
Post No. 14,181
Date uploaded in Sydney, Australia – 7 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 22
ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் இந்துக்களா?
ஆஸ்திரேலியாவில் ஆதிவாசிகள் 250 வெவ்வேறு மொழிகளைப் பேசுவதால் அவர்கள் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களிலிருந்து குடிபெயர்ந்தது தெரிகிறது .
மேலாகப் பார்க்கும்போது அவர்கள் விபூதி போல உடலில் வெள்ளை நிற மண்ணை மூன்று மூன்று வரிகளாகப் பூசிக்கொள்வதும் நடனத்தை சிவா நடனம் என்று கூறிக்கொள்வதும் இந்துமதத் தாக்கத்தைக் காட்டுகிறது . பல தமிழ்ச் சொற்கள் இருப்பதும் அவர்களை தமிழ் இந்துக்களின் மூதாதையர்கள் என்று காட்டுகிறது.
இதுபற்றி 1950-களில் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) சென்னை மயிலாப்பூர் சொற்பொழிவுகளில் குறிப்பிட்ட விஷயமும் முக்கியமானது உலகத்தில் ஆதியில் இந்து மதம் மட்டுமே இருந்தது; அதன் எச்ச சொச்சங்களே இவை என்று குறிப்பிட்ட சங்கராசார்யார், தென் ஆப்ரிக்கா அருகிலுள்ள மடகாஸ்கர் தீவில் ஸம்ஸ்க்ருத்ப் பெயர்கள் எங்கும் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும் துருக்கியில் தசரதன், மற்றும் வேத கால தெய்வங்களின் பெயர்கள் கல்வெட்டில் காணப்படுவதால் மறுக்க முடியாத, எல்லோரும் ஏற்கக்கூடிய, தொல்பொருட் துறைச் சான்றுகள் கி.மு 1340–ஆம் ஆண்டிலேயே கிடைத்துவிட்டதையும் அடிக்கோடிட்டுக் காட்டி இருக்கிறார் .
அவர் 75 ஆண்டுகளுக்கு முன்னர் பேசியபோது கிடைத்தைவிட இப்போது நிறைய செய்திகள் கிடைக்கின்றன .
இவைகளை ஒட்டு மொத்தமாக வைத்துப் பார்க்கையில் நான் நம்பும் விஷயங்கள் இவைதான்:–
1
உலகில் ஆதிகாலத்தில் இந்து மதம் இயற்கையாகத் தோன்றியது ; அது பல்வேறு இடங்களில் பல்வேறு வடிவங்களில் இன்றும் காணப்படுகிறது ; இதற்கு இந்தோனேஷியாவின் பாலி தீவுகள் மற்றும் தென் அமெரிக்க, மத்திய அமெரிக்க நாடுகளில் காணப்படும் மாயா, இன்கா, ஒல்மெக் , அஸ்டெக் (ஆஸ்தீக) நாகரீகங்கள் , ரோமானிய எட்ருஸ்கன்,மித்ரா பண்பாடுகள் சான்றுகள் ஆகும் ; ஸ்வஸ்திகா வடிவத்தை அவர்கள் அனைவரும் போற்றியுள்ளனர்
2
இதே போல எந்த ஒரு பழைய மொழியின் சொல்லையும் சம்ஸ்க்ருத- தமிழ் மூலத்துக்கு இழுத்து வந்துவிடலாம் ; ஆதி மொழி, இவற்றின் மூலத்திலிருந்து பிறந்ததே ; சம்ஸ்க்ருத மூலத்திலிருந்து வந்ததாகக் கருதப்படும் ஆங்கில மொழியில் ஆயிரக்காண தமிழ்ச் சொற்கள் இருப்பதும் இதற்குச் சான்று
(மேற்சொன்ன எனது கருத்துக்களை விளக்கும் ஏராளமான கட்டுரைகள் இதே பிளாக்கில் உள்ளன; புஸ்தக வடிவிலும் அச்சாகிவிட்டன).
3
ஒவ்வொரு பிரிவினரையும், மொழியையும் ஆழமாக ஆராய்ந்தால் மேலும் பல உண்மைகள் வெளிப்படும் .
மரணம், மனித வாழ்வு, புறச்சூழல் பற்றிய ஆதிவாசிப் பழங்குடி மக்களின் கொள்கைகளில் பல இந்துமத ஒற்றுமைகளைக் காண முடிகிறது.
அவர்கள் கொடி FLAG இந்துக்களின் கொடியைப்போல இரண்டு நுனிகளைக் கொண்டது ஆர் எஸ் எஸ் அமைப்பும், உலகில் ஒரே இந்து நாடாக இருந்த நேபாளமும் இன்று வரை அதே போல கொடிகளைப் பயன்படுத்தி வருகின்றனர் .
பிறந்தவரெல்லாம் இறப்பது உறுதி என்ற பகவத் கீதை ஸ்லோகம் அவர்களின் மத நம்பிக்கைகளில் ஒன்று
जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च । तस्मादपरिहार्येऽर्थे न त्वं शोचितुमर्हसि ॥ २-२७॥ Indeed, certain is death for the born, and certain is birth for the dead; therefore, over the inevitable, you should not grieve. BG 2-27
உலகிலேயே தண்ணீரைப் புகழும் ஸ்லோகங்கள் வேதங்களில்தான் அதிகம் ; ஏனெனில் வேத கால இந்துக்கள் இந்தியாவில் தோன்றியவர்கள் ; கைபர் கணவாய் வழியாக வரவில்லை; அது மட்டுமல்ல; இந்துக்களின் பிறப்பு முதல் இறப்பு வரை தண்ணீர் இடம்பெறுகிறது ; இது இந்தியாவில் தோன்றிய ஆரியர்களின் உயிர். இதை இன்றும் பிராமணர்களின் மூன்று வேளை சந்தியா வந்தன கிரியைகளில் காணலாம். ஆபஹ என்றால் தண்ணீர்; அத்துடன்தான் சந்தியா வந்தனம் தொடங்கும். தண்ணீர் இல்லாமல் பிராமணர்கள எதையும் செய்ய முடியாது . சமைத்த உணவினைத் தொட்டால்கூட பெண்கள் கையைத் தண்ணீரில் கழுவிவிட்டுத்தான் மற்ற பண்டங்களைத் தொட முடியும்!
ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் நீரைப் போற்றி அதுதான் நம்மை இணைக்கிறது என்றும் கூறுகிறார்கள் . இது வேத மந்திரத்தின் எதிரொலி . உலகில் வேறு எந்த மத நூல்களிலும் தண்ணீரைப் புகழும் மந்திரங்கள் கிடையாது. ஏனெனில் அவர்கள் வறண்ட அல்லது பனிப்பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள் .
பழங்குடி மக்கள் பற்றி, நான் சொல்லும் விஷயங்களை எல்லாம் ஆஸ்திரேலிய மியூசியத்தில் பெரிய போர்டுகளில் அச்சிட்டு வைத்திருக்கிறார்கள்.
பெரியோர்களை மதிக்கவேண்டும் என்பது அவர்களின் முக்கியக் கொள்கைகளில் ஒன்று ; இது இந்து மத வேதங்களில் மட்டுமே உளது. சிறுவர்களுக்கு கற்பிக்கும் மந்திரம்:
மாதா பிதா குரு தெய்வம் மற்றும் அதிதி தேவோ பவ (விருந்தாளிகள் தேவர்கள் ).
ஆஸ்திரேலியா நாட்டு மலையில் அதிசய கணபதி! (Post No. 2500)
Date: 2 February 2016 [Written by london swaminathan
“காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்”- என்றும் “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” – என்றும் தமிழில் பழமொழிகள் உண்டு. இது போல தெய்வ பக்தியுடையோருக்கு பாறையும் கடவுள் சிலையாகத் தோன்றும்! காதல் பித்து ஏறியவர்களுக்கு எதைப் பார்த்தாலும் காதலன் அல்லது காதலி போலத் தோன்றும். பக்தி என்னும் பேய் ஏறியவர்களின் குணங்களை நாரத பக்திசூத்ரமும் பாகவதமும் விளக்கும். இதை அப்பர் தேவாரத்திலும் பாடியிருக்கிறார்.
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னம் அவளுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்;
இது போல பக்திப் பித்து ஏறினால் பாறையெல்லாம் கடவுள் சிலையாகத் தோன்றும்!
நாங்கள் பன்னிருவர் ஒரு பெரிய காரில் (12 seater van) ஏறிக்கொண்டு, ஆஸ்திரேலியாவில் நீலகிரிக்குச் – BLUE MOUNTAIN ப்ளூ மவுன்டைந்—சென்றோம். அங்கு மூன்று பாறைகள் செங்குத்தாக இருக்குமிடத்துக்கு மூன்று சகோதரிகள் – THREE SISTERS த்ரீ சிஸ்டர்ஸ்—என்று போர்டு வைத்துள்ளனர். நாங்கள் பன்னிருவரும் அதற்கு துர்கா, லெட்சுமி, சரஸ்வதி என்று புதிய பெயர் சூட்டி மகிழ்ந்தோம். அதற்குள் ஒருவர் எலிபெண்டா குகை த்ரிமூர்த்தியை நினைவுபடுத்தி—ஏன் பிரம்மா, விஷ்ணு, சிவா என்று சொல்லக்கூடாது என்று கேட்டார். அதையும் ஏற்றுக் கொண்டு அடுத்த எக்கோ பாயிண்டுக்கு ECHO POINT வந்தோம். இந்த எதிரொலி மலையில் நாம் எதைச் சொன்னாலும் எதிரொலி கேட்கும் என்றனர். நான் ராமா, கிருஷ்ணா என்று பெரிதாகக் கூக்கூரல் எழுப்பினேன். பலனில்லை. ஒருவேளை சரியான பருவநிலை இருக்க வேண்டும் போல. ஏனெனில் நாங்கள் நின்று கொண்டிருக்கும்போதே பெரிய மேகம் சூழ்ந்து அந்த இடமெல்லாம் புகைமூட்டம் போட்டது போல ஆகிவிட்டது.
தமிழ்நாட்டில் கொடைக்கனலிலும் எதிரொலி கேட்குமிடம் உள்ளது. பில்லர்ஸ் ராக் PILLARS ROCK என்னுமிடத்தில் திடீர் திடீரென்று இப்படி மேகம் சூழும். இதையெல்லாம் பேசிக்கொண்டே 12 பேரும் நகர்ந்தோம். அங்கு ஒரு பெரிய பெயர்ப் பலகையில் அங்கு பார்க்க வேண்டிய ஏழு இடங்கள் பற்றிய குறிப்புகளை எழுதி இருந்தனர். எங்கள் 12 பேரில் ஒருவர் அதைப் பார்த்துவிட்டு, “இதோ பாருங்கள் ஒரு மலை, பிள்ளையார் வடிவத்தில் இருக்கிறது” என்று காட்டினார். அந்தப் படத்தில் மூன்றாவதும் கணபதி போல இருந்தது (KINGS TABLELAND). எல்லோரும் ஒரு கும்பிடுபோட்டுவிட்டு வேகமாகக் காரில் ஏறினோம். மேக மூட்டத்தில் முழு வெளிச்சம் போட்டுக் கொண்டு காரை மேதுவாகச் செலுத்தி ஒரு வழியாக சிட்னி நகருக்கு வந்தோம்.
THREE SISTERS IN BLUE MOUNTAINS
படத்திலுள்ள பாறைகளைப் பாருங்கள்! உங்களுக்கும் பல கடவுள் உருவங்கள் தோன்றும்!!
—subham—
ஆஸ்திரேலிய, பழங்குடி மக்கள், இந்துக்கள், ஆஸ்திரேலியா, அதிசயம், அனைத்தையும் பாருங்கள்!- Part 22, அதிசய கணபதி