புகழ்பெற்ற பாடகர், இசை ஆசிரியர் ஹைதராபாத் சிவா அவர்கள் பேட்டி

GNANAMAYAM BROADCAST FROM THREE CONTINENTS ON SUNDAYS
Gnanamayam Broadcast comes to you via Zoom, Facebook and You Tube at the same time from Asia, Australia and Europe
London Time 12 Noon
Indian Time 5-30 pm (evening)
Sydney, Australia time 11 pm (Night)
*****
பிப்ரவரி ஒன்பதாம் தேதி
9-2-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி
ஆசியா, ஆஸ்திரேலியா , ஐரோப்பா ஆகிய 3 கண்டங்களிலிருந்து வரும் ஒளி/ஒலி பரப்பு; நேரில் காணலாம்; கேட்கலாம்
PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES
***
Prayer by Mrs Jayanthi Sundar Team
World Hindu News in Tamil presented by Vaishnavi Anand from London
***
Bengaluru Nagarajan speaks on Tamil Saint VALLIMALAI SWAMIKAL
***
Mrs. Brahannayaki Sathyanarayan speaks on TIRUVANMIYUR TEMPLE
***
INTERVIEW WITH FAMOUS SINGER AND MUSIC TEACHER HYDERABAD SHIVA.
Hyderabad Dr. B.Siva (born to Shri Balasubramanian and Smt Kamala) started his journey at the age of 16 learning from Shri Chandrasekar, Smt Bhanu Kannan when he was he was in Hyderabad and learned from ‘Sangeetha Kalanidhi’ B.Rajam Iyer when he was doing his PG and UG courses in the Madras University. He is also the proud disciple of late Shri. Sethalapathy Balasubramaniam who is the direct disciple of Shri Papanasam sivan. He has also been under the guidance of late Smt. Sundaravalli Srinivasan.
His presentation in media shows called “Kalai Kalvi” and “Pan Paaduvom” in Makkal TV has thrown light on the feature and beauty of different South Indian Ragas and songs like Thiruppugazh and other famous as well as rare compositions. During the last 15 years of his journey, he has been performing in several reputed TV channels on various occasions such as Navaratri, Diwali, Margazhi, Sankaranthi etc…
He has been appreciated for his tremendous performance with his students in the world famous Lakshman Sruthi’s “Chennaiyil Thiruvaiyaaru” in which he performed Sri Aandal Aruliya “Thiruppavai” which increased his rasikas.
Hyderabad SIVA is well known for his activities towards the welfare of his students in the field of music. He is the proud founder of Sukhi Nikhetan Arts Academy, a musical institution in which about 250 students learn Carnatic Music. He is also well known for publishing books related to South Indian Music, Navagraha Kruthis, Thirumurai of Naalvar and is also a launcher of various music ACDs in the concept of “Listen & Learn”. He is also the proud launcher of his new book on Thiruppugazh as “Iasi Thamizh Paamaalai Series 2” with ACD both containing 4-8 line Thiruppugazh songs in the Third International Conference on Muruga Bhakthi, Durban, South Africa.
He with 108 students, is popular in presenting various thematic concerts in an unique style and theme called “Ashtothra Sangeetha Haaram”.
Reports and journals have praised his concerts. One of the most nostalgic report was by Dinamalar, on 22/10/2006, Chennai stated that “In this young age, he attracted and made the audience stunned by singing alapana, kalpana swaras etc., in the raga Shanmukhapriya”.
Presently he is well known for his rendering of songs in a very unique style without breaking the words and phrases not only in Thamizh Compositions, but other language compositions too. He is also being liked for singing a number of Viruthams in his concerts. His journey as a Music Teacher doesn’t end within the boundaries of our country. He is also an Advisor to Musical Institutions in Malaysia and South Africa, equally spreading our culture and art to the students in those countries.
On the professional view of Hyderabad Siva he has been one of the faculty members of the Vivekananda Educational Society and has also been a music lecturer at Sri Saraswathi College of Education, Ponneri, Tamil Nadu. Of all the above he is one among the grade artists in All India Radio, run by the Ministry of Information and Broadcast, Government of India. He is also a member of Advisory Council in Tamil Nadu Music & Fine Arts University.
Since his early years, he has won many accolades in many competitions conducted by reknowned institutions like Tirumala Tirupati Devastanam, Andhra Pradesh, Madras Music Academy, Kalasagram, Secundrabad, etc.
His titles includes an exhaustive list of “Sangeetha Kalarathna” by Tiruparamkundram Shri Skandha Guru Vidhyashram, Aasthana Vidhwan of “Sri Kanchikamakoti Mutt etc. He has also been awarded with Isai Chelvar, Ezhisai Endhal, Sandha Thamizh Isai Chelvar, Thiruppugazh Chemmal, etc by various organisations.
Hyderabad B.Siva has given enumerous concerts and musical presentations and programmes in various sabhas and institutions like the Chennai Sangeetha Vidhwath Sabha, Pongu Thamizh Pannisai Mandram, Bharatiya Vidya Bhawan, Delhi Tamizh Sangam, 2nd International Conference about Siddhar Neri, International Conference on Pancha Puraanam etc. Recently, he has given a musical demonstration in the 3 International Conference on Muruga Bhakthi, Durban, South Africa and 4″ International Conference on Muruga Bhakthi, Colombo, Srilanka.
E-mail: sugisrine@gmail.com
Web: www.snaacademy.com www.hyderabadsiva.com
***
Kalyanji anchoring from India.
***
If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.
It is on Every Sunday for one hour.
****
இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்
உலக இந்துமத செய்தி மடல்- லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த்
***
ஆலயம் அறிவோம் வழங்குபவர் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் — -தலைப்பு – திருவான்மியூர் கோவில்
. ***
பெங்களூர் நாகராஜன் சொற்பொழிவு – தலைப்பு — வள்ளிமலை சுவாமிகள்
***
இன்றைய சிறப்பு நிகழ்ச்சி
புகழ்பெற்ற பாடகர், இசை ஆசிரியர் ஹைதராபாத் சிவா அவர்கள் பேட்டி
இசைத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஐதராபாத் Dr. பா. சிவா அவர்கள், ஸ்ரீ பாலசுப்பிரமணியம் ஸ்ரீமதி கமலா இணையருக்கு இணையற்ற தவப்புதல்வராக 1975இல் தோன்றினார்.
தம் 16ஆம் அகவையிலேயே இசைப்பயணத்தைத் தொடங்கிய இவர் ஐதராபாத்தில் இருந்தபோது ஸ்ரீ சந்திரசேகர், ஸ்ரீமதி பானு கண்ணன் இருவரிடமும் சங்கீதக் கலையைக் கற்கத் தொடங்கி, சென்னைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை, முதுகலை பயிலும்போது ‘சங்கீதக் கலாநிதி பி. இராஜம் ஐயர் அவர்களிடமும் சங்கீதத்தைக் கற்றுத் தேர்ந்தார். பெருமை பெற்ற ஸ்ரீ பாபநாசம் சிவன் அவர்களின் நேரடிச் சீடராகிய ஸ்ரீ சீதளபதி பாலசுப்பிரமணியம் அவர்களின் அருமை மாணவன் என்று தன்னடக்கத்துடன் குறிப்பிடும் இவர், அமரர் ஸ்ரீமதி சுந்தரவல்லி ஸ்ரீநிவாசன் அவர்களின் மேற்பார்வையில் சங்கீதத்தில் மேன்மை கண்டார்.
இசை பயிற்றுவிப்பதை இறைப்பணியாக மேற்கொண்ட சிவா, விவேகானந்தா கல்விக் கழகத்திலும் பொன்னேரி ஸ்ரீசரஸ்வதி கல்வியியல் கல்லூரியிலும் சங்கீத விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். அகில இந்திய ஆகாசவாணியில் இசைக் கலைஞராக மிளிர்ந்ததோடு தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலைப் பல்கலைக்கழகத்தில் ஆலோசனை மன்ற உறுப்பினர் ஆகவும் சேவையாற்றி உள்ளார்.
ஆரம்ப காலந்தொட்டே சிவா அவர்கள் இசைத்துறையில் பலராலும் பாராட்டப்பட்டும் கெளரவிக்கப்பட்டும் வந்துள்ளார்கள். அவர்களில் சென்னை இசைக்கல்லூரி, ஆந்திரா மாநிலம், திருமலை திருப்பதி தேவஸ்தானம், செகந்திராபாத் கலாசாகரம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
இசை, சங்கீதக் கலைத் துறைகளில் அவர் பெற்ற வல்லமை, அர்ப்பணிப்பு, புதிய பாணியில் போதிக்கும் ஆற்றல், தமிழிசை மேம்பாடு ஆகியவற்றுக்காக அவர் பல பட்டங்கள் பெற்று கௌரவிக்கப் பட்டுள்ளார். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஸ்கந்தகுரு வித்யாஸ்ரமம் வழங்கிய சங்கீத கலாரத்னா, ஸ்ரீ காஞ்சி காமகோடி மடத்தின் ஆஸ்தான வித்வான், இசைச்செல்வர், ஏழிசை ஏந்தல், சந்தத் தமிழிசைச் செல்வர், திருப்புகழ்ச் செம்மல், சுககான நாதஜோதி போன்றவை நமது மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவை.
சென்னை சங்கீத வித்வத் சபை, பொங்கு தமிழ் பண்ணிசை மன்றம், பாரதீய வித்யா பவன், தில்லித் தமிழ்ச் சங்கம், 2ஆம் அனைத்துலக சித்தர் நெறி மாநாடு, அனைத்துலக பஞ்சபுராண மாநாடு போன்ற எண்ணிறந்த அரங்கங்களில் இசை நிகழ்ச்சிகளை சிவா நிகழ்த்தியுள்ளார். மேலும் பல மேடைகளில் இசை நிகழ்ச்சிகள் நிகழ்த்தியும் வருகிறார். சமீப காலத்தில் தென்னாப்பிரிக்கா, டர்பன் 3வது அனைத்துலக முருகபக்தி மாநாடு மற்றும் ஸ்ரீலங்கா, கொழும்புவில் நிகழ்ந்த ழ்ந்த 4வது அனைத்துலக முருகபக்தி மாநாட்டில் சிவா அவர்கள் நிகழ்த்திய இசைக்கச்சேரி, கடல் கடந்தும் நமது தமிழிசை ஒலித்துக் கொண்டிருக்க ஒரு பாலம் அமைத்துள்ளது. என்றால் அது மிகையாகா.
மக்கள் தொலைக்காட்சியில் ஒளியேறும் பண்பாடுவோம், கலைக் கல்வி மூலம் தென்னிந்திய இசை, பல்வேறு இராகங்கள், திருப்புகழ் முதலிய தெய்வீகப் பாடல்களை சங்கீத ஞானம் உள்ளோரும், மற்றோரும் கேட்டின்புறும் வண்ணம் பல்வேறு புதிய உத்திகளைக் கையாண்டு அம்முயற்சியில் பாராட்டத்தக்க வெற்றியும் கண்டிருப்பது சிவாவின் தனிச்சிறப்பாகும்.
மேலும் தொலைக்காட்சியில் பல்வேறு ஒளி அலைகளில் நவராத்திரி, தீபாவளி, மார்கழி, மகர சங்கராந்தி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தமது இசைக்கச்சேரியை நிகழ்த்தி மக்களின் மனங்கவர்ந்து அவர்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
நமது கலாரத்னாவுக்கு ஆயிரக்கணக்கான, ஏன் இலட்சக் கணக்கான ரசிகர்களை ஈட்டித் தந்த இன்னொரு நிகழ்வு உலகப் புகழ் பெற்ற லக்ஷ்மண் ஸ்ருதியின் சென்னையில் திருவையாறு நிகழ்வில் தமது மாணவ மாணவியருடன் அவர் ஒளியேற்றிய இசை நிகழ்வாகும்.
சங்கீதக் கலையை மேலும் வளர்ப்பதிலும் தம்மிடம் பயிலும் மாணவ மாணவியரைக் கைத் தூக்கி விடுவதிலும் அவர் காட்டும் அக்கறை அளவிடற்கரியது. சுமார் 250 மாணவ மாணவியர் பயிலும் வண்ணம் சுகிநிகேதன் கலைக்கூடத்தை நிறுவி, அதற்கென ஓர் அழகிய மாளிகை எழுப்பி, சுகமான சூழலில் நவீனக் கருவிகளோடு கர்நாடக சங்கீதம் பயிற்றுவித்து, நிறைய இசைப்புத்தகங்களையும் அவற்றுக்குத் துணையாக குறுந்தட்டுகளையும் வெளியிட்டுள்ளார். அவற்றுள் நவக்கிரகக் கீர்த்தனைகள், நால்வர் திருமுறைகள், இசைத்தமிழ்ப் பாமாலை, சின்னச் சின்னப் பாட்டு போன்றவைகளைக் குறிப்பிடலாம்.
அவருக்கே உரித்த தனிப்பாணியில் அஷ்டோத்ர சங்கீதஹாரம் எனும் தலைப்பில் 108 மாணவர்களுடன் அவர் அரங்கேற்றிய இசைக்கச்சேரிகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
நாளேடுகளும் மாத இதழ்களும் சிவா அவர்களின் தனித்துவமிக்க இசைப்பணியைப் பாராட்டத்தவறவில்லை. குறிப்பாக 22.10.2006இல் வெளியான தினமலரில் இவ்வளவு சிறிய இளம் வயதில் காண்போரையும் கேட்போரையும் சுண்டியிழுக்கும் வண்ணம் சண்முகப்பிரியா ராகத்தில் ஆலாபனை, கல்பனா ஸ்வரங்களை அவர் பாடியத்தைக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதான் ஐதராபாத் சிவா அவர்களின் தனித்துவம் வாய்ந்த இசைப்பயணம் என்று சொல்லும்படி யாரும் இதுவரை செய்யத் துணியாதவகையில் திருமுறைப்பாடல்களைச் சரியான சொல் பிரிப்போடு, செவிமடுக்கும் இளைய தலைமுறையும் விளங்கிக் கொள்ளும் வண்ணம் இராகம் பண் தவறாமல் பாடும், பாட்டுவிக்கும் ஆற்றலைக் கண்டு வியக்காதார் உளரோ? அதிலும் விருத்தங்களை இனிமை குன்றாது, பொருள் விளங்கப் பாடும் ஆற்றல் கடவுள் அவருக்களித்த வரம்தான்!
இவரின் இசைப்பணி தமிழ்நாட்டின் எல்லையுடன் நின்றுவிடவில்லை. மலேசியா, தென்னாப்பிரிக்கா, மொரிசீயஸ், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் உள்ள பல இசைப் பள்ளிகளும், கல்லூரிகளும் அன்னாரை ஆலோசகராக ஏற்று நமது கலையையும் கலாச்சாரத்தையும் மக்களிடையே பரப்பி வருவது மகிழ்வூட்டுகிறது.
தொடர்க, வளர்க அன்னாரின் தெய்வீக இசைப்பணி!
‘இசைச்செல்வர்’, ‘சங்கீத கலாரத்னா’
ஐதராபாத் Dr.பா. சிவா
வில்லிவாக்கம், சென்னை 600049.
sugisrine@gmail.com
skype id: siva.vocal
:www.snaacademy.com, www.hyderabadsiva.com
***
Anchored by London Swaminathan from Sydney and Kalyanji from India.
****
JOIN US ON EVERY SUNDAY.
—subham—
TAGS- GNANAMAYAM, 9-2-2025 BROADCAST, PROGRAMME, புகழ்பெற்ற பாடகர், இசை ஆசிரியர் ஹைதராபாத் சிவா