Tasmanian Devil
Post No. 14,175
Date uploaded in Sydney, Australia – 5 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
20ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 20
புகழ்பெற்ற பத்து ஆஸ்திரேலிய நகரங்கள் தொடர்ச்சி…………
டாஸ்மேனியா Tasmania மாநில தலை நகரம் ஹோபார்ட் Hobart

ஆஸ்திரேலியாவின் தென்புறத்தில் உள்ள தீவு டாஸ்மேனியா ஆகும். இந்தத் தீவு இயற்கை அழகும் புதுமைகளும் நிறைந்த இடம். தலை நகர் ஹோபார்ட்டும் இயற்கை வனப்பு மிக்கது . டெர்வெண்ட் என்னும் நதியும் வெல்லிங்டன் மலையும் இந்த Mount Wellington and the flow of the wide River Derwent) வட்டாரத்தை அலங்கரிக்கின்றன. நாட்டின் இரண்டாவது பழைய நகரம் இது. நிலத்துக்கடியிலுள்ள மியூசியத்தில் புதிய பழைய ஓவியங்களைக் காணலாம். நகரத்தின் சனிக்கியமை கிழமை மார்க்கெட்டும் புகழ்பெற்றது . இதை சாலமங்கா மார்க்கெட் Salamanca Market என்று அழைக்கிறார்கள்.
மலையைச் சுற்றிப்பார்ப்பதும், நதியின் கரையிலுள்ள தாவரவியல் பூங்காவைப் Royal Tasmanian Botanical Gardens. பார்ப்பதும் இயற்கை ஆர்வலர்களுக்கு இன்பம் பயக்கும் .
டாஸ்மேனியா தீவு கப்பல் காட்டும் தொழிலுக்கு பெயர்பெற்ற இடம். இங்குள்ள கடல்சார் மியூசியமும்( Maritime Museum of Tasmania )இதன் வரலாற்றை விளக்கும் . ஊரைச் சுற்றிப்பார்ப்போர் டாஸ்மான் பாலத்தையும் கண்டு வியப்பார்கள் (Tasman Bridge. It is among the world’s first box-girder cantilever bridges to have been built).
டாஸ்மான் பாலம்
டாஸ்மேனியா தீவு முழுவதையும் நோக்கினால் அங்குள்ள மழை வனக் காடுகளையும் அவைகளுக்குள் உள்ள தேசீய பூங்காக்களையும் குறிப்பிட வேண்டும். தீவுக்கே உரித்தான டாஸ்மேனியன் டெவில் என்ற பிராணி, பிளாட்டிபஸ், அங்குமிங்கும் பறந்து திரியும் மயில்கள் முதலியவற்றைப் பார்த்து மகிழலாம். ஹோபார்ட் நகரிலிருந்து அரைமணி நேரத்துக்குள் செல்லக்கூடிய (Bonorong Wildlife Sanctuary ) வனவிலங்கு பாதுகாப்பிடம் சுற்றுலாப்பயணிகளைக் கவரும் இடமாகும்
மொழியியல் வல்லுனர்களுக்குப் பல புதிர்களைப்போடும் இடம் இந்தத்தீவு ; பல பெயர்ளைன் பொருள் என்ன, அவற்றின் மூலம் என்ன என்று அறிஞர்கள் விவாதத்தித்த வண்ணம் இருக்கின்றனர்.
*****
அடிலெய்ட் Adeleide நகரத்தின் சிறப்புகள்
நாட்டின் தென் கோடியிலுள்ள முக்கிய நகரம் இது. சிட்னிக்கும் அடிலெய்டுக்கும் இடையிலுள்ள தூரம் ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல். இந்த நகரிலுள்ள தாவரவியல் பூங்கா, சென்ட்ரல் மார்க்கெட் ஆகியன பார்க்க வேண்டிய இடங்கள்; ஒயின் மதுபானப்பிரியர்களுக்கும் பார்ப்பதற்கு பல இடங்கள் இருக்கின்றன.
சுமார் பத்துமைல் தொலைவிலுள்ள Kangaroo Island கங்காரு தீவில் கோவாலா , கங்காரு முதலிய மிருகங்களையும், கடலில் வாழும் சீல் முதலியவற்றையும் காணலாம்.
அடிலெய்ட் ஓவல் (Adelaide Oval )ஸ்டேடியம் கிரிக்கெட், கால்பந்து, ரக்பி, டென்னிஸ் போட்டிகள் நடைபெறும் இடம் ஆகும். இதன் கூரை மேல் ஏறி இறங்குவது ஒரு தனிச் சிறப்பு ஆகும்; அதற்குக் கட்டணம் உண்டு.
மூன்று நாள் ரயில் பயணம்
இந்த நகரம் வேறு ஒரு சுற்றுலாப் பயணத்துக்கும் பெயர் பெற்று இருக்கிறது அது கான் ரயில் பயணம் (Three days on board The Ghan train). இந்தியாவில் கன்யாகுமரியிலிருந்து காஷ்மீரூக்குப் போவது போல அடிலெய்ட் என்னும் தென் கோடி முனையிலிருந்து வடகோடி டார்வின் நகருக்குச் செல்ல கான் ரயில் ஓடுகிறது அந்தக் காலத்தில் ஆஸ்திரேலியாவுக்கு ஓட்டகத்தைக் கொண்டுவந்த ஆப்கானியர் பெயரான கான் இதற்குச் சூட்டப்பட்டுள்ளது . டார்வின் நகரிலிருந்து புறப்பட்டும் அடிலெய்டுக்கு வரலாம். இந்தப் பயணம் முடிய மூன்று நாட்கள் ஆகும் ; ஆஸ்திரேலிய கண்டத்தைக் குறுக்காக கடந்து செல்லும் இந்த ரயில் பாதையின் நீளம் 2,979 kilometres (1,851 miles); நட்ட நடுவில் அலிஸ் ஸ்ப்ரிங்ங்ஸ் Alice Springs,என்னும் ஊரும் வரும் அனகிகிருந்துதான் ஆஸ்திரேலிய பழங்குடி ஆதிவாசிகளின் உளூரு மலைக்குச் செல்ல வேண்டும் இந்துக்களுக்கு கைலாய மலை போல ஐயர்ஸ் ராக் என்றும் உளூரு என்றும் அழைக்கப்படும் புனித மலை உள்ளது.

உலகின் மிக நீண்ட ரயில் பயணங்களில் ஒன்று இது .
****
டார்வின் நகரின் சிறப்புகள்
டார்வின் நாட்டின் வடகோடி நகரம். வடக்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் தலை நகர் இங்கும் ஆதிவாசி மற்றும் நவீன ஆஸ்திரேலிய கலைப்பொருள், ஓவியக் கண்காட்சியகங்கள் இருக்கின்றன நீர் விளையாட்டுப் பூங்காக்களும், தெரு ஓரக் கடைகளும் மார்க்கெட்டுகளும் இருக்கின்றன.
நகருக்கு வெளியே கடற்பயணங்களின் மூலம் பல சுற்றுலாத் திட்டுகளை அடையலாம் இங்கிருந்து விமானம் மூலமாக காக்காடு தேசீய பூங்காவுக்கும் Kakadu National Park Scenic Flight &Yellow Water Cruise (by plane) செல்லலாம்.
காக்காடு தேசீய பூங்கா
*****
பிரிஸ்பேன் Brisbane, the capital city of Queensland
குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தலைநகரம்; ஒலிம்பிக் போட்டி நடைபெறப்போகும் (2032 Summer Olympics .) நகரம் வண்ண வண்ண கட்டிடங்களும் பிரிஸ்பேன் நதியும் நகருக்குப் பெருமை சேர்க்கின்றன. எல்லா இடத்துக்கும் இலவச படகு சவாரி செய்யலாம் டிராம் பஸ் வசதிகளும் உண்டு அறிவியல் மியூசியம், கலைப்பொருள் ஓவிய மியூசியம் ஆகியவற்றையும் பார்க்க வேண்டும்
City Hopper ferry service in Brisbane, Australia is free. The City Hopper is a free inner-city ferry that runs along the Brisbane River. சிட்டி ஹாப்பர் என்னும் இலவச படகு எட்டு இடங்களில் நிற்கும். நகரின் வரைபடத்தை வைத்துக் கொண்டு பார்ர்க்க வேண்டிய இடங்கள் னைத்தையும் பார்த்துவிடலாம் .
Look for a red sign on the front and side of the ferry to identify it as a free City Hopper
The City Hopper runs every 36 minutes from 6 AM to midnight, seven days a week
The City Hopper stops at eight locations, including Eagle Street Pier, Kangaroo Point, and South Bank Parklands
பிரிஸ்பேன் சிட்டி ஹால் முக்கிய சுற்றுலா இடம்.
(Brisbane City Hall was built in the early 1900s and comprises around two acres, complete with 573 rooms and the largest copper dome in Australia). 573 அறைகளும் தாமிரக் கூரையும் உள்ளன. இது இரண்டு ஏக்கர் பரப்பில் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது
நகரிலிருந்து சற்று தொலைவாகப் பயணம் செய்து கோவாலா விலங்குப் பாதுகாப்பகம் Lone Pine Koala Sanctuary. , கடலில் குடியேறிச்செல்லும் திமிங்கிலக் கூட்டம் ஆகியவற்றையும் காணலாம். humpback whale migration திமிங்கில கூட்டத்தைக் காண்பது ஆண்டில் சில June and November, மாதங்களின் மட்டுமே சாத்தியம் . நதியின் கரை ஓரமாக நடந்து செல்லுவது மனதுக்கு அமைதியையும் ஆனந்தத்தையும் அளிக்கும்.
****
முக்கியக் குறிப்பு
ஐயர்ஸ்ராக்/ உளூரு என்னும் ஆதிவாசி மலை , பெரும் பவளத்திட்டு, பிரிஸ்பேன் நகரம் , பாரமேட்டா நதிப் பயணம் , ஆபரா ஹவுஸ் ஆகியன பற்றி முன்னரே எழுதிய விரிவான கட்டுரைகளில் நிறைய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன ; அவற்றினையும் காண்க.
—subham-
Tags —ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள், அதிசயம் அனைத்தையும் பாருங்கள் Part 20, புகழ்பெற்ற, பத்து, நகரங்கள் , பிரிஸ்பேன், அடிலெய்டு, டார்வின், டாஸ்மேனியா , ஹோபார்ட்