Three Sisters in Blue Mountains, Australia
Post No. 14,184
Date uploaded in Sydney, Australia – 8 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 23
ஆஸ்திரேலியா நீல மலைக்கு (Blue Mountains) எனது பயணம்
தமிழ்நாட்டில் நீலகிரியில் நீல மலை உள்ளது. அதுபோலவே ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரிலிருந்து அறுபது கிலோமீட்டர் தூரத்தில் ப்ளூ மவுண்டன்ஸ் Blue Mountains என்னும் நீல மலை இருக்கிறது ; சுமார் ஒன்றரை மணிநேரத்தில் காரில் சென்றுவிடலாம் ..
நாங்கள் இரண்டாவது முறையாக 2025 பிப்ரவரி எட்டாம் தேதி சென்றோம். பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்த இடங்களை எல்லாம் மீண்டும் கண்டு களித்தோம் . இதை ஒரே நாளில் பார்த்துவிட்டுத் திரும்பினோம். சிலர் அங்கு தங்கி இரண்டு நாட்களிலும் பார்ப்பது உண்டு அதைச் சுற்றி தங்குமிடங்கள் நிறைய இருக்கின்றன.
கார் வசதி இல்லாதவர்கள் பஸ் மூலமாகச் செல்லலாம் அல்லது கடூம்பா என்னும் இடம் வரை ரயிலில் சென்று பஸ்ஸைப் பிடிக்கலாம் அங்கு சென்றுவிட்டால் கட்டணம் கொடுத்து பஸ் டிக்கெட்(EXPLORER BUS) வாங்கி பல இடங்களில் இறங்கிப் பார்க்கலாம் அல்லது பஸ்ஸில் இருந்தவாறே பார்த்துவிட்டுத் திரும்பலாம். இதிலும் பல மணி நேர பயணம் முதல் ஒரு மணி நேர பயணம் வரை பல வகையான டிக்கெட்டுகள் கிடைக்கும்.
இந்த மலை, பல ஊர்களைக் கொண்டது; எல்லோரும் செல்லும் இடம் கடூம்பா என்னும் ஊராகும். அங்கிருந்துதான் பல இட்டங்க்ளுக்கு அழைத்துச் செல்லும் பஸ்கள் புறப்படுகின்றன.
Katoomba Cascades and Katoomba Falls அங்கிருந்தும் சில அருவிகளைக் காணலாம்.
Blue Mountains National Park is a 270,000 hectare park located within the Greater Blue Mountains.
This is the most visited national park in New South Wales and it is spread across several different towns and areas in New South Wales, including Katoomba, Blackheath, Lower Grose Valley, Mount Wilson, and Glenbrook.
பார்க்க என்ன இருக்கிறது ?
கேபிள் கார் என்னும் கம்பி வழி ரயிலில் சென்று மலைகளையும் பள்ளத்தாக்குகளும் காணலாம். த்ரீ சிஸ்டர்ஸ் என்று அழைக்கப்படும் இயற்கையான மூன்று மலை முகடுகளைக் காணலாம் . அவைகளைப் பார்க்கும் பிள்ளையார் பக்தர்கள், ஒரு மலை முகடு கணபதி போலவே இருப்பதையும் கவனிக்க வேண்டும்.
first rock looks like Lord Ganapathy
நீர்வீழ்ச்சி விழும் ஓரிடத்தில் அதைக் கயிறு மூலம் கடக்கும் விளையாட்டுகளும் உள்ளன . நெல்சன் பாறை என்ற இயற்கை மலை வடிவத்திலிருந்து சுற்று வட்டார ஊர்கள் முழுவதையும் காணலாம்.
நடந்து செல்லுவோருக்கு மைல் கணக்கில் நடப்பதற்கு காட்டு வழிப் பாதைகள் இருக்கின்றன. மழைவனக் காடுகளைக் கண்டு இன்புறலாம். பல நீர்வீழ்ச்சிகளும் மன அமைதியையும் மகிழ்ச்சியையும் தரும். நிறைய சுற்றுலாப்பயணிகள் வருவதால் பலவகை உணவு விடுதிகளும் உள்ளன .
அருகிலுள்ள இயற்கைக் குகைகள் பலத்த வெள்ள சேதத்தால் சில ஆண்டுகளாக மூடப்பட்டுவிட்டன. இவை உலகில் பல இடங்களில் காணப்படும் குகைகள் போன்றவை. ஆங்காங்கே கடைகளும் உள்ளன . சில நினைவுப் பொருட்களை விரும்புவோர் அவைகளை வாங்கலாம்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இயற்கைஆர்வலர்களுக்கு இது சொர்க்க பூமி.
இடங்களின் பெயர்களும் சிறப்புகளும் பின்வருமாறு :
london swminathan in blue mountains, australia
london swaminathan with three sisters- rocks
cable car across the mountains
water falls
1.Echo Point Lookout
Echo Point & the Three Sisters
இங்கு கார் களை நிறுத்த வசதிகள் இருக்கிறது த்ரீ சிஸ்டர்ஸ் பாறைகளை நன்றாக கண்டு புகைப்படம் எடுக்கலாம்
There are several vantage points from this one spot, so it takes about 15 minutes to enjoy the views and take photos.
****
2.Scenic World
The best place to start your visit is at Scenic World. At this one spot, you can ride the world’s steepest railway, stand on the roof of the Skyway, ride on the Southern Hemisphere’s steepest cable car, and walk on boardwalk trails through the rainforest.
சீனிக் வோர்ல்டு என்னுமிடத்தில் கேபிள்கார் , மற்றும் கீழே இறங்கும் ரயில் வண்டி உள்ளன. நடக்க விரும்புவோருக்கு கானகப் பாதைகள் இருக்கின்றன .
ரயில் டிக்கெட்டுகள் வாங்குவதற்கு கியூஉ வரிசை இல்லாவிடில் இரண்டு மணி நேரத்தில் எல்லா சவாரிகளையும் முடித்துவிடலாம்.
*****
Eagle Hawk Lookout, Landslide Lookout, and Cahill’s and Boars Head Lookouts are three viewpoints on Cliff Side Drive. These are all located near Scenic World and it takes about 30 to 45 minutes to visit all of them.
இந்த மலை முகடுகளிலிருந்து நின்று பார்த்தால் வெவ்வேறு காட்சிகளைக் காணலாம் இதற்கு ஒரு மணி நேரம் தேவை.
இந்த மூன்று இடங்களில் சிறந்தது Eagle Hawk Lookout
இங்கிருந்து த்ரீ சிஸ்டர்ஸ் — மூன்று சகோதரிகள்— பாறை முகடுகள், கேபிள்கார் மழைப் பள்ளத்தாக்குகள் ஆகியவற்றைக் காணலாம். மேலும் இது சீனிக் வோர்ல்டு அருகில் உள்ளது .
This is the best of the three viewpoints on Cliff Side Drive. It’s a short, easy walk to an overlook protected by a railing. From this spot, you get a view of the Three Sisters, the cableway of Scenic World, and sweeping views of the Blue Mountains. It’s just a 5-minute drive from Scenic World.
****
Wentworth Falls Loop
Wentworth Falls
Wentworth Falls is a three-tiered waterfall and getting a view of this waterfall is one of the best things to do in the Blue Mountains.
வென்ட்வொர்த் நீர்வீழ்ச்சியை வென்ட்வொர்த் காட்சி முனையிலிருந்தும், ஜேமிசன் முனையிலிருந்தும் காணலாம்
From the Jamison Lookout and Wentworth Falls Lookout, you get a decent view of the waterfall, but for the best experience, hike part or all of the Wentworth Falls Loop.
****
Queen’s Cascade
இது ஐந்து நிமிட தொலைவில் இருக்கிறது மலைக்களத்தில்தான் அதிக நீர் வரும் மலையில் இறங்கிப் பார்க்க வேண்டும்
நடந்து செல்லுவோருக்கு மணிக்கணக்கில் நடப்பதற்குப் பாதைகள் போடப்பட்டுள்ளன. மலை ஏறுவோருக்கும் வசதிகள் உண்டு.
—SUBHAM—
TAGS- ஆஸ்திரேலியா, அதிசயம் , பாருங்கள்!, Part 23, நீல மலை, Blue Mountains, எனது பயணம்