1969ம் ஆண்டு அபல்லோ 11 விண்கலத்தில் சென்ற விண்வெளி வீரர்களின் அனுபவத்தை அப்படியே பெற ஒரு புதிய கைக்கடிகாரம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சந்திர கடிகாரத்தின் (MOON WATCH) அளவு 38.1 x 44.2 x13.05 mm தான். விலை 818 டாலர்கள்.
இரண்டு வண்ணத்தில் இதன் ஸ்ட்ராப் கிடைக்கிறது.
ஐந்து வருட காலம் கஷ்டப்பட்டு உழைத்து இது தயாரிக்கப்பட்டிருக்கிறது.
சந்திரனை நோக்கிச் சென்ற அபல்லோ 11 விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் சென்ற போது அனைத்து விதமான தகவல் தொடர்புக்கும் தகவல் பரிமாற்றத்திற்கும் இரண்டு ப்ரீஃப் கேஸ் அளவுள்ள கம்ப்யூட்டர்கள் அவர்களுக்கு அளிக்கப்பட்டன. இரண்டு பெரிய அறைகள் தேவைப்படுகின்ற அளவு இருந்த கம்ப்யூட்டர்கள் விண்வெளிப் பயணத்திற்காக அதே திறனுடன் இந்தச் சிறிய அளவில் தயாரிக்கப்பட்டன.
இந்தச் சிறிய சாதனங்களை வைத்துத் தான் அவர்கள் வெற்றிகரமாகப் பயணத்தை முடித்தார்கள்.
ஐம்பத்தைந்து வருடங்கள் கழித்து அபல்லோ இன்ஸ்ட்ருமென்ட்ஸ் என்ற நிறுவனம் இந்த அபல்லோ கைடன்ஸ் கம்ப்யூட்டரை (AGC – Apollo Guidance Computer) கையில் அணிந்து கொள்ளும் ரிஸ்ட் வாட்ச் அளவுக்குச் செய்வதில் வெற்றி கண்டு விட்டது. யார் வேண்டுமானாலும் இதை இப்போது கையில் அணிந்து கொள்ளலாம். டிஸ்க் கீ என்று உச்சரிக்கப்படும் டிஸ்ப்ளே கீ போர்டு சிஸ்டம்(DSKY – Display and Keyboad System) ஒன்றை வைத்துத் தான் விண்வெளி வீரர்கள் ஆணைகளைப் பிறப்பித்தார்கள். இதை அணிபவர்கள் அவர்களைப் போலவே பேசிக் கொள்ளலாம்;சந்திரனுக்குப் பறக்கலாம்! (ராக்கெட், விண்கலம் இல்லாமல் தான்!)
அபல்லோ இன்ஸ்ட்ருமெண்ட்ஸின் உயர் தலைமை அதிகாரியான மார்க் க்ளேடன் (Mark Clayton) அபல்லோ விண்வெளி வீரர்கள் உபயோகித்தது போல ஒன்றை ஆப்பீள் வாட்சாக உருவாக்க முடியுமா என்று சிந்தித்துக் கொண்டே இருந்தார். அவர் ஒரு விண்வெளி ஆர்வலர். சிந்தித்ததைச் செயலில் கொண்டு வந்தார்.
ஒரிஜினல் வரைபடங்களை வாங்கிய ஒரு பெரும் குழு இதைத் தயாரிக்க ஆர்மபித்தது. இதில் இரண்டு ஃபார்முலா 1 பொறியாளர்களும் இணைந்தனர்..
ஆயிரக்கணக்கான பஞ்ச் கார்டுகளை விண்வெளியில் எப்படி உபயோகிக்க முடியும்? ஆகவே இதை உருவாக்கிய நிபுணர்கள் எண்களைப் பயன்படுத்தினர். இந்த நம்பர்களே பெயர்ச்சொல் (NOUNS) மற்றும் வினைச்சொல் (VERBS) ஆகிய குறியூடுகளைக் குறிக்க உதவின.
இதன் மூலம் கடிகாரத்தில் மணியையும் அவ்வப்பொழுது மாற்றிக் கொள்ளலாம். 200 வினைச்சொல் மற்றும் பெயர்ச்சொற்கள் அப்போது உபயோகிக்கப்பட்டன.
4:6:1 என்ற ஸ்கேல் அளவில் இது சுருக்கப்பட்டு இப்போதுள்ள கடிகார அளவில் சந்தைக்கு வருகிறது.
இதை அணிந்து கொண்டு தங்கள் கம்ப்யூட்டரில் விண்ணில் ஏவப்படும் விண்கல மாதிரியான ஸ்பேஸ் ஃப்ளைட் சிமுலேடருடன் இதை இணைத்து விண்ணில் பறக்க ஆரம்பிக்கலாம்.
இதன் உள்ளே இருக்கும் எல் ஈ டி விளக்குகள் விண்வெளி வீரர்கள் உபயோகித்தபோது எந்த வண்ணத்தில் ஒளி வந்ததோ அதே போல வருவதற்காக பில்டர்களும் இதில் அமைக்கப்பட்டுள்ளன.
அபல்லோ 11 விண்கலமானது 1969 ஜூலை மாதம் 16ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இது 1969 ஜூலை மாதம் 24ம் தேதி பூமிக்குத் திரும்பியது.
இதில் தான் சந்திரனில் முதலில் காலடி பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனுக்கு ஏகினார். அவருடன் மைக்கேல் காலின்ஸும் எட்வின் ஆல்ட்ரினும் சென்றனர்.
ஜூலை மாதம் 20ம் தேதி இரவு 10.56க்கு நிலவில் இறங்கி ஆர்ம்ஸ்ட்ராங் நடந்தார். புதிய சரித்திரத்தைப் படைத்தார்!
1969ல் விண்வெளி வீரர்கள் விண்வெளிக்குப் பறந்த அனுபவத்தை 55 ஆண்டுகளுக்கும் பின் கையில் கடிகாரம் அணிந்து கொண்டே பெற முடியும் என்பது ஒரு அறிவியல் அதிசயம் அல்லவா?
Date uploaded in Sydney, Australia – 12 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மருந்து மரங்கள்
பல தாவரங்களை பழங்குடி மக்கள் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்துவது குறிப்பிடத் தக்கது
ஆஸ்திரேலியாவில் விசித்திரமான விலங்குகள் மட்டுமின்றி விநோதத் தாவரங்களும் இருக்கின்றன. இந்த நாட்டிற்குள் அனுமதியின்றி புதிய தாவரங்களையோ விதைகளையோ எவரும் கொண்டுவர முடியாது; வெளிநாட்டுப் பயணிகள் விமானத்தில் நிரப்பவேண்டிய அட்டைகளைலும் இது பற்றிய கேள்விகள் இருக்கும் அவைகளில் YES எஸ் /இருக்கிறது என்று சொன்னால் கஸ்டம்ஸ் அதிகாரிகள் உங்களை முழு அளவு சோதனை செய்வார்கள்; ஆஸ்திரேலியாவின் தனிப்பட்ட புறச்சகுழலைக் காப்பாற்ற இந்த நடவடிக்கை ; சாலையின் இரு மருங்கிலும் இந்தியாவின் கேரள மாநிலம் போல மரங்கள், செடிகள் இருக்கும்; ஒரே வித்தியாசம்; இங்கே மிக உயரமான மரங்கள் .
நாம் எல்லோரும் யூகாலிப்டஸ் என்னும் தலைவலித் தைலத்தை உபயோகிக்கிறோம். இந்த யூகாலிப்டஸ் மரத்தையும் இந்தியாவில் காணலாம்; ஆனால் இதில் 900 வகைகள் உண்டு என்பது நமக்குத் தெரியாது. அவைகளில் ஐம்பது வகை மரங்களின் இலைகளை மட்டுமே கோவாலா என்னும் ஆஸ்திரேலிய மரக்கரடிகள் சாப்பிடுகின்றன. அவைகளுக்குக்கூட இதன் வேறுபாடுகளும் வகைகளும் தெரியும்!
Australia enjoys an estimated 24,000 species of Australian native plants.
ஆஸ்திரேலியாவில் மட்டும் 24,000 வகை புதிய வகைத் தாவரங்கள் இருக்கின்றன. இவை அதிக தண்ணீரும் ,உரங்களும் இல்லாமல் வீட்டுத் தோட்டங்களில் கூட வளரும் ;புறச்சூழலைக் காப்பதோடு இந்த கண்டத்துக்கே உரிய விலங்குகள் பறவைகளையும் இவை காப்பாற்றுகின்றன.
ஆஸ்திரேலிய அதிசயங்களில் ஒன்று உலகிலேயே உயரமான மரம் ஆகும் யூகாலிப்டஸ் மரம். இதன் உயரம் 330 அடி. இதன் பெயர் செஞ்சூரியன் டாஸ்மேனியா தீவில் கண்டுபிடிக்கப்பட்டது. யூகலிப்டஸ் கோந்து போன்ற திரவத்தைச் சுரப்பதால் இவைகளை கோந்து மரம் . Gum trees got their name from their gummy tree sap என்றும் சொல்லுவார்கள்; அவற்றின் அடி மரம் சேதப்படுகையில் கோந்து போன்ற பசையைச் சுரக்கின்றன.
மலர்களில் இதழ்கள் இலலாமல் மகரந்த கேசரம் மட்டும் நீட்டிக்கொண்டு இருக்கும் விதைகளும் உண்டு.
Gum tree leaves are full of a substance called cineole.
அவை சுரக்கும் சினியோல் என்னும் ரசாயனம் மனிதர்களுக்கு விஷம் போன்றது கோவாலா, போஸ்ஸம் போன்ற பிராணிகள் மட்டுமே அதைத் தாங்கி நிற்கும்
இந்த சினியோல் இருப்பதால்தான் பூச்சிகளை விரட்டவும் தலைவலி உடல் வலியைப் போக்கவும் நாம் இதைப் பயன்படுத்துகிறோம்.
The best didgeridoos are made from eucalyptus wood.
ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் இந்த வகை மரத்திலிருந்துதான் டிட்ஜரீடு இசைக் கருவிகளைத் தயாரிக்கின்றனர்.
இவைகளில் பெரும்பாலான வகை மரங்கள் பசுமையாகக் காணப்படும்.
இவைகளில் மிகவும் அரிய வகையை நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடித்தனர் பனியுக மரம் என்று அதற்குப் பெயர் இதுவரை அவ்வகையில் ஆறு மரங்களைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
புகழ்பெற்ற சிட்னி நகரம் இருக்கும் மாகாணம் நியூ சவுத் வேல்ஸ் ; அதன் தேசீய சின்னம் வரதா மலர் ; 125 ஆண்டுகளுக்கு முன்னர் இதுதான் ஆஸ்திரேலிய தேசீய மலராகவும் இருந்தது
இதை வரம் தரும் மரம் என்றாலும் பொருந்தும். காரணம் என்னெவெனில் தாய்ப் பால் இல்லாத, கிடைக்காத பெண்கள் இதன் தேனையே குழந்தைகளுக்கு கொடுத்து வளர்க்கின்றனர் நாம் இப்போது பால் பவுடர் கலந்து கொடுப்பது போல இவைகளைக் குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள் பழங்குடி மக்கள்.
இதில் வைட்டமின் சி சத்து அதிகம் இருக்கிறது; பெரும்பாலும் செவ்வண்ண பூக்களுடன் இருந்தாலும் பல நிறங்களில் வளரும் செடிகளும் உண்டு தேன் சுரப்பதால் நிறைய பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் இது உணவு ஆகிறது. மன அழுத்தம் மனக் கவலையைப் போக்கவும் இதன் தேன் பயன்படுகிறது .
Aboriginal mothers would use the nectar of the Waratah as an alternative food source for babies not getting enough milk from mothers or when weening off the breast. The nectar was also used to relieve anxiety and stress.
இவைகளில் ஐந்து வகைகள் உள. இவைகளின் ஒரு குணம் காட்டுத் தீயையும் கடந்து வாழ்வதாகும் .
****
டைனசோரஸ் மிருகங்களைவிடப் பழமையான மரங்கள்
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசரஸ் என்ற ராட்சத மிருகங்கள் பூமியிலிருந்து மறைந்தன. அந்தக் காலத்தில் வாழ்ந்த தாவரங்கள் கிரேவில்லியாஸ் எனப்படும் சிலந்தி மலர் மரங்களாகும் இவ்வகை மலர்கள் கண்டங்கள் உடைந்து பிரியும் முன்னிருந்த கோண்ட் வானா (காண்டவ வனம் என்பதன் மருவு) நிலப்பரப்பினைச் சேர்ந்தவை இப்போது தென் ஆப்பிரிக்காவிலும் இவ்வகை செடிகள் இருப்பதால் இதைக் கண்டு பிடித்தனர்
இவைகளில் முன்னூறு வகை உண்டு.
Grevilleas have an ancestry older than dinosaurs
Australian native grevilleas, also known as spider flowers, include more than 300 species.
சிலந்தியின் கால்களை போல நான்கு குழல்வடிவ இதழ்கள நீட்டிக்கொண்டிருக்கும்
Grevilleas have an ancestry older than dinosaurs. They originated on the super-continent Gondwana, and are closely related to banksias, waratahs, and the proteas of Southern Africa.
இந்த மலர்களில் இனிய திரவம் சுரப்பதால் பழங்குடி மக்கள், இவைகளிலிருந்து பானங்களைத் தயாரிக்கிறார்கள்
ஆனால் இந்த மலர் வகைகளில் சில விஷம் உள்ளவை ஆகையால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். சில்கி ஓக் silky oak (Grevillea Rrobusta) என்னும் விஷ சத்துள்ள மரம் முப்பது மீட்டர் உயரத்துக்கு வளரும்.
Some types or cultivars of grevillea have poisonous nectar that contains cyanide.
பறவைகளும் பட்டுப்பூச்சிகளும் தேனீக்களும் இந்த மலர்களை நாடி வந்து வட்டமிடுகின்றன.
****
பியர் பானம் தரும் மரம்
Hop bush was used for brewing beer
ஹாப் புஷ் என்னும் தாவரம் ஆஸ்திரேலியா ,முழுதும் வளர்கின்றன. கசப்பான விதைகளை எடுத்து குடி பானம் தயாரித்தனர்
பழங்குடி மக்களில் சிலர் இதை வலி நிவாரணியாகவும் பயன்படுத்துகின்றனர். .
இது விரைவில் வளரும் தாவரம் என்பதோடு தேனை அதிகம் சுரப்பதால் தேனீ வளர்ப்போரும் இதை வளர்க்கின்றனர்.
****
The Lily Pilly ‘லில்லி பில்லி ’ என்னும் செடிகளில் பல வகைகள் உள்ளன. இவற்றின் பழ ங்களை சாப்பிட்டாலாம்; ஜாம் செய்யலாம் . பலவகை நோய்களுக்கும் இது மருந்து. வேலியில் வளரும்; இதில் பறவைகளும் கூடு கட்டி வசிக்கின்றன .
****
கங்காரு பாதம் Kangaroo paws (Anigozanthos sp.)
இன்னொரு செடிக்குப் பெயர் கங்காரு பாதம் இவற்றின் மலர்கள் கங்காரு பாதம் போல இருக்கும் ; இந்த மலர் மேற்கு ஆஸ்திரேலிய மாகாணத்தின் தேசீய மலர்.
இவைகளின் கிழங்குகளை பழங்குடி மக்கள் உணவாகச் சாப்பிடுகிறார்கள்; அவற்றில் ஸ்டார்ச் என்னும் மாவுச் சத்து அதிகம் இருக்கிறது. இவைகளை மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர் .
இவைகளை பல்வேறு பழங்குடி மக்கள் பல பெயர்களில் அழைக்கின்றனர் அவை ‘Nollamara’, ‘Kurulbrang’ and ‘Yonga Marra’.
நல்ல மர்ரா , எங்க மர்ரா குருளைபரங்கா .
இவைகள் தமிழ்ச் சொற்களாகவும் இருக்கலாம்.
நல்ல மரம் , எங்கள் மரம் என்று தொனிப்பதைக் கவனிக்கவும்.
****
ஆஸ்திரேலிய ஜிவந்தி /ஜவந்திப் பூ டெய்சி everlasting daisy/(Xerochrysum).இவை பட்டுப்பூச்சிகளுக்கும் தேனீக்களுக்கும் உதவும் மலர்ச் செடிகள். இவைகளின் மகரந்தத்துக்குள் தூள் பல பூச்சிகளுக்கு உணவாகும் .
***
பாட்டில் பிரஷ்The bottlebrush (Callistemon) is medicinal
பாட்டில்களைச் சுத்தப்படுத்துவதற்கு நாம் பயன்படுத்தும் பிரஷ் போல இருப்பதால் இவைகளை இப்படி அழைக்கிறார்கள் ; ஆயினும் பழங்குடி மக்களின் மொழியில் வேறு பெயர்கள்.
இவைகளில் ஐம்பது வகைகள் இருக்கின்றன இவைகளை மருந்தாகவும் உபயோகிக்கின்றனர். காக்காட்டு போன்ற பறவைகளும் , குருவிகளும் இவற்றின் விதைகளை சாப்பிடும். பூக்களில் தேனும் சுரப்பதால் அவைகளும் தேன்சிட்டுகளுக்கு உணவு.
இவை கடினமான வலுவான தாவரங்கள் என்பதால் எளிதில் அழியாது பாக்டீரியா, வைரஸ், பூஞ்சக்காளான் , தொற்றுக் கிருமிகளால் வரும் நோய்களுக்கு இவற்றைக் காலாகாலமாகப் பயன்படுத்துகின்றனர்.bacterial, fungal, viral and parasite infections.
****
ஆயிரம் வகை கருவேல மரங்கள் .There are over 1000 types of Australian wattle (Acacia) இந்தியாவிலும் முள் உள்ள வேல மரங்கள் பல வகை; இதே போல ஆஸ்திரேலியாவிலும் ஆயிரம் வகைகள் இருக்கின்றன; தாவர இயல் படித்தோர் இதை அகேஷியா குடும்பம் என்பர்
ஒரு வகை பொன்னிற மலர்கள் உடைய அகேஷியா மரத்தின் பூக்கள்தான் ஆஸ்திரேலியாவின் தேசீய மலர்ச் சின்னம் இந்தியாவுக்கு தாமரை மலர் இருப்பது போல .
The Golden Wattle (Acacia pycnantha) is Australia’s national floral emblem
ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ அடிக்கடி ஏற்படுகிறது அத்தகைய இடங்களில் உடனே வளர்வது இந்த வேல மர வகைதான்.
எறும்புகளுக்கும் வேல மரங்களுக்கும் தனி உறவு உள்ளது ; இதன் விதைகளை எறும்புகள் தங்கள் வசிப்பிடங்களுக்குக் கொண்டு சென்று, மேலேயுள்ள எண்ணைப்பத சதையை மட்டும் சாப்பிட்டுவிட்டு விதைகளை விட்டுவிடும்; அவை மீண்டும் முளைக்கின்றன. பறவைகளும் வண்டுகளும் தேனீக்களும் இந்த மலர்களை நாடிவருகினறன
வேல மரங்கள் நைட்ரஜன் வாயுவை ஈர்த்து வேர்களில் சேமித்து உரமாகவும் அளிக்கின்றன.
****
இரவு ராணி பான்ஸ்கியா
The Native banksias are nocturnal
இந்த வகை மலர்ச் செடிகளில் 173 Banksia வகைகள் இருக்கின்றன. பெரும்பாலானவை ஆஸ்திரேலியாவில் மட்டுமே உள; மரங்களாக வளரும் இவை இரவி வு நேரத்தில் மணத்தைப் பரப்புவதால் வவ்வால் முதல் ஓபோசம்வரை இரவு நேரத்தில் உலவும் பிராணிகள் (Honey Possum, pygmy possums, gliders, and bats) அங்கே வருகின்றன. பல வண்ண மலர்களில் உள்ள தேனை உறிஞ்சசுகின்றன; இவைகளில் சில வகை தரைகளை ஒட்டி வளரும் . cockatoos, காக்காட்டு பறவைகள் மலரின் பல பகுதிகளையும் விதைகளையும் உண்ணும்.
பழங்குடி மக்கள் இவைகளின் மலர்த் தேனை அருந்துவதோடு ஒரு வித பானத்தைத் தயாரிக்கவும் மலர்களைப் பயன்படுத்துகின்றன. மருந்தாகவும் உபயோகிக்கின்றனர்.
வீட்டில் ரொட்டியைச் சுட்டால், ரோஸ்ட் செய்தால் என்ன மணம் வருமோ அந்த மணத்தை மலர்கள் வெளியிடுகின்றன !
****
There are 107 orchid genera containing more than 1200 species growing in Australia. Most are unique to this country.
ஆஸ்திரேலிய ஆர்க்கிட் மலர்கள்
ஆர்க்கிட் மலர்கள் , மழை வனக் காடுகளில் மட்டுமே வளரும் இப்போது பலரும் விற்பனைக்காகவும் அழகிற்காகவும் வளர்ப்பதால் அரிய தாவரங்கள் எளிதில் கிடைக்கின்றன. 107 பிரிவுகளை சேர்ந்த எண்ணூறு வகைகளை தாவர ஆர்வலர்கள் வளர்க்கின்றனர் இவைகளில் பெரும்பாலானவை இந்த நாட்டுத் தாவரங்கள் ஆகும்.
இவைகளில் பெரும்பாலானவை மரக்கிளைகளில் உள்ள இடுக்குகளிலும் பாறை இடுக்குகளிலும் வளரும்; வேர்கள் தொங்கிக் கொண்டிருக்கும். ஒவ்வொரு ஆண்டும் காடுகளில் பத்து புதிய வகை ஆர்க்கிட் மலர்களைக் கண்டு பிடிக்கிறார்கள்;
—subham—
Tags- வினோத தாவரங்கள், யூகலிப்டஸ், தாய்ப்பால், பியர், தேன், ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 3, மருந்து மரங்கள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
விவேகானந்தர் அவதார தினம் : 12-1-1863
சமாதி : 4-7-1902
ஸ்வாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் சில சுவையான சம்பவங்கள்!
ச. நாகராஜன்
ஸ்வாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் ஏராளமான சுவையான சம்பவங்கள் நடந்துள்ளன. ஒவ்வொன்றும் ஒரு உண்மையை வெளிப்படுத்தும்.
அவற்றில் சில இதோ:
1
இந்தியாவை நேசி!
ஸ்வாமி விவேகானந்தர் அல்மொராவில் இருந்த போது நடந்த சம்பவம் இது:
அங்கிருந்த மேலை நாட்டு பக்தையான மெக்லவுட் ஸ்வாமிஜியிடம், “ஸ்வாமிஜி, உங்களுக்கும் மிகச் சிறப்பாக சேவை செய்ய வேண்டும் எனில் நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.
உடனே ஸ்வாமிஜி, “இந்தியாவை நேசி!” என்று பதில் அளித்தார்.
ஸ்வாமிக்கு இந்தியா மீது இருந்த அளவு கடந்த அன்பு இப்படி அவ்வப்பொழுது வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது!
2
குரு தட்சிணை!
ஸ்வாமிஜி 1899 ஆகஸ்ட் 28ம் தேதியன்று நியூயார்க்கை அடைந்தார்.
நியூயார்க்கிலிருந்து 80 மைல் தொலைவில் இருந்த ரிஜ்லிமேனரில் (RIDGELY MANOR) அவரும் துரியானந்தரும் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது ஒரு பெரிய வீடு.
அங்கு இருந்தவர்களில் ஒருவர் மிஸ் ஸ்டம். அவர் ஒரு ஓவியர். ஒரு நாள் ஸ்வாமிஜி அவரிடம், “சும்மா இருப்பதை விட ஏதேனும் ஒரு வேலையில் ஈடுபட விரும்புகிறேன். நீங்கள் ஏன் எனக்கு ஓவியம் கற்றுத் தரக் கூடாது?” என்று கேட்டார்.
ஸ்டம் உடனடியாக அதற்கு இசைந்தார்., தேவையான பொருள்கள் வாங்கப்பட்டன. ஓவியப் பயிற்சி தொடங்குவதற்கு ஒரு நாளும் குறிக்கப்பட்டது. குறித்த நாளில் குறித்த நேரத்தில் ஸ்வாமிஜி சென்றார். கையில் ஒரு சிவந்த ஆப்பிளை எடுத்துச் சென்ற அவர் பணிவுடன் தலை வணங்கியபடி அதை ஸ்டம்மிடம் குரு தட்சிணையாகத் தந்தார்.
ஸ்டம்முக்கு ஒன்றும் புரியவில்லை. இது என்ன என்று அவர் கேட்க, ஸ்வாமிஜி, “நான் உங்கள் மாணவன். பாடங்கள் பலன் அளிப்பதற்காக இதனை தட்சிணையாக நான் உங்களுக்குத் தருகிறேன்” என்றார்.
மிக விரைவாக ஓவியக் கலையைக் கற்றுக் கொண்ட அவர் சிறப்பாக ஓவியம் வரையத் தொடங்கினார்.
வியந்து போனார் ஸ்டம்.
அவர் எழுதினார்:
“எத்தைகைய மாணவர் அவர்! எதையும் ஒரு முறை சொன்னால் போதும். அப்படியே அதைப் பிடித்துக் கொள்வார். அவரது மனஒருமைப்பாடும் நினைவாற்றலும் அபாரமானவை. அவர் வரைந்த ஓவியங்களை ஏதோ அதைக் கற்கும ஒருவர் வரைந்ததாக நினைக்க முடியாது. அப்படி அவை சிறப்பாக இருந்தன”
3
நைனிடாலைச் சேர்ந்த ஒரு இஸ்லாமியர் சர்பரஸ் ஹூஸைன் என்பவர், அவர் அத்வைத வேதாந்தத்தின் பால் ஈர்க்கப்பட்டார். ஸ்வாமிஜியால் அவர் மிகவும் கவரப்பட்டார். ஒரு நாள் அவர் ஸ்வாமிஜியிடம், “ ஸ்வாமிஜி! நீங்கள் ஒரு அவதார புருஷர் என்று இனி வரும் காலத்தில் மக்கள் கொண்டாடும் போது ஒன்றை மட்டும் நினவில் வைத்துக் கொள்ளுங்கள். அப்படிக் கொண்டாடிய முதல் மனிதன் முஸ்லிமாகிய நான் தான்” என்றார்.
தனது பெயரை அவரை முகம்மதானந்தர் என்று மாற்றி வைத்துக் கொண்டார். அவரைச் சந்தித்த நாளிலிருந்து தன்னை அவரது சீடராகவே கருதினார்.
அவருக்கு ஸ்வாமிஜி எழுதிய கடிதத்தில் வேதாந்தம் மற்றும் இஸ்லாமிய சங்கமத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.
வேதாந்த மூளை, இஸ்லாமிய உடல் – இதுவே நம் தாய்நாட்டிற்கான ஒரே நம்பிக்கை என்றார் ஸ்வாமிஜி!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
5-1-2025 ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆசியா ஆகிய மூன்று கண்டங்களிலிருந்து ஞாயிறு தோறும் (இந்திய நேரம் மாலை 5.30 மணிக்கு) ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை
திருமந்திர நூலானது பாயிரத்தில் அவையடக்கம், ஆகமச் சிறப்பு, வேதச் சிறப்பு உள்ளிட்ட ஒன்பது பகுதிகளைக் கொண்டது.
முதல் தந்திரத்தில் அன்புடைமை, கல்வி, கொல்லாமை, தானச்சிறப்பு உள்ளிட்ட 24 பகுதிகளையும், இரண்டாம் தந்திரத்தில் கரு உற்பத்தி, குரு நிந்தை, சிவ நிந்தை, தீர்த்தம் உள்ளிட்ட 25 பகுதிகளையும் மூன்றாம் தந்திரத்தில் அட்டமா சித்தி, அட்டாங்க யோகம், பிராணாயாமம் உள்ளிட்ட 20 பகுதிகளையும் நான்காம் தந்திரத்தில் அர்ச்சனை, நவகுண்டம், பைரவி மந்திரம் உள்ளிட்ட 13 பகுதிகளையும் ஐந்தாம் தந்திரத்தில் கிரியை, சரியை, சன்மார்க்கம், சாமீபம், சாயுச்சியம் உள்ளிட்ட 20 பகுதிகளையும் ஆறாம் தந்திரத்தில் சிவகுரு தரிசனம், சிவ வேடம் திருவடிப்பேறு உள்ளிட்ட 14 பகுதிகளையும் ஏழாம் தந்திரத்தில் அடியார் பெருமை, கூடா ஒழுக்கம், சிவலிங்கம் உள்ளிட்ட 38 பகுதிகளையும் எட்டாம் தந்திரத்தில் உடல் விடல், பத்தியுடைமை, முக்குற்றம், மும்முத்தி உள்ளிட்ட 43 பகுதிகளையும் ஒன்பதாம் தந்திரத்தில் ஊழ், ஒளி, தோத்திரம், வாழ்த்து உள்ளிட்ட 23 பகுதிகளையும் கொண்டுள்ளது. மொத்த பகுதிகள் 229.
தந்திரம் என்பது ஆகமத்தின் வேறொரு பெயராகும். ஒன்பது ஆகமங்களில் உள்ளவற்றை இந்தத் தந்திரங்கள் கொண்டுள்ளன.
திருமந்திரம் ஒரு யோகானுபவ நூல். குரு மூலமாகவே இதனுடைய முழு அர்த்தத்தையும் நாம் உணர முடியும்.
திருமூலர் நெடுங்காலம் உயிர் வாழ்ந்தவர் என்பதை
‘தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பில் எழுகோடி யுகம் இருந்தேனே – திருமந்திரம் பாடல் 74
என்பதாலும்
இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி என்ற எண்பதாவது பாடலாலும் அறிய முடிகிறது.
இவரை சிவபிரான் தன்னை நன்றாகத் தமிழில் பாடுவதற்காகவே படைத்தான் என்பதை இவரே
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே (பாடல் 81)
என்று கூறி இருக்கிறார்.
அற்புதமான திருமந்திரம் 3000 பாடல்களில் சில முக்கியமான அடிகளை இப்போது பார்ப்போம்:
சிவனொடொக்கும் தெய்வம் தேடினும் இல்லை – 3
நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் – 85
பதியினைப் போற் பசு பாசம் அனாதி – 115
ஒருமையுள் ஆமை போல் உள் ஐந்தடக்கி
இருமையுங் கேட்டிருந்தார் புரை அற்றே – 133
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே – 145
வேதாந்தமானது வேட்கை ஒழிந்திடம் – 229
நல்லாரைக் காலன் நணுக கில்லானே – 238
வேட நெறி நில்லார் வேடம் பூண்டு என் பயன்? – 240
ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின் – 250
அன்போடுருகி அகங்குழைவார்க்கன்றி
என்போன் மணியினை எய்த ஒண்ணாதே – 272
பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின் – 298
ஈசனடியார் இதயம் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும் – 534
பெரியாருடன் கூடல் பேரின்பமாமே – 545
உடம்பால் அழியில் உயிரார் அழிவர்
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே – 724
சீவனுக்குள்ளே சிவமணம் பூத்தது- 1459
சைவம் சிவனுடன் சம்பந்தமானது – 1512
குருவே சிவம் எனக் கூறினன் நந்தி – 1581
ஒடுங்கி நிலை பெற்ற உத்தமர் உள்ளம்
நடுங்குவதில்லை நமனும் அங்கில்லை – 1624
மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம் – 1726
அருள் கண் இல்லாதார்க்கு அரும் பொருள் தோன்றா – 1808
வல்ல பரிசால் உரைமின் வாய்மையை – 2108
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் – 2104
இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும் – 2108
ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவனே – 504, 2175
வெல்லும் அளவில் விடுமின் வெகுளியை – 2303
அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் – 270
3000 பாடல்களையும் வெவ்வேறு விதமாகப் பிரித்துப் படித்து மகிழலாம்.
எந்தக் கேள்விக்கும் இதோ பதில் என்பதே திருமூலரின் திருமந்திரப்பாணி.
உதாரணத்திற்கு ஒரு கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.
இறைவன் எங்கு உள்ளான்? கடினமான கேள்விக்கு திருமூலரின் பதில் இதோ:
காலினில் உறும் கரும்பினிற் கட்டியும்
பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும்
பூவினுள் நாற்றமும் போலுளன் எம்மிறை
காவலன் எங்கும் கலந்து நின்றானே – பாடல் 2639
ஒரு நாடகக் காட்சியை நான்கு அடிகளில் காட்டுகிறார் திருமூலர் ஒரு பாடலில்
அடப் பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடியாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே.
இன்றைய நாட்களில் நாம் காணும் காட்சியை அன்றே காட்டி விட்டார் திருமூலர்.
மனைவி அருமையாக சமைத்து உணவு படைக்க அதை கணவன் உண்டான். பின்னர் மடக்கொடியான பேரழகியான தன் மனைவியுடன் ஊஞ்சலில் ஆடியவாறே வெற்றிலை பாக்கைச் சுண்ணாம்புடன் சேர்த்துப் போட்டு நாக்கு சிவ சிவக்க ஆனந்தம் அடைந்தான்.
அப்போது லெப்ட் சைடில் இடது புறத்தில் சிறிது வலி என்றான். ஹார்ட் அட்டாக்!.
ஆ என்று கிடக்கப் படுத்தான். கிடந்து ஒழிந்தானே.
என்ன அருமையான நாட்டு நடப்பைச் சுட்டிக் காட்டுகிறார் திருமூலர்.
இப்படி நூற்றுக் கணக்கான பாடல்களில் அவர் காட்டும் சித்திரங்கள் நம்மை பிரமிக்க வைக்கும்.
தமிழே தனக்குப் படைத்துக் கொண்ட ஒரு அற்புதமான தமிழ் நூல் திருமந்திரம். அதைத் தந்த அருளாளர் சிவபிரானின் அருளால் தோன்றியவரே என்று கூறி என் உரையை முடிக்க விழைகிறேன்.
இறுதியாக ஒரு விஷயம்:
பல நூல்களையும் கற்று ஆராய்ந்த ஔவையார் தனது முடிவாகச் சொல்லும் ஒரு தீர்ப்பு இது:
Date uploaded in Sydney, Australia – 11 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 2
ஆஸ்திரேலியாவின் வினோத விலங்குகள்
1.கங்காரு
2.வல்லபி
3.பிளாட்டிபஸ்
4.கோவாலா
5.டிங்கோ
கங்காரு ஆஸ்திரேலியாவின் தேசீய விலங்கு. தபால்தலைகளில் இதைக் காணலாம்.
இது ஆஸ்திரேலியாவில் மட்டும் காணப்படும் பிராணி..
பின்னங்கால்களால் மிக அதிக தூரம் தாவிச் செல்லும் விலங்கு. அதுமட்டுமல்ல ; குட்டிகளை தனது வயிற்றுப் பகுதியில் சுமந்து செல்லும் மிருகம்.இது தாண்டும் தொலைவு – ஒரே தாவலில் முப்பது அடிகள் ; பத்து அடி உயரத்துக்கு எழும்பிக் குதிக்கும். மணிக்கு நாற்பது மைல் வேகத்தில் பாயும் .
ஆறு முதல் எட்டு அடி உயரத்துக்கு வளரும் ; ஆண் விலங்குதான் பெரியது; எடை 200 பவுண்டுகள் .
இவ்வளவு பெரிய சக்தி வாய்ந்த மிருகம் வெஜிட்டேரியன் ; தாவரங்களையே உண்ணும்; பசுக்களைப் போல வயிறு படைத்தவை ; விழுங்கிய பொருட்களை மீண்டும் வாய்க்குள் கக்கி ஜீரணம் செய்கின்றன.
இவைகளில் நான்கு வகைகள் உண்டு. சிவப்பு, சாம்பல் நிறம் என்று பிரிக்கிறார்கள்
பெரும்பாலான கங்காருக்கள் இடது கையர்கள் ; வல து கையை பலப் பிரயோகத்துக்கு மட்டும் பயன்படுத்தும் .
இவை நல்ல நீச்சல் வீரர்கள் ; டிங்கோ என்னும் மிருகங்களிடமிருந்து தப்பிக்க நீரில் குதிக்கும். சில நேரங்களில் அவைகளை நீருக்குள் ஏமாற்றி அழைத்து சிறிய முன் கைகளால் குத்து விடும். அப்போது அதன் விசை 270 பவுண்டு.
கங்காருக்கள் பெரிய கரடிகளைப்போல பலம் கொண்டவை.
மனிதர்கள் செய்யும் படுகொலைகள்
கங்காரு மாமிசமும் தோலும் மிகவும் மதிப்பு உடையவை. ஆண்டுதோறும் லட்சக் கணக்கில் இவைகளைக் கொன்று எழுபது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். ஆஸ்திரேலிய அரசு இந்தப் படுகொலைக்கு கோட்டா நிர்ணயிக்கிறது . ஆண்டுக்கு ஐம்பது லட்சம் கங்காருகளைக் கொல்ல லாம் என்று ஆஸ்திரேலிய அரசு கோட்டா நிர்ணயித்துள்ளது
கண்களில் ஒளியை வீசி அவைகளைக் குருடாக்கி சுட்டுக்கொல்கிறார்கள் ; அனாதையாக்கப்பட்ட குட்டி (joeys) களை குத்திக் கொன்று மகிழ்கிறார்கள் பாதகர்கள்
The animals are temporarily blinded by a light before hunters cruelly shoot them, sometimes leaving them to bleed out, while orphaned joeys are bludgeoned or suffer an agonizing death due to the elements or starvation.
சில நாடுகள் கங்காரு படுகொலைகளைத் தடுப்பதற்காக தோல், மாமிச இறக்குமதிக்கு தடை போட்டுள்ளன.
இவை சுமார் எட்டு ஆண்டுகள்தான் வாழும்; மிருகக்காட்சி சாலைகளில் 25 ஆண்டுகள் வரை வாழ்கின்றன
Kangaroos
Family
Macropodidae
Genus
Macropus
The word kangaroo derives from ‘Gangurru’, the name given to Eastern Grey Kangaroos by the Guuga Yimithirr people of Far North Queensland.
ஆஸ்திரேலியாவின் மாகாணங்களில் ஒன்று குயின்ஸ்லாந்து ; அங்கு வாழ்ந்த பழங்குடி மக்கள் இதை கங்கரு என்று அழைத்தனர்.
இவையும் கங்காரு இனத்தைச் சேர்ந்தவை; ஆனால் அளவில் சிறியவை .
சிவப்பு கங்காரு 90 கிலோ எடைக்கு வளரும் வல்லபிக்கள் wallaby 20 கிலோ எடையே இருக்கும்.
வல்லபிக்கள் மூன்று அடி உயரம் மட்டும் வளரும். இப்பொழுது ஆஸ்திரேலியாவுக்கு வெளியிலும் இவைகளைக் காணலாம் நியூசிலாந்து, நியூகினி மற்றும் அமெரிக்காவின் ஹவாய் முதலிய தீவுகளில் இவை வசிக்கின்றன.
****
பிளாட்டிபஸ் என்னும் விலங்கு
Platypus
Scientific name: Ornithorhynchus anatinus
Alternative name/s:
Duck-billed Platypus
ஆஸ்திரேலியாவின் வினோத விலங்கு; வாத்து போல மூக்கு இருக்கும்; நீரில் வாழும்; முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். துவக்க காலத்தில் ஐரோப்பியர்களை திகைக்கவைத்த விலங்கு இது ; இப்படி ஒரு பிராணியே இருக்க முடியாது; இது ஒரு போலி ; கற்பனை என்றும் பல அறிஞர்கள் எழுதினார்கள்;
இவை டாஸ்மேனியா என்னும் ஆஸ்திரேலியா தீவு முழுதும் வசிக்கின்றன; மேலும் விக்டோரியா, குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ் மாகாணங்களிலும் காணப்படுகின்றன. கண்ணை மூடிக்கொண்டு நீரில் பாய்ந்து மூக்கினை மட்டும் பயன்படுத்தி நீரில் வாழும் பூச்சி புழுக்களையும் அவைகளின் முட்டைகளையும் உண்கின்றன.
இறால் போன்றவைகளையும் சாப்பிடும்; இதை வளர்ப்போர் மீன் வகை உணவுகளையும் கொடுக்கின்றனர் இவை நிழல் உள்ள கரைகளில் வளை தோண்டி அவைகளில் வாழும் . முதலைகளும் கழுகுகளும் பாம்புகளும் இதன் எதிரிகள் ; இவை இருபது ஆண்டுகள் வரை வாழ்கின்றன
இதனளவு – நாற்பது சென்டிமீட்டர் ; சுமார் ஒன்றரை அடி.
****
கோவாலா
ஆஸ்திரேலியாவில் மட்டும் வாழும் அரிய விலங்கு.
யூகாலிப்டஸ் மரங்களில் வாழ்ந்து அதன் இலைகளை உண்கின்றன. பார்ப்பதற்கு தேவாங்கு அல்லது கரடிக்குட்டி போல இருக்கும். மிகவும் சாதுவான மிருகம். இவைகளைப் பாதுகாப்பதற்காக ஆண்டுதோறும் மே மாதம் மூன்றாம் தேதி கோவாலா தினம் கொண்டாடப்படுகிறது..
ஒரு அதிசயம் என்னவென்றால் மனிதர்களைப் போல இவைகளுக்கும் கைரேகைப் பதிவுகள் இருக்கின்றன. நமது கட்டைவிரலில் ஒவ்வொருவருக்கும் தனியான கோடுகள் இருப்பது போல இவைகளுக்கும் உள்ளன Koalas Have Fingerprints.
கோவாலா என்றால் தண்ணீர் குடிக்காதுNo Drink என்று பழங்குடி மக்களின் பாஷையில் பொருள்; இவை அரிதாகவே தண்ணீர் குடிக்கின்றன.
இவைகள் யூகாலிப்டஸ் எண்ணெய் அல்லது இலை போன்ற வாசனையை வெளியிடுகின்றன. ஏனெனில் அந்த இலைதான் இவைகளின் ஒரே உணவு.
உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு என்ற பழமொழி இவை களுகுத்தான் பொருந்தும்; ஒரு நாளைக்கு ஒரு கிலோ இலைகளை சாப்பிவிட்டுவிட்டு சுமார் இருபது மணி நேரம் உறங்குகின்றன. யூகாலிப்டஸ் மரக் குடும்பத்தில் 900 வகை மரங்கள் இருந்த போதிலும் இவை ஐம்பது வகை மரங்களையே நாடுகின்றன. அவைகளிலுள்ள விஷத்தை முறித்து , நார்ச்சத்தை விலக்கி உண்ணும் சக்தி இவைகளுள்ளன.
இவை ஒவ்வொன்றும் தனித்து வாழும் இயல்புடையவை ; ஆண்கள், தனக்கென எல்லையை நிர்ணயிக்கின்றன; அவைகளைச் சுற்றி பெண் கோவாலாக்கள் வசிக்கின்றன.
மரங்களில் வாழ்வதால் இவற்றின் தோலும் கைகளும் அதற்கேற்ப வலுவாக குஷன் போல அமைந்துள்ளன .
கங்காரு போலவே இவைகளுக்கும் வயிற்றுக்கு வெளியே பைகள் உண்டு; பிறந்த குட்டிகள் ஆறுமாதம் வரை தாயின் பையில் வளரும். அடுத்த ஆறுமாதம் தாயின் முதுகில் அல்லது வயிற்றுப் பகுதியில் தொற்றிக் கொண்டிருக்கும். .
இவை 13 முதல் 18 ஆண்டுகள் வரை வாழ்கின்றன.
****
டிங்கோ The dingo
டிங்கோ என்னும் பிராணி நாய் வகையைச் சேர்ந்தவை; ஆனால் கூட்டமாகச் சேர்ந்து வேட்டையாடி மற்ற பிராணிகளைச் சாப்பிடுகின்றன. மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆஸ்திரேலியா முழுதும் பரவிவிட்டன.
இவை கங்காரு, பன்றி முதல் பல்லி, பறவைகள் வரை எல்லா வற்றையும் வேட்டையாடி உண்கின்றன. அரிதாகவே பழங்களைச் சாப்பிடும்.
பொன்னிறம் அல்லது பழுப்பு நிறம் கொண்டவை. ஓநாய் குடும்பத்தைச் சேராவிட்டாலும் பொதுவாக ஊளையிடும்; எச்சரிக்கை செய்ய மட்டும் நாய்களை போல குரைக்கும். பத்து ஆண்டுகள் வரை வாழ்கின்றன ; ஆண்டுக்கு ஒரே முறை மட்டும் ஆறு குட்டிகள் வரை ஈனும் ; எல்லா டிங்கோக்களும் இனப்பெருக்கம் செய்வதுமில்லை!
காடுகளிலும் வறண்ட பாலைவனப் பகுதிகளிலும் வசிக்கினறன.
****
வாம்பெட், எகிட்னா
இவை தவிர வாம்பெட், எகிட்னா முதலிய வினோத மிருகங்களும் ஆஸ்திரேலியாவில் வசிக்கின்றன.
ஒவொன்றுக்கும் வேறு எங்கும் காணாத தனிப்பட்ட வழக்கமும் குணாதிசயங்களும் இருக்கின்றன.
முப்பது ஆண்டுகள் வரை வாழும் வாம்பேட்களில் மூன்று வகை உண்டு.
இவைகளை என்ஜினீயர்கள் என்றும் சொல்லலாம். பூமிக்கு அடியில் வளை தோண்டி வாழும் விலங்கு இது .கங்காரு போல வயிற்றில் குட்டிகளை வைத்து வளர்க்கும்.. சுமார் மூன்று அடி உயரம்; முப்பது கிலோ வரை எடை உடையவை ; புல் பூண்டுகளை சாப்பிடுகின்றன.
எகிட்னாக்கள் முள்ளம்போன்றி போல இருக்கும்; ஆனால் பிளாட்டிபஸ் போல முட்டையிட்டு குஞ்சு பொறித்துப் பாலூட்டும் அதிசய விலங்குகள் ஆகும்.
எகிட்னாக்கள் எறும்புகளைத் தின்னும் ; அவை கிடைக்காவிட்டால் புழுப் பூச்சிகளையும் உண்ணும்.
சுமார் 20 ஆண்டுகள் மட்டுமே வாழும் இவை பாதுகாப்பாக மனிதர்கள் வளர்க்கும் இடங்களில் 50 ஆண்டுகள் வரை வாழ்கின்றன.
—-subham—
Tags :ஆஸ்திரேலியா, வினோத விலங்குகள் ,கங்காரு
.வல்லபி,பிளாட்டிபஸ் ,கோவாலா, டிங்கோ, வாம்பேட் , எகிட்னா, ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள், அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 2
Date uploaded in Sydney, Australia – 11 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சிவ பக்த வள்ளலார் !
சிவபெருமான் மீது வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் பாடிய மஹாதேவ மாலையில் நூறு பாடல்கள் இருக்கின்றன. அவற்றில் சிவ பெருமானின் போற்றலை விட தத்துவ வசனங்களே அதிகம். இந்து மதம் பற்றியும் சம்ஸ்க்ருத மொழி வசனங்கள் பற்றியும் அறியாதோர் அதைப் பின்பற்றுவது கடினம். ஆனால் பஜனைகளில் பாடக்கூடிய தாளத்துடன் வரக்கூடிய சிவ நாமாவளி அம்பலத் தரசே என்று துவங்கும் பாடல்தான்:
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai
134. அம்பலத்தரசே
நாமாவளி
1. சிவசிவ கஜமுக கணநாதா
சிவகண வந்தித குணநீதா.
2. சிவசிவ சிவசிவ தத்துவ போதா
சிவகுரு பரசிவ சண்முக நாதா.
3. அம்பலத் தரசே அருமருந் தே
ஆனந்தத் தேனே அருள்விருந் தே.
4. பொதுநடத் தரசே புண்ணிய னே
புலவரெ லாம்புகழ் கண்ணிய னே.
5. மலைதரு மகளே மடமயி லே
மதிமுக அமுதே இளங்குயி லே.
6. ஆனந்தக் கொடியே இளம்பிடி யே
அற்புதத் தேனே மலைமா னே.
7. சிவசிவ சிவசிவ சின்மய தேஜா
சிவசுந் தரகுஞ் சிதநட ராஜா.
8. படன விவேக பரம்பர வேதா
நடன சபேச சிதம்பர நாதா.
9. அரிபிர மாதியர் தேடிய நாதா
அரகர சிவசிவ ஆடிய பாதா.
10. அந்தண அங்கண அம்பர போகா
அம்பல நம்பர அம்பிகை பாகா.
11. அம்பர விம்ப சிதம்பர நாதா
அஞ்சித ரஞ்சித குஞ்சித பாதா.
12. தந்திர மந்திர யந்திரபாதா
சங்கர சங்கர சங்கர நாதா.
13. கனக சிதம்பர கங்கர புரஹர
அனக பரம்பர சங்கர ஹரஹர.
14. சகல கலாண்ட சராசர காரண
சகுண சிவாண்ட பராபர பூரண.
15. இக்கரை கடந்திடில் அக்கரை யே
இருப்பது சிதம்பர சர்க்கரை யே.
16. என்னுயிர் உடம்பொடு சித்தம தே
இனிப்பது நடராஜ புத்தமு தே.
17. ஐயர் திருச்சபை ஆடக மே
ஆடுதல் ஆனந்த நாடக மே.
18. உத்தர ஞான சிதம்பர மே
சித்திஎ லாந்தரும் அம்பரமே.
19. அம்பல வாசிவ மாதே வா
வம்பல வாவிங்கு வாவா வா.
20. நடராஜன் எல்லார்க்கும் நல்லவ னே
நல்லஎ லாம்செய வல்லவ னே.
21. ஆனந்த நாடகம் கண்டோ மே – பர
மானந்த போனகம் கொண்டோ மே.
22. சகள உபகள நிட்கள நாதா
உகள சததள மங்கள பாதா.
23. சந்தத மும்சிவ சங்கர பஜனம்
சங்கிதம் என்பது சற்சன வசனம்.
24. சங்கர மும்சிவ மாதே வா
எங்களை ஆட்கொள வாவா வா.
25. அரகர சிவசிவ மாதே வா
அருளமு தம்தர வாவா வா.
26. நடனசி காமணி நவமணி யே
திடனக மாமணி சிவமணி யே.
27. நடமிடும் அம்பல நன்மணி யே
புடமிடு செம்பல பொன்மணி யே.
33. நடராஜர் பாட்டே நறும்பாட்டு
ஞாலத்தார் பாட்டெல்லாம் வெறும்பாட்டு.
34. சிதம்பரப் பாட்டே திருப்பாட்டு
ஜீவர்கள் பாட்டெல்லாம் தெருப்பாட்டு.
35. அம்பலப் பாட்டே அருட்பாட்டு
அல்லாத பாட்டெல்லாம் மருட்பாட்டு.
43. நான்சொல்லும் இதுகேளீர் சத்திய மே
நடராஜ எனில்வரும் நித்திய மே.
46. சிவகாம வல்லிக்கு மாப்பிள்ளை யே
திருவாளன் நான்அவன் சீர்ப்பிள்ளை யே.
90. நடுநாடி நடுநாடி நடமாடு பதியே
நடராஜ நடராஜ நடராஜ நிதியே.
91. நடுநாடி யொடுகூடி நடமாடும் உருவே
நடராஜ நடராஜ நடராஜ குருவே.
92. நடுநாடி இடைநாடி நடமாடும் நலமே
நடராஜ நடராஜ நடராஜ பலமே.
இதிலும் நிறைய ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருந்தாலும் ராக, தாளத்துக்கு ஏற்ப வருவதால் பஜனைகளில் பாடலாம்
****
இரண்டாம் திருமுறையில் வரும் கீழ்கண்ட பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடல் ஆகும்; இதையும் எம் எஸ் . உள்பட நிறைய சங்கீத வித்துவான்கள் பாடியுள்ளனர் .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
5-1-2025 ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆசியா ஆகிய மூன்று கண்டங்களிலிருந்து ஞாயிறு தோறும் (இந்திய நேரம் மாலை 5.30 மணிக்கு) ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை.
இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.
திருமூலர் – 1
ச. நாகராஜன்
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே, வணக்கம், நமஸ்காரம்.
என நம்பி ஆண்டார் நம்பிகள் போற்றி வணங்கும் திருமூலர் பெரிய சித்தர். துறவி. தமிழின் ரகசியங்களை அறிந்தவர். சிவ ரகசியத்தை உணர்ந்தவர். அனைவரையும் ஆன்மீக உச்சியில் ஏற்ற தியானம், யோகம், மூச்சுக்கலை உள்ளிட்ட பலவற்றையும் தெள்ளுதமிழில் அள்ளித் தந்தவர். அவரைப் பற்றி இப்போது சிறிது சிந்திப்போம்.
மூவாயிரம் அரும் பாடல்களைத் தமிழுக்குத் தந்து பல ரகசியங்களை அனைவரும் அறிய வழி வகுத்த மாபெரும் சித்தர் திருமூலர்.
ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்டுகள் சமாதியில் இருந்தவர் என்பது பிரமிக்க வைக்கும் ஒரு உண்மை.
இவரைப் பற்றிய முக்கிய வரலாறு ஒன்று உண்டு.
கயிலை மலையில் தவம் செய்து கொண்டிருந்த சிவயோகி ஒருவர் பொதிகை மலையில் இருந்த அகத்திய மாமுனிவருடன் சில நாட்கள் இருக்கலாம் என்று பொதிகை நோக்கி வந்தார். சுந்தரநாதர் என்பது இவர் பெயர். திருவாவடுதுறையில் பசுபதி நாதரை தரிசித்து விட்டு அவர் சாத்தனூரை அடைந்தார். அங்கு மூலன் என்னும் இடையன் ஒருவன் மாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போதே வினைப்பயனால் கீழே விழுந்து இறந்தான். பசுக்கள் அனைத்தும் துயரத்தோடு அவனைச் சுற்றி நின்று புலம்பின. இதைப் பார்த்த சிவயோகி அப்பசுக்களின் துயரைப் போக்குவதற்காகத் தனது உடலை ஓரிடத்தில் பாதுகாப்பாக வைத்து விட்டுத் தனது தவ ஆற்றலால் மூலனின் உடலில் புகுந்தார். பசுக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தன. சாத்தனூரில் உள்ள பசுக்களின் இருப்பிடங்களில் அவற்றை பத்திரமாகச் சேர்த்த யோகியார் திரும்பி தான் உடலை வைத்த இடத்திற்கு வந்து பார்க்க அங்கு அவர் உடலைக் காணோம். இது சிவனது அருள் விளையாடலே என உணர்ந்த அவர் திருவாவடுதுறைக்குத் திரும்பி வந்து அங்கு மேற்குத் திசையில் இருந்த ஒரு அரச மரத்தின் அடியில் நிஷ்டையில் அமர்ந்தார். ஆண்டிற்கு ஒரு பாடல் வீதம் 3000 ஆண்டுகளில் 3000 பாடல்களை அவர் பாடியருளினார். இப்போது நமக்கு இந்த 3000 பாடல்களும் கிடைத்துள்ளன. சில பிரதிகளில் 3047 பாடல்கள் கூட உள்ளன. பின்னர் சிவபிரானின் திருவடியை அவர் அடைந்தார்.
இவர் அருளிய நூல் திருமந்திரம் என்று அழைக்கப்படுகிறது. இதில் ஒன்பது தந்திரங்கள் உள்ளன.
இந்த வரலாற்றைத் திருத்தொண்டர் புராண சாரமும் திருத்தொண்டர் திருவந்தாதியும் எடுத்துரைக்கின்றன.
நந்தி அருளாலே மூலனை நாடினோம் என்ற திருமந்திரப் பாடல் வரி இதை உறுதி செய்கிறது.
இன்னொரு ஆய்வின் படி இவர் சிதம்பரத்தில் சமாதி அடைந்துள்ளார் என்ற கருத்தும் தரப்படுகிறது.
சதுரகிரி தல புராண வரலாறு திருமூலர் பற்றிய பல சம்பவங்களை எடுத்துரைக்கிறது.
பாண்டிய மன்னனான வீர சேனன் என்பான் ஒரு கொடுங்கோலன். அவனை அவன் மனைவி உள்ளிட்ட அனைவரும் வெறுத்தனர். ஒரு நாள் கொடிய விஷ நாகத்தால் அவன் இறந்து விட்டான். அப்போது வான் வழியே சென்று கொண்டிருந்த திருமூலர் அம்மன்னனின் உடலில் புகுந்தார். தன் கல்ப தேகத்தைத் சீடனான குருராஜனின் பாதுகாப்பில் வைத்து விட்டு அரண்மனைக்கு வந்தார்.
திருமூல வீரசேனர் ஆட்சியில் நாடு செழிப்படைந்தது. அனைவரும் மகிழ்ந்தனர். அரசி பழைய வீரசேனனிடம் அடையாத இன்பங்களை திருமூல வீரசேனரிடம் அடைந்தார். அந்த உடலில் இருப்பது ஒரு பெரும் சித்தர் என்பதை அவள் அறிந்து கொண்டாள். அவரது கல்ப தேகம் இருக்கும் இடத்தையும் அதை அழிக்கும் வழியையும் அறிந்து கொண்ட அரசி அந்த உடலை அழித்து விட்டாள்.
நீண்டகாலமாக குருநாதரைக் காணாத சீடன் அவரைத் தேடி அரண்மனைக்கு வரவே அவனைப் பார்த்த திருமூலர் அவனைத் தன் கல்பதேகம் வைத்திருந்த குகைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரது தேகம் எரிந்து கிடந்தது. உடனே திரும்பி அரண்மனைக்கு வந்து அங்கு சில நாட்கள் இருந்து பின்னர் சதுரகிரி மலைக்கு வந்து தனது தவ வாழ்க்கையைத் தொடங்கினார். திருமந்திரம் உள்ளிட்ட பல நூல்களை இயற்றி, பின்னர் அங்கேயே சமாதி அடைந்தார்.
திருமூலர் மூலனுடைய உடலில் புகுந்த பின் செய்யப்பட்ட நூல் திருமந்திரம் ஒன்றே ஆகும். அதற்கு முன்னர் அவர் உபதேசம் முப்பது, மந்திரம் முந்நூறு என்ற இரண்டு நூல்களை இயற்றியுள்ளார்.
நிறைமொழி மாந்தரான திருமூலர் சிவபிரானது ஆணையால் மறைபொருள் கூற்றுக்கள் செய்யுள் வடிவில் தமிழ் மூவாயிரம் ஆக்கப்பட்டிருப்பதால் இது மந்திரம் என்ற பெயரைப் பெற்றது.