
Post No. 14,178
Date uploaded in Sydney, Australia – 6 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 21
அதிசய ஆர்டீஷியன் ஊற்றுக் கிணறுகள்
தாமாகவே நிலத்தடி நீரைப் பாய்ச்சி அடிக்கும் அதிசய பொங்கு ஊற்றுக் கிணறுகள் நிறைந்த நாடு ஆஸ்திரேலியா ஆகும்.
இவைகளுக்கு ஆர்டீஷியன் கிணறுகள் என்று பெயர்.
பொங்கு ஊற்றுக் கிணறுகள் (artesian wells)
பொங்கு ஊற்றுக் கிணறு என்பது தரையிலிருந்து தானாகவே பீரிட்டெழுகிற நீருற்று ஆகும். தரைக்கடியில் சிக்கியிருக்கிற நிலத்தடி நீரே இவ்வாறு வெளிப்படுகிறது. பிரான்சில் உள்ள ஆர்த்வா பிரதேசத்தில் இவ்வாறான ஓர் ஊற்று முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 1126 ஆண்டு முதல் நிறைய பொங்கு ஊற்றுக் கிணறுகள் அங்கு தோண்டப்பட்டன. அதன் காரணமாக இவை ஆர்ட்டீசியன் ஊற்றுகள் எனப் பெயரிடப்பட்டுள்ளன.
சில இடங்களில் நிலத்தின் மேல்மட்டத்தில் இருப்பதால் இயற்கை நீறுற்றுகளாக வெளிப்படுகின்றன . இன்னும் சில இடங்களில் மூன்று கிலோ மீட்டருக்கு அடியில் இவை இருக்கின்றன.
மின்சார அல்லது பெட்ரோல் என்ஜின்களைப் பயன்படுத்தி நீரை பம்ப் செய்து மேலே கொண்டுவரத் தேவை இல்லை. பூமிக்கடியிலுள்ள அழுத்தம் காரணாமாகத் தானாகப் பீய்ச்சி அடிக்கும் ஊற்றுகளையே இப்படி அழைக்கிறோம்.


தமிழ் நாட்டில் கூட 1934-இல் அன்றைய தொழில் துறை தண்ணீர் தேவைக்காக நெய்வேலியில் பொங்கு ஊற்றுக் கிணறுகள் தோண்டப்பட்டன. உலகிலேயே ஆஸ்திரேலியாவில்தான் அதிமான பொங்கு ஊற்றுக் கிணறுகள் காணப்படுகின்றன. அந்தப் பிரதேசத்தை கிரேட் ஆர்டீஷியன் பேசின் The Great Artesian Basin அழைக்கிறார்கள் நான்கு மாநிலங்களில் இவை அதிகம் காணப்படுகின்றன (Northern Territory, Queensland, South Australia, and New South Wales. )
பாறைகளுக்கு அடியில் மழை நீர் சிக்கி இத்தகைய நீர்நிலைகள் உண்டாகின்றன. எல்லா ஊற்றுக்களின் நீரும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
பதினேழு லட்சம் சதுர கிலோமீட்டருக்கு இவை பரவி இருக்கின்றன. ஆஸ்திரேலிய கண்டத்தின் ஐந்தில் ஒரு பகுதிப் பரப்புக்குச் சமமானது; சிட்னி துறைமுகத்தை 130,000 தடவை நிரப்புவதற்குப் போதுமான தண்ணீர் இது!
60,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆதிவாசிப் பழங்குடி மக்கள் இந்த நீறுற்றுகளைப் பயன்படுத்தி வருகிறார்கள் . அவர்கள் இதன் முக்கியத்தை உணர்ந்து போற்றியும் வந்திருக்கிறார்கள் .

பல இடங்களில் அவை கசிந்து ஓடைகளாகி ஆறுகளுடன் கலக்கின்றன 120 நகரங்கள் இவற்றால் பயன்பெறுகின்றன. இரண்டு லட்சம் மக்களுக்கும் 7600 தொழில் நிறுவனங்களுக்கும் இவை ஒரு வருடத்துக்கு 33 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டித் தருகின்றன. இது எவ்வளவு முக்கியமானது என்பதைக் காட்டும் புள்ளி விவரங்கள் இவை.
இவைகளை முறையாகப் பயன்படுத்தவும் , நீர் ஆவியாகி வீணாவதைத் தடுக்கவும் கடந்த பத்து ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அரசு பல திட்டங்களை அறிவித்து வருகிறது
சில சுவையான விஷயங்கள் இதோ :
இவை உப்புக்கரிக்காத தண்ணீரைக் கொடுத்தாலும் பூமிக்கு அடியிலிருந்து வரும்போது முப்பது முதல் நூறு டிகிரி வெப்பத்துடன் வெளிவரும்; சில இடங்களில் கொதிக்கும் நீராக வருகிறது.
மருத்துவ உபயோகம்
இந்த நீரில் கால்சியம், மக்னீஷியம் பொட்டாசியம் கந்தக, கார்பனேட் உப்புகள் கலந்து இருப்பதால் தோலுக்கு நம்மை பயக்கும்.. திசுக்களை வலுப்படுத்தும்; நோய்களைத் தடுக்க உதவும்
சுத்தமான நீர் கிடைக்கும் இடங்களில் குடி நீராகவும் பயன்படுகிறது
அதிகமாக தண்ணீரை பம்ப் செய்து எடுத்த இடங்களில் நீர்மட்டம் 1300 அடிகளுக்கு கீழே போய்விட்டது .
நூறு அடி முதல் ஆயிரம் அடி வரை இந்த நீர் பூமிக்கடியில் இருக்கிறது
இடத்துக்கு இடம் நீரின் தன்மை மாறுபடுவதால் இதைக் குடிப்பதற்கும் சமைப்பதற்கும் பயன்படுத்துவதில்லை ; பயிர்த் தொழில், ஆடு மாடு பண்ணைத் தொழில்களுக்கு அதிகம் பயன்படுகிறது
சில நீரூற்றுகள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நீரை அளித்துவருகின்றன. மேலும் சில அதற்கு முன்னால் வற்றிவிட்டன.
*****

Facts about artesian wells
An artesian well is a deep well that naturally produces water due to underground pressure within a confined aquifer, meaning the water rises to the surface without needing a pump; the term “artesian” originates from the region of Artois in France where such wells were first extensively drilled; here are ten facts about artesian wells
*****
The Basin spans almost 1.7 million square kilometres which is over one-fifth of the Australian continent. There is around 65 million GL of groundwater in the Basin which is enough water to fill the Sydney Harbour 130,000 times.
****
Basin water emerges through cracks in the rock and flows into springs, creeks and rivers. This creates a permanent water source even during dry periods. Most springs and leakages occur on the edges of the Basin where water is close to the surface.
****
What makes artesian water hot?
Water temperatures ranging from 30–100 °C across the basin, The water from deeper bores are almost at boiling temperature because of the immense heat and pressure at such depths.
****
Why is artesian water so special?
The high mineral content of the Artesian Thermal water includes minerals such as calcium , magnesium , potassium , sulphur & bicarbonate , which are believed to be absorbed into the skin , helping to repair tissue damage and also help the body fight illness .
****
Artesian wells are commonly used for drinking water, irrigation, and industrial purposes and can provide a reliable water source in areas where surface water is scarce or contaminated.
—Subham—
Tags— ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள், அதிசயம் ,பாருங்கள்!- Part 21, ஆர்டீஷியன் ஊற்றுக் கிணறுகள், Facts , artesian wells