Post No. 14,173
Date uploaded in Sydney, Australia – 4 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

19ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 19
பத்து முக்கிய, புகழ்பெற்ற ஆஸ்திரேலிய நகரங்கள்
ஆஸ்திரேலியாவில் சுமார் பத்து முக்கிய நகரங்கள் உள்ளன. அவற்றின் சிறப்புகளைக் காண்போம்
Canberra-Capital of Australia
***
NSW New South Wales – Sydney (state capital)
Northern Territory- Darwin (territory capital)
Queensland- Brisbane (state capital), Cairns, Gold Coast
South Australia- Adelaide (state capital)
Tasmania- Hobart (state capital)
Victoria- Melbourne (state capital)
Western Australia- Perth (state capital)
ஆஸ்திரேலியாவின் தலை நகர் கான்பெர்ரா– எப்படி இந்தியாவில் டில்லி தலை நகராகவும் ஒரு தனி மாநிலமாகவும் (யூனியன் பிரதேசம்) இருக்கிறதோ , அதே போல கான்பெரா தனி பகுதி ; எந்த மாநிலத்தின் கீழும் வராது.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தலை நகர் – சிட்னி நகரம்
குயீன்ஸ்லாந்து- மாநிலத் தலை நகர் – பிரிஸ்பேன்
விக்டோரியா -மாநிலத் தலை நகர் மெல்போர்ன்
டாஸ்மேனியா -மாநிலத் தலை நகர் ஹோபர்ட்
வடக்கு ஆஸ்திரேலியா-மாநிலத் தலை நகர் டார்வின்
மேற்கு ஆஸ்திரேலியா -மாநிலத் தலை நகர் பெர்த்
தெற்கு ஆஸ்திரேலியா -மாநிலத் தலை நகர் அடிலெய்ட்
இவை தவிர சுற்றுலா காரணமாக கேர்ன்ஸ், கோல்டுகோஸ்ட், அலீஸ் ஸ்பிரிங்க்ஸ் நகரங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.
இவை தவிர சுமார் இருநூறு ஊர்கள் சுற்றுலா மையங்களாகத் திகழ்கின்றன.
ஜனத்தொகை Population
இனி மக்கட்தொகையைக் காண்போம்
1 Greater Sydney (New South Wales) சிட்னி 5,450,496
2 Greater Melbourne (Victoria) மெல்போர்ன் 5,207,145
3 Greater Brisbane ( Queensland) பிரிஸ்பேன் 2,706,966
4 Greater Perth ( Western Australia) பெர்த் 2,309,338
5 Greater Adelaide (South Australia) அடிலெய்ட் 1,446,380
6 Australian Capital Territory –(Canberra) கான்பெர்ரா 466,566
7 Greater Hobart (Tasmania) ஹோபர்ட் 253,654
8 Greater Darwin (Northern Territory) டார்வின் 150,736
பசிபிக் மஹா சமுத்திரம் அலைவீசும் கிழக்கு கடற்கரையை ஒட்டியே பெரும்பாலான நகரங்களும் அதிக மக்கட்தொகையும் உளது.
London Swaminathan in Sydney Opera House
சிட்னி நகரின் சிறப்பு
லண்டனுக்கு முதலிடம்; சிட்னி நகருக்கு பத்தாம் இடம்
2025 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த 10 நகரங்களில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் பத்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.
மார்க்கெட் ஆராய்ச்சி நிறுவனமான Ipsos, உலகின் சிறந்த நகரங்கள் 2025 அறிக்கையை வெளியிட்டுள்ளது .
உலகெங்கிலும் உள்ள நகரங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரம், மக்கள் ஒருவருக்கொருவர் காட்டும் பரிவு,பாசம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தரவரிசை செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து வசதி, ஆரோக்கியத்துக்கான ஆஸ்பத்திரி வசதிகள், மக்களின் பாதுகாப்பு ஆகியனவும் கருத்தில் கொள்ளப்பட்டன.
30 நாடுகளைச் சேர்ந்த 22,000 பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் உலகின் தலைசிறந்த நகரம் பிரிட்டனின் லண்டன் என்று சர்வே கூறுகிறது.
இரண்டாவது இடத்தை அமெரிக்காவின் நியூயார்க் நகரம் , மூன்றாவது இடத்தைப் பிரான்சின் பாரிஸ் பிடித்தன
4..டோக்கியோ, 5.சிங்கப்பூர் , 6.ரோம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
7.மாட்ரிட், 8.பார்சிலோனா, 9.பெர்லின் அடுத்து வந்துள்ளன
ஆஸ்திரேலியாவின் சிட்னி 10-வது இடத்தைப் பிடித்துள்ளது. சிட்னி நகரின் சிறப்புகள் — ஆபரா ஹவுஸ், பாண்டி கடற்கரை, ஹார்பர் பிரிட்ஜ், பால்மோரல் கடற்கரை.
Attractions such as the iconic Harbour Bridge, Sydney Opera House and stunning beaches such as Bondi and Balmoral were listed as reasons Sydney is so beloved both locally and globally.
சிட்னியில் பார்க்க வேண்டிய இடங்கள்

Sydney Harbour Bridge
ஆபரா ஹவுஸ்
ஹார்பர் பிரிட்ஜ்
பாண்டி பீச்
டார்வின் ஹார்பர்
பால்மோரால் கடற்கரை
ஆஸ்திரேலிய மியூஸியம்
பாரமேட்டா நதியில் படகு சவாரி
இந்து மதக் கோவில்கள்
*****
நாட்டின் தலை நகர் கான்பெர்ரா
Parliament House
London Swaminathan on a ferry in Nelson Bay, Australia
தலை நகர் காபெர்ரா திட்டமிடப்பட்டு கட்டப்பட்ட நகரம் ஆகும்; ஆஸ்திரேலிய பார்லிமென்ட் கட்டிடம், போர் நிநினைவுச் சின்னம் தேசீய பியூசியம் நேஷனல் காலரி மற்றும் போர்ட்ரைட் காலரி ஆகியன பார்க்க வேண்டிய இடங்கள்.
ஆஸ்திரேலியாவின் தேசீய நூலகத்தில் லடச்சக்கணக்காக புஸ்தகங்கள் ஆவணங்கள் உள்ளன அருகில் லேக் பார்லி கிரிப்பின் ஏரி உளது டிட்பின்பில்லா இயற்கை வனப்பு பாதுகாப்பிடம் இருக்கிறது . இந்த நகரத்தின் மார்கெட்டுகளும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றன .
சிறுவர்களை மகிழ்விக்கும் டைனோசர் மியூசியம் குறிப்பிடத்தக்கது
சிட்னி நகரிலிருந்து மூன்றே மணி நேரத்தில் காரில் போய்விடலாம் சிறிய நகரம் என்பதால் ஒரே நாளிலும் பார்த்துவிட்டுத் திரும்பலாம்
.****
மெல்போர்னில் என்ன இருக்கிறது ?
மெல்போர்ன் நகரின் பெயரைச் சொன்னவுடனேயே கிரிக்கெட்டும் டென்னிஸும்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். அந்தப் போட்டிகள் மட்டுமின்றி கார் ரேஸ் , குதிரைப் பந்தயம் முதலியவையும் நடைபெறுகின்றன. இந்த நகரம் நாட்டின் கலாசாரத் தலைநகரமும் கூட. நாட்டின் மிகப்பெரிய ஆஸ்திரேலிய ஓவியங்கள், கலைப்பொருட்கள் இடம்பெறும் காட்சி சாலைகளும் உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக 5000 காப்பிக்கடைகள் இருப்பது மெல்போர்னின் தனிச் சிறப்பு ஆகும். சந்து பொந்துகளிலும், பாலங்களுக்கு அடியிலும் கூட காப்பிக் கடைகளும் , கள்ளுக் கடைகளும் உணவு விடுதிகளும் காணப்படும்.
இந்த ஊரில் கால்நடையாகச் சுற்றிப் பார்க்கும் வாக்கிங் டூர்களில் சேர்ந்தால் நகரின் முழு மகிமையையும் தெரிந்து கொள்ளலாம்..
****

ஆஸ்திரேலிய நகரங்கள் : கேர்ன்ஸ் Cairns
வடகோடியில் உள்ள கேர்ன்ஸ் நகரம் இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் முக்கியமான இடம்; ஏனெனில் உலக அதிசயங்களில் ஒன்றான 1500 மைல் நீளமுள்ள பெரும்பவளத் திட்டினைக் காண இங்கிருந்து செல்வதுதான் எளிது. அதற்கான எல்லா வசதிகளும் உள. ஒரு கப்பலில் பயணிகளை ஏற்றிச் சென்று ஒரு தீவில் இறக்கிவிட்டு அணி அணியாக சிறிய கண்ணடிப்படகுகளில் கொண்டு செல்லுவார்கள்; அதாவது The Great Barrier Reef in glass bottomed boats கீழே கண்ணாடி பொருத்தப்பட்ட படகுகள்; அதன் மூலம் பவளத் திட்டுகளையும் அதனிடையே பாய்ந்து ஓடும் வண்ண மீன்களையும் கண்டு களிக்கலாம் . இது தவிர கடலுக்கடியில் முழ்கி மீன்களோடு நீந்தும் வசதிகளும், பல நீர் விளையாட்டுகளும் இருக்கின்றன.
இதே இடத்தில் இன்னும் ஒரு இயற்கை அதிசயமும் உள்ளது ஒரு பகுதியில் அடர்ந்த மழை வனக்காடுகள் இருக்கின்றன பையில் கனம் (பணம் ) இருந்தால் ஹெலிகாப்டரில் 45 நிமிடங்களுக்குப் பறந்து சென்று கடலையும் கானகத்தையும் ஒருங்கே காணலாம்; ஒரு முறை நீராவி ரயில் மூலமாகச் சென்றால் அந்த ரயில் 15 குகைகளையும் 93 வளைவுகளையும் , பல பாலங்களையும் கடந்து செல்லும். அங்கே நீர்வீழ்ச்சிகளையும் காணலாம் கூராண்டா என்றும் டையின்ட்ரீ மழை வனக்காடுகள் என்றும் இந்த இடத்தை அழைக்கிறார்கள்; திரும்பி வரும்போது கேபிள் காரில் (கம்பி வழி ரயில்) வரலாம். the Kuranda Scenic Railway;, it navigates 15 tunnels, 93 curves and difficult bridges across dense rainforest, waterfalls and steep ravines in just under two hours. On the way down, jump aboard the Skyrail Rainforest Cableway.
இந்தப் பயணத்துக்கு இரண்டு மணி நேரம் ஆகும் . அந்த நகரில் ஒரு நாளாவது ஹோட்டலில் அறை எடுத்து தங்க வேண்டும்.
****
மேற்கு ஆஸ்திரேலிய பெர்த் நகரம்
சிட்னிக்கு நேர் எதிர்ப்புறத்தில் 2500 மைல் தொலைவில் பெர்த் உளது ; இங்கும் இந்தியர்கள் அதிகம் வாழ்கின்றனர் இப்போதுள்ள மூன்று கோவில்களோடு மேலும் ஒரு மிகப்பெரிய ராமர் கோவில் இங்கு உருவாகிறது .150 ஏக்கரில் அதிக உயரமுள்ள அமைப்புடன் இது விளங்கும் .
ஸ்வான் நதியில் Swan River மூன்று மணி நேரம் படகு சவாரி செய்யலாம்; ப்ரீமாண்ட்டில் என்னும் துறைமுக நகரில் இருபது மீட்டர் தொங்கு பாலம் suspension பிரிட்ஜ் உளது; கடல் அலைகளை போல தோற்றமளிக்கும் வேவ் ராக் என்னும் அலைகள் பாறை Wave Rock இங்குள்ள இயற்கை அதிசயம் ஆகும். கடற்கரையில் உலாவலாம். கப்பலில் சென்று திமிங்கிலங்களை காணலாம்.
நகருக்குள் தாவரவியல் பூங்கா இருக்கிறது . முக்கிய மியூசியங்களும் இருக்கின்றன
வெள்ளைக்காரர்கள் இந்த டத்தை ஆக்ரமித்து ஸ்காட்லாந்திலுள்ள நகரின் பெயரினைச் சூட்டினர்; அதற்கு 45,000 ஆண்டுகளுக்கு முன்னரே நூங்கார் என்ற பெயருள்ள ஆஸ்திரேலிய ஆதிவாசிகள் இங்கு வாழ்ந்தனர் .
TO BE CONTINUED ……………………………….
Tags- ஆஸ்திரேலியா, வாருங்கள், அதிசயம் அனைத்தையும் பாருங்கள்! Part 19, பத்து முக்கிய, புகழ்பெற்ற ,ஆஸ்திரேலிய நகரங்கள் , மக்கட்தொகை