079 விண்ணப்பங்களைப் பெற்றது. அதில் 208 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இறுதித் தேர்வில் 35 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விண்கலத்தின் ரொபாட்டின் கரத்தை இயக்குவதில் அவர் நிபுணராகத் திகழ்ந்தார். இதற்கான காரணம் அவரது டென்னிஸ் விளையாட்டு தான். கண்ணுக்கும் கைகளுக்கும் இடையே உள்ள இசைவு டென்னிஸ் விளையாட்டில் மிக அதிகம் தேவைப்படும். அதுவே ரொபாட்டை இயக்க அவருக்குப் பெரிதும் உதவியாக ஆனது. சாலி குழுவாக இணைந்து செயல் படுவதிலும் நல்ல பெயரைப் பெற்றார்.

விண்வெளிக்குச் செல்ல நாஸா அவரைத் தேர்ந்தெடுத்து அறிவித்தது.

1983-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ம் தேதி சாலஞ்சர் விண்கலம்

விண்ணில் ஏவப்பட்ட போது அதில் பயணப்பட்ட சாலி ரைட் உலகில் விண்ணில் பறந்த முதல் அமெரிக்கப் பெண்மணி ஆனார். அவரே விண்ணில் பறந்த மிகக் குறைந்த வயதினர் என்ற பெருமையையும் பெற்றார்.

அவர் விண்ணில் பறந்த தினத்தன்று ஏராளமானோர் குதூகலத்துடன் “ரைட் சாலி ரைட்” (Ride Sally Ride) என்ற ஆங்கில வார்த்தைகளுடன் கூடிய ‘டி’ ஷர்ட்டுகளை அணிந்து அவரை வழியனுப்பி வைத்தனர். ஆறு நாட்கள், இரண்டு மணி 23 நிமிடங்கள் 59 விநாடிகள் இந்தப் பயணம் நீடித்தது.

உலகமே கொண்டாடும் சிறந்த விண்வெளி வீராங்கனை ஆகி விட்டார் சாலி ரைட்!

மீண்டும் 1984-ல் அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி அவர் சேலஞ்சர் விண்கலத்தில் எட்டு நாட்கள் பறந்தார். 197.5 மணி நேரத்தில் சேலஞ்சர் 132 முறை பூமியை ஓடுபாதையில் சுற்றி வலம் வந்தது.

இந்த இரு பயணங்களிலும் சுமார் 343 மணி நேரங்கள் அவர் விண்வெளியில் பறந்திருந்தார்.

28-1-1986ல் விண்ணில் ஏவப்பட்ட சேலஞ்சர் விண்கலம் கிளம்பிய சில வினாடிகளிலேயே வெடித்துச் சிதறியதால் அவரது மூன்றாவது பயணம் திட்டமிட்டபடி நடக்கவில்லை.

சக விண்வெளி வீர்ரான ஸ்டீவ் ஹாலியை அவர் மணந்தார்.

என்றாலும், இளம் வயதுத் தோழியான டாம் ஓஷானெஸியுடன் அவர் ஒரு இரகசிய தொடர்பை நீண்ட காலம் கொண்டிருந்தார். இருவரும் இணைந்து டென்னிஸ் விளையாடுவது வழக்கம். இது அந்தரங்க ஓரினச் சேர்க்கை தொடர்பாக பின்னால் மாறி விட்டது அவர் இறந்த பின் அவரது மறைவுக் குறிப்பில் இடம் பெற்ற போது தான் உலகம் இந்த ரகசியத்தை அறிந்தது.   

அவர் கான்ஸர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததை யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்தார் கீமோதெராபி, ரேடியேஷன் தெராபி ஆகிய சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்ட போதிலும் கணையத்தில் ஏற்பட்ட புற்று நோயால் அவர் லா ஜொல்லா என்ற இடத்தில் உள்ள தனது இல்லத்தில் 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ம் தேதி மரணமடைந்தார்.

61 வயது வாழ்ந்த சாலியின் வாழ்க்கை வரலாறு அனைத்துப் பெண்மணிகளுக்கும் விண்வெளி பற்றிய ஆர்வத்தை ஊட்டும். உலகமே அவரது வாழ்க்கை பற்றிய திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

*****

My Visit to Australian Museum in Sydney (Post.14,108)

Written by London Swaminathan

Post No. 14,108

Date uploaded in Sydney, Australia – 17 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

I went to the Australian Museum in Sydney for the second time in ten years. There were hundreds of people on 16-1-2025, though we had very heavy rain in the morning and on the previous day.

When I visited it in 2015, I focussed only on aboriginal culture. Now they have added a big Mineral and Gem collection. Over 1800 minerals, gems, meteorites, fossils are included in the collection. You may collect at the entrance , a free map and booklet about the museum.

The admission is FREE. Photography is allowed. I am a Londoner. We have also the famous British Museum, Victoria and Albert Museum, Science Museum, Natural History Museum , art galleries  in London, where the admission is FREE. Each one is huge, and you need may hours to go around it.

Australian Museum in Sydney is not huge. You may finish it within three hours. But the mineral section makes a big difference. We can’t see so many verities of Gems and Minerals in any other museum. The reason being Australia is at the top of the list in Opal and Sapphire production. All kinds of precious and semi-precious stones are found in Australia.

What’s on display?

Minerals: The gallery features over 1,800 rare and spectacular minerals, including gemstones, rare earth minerals, and human-made minerals

Rocks: The gallery includes some of the oldest rocks on Earth

Meteorites: The gallery includes Australian meteorites and tektites

Ornamental minerals: The gallery includes minerals that can be carved, shaped, or polished into decorative objects.

***

They have several electronic board games in the museum to attract children. On the top floor they have the pictures of people who made Australia a great country. The Dinosaur section looks very interesting with the details of their discovery in Australia.

Another speciality is the display of Australian birds and animals. Like British Museum , this museum also organises special exhibitions for which one has to buy tickets. During this summer, Australian Museum has organised an exhibition titled Machu Picchu and the Golden Empire of Peru.

Students of Australia will greatly benefit by visiting the museum.   Researchers in Mineral Sciences and gemmolgy will also benefit .

The museum has easy access by bus and trains.

***

Getting to the Australian Museum

Travelling to the Sydney Museum is relatively easy by train. Get a train to Central Station and then jump onto a City Circle train get off at Museum or St James station and walk across Hyde Park.

****

The nearest train stations are St James, Museum and Town Hall. Each are of equal distance to us and are an easy seven-minute walk. All three of these stations have lift access.

Opening hours

General Admission

The Australian Museum is open everyday, except Christmas Day.

Open daily: 10am – 5pm

Wednesday late nights: 10am – 9 pm

General enquiries

Telephone: +61 2 9320 6000

Mail: 1 William Street, Sydney NSW 2010 Australia

Visitor information: visit@australian.museum

Feedback: feedback@australian.museum

–subham—

Tags, My visit, Australian Museum, Sydney

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 7 (Post.14,107)

 Written by London Swaminathan

Post No. 14,107

Date uploaded in Sydney, Australia – 17 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆஸ்திரேலிய மியூஸியத்தில் அரிய ரத்தினங்கள்

பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு முறை சிட்னி நகரிலுள்ள ஆஸ்திரேலிய மியூஸியத்துக்கு நேற்று 16-1-2025 ல் சென்றேன்.

முதலில் நல்ல செய்தி — அனுமதி இலவசம் !

சிட்னியின் நகரப் பகுதியில் உள்ளது ; பஸ் வசதியும் ரயில் வசதியும் உண்டு .

நாங்கள் போனபோது நல்ல கூட்டம் ; மாலை ஐந்து மணி வரைதான் கண்காட்சி .

நான் ஒரு லண்டன்வாலா ; ஆகையால் முதலில் லண்டன் மியூசியங்களை ஒப்பிடுகிறேன் . லண்டனிலும் பிரிட்டிஷ் மியூசியம் விக்டோரியா- ஆல்பர்ட் மியூசியம், சயன்ஸ் மியூசியம் ,நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம் ஆகியவற்றுக்கு நுழைவுக் கட்டணம் இல்லை 

ஆனால் ஆஸ்திரேலிய மியூசியத்தில் உள்ளது போல பழங்குடி மக்களின் விரிவான கலாசாரத்தை அங்கு காணமுடியாது; சிட்னியில் மட்டுமே காண முடியும்.

ஆயினும் லண்டனில் கோஹினூர் வைரம் போன்ற அரச நகைகளைக் காண கட்டணம் உண்டு,  சில மியூசியங்களில் ரத்தினங்களையும் தாதுப் பொருட்களையும் இலவசப் பிரிவில் வைத்திருந்தாலும் சிட்னி போல அத்தனை ரத்தினங்களைக் காண முடியாது ; ஆஸ்திரேலிய மியூசியத்தில் மிகப்பெரிய ரத்தினக் களஞ்சியம் உள்ளது.

ரத்தினைக் கற்கள் , உலோகங்களின் தாதுக்கள், பலவகைக் கற்கள் பற்றி ஆராய்வோருக்கு, அறிய விரும்புவோருக்கு, இது ஒரு அறிவுச் சுரங்கம் .

புகைப்படம் எடுக்கவும் அனுமதி உண்டு .

பிரிட்டிஷ் மியூசியம் போலவே கட்டணம் கொடுத்துப் பார்க்கும் விஷேஷக் காட்சிகளையும் ஏற்பாடு செய்கிறார்கள்; நாங்கள் போனபோது தென் அமெரிக்க நாகரீகக் கண்காட்சி நடந்தது; அதற்கு மட்டும் கட்டணம் உண்டு.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் சென்றபோது பழங்குடிப் பிரிவினை மட்டும் ஆழமாகப் பார்த்தேன் இப்போது மினரல்- தாதுப்  பொருட்கள் பிரிவில் ரத்தினங்களை ஊன்றிப்  பார்த்தேன். பேரக் குழந்தைகள் விளையாடவும் பல விஞ்ஞானக் கருவிகளையும், எலெக்ட்ரானிக் போர்டுகளையும் வைத்துள்ளனர்.

வெளியே உள்ள கடையில் ரத்தினக் கற்களின் விலைகளைப் பார்த்தால் ஆயிரம் முதல் பதினாயிரம் டாலர் வரை விலை உள்ளது ; இதை ஒப்பிடுகையில் உள்ளே உள்ள ரத்தினங்கள் விலை மதிப்பு தெரியும்; ஒளிவிடும் ரத்தினங்களையும் (Fluorescent gems) காட்சிக்கு வைத்துள்ளனர் .

இங்குள்ள பொருட்களில், ரத்தினைக் கற்கள், தாதுக்கள் மட்டுமின்றி வானத்திலிருந்து விழுந்த விண்கற்களும் உள்ளன .

What’s on display?

Minerals: The gallery features over 1,800 rare and spectacular minerals, including gemstones, rare earth minerals, and human-made minerals

Rocks: The gallery includes some of the oldest rocks on Earth

Meteorites: The gallery includes Australian meteorites and tektites

Ornamental minerals: The gallery includes minerals that can be carved, shaped, or polished into decorative objects.

ஏனைய பிரிவுகளில் டைனோஸரஸ் எலும்புக்கூடுகள், ஆஸ்திரேலிய மிருகங்களின் பஞ்சு அடைக்கப்பட்ட பெரிய உருவங்கள், ஆஸ்திரேலியாவைக் கண்டுபிடித்து வளர்ச்சி பெற வைத்தவர்கள், பசிபிக் தீவுகளின் நாகரீகங்கள் முதலியன உள. பள்ளிக்கூட, கல்லூரி மாணவர்களுக்கும் அந்தந்தத் துறையில் ஆராய்சசி செய்வோருக்கும் விருந்து படைக்கும் பிரிவுகள் இவை.

நீங்கள் சென்றால் பழங்குடி கலாசாரத்தையும் 1800 ரத்தினக் கற்களையும் காணத் தவறாதீர்கள்; சிறுவர்களுடன் சென்றால் டைனோஸரஸ் பிரிவு முக்கியமானது. மொத்தத்தில் இரண்டு மணி முதல் மூன்று மணி நேரம் வரை போதும்; மேல் மாடியில் உணவுவிடுதியும் இருக்கிறது.

Opening Hours

Open Daily 10am – 5pm

Wednesdays Until 9pm

Closed Christmas Day

Free General Entry

Address

1 William Street

Sydney NSW 2010

Australia

Phone

+61 2 9320 6000

—SUBHAM—

TAGS- ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள், அதிசயம் பாருங்கள், Part 7,

ஆஸ்திரேலிய மியூஸியம்,  அரிய ரத்தினங்கள்

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள்; வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை-11 (Post.14,106)

Written by London Swaminathan

Post No. 14,106

Date uploaded in Sydney, Australia – 17 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்; வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை-11

அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்—என்ற ராமலிங்க சுவாமிகள் பாடல் மிகவும் பிரசித்தமானது; பள்ளிக்கூடப் பாடப் புஸ்தகங்களிலும் இடம்பெற்றறது;  மேலும் பல பாகவதர்களாலும் பாடப்பெற்றுள்ளது  ஆயினும் இந்தப்பாடல் முழுவதையும் படித்தால்தான் உண்மைப்பொருள் விளங்கும். வள்ளலார் பெருமான் நிறைய விஷயங்களை வேண்டுகிறார் . இந்தப்பாடலில்  பதினோரு செய்யுட்கள் உள்ளன. முக்கியப்பகுதிகளைக் காண்போம்; வள்ளலாரின் உண்மைக் கருத்தினை அறிவோம்.

திரு அருட்பா ஆறாம் திருமுறை /

021. சுத்த சன்மார்க்க வேண்டுகோள்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1. அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்

எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே

எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்

செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்

திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்

தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்

தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.

தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்- வள்ளலார்

பிழை  பொறுத்தல் என்பதை மாணிக்கவாசகர், அப்பர் முதல் தேவராய சுவாமிகள் வரை எல்லோரும் சொல்லி வேண்டுகின்றனர்.  ஆகையால் பெரியோர்களும் பிழை செய்ததை, செய்வதை ஒப்புக்கொள்கின்றனர் அல்லது நம்மைப் போன்ற சாதாரணமக்களுக்காக அந்த வாசகத்தையும் சேர்த்தனர் என்றும் கொள்ளலாம்

சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம் பெரியோராயின் பொறுப்பது கடனே (வெற்றி வேற்கை)  

****

தேவராய சுவாமிகளின் கந்தசஷ்டி கவசம்:

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்

எத்தனை அடியேன் எத்தனை செயினும்

பெற்றவன் நீ பொறுப்பது உன்கடன்

***

பிழைத்தவை பொறுக்கையெல்லாம் பெரியவர் கடமை போற்றி

—மாணிக்கவாசகர் திருவாசகம்

*** 

பிழையுள்ள பொறுத்திருவறென்றடியேன் பிழைத்தக்கால்

பழியதனைப் பாராதே—- அப்பர்

****

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி

நில்லாப் பிழையும் நின் ஐந்தெழுத்தைச்

சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்

எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே

—– பட்டினத்தார்

****

அடிநாட்கள் செய்த பிழை நீக்கி என்னை

அருள் போற்றும் வண்மை தரும் வாழ்வே

________

பிழையே பொறுத்து இருதாளிலுற்ற

பெரு வாழ்வு பற்ற அருள்வாயே

——— அருணகிரிநாதரின் திருப்புகழ்

****

பாய் இருள் சீய்க்கும் தெய்வப் பருதியைப் பழிக்கும் மாலை

மாயிருங்கரத்தால் மண்மேல் அடியுறையாக வைத்து

தீயன சிறியோர் செய்தல் பொறுப்பது பெரியோர் செய்கை

ஆயிரநாமத்து ஐயா சரணம் என்று அடியில் வீழ்ந்தான்– கம்பராமாயணம்

 பொருள்

பரந்த இருளை ஒழிக்க வல்ல தெய்வத் தன்மை கொண்ட கதிரவனையும் தன் ஒளியால் மட் டம்தட்டும் பிரகாசம் உடைய ஒரு மாலையை தன் கைகளால் எடுத்துவந்து தரைமீது காணிக்கைப் பொருளாக வைத்துச் “சிறியவர் தீயவை செய்தால் அவற்றைப் பொறுத்துக் கொள்வதே பெரியோர் செயலாகும்”, ஆயிரம் பெயர்களை உடைய ஐயனே! அடைக்கலம்! என்று ராமனின் அடிகளில் வீழ்ந்தான் வருணன்.

****

ராமலிங்க சுவாமிகளின் திரு அருட்பாவைத் தொடர்ந்து காண்போம்

2. ஐயாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

அடிமுடிகண் டெந்நாளும் அனுபவித்தல் வேண்டும்

பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும்

புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும்

எய்யாத அருட்சோதி என்கையுறல் வேண்டும்

இறந்தஉயிர் தமைமீட்டும் எழுப்பியிடல் வேண்டும்

நையாத வண்ணம்உயிர் காத்திடுதல் வேண்டும்

நாயகநின் தனைப்பிரியா துறுதலும்வேண் டுவனே.

இதில் ஐயா என்று தொடங்குகிறார்; பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும்—-

வாய்மையே பேசுதல் வேண்டும் – வள்ளுவர் முதல் மஹாத்மா காந்தி வரை சொன்னதுதான். வேதத்தில் முதல் பாடம் சத்யம் வத — வாய்மையே பேசு என்பதாகும்; முண்டகோபநிஷத்தில் உள்ள சத்யமேவ ஜயதே என்ற வாசகம்தான் இந்திய அரசின் சின்னத்திலும் தமிழ்நாடு அரசின் சின்னத்திலும் உளது ; உலகிலேயே சத்யத்துக்கு மதிப்பு கொடுக்கும் நாடு பாரதம் மட்டுமே; பெண்கள் பெயர்களிலும் ஆண்கள் பெயர்களிலும் சத்யம் தழைக்கும் நாடு (சத்யா; சத்யா மூர்த்தி ; சத்ய வாகீஸ்வரன் முதலியன) இதில் புதுமை இல்லை . ஆயினும் ராமலிங்க சுவாமிகள் சொல்லும் ஒரு வினோத கோரிக்கை —

இறந்தஉயிர் தமைமீட்டும் எழுப்பியிடல் வேண்டும்.

இதன் பொருள் என்ன ? ராமலிங்கர் இதை உண்மையென நம்பினாரா ?  கிருஷ்ணர், சிவ பெருமான், சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் இறந்தோரை மீட்டு வந்ததை நாம் மஹாபாரதம் , நம்மாழ்வார் பாடல், பெரிய புராணம், தேவாரம் ஆகியவற்றிலிருந்து அறிகிறோம் . மேலை நாட்டில் ஏசுகிறிஸ்துவும் இப்படிச் செய்தார். வள்ளலாரே சம்பந்தர், ஆண்டாள் போல ஜோதி மயமாக மறைந்தார்! ஆகையால் ராமலிங்கரும் இறந்தோரை உயிர்ப்பிக்க முடியும் என்றே நம்பினார்; இதை ஒப்புக் கொள்ள முடியாதோருக்கு இன்னும் ஒரு விளக்கமும் உண்டு;  செத்தாரைப் போல திரியும் ஜீவன்களை மீட்டு எடுக்க வேண்டும் என்பதாகும்.

3. அண்ணாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

அழியாத தனிவடிவம் யானடைதல் வேண்டும்

கண்ணார நினைஎங்கும் கண்வத்தல் வேண்டும்

காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் வேண்டும்

பண்ணார நின்றனையே பாடியுறல் வேண்டும்

பரமானந் தப்பெருங்கூத் தாடியிடல் வேண்டும்

உண்ணாடி உயிர்கள்உறும் துயர்தவிர்த்தல் வேண்டும்

உனைப்பிரியா துறுகின்ற உறவதுவேண் டுவனே.

மூன்றாவது பாடல் அண்ணா என்று துவங்குகிறது ; கண்ணனைப் பாரதியார் பல உறவு முறைகளில் அழைத்தார்; அதைப்போன்றது இந்தப்பாடல் ..

இதில் மீண்டுமொரு வினோத வேண்டுகோள் வருகிறது. அழியாத தனிவடிவம் யானடைதல் வேண்டும்!

 தான் ஆண்டாள், சம்பந்தர், சங்கரர்,தான்சேன் போல மாயமாய் மறைவதை முன்னரே அறிந்து இப்படிப் பாடினார் என்று பொருள் கொள்ளலாம் . இந்து மதத்தில் பல பெரியோர்கள் இப்படி மாயமாய் மறைந்து ஜோதியில் கலந்ததை நாம் புராண இதிகாசங்களில் படிக்கிறோம். இது கோடிப்பேரில் ஒருவருக்கு கிட்டும் பாக்கியம்; அதனால்தான் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் சமய புஸ்தகங்களில் இடம் பெறுகிறது  ; எல்லோருக்கும் கிடைக்கும் பாக்கியம் அல்ல.

4. அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகங்களித்தல் வேண்டும்

செத்தாரை மீட்டும்இங்கே எழுப்பியிடல் வேண்டும்

திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்

ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்

ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்

எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்

எந்தாயும் ஒன்றாக இனிதுறல்வேண் டுவனே.

நாலாவது பாடலிலும் பழைய வேண்டுதல்களையே வலியுறுத்துகிறார் .

அடுத்த கட்டுரையில் தொடர்ந்து காண்போம்.

TO BE CONTINUED………………………….

—SUBHAM—

TAGS -அப்பா நான் வேண்டுதல் கேட்டு , அருள் புரிதல் வேண்டும், வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை-11

Hindu Crossword1712025 (Post No.14,105)

Written by London Swaminathan

Post No. 14,105

Date uploaded in Sydney, Australia – 17 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

Across

1.Awkened; India’s longest running English Journal has this Sanskrit word

5.Undivided; Kaveri before dividing, Bharat before dividing have this word

8.Horse ;Sanskrit word

7.one who is carrying in Sanskrit. used as suffix

10.Treasure, wealth, repository in Sanskrit and Punjabin

11.Auspicious; plenty, extensive;

Down

1.Bright, light

2.Asura name; Any drink, Arrow; slayer

3.Meaning Southern part; now misused by Tamil Political parties

4.Laughter; comedy in Sanskrit

6.Black;used to describe Krishna

9.Author of Mahabharata.

1712025 crossword

1  2 3 4 
         
5       6 
     7   
8 9      
   10     
         
11        

Answer

1712025 crossword

P1RAB2UD3DH4A
R SA R A 
A5KANDA S 6 
K YA V7AHA
A8SV9A I Y 
S  N10IDHAN
H  A A M 
A11MOGHA A 

—subham—

Tags-1712025 crossword

சகல நலன்களையும் அருளும் சூரிய வழிபாடு! (Post No.14,104)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,104

Date uploaded in Sydney, Australia – –17 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஜனவரி 14 – தைப்பொங்கல் – சிறப்புக் கட்டுரை கல்கி ஆன் லைன் இதழில் 13-1-25 அன்று பிரசுரிக்கப்பட்டது.

சகல நலன்களையும் அருளும் சூரிய வழிபாடு!

ச. நாகராஜன்

தமிழர்தம் திருநாளாம் தைப்பொங்கல் திருநாள் அனைவருக்கும் உற்சாகத்தைத் தரும் ஒரு விழாநாளாகும்.

மகர ராசியில் சூரியன் பிரவேசிப்பதை மகர சங்கராந்தி என்று குறிப்பிட்டு அது நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.,

காசியபரின் புதல்வனான சூரிய பகவான் எல்லாவிதமான நோய்களையும் தீர்ப்பவன். வெற்றியை அருள்பவன்.

இதை விளக்க ஏராளமான சம்பவங்கள் இதிஹாஸ புராணங்களில் உள்ளன.

ஆதித்ய ஹ்ருதயம் :  ராவணனை வதம் செய்யப் போர்புரியும் காலத்தில் ராமர் சற்று களைப்படையவே, அகஸ்திய மாமுனிவர் அவர் முன் தோன்றி சூரியனை வழிபடுவதற்காக ஆதித்ய ஹ்ருதயத்தை உபதேசித்தார், ஆதித்ய ஹ்ருதயத்தை ஓதி சூரியனைத் தொழுது ராவணனை வதம் செய்தார் ராமர்.

ஆதித்ய ஹ்ருதயத்தை தினமும் காலையில் சொன்னால் உண்டாகும் நலன்கள் பல.

இது புண்ணியம் வாய்ந்தது. எல்லா எதிரிகளையும் அழிப்பது. வெற்றியை அளிப்பது. அழிவற்றது. மங்களத்துக்கெல்லாம் மங்களமானது. பாவங்களைப் போக்கவல்லது. கவலையையும் துன்பத்தையும் நீக்குவது. ஆயுளை வளர்ப்பது.

சூர்ய அஷ்டோத்திரம் : மகாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசம் செய்த போது அவர்களின் குருவான தௌம்யர் சூரியனின் 108 நாமங்களை தர்மருக்கு உபதேசம் செய்தார். மனம் குளிர்ந்த சூரிய பகவான்  அக்ஷய பாத்திரத்தை தர்மபுத்திரருக்கு அளித்தார். இதைச் சொல்பவர்கள் நல்ல மனைவி/கணவன், புத்திரர்கள், செல்வம், ரத்தினக் குவியல் ஆகியவற்றை அடைவர்.

சூர்யாஷ்டகம் : சிவபிரானால் உரைக்கப்பட்ட சூர்யாஷ்டகம் எட்டு ஸ்லோகங்களில் சூரியனின் மகிமையை உரைக்கும் அற்புதமான தோத்திரமாகும்.

மயூர சதகம்: ஹர்ஷவர்த்தனரின் அவைப்புலவராக இருந்த கவிஞர் மயூர பட்டர் பேரழகியாக விளங்கிய தன் மகளின் அழகை வியந்து கவிதை பாடினார். மகளின் அழகை தந்தை வர்ணிக்கலாமா என்று மனம் நொந்த தபஸ்வினியான அவரது மகள் அவருக்கு குஷ்டநோய் பிடிக்குமாறு சாபம் கொடுத்தாள். குஷ்ட நோயால் அவர் அவதிப்படுவதைப் பார்த்த பின்னர் மகள் வருத்தமடைந்து அவரை சூரியனைக் குறித்து நூறு பாடல்களைக் கொண்ட சதகம் ஒன்றை இயற்றக் கூறினாள். மயூரர் சதகத்தை இயற்றி சூரியனைத் துதிக்கவே அவர் குஷ்டம் நீங்கியது. ஹர்ஷவர்த்தனர் உள்ளிட்ட அனைவரும் பிரமித்தனர். பல்வேறு  மந்திரங்களை உள்ளடக்கிய இந்த சதகம் குஷ்டம் உள்ளிட்ட அனைத்து நோய்களையும் போக்கும்.

சூரிய நமஸ்காரம்; மிக அற்புதமான உடல் பயிற்சி இது. சூரியனுக்குரிய மந்திரங்களைச் சொல்லி இதைச் செய்யும் போது உள்ளமும் பண்படுகிறது. 14 ஆசனங்களை உள்ளடக்கியுள்ள சூரிய நமஸ்காரத்தைச் செய்வோர் நீடித்த ஆயுளுடனும் நல்ல தேக ஆரோக்கியத்துடனும் திகழ்வர். இதற்கு எடுத்துக்காட்டாக நூறு வயது சென்னையில் வாழ்ந்தவர் யோகி கிருஷ்ணமாசார்யா. இவரது சரித்திரம் அற்புதமானது. சூரியனைத் தொழாமல் இவர் எதையும் செய்ததில்லை.

சூரியன் வழிபட்ட 12 தலங்கள் மிகவும் சிறப்புள்ளவை. 1) கேதாரம் 2) திருக்கோலக்கா 3) திருவெண்காடு 4) சாயாவனம் 5) கருங்குயில்நாதபுரம் 6) திருத்துருத்தி 7) ஶ்ரீ வாஞ்சியம் 8) திருநாகேஸ்வரம் 9) குடந்தைக் கீழ்க்கோட்டம் 10) தேதியூர் 11) திருமீயச்சூர் 12) திருவாவடுதுறை ஆகிய தலங்கள் பெருமை வாய்ந்தவை.

இவற்றில் சூரியனுக்கு ஆலயமுள்ள தலங்களாக திருமீயச்சூர், திருநாகேஸ்வரம், குடந்தைக் கீழ்க்கோட்டம், ஆகியவை திகழ்கின்றன.

இன்னும் இன்னம்பர், திருவையாறு, திருத்தாளமுடையார் கோவில் திருக்கழுக்குன்றம், பருதிநியமம், திருவாடானை ஆகிய தலங்களும் சூரியன் பூஜித்த தலங்களாகும். இங்கு வழிபாடு நடத்துவோருக்கு அனைத்து நலன்களும் சித்திக்கும்.

சூரியனுக்கே பிரத்யேகமாக நாடு முழுவதுமுள்ள ஆலயங்களில் ஒரிஸாவில் உள்ள கோனார்க்,.குஜராத்தில் மொதெரா, காஷ்மீரில் மார்தாண்ட கோவில், ஆந்திராவில் அரசவல்லி கோவில்.. தமிழ்நாட்டில் சூரியனார் கோவில் உள்ளிட்ட ஆலயங்கள் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களாகும்.

சூரிய தேவனை தினமும் வழிபடுவோம். ஆரோக்கியத்துடன் கூடிய நீண்ட ஆயுளையும் செல்வத்தையும் பெறுவோமாக.

***