கேப்டன் விஜயகாந்த் ஒரு சரித்திரம்! (Post.14,196)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,196

Date uploaded in Sydney, Australia – –12 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

புத்தக அறிமுகம்

பத்ம பூஷண் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் ஒரு சரித்திரம் – சகாப்தம் –   BY எஸ்.பி.பாலு 

ச.நாகராஜன் 

                            எஸ்.பி.பாலு

மக்கள் குறைதீர்க்கும் சமுதாயத் தொண்டினை தமது எழுத்துகள் மூலமாகவும், செயல் மூலமாகவும் நன்கு செய்து வருபவர் புதுக்கோட்டை திரு. எஸ்.பி. பாலு அவர்கள்.

அச்சுக்கலை வித்தகர் புதுக்கோட்டை கண்ணபிரான் எஸ். பரசுராம் அவர்களின் புதல்வர். சிறுவர் இலக்கியச் செல்வர் திரு. பி. வெங்கட்ராமன் அவர்களின் இளைய சகோதரர்.

புகழ்பெற்ற மாபெரும் டி.வி.எஸ். நிறுவனத்தில் பல்லாண்டு பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

மக்கள் பிரச்னைகளைப் பற்றி பத்திரிகைகளில் சின்னஞ்சிறு கட்டுரைகள், துணுக்குகள், வாசகர் கடிதங்கள் மூலமாகவும், வானொலி ‘நகர்வலம்’ பகுதி மூலமாகவும் எழுதுவது இவர் வழக்கம்.

பொதுமக்களின் குறைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் இவரது துணிச்சலான எழுத்துகள் மூலம் எத்தனையோ பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் விஜயகாந்த் பற்றிய புதிய புத்தகம்

கேப்டன் என்று மக்களால் அழைக்கப்படும் மறைந்த நடிகர் விஜயகாந்த்

(பிறப்பு: 25-8-1953 மறைவு: 28-12-2023) அவர்களின் வாழ்க்கைச் சித்திரத்தை  முழுமையாக இந்த நூலில் அவரது அபிமான ரசிகரான  இவர் இப்போது எழுதி வெளியிட்டுள்ளார்.

அவர் சென்னைக்கு வந்தது முதல், பல முயற்சிகளுக்குப் பிறகு திரைப்படத்துறையில் வெற்றி கண்டது வரையில் உள்ள அனைத்துத் தகவல்களும் அருமையாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளது இந்தப் புத்தகத்தில்.

நடிகர் சங்கத் தலைவராக இருந்து தென்னிநிதிய நடிகர் சங்கத்தில் நிலுவையில் இருந்த கடனை அவரே அடைத்தார்.

அரசியலில் ஈடுபாடு கொண்டு அவர் தனிக்கட்சி ஒன்றைத் தொடங்கினார். மக்களிடம் அது பெருத்த வரவேற்பைப் பெற்றது. அவரே எதிர்க்கட்சித் தலைவர் ஆகும் வரையில் அது பெரிதாக வளர்ந்தது.

மனித நேயத்துடன் பிறர் அறியாதபடி அவர் செய்த தர்ம காரியங்கள் ஏராளம்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக உடல்நலம் குன்றி அவர் நோயுடன் போராட வேண்டி வந்தது.

ஐந்து ஆண்டு காலம் இப்படி நோயுடன் போராடிய அவர் மரணத்தைச் சந்திக்க நேர்ந்தது

இந்நூல் விஜயகாந்த் தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் நிறைய புள்ளி விவரங்களைத் தந்து அடிப்படையான செய்திகளைத் தருகிறது.

புத்தகம் கிடைக்கும் இடம் : புஸ்தகா டிஜிடல் மீடியாபெங்களூர். விலை ரூ 130 தகவல்களுக்கு நாட வேண்டிய தொலைபேசி எண் 74185 55884

பேப்பர் பேக் புத்தகத்திற்கு 15% தள்ளுபடி உண்டு -விலை ரூ110.50

***

tags-கேப்டன் விஜயகாந்த் ஒரு சரித்திரம் – சகாப்தம்

Leave a comment

Leave a comment