
Post No. 14,204
Date uploaded in Sydney, Australia – 14 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-2 ; மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே
முப்பழ நுகரும் மூஷிக வாகன
*****
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே
முப்பழ நுகரும் மூஷிக வாகன
****
பிள்ளையாருக்கு மூன்று கண்கள் உண்டா ?
கணபதிக்கு எலி /மூஷிகம் ஏன் வாஹனம் ?
ஐந்து கரங்களின் பொருள் என்ன ?
பேழை வயிறு ஏன்]
****
வேழ முகத்து விநாயகரின் திருவுருவத்தை அவ்வையார் இதில் வருணிக்கிறார் .
அருணகிரிநாதர் எப்படி வருணித்தார் ?
கைத்தல நிறைகனி அப்பமொடவல்பொரி
கப்பிய கரிமுகன்அடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினைகடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புயமதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடுபணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதியமுதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்தஅதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடைஇபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள்பெருமாளே—-அருணகிரி அருளிய திருப்புகழ் பாடல்
கணபதி பற்றி திரு ஞான சம்பந்தர் பாடிய தேவார பாடல்தான் தமிழில் உள்ள மிகப்பழைய பிள்ளையார் பாடல் :
பிடியதன் உருஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலம்உறை இறையே! -(சம்பந்தர் தேவாரம்) 2
எல்லோருடைய கஷ்டங்களையும் இடையூறுகளையும் களைபவர் கணபதி என்று சொல்லிவிட்டார் சம்பந்தர் .

வடமொழியில் ஷோடச கணபதி என்று பதினாறு நாமங்களை நாம் தினமும் சொல்கிறோம். புரோகிதர்கள் மஞ்சள் பொடியில் பிள்ளையாரைச் செய்து பூக்களால் இந்த 16 நாமங்களைச் சொல்லி எல்லா பூஜைகளையும் தொடங்குவார்கள்.
ஓம் சுமுகாய நமஹ என்று சொல்லி பூஜைகளைத் துவங்குகிறோம்
மங்களம் வாய்ந்த ஸுமுகன்
ஒற்றைக் கொம்பை உடைய ஏக தந்தன்
கபில நிறம் வாய்ந்த கபிலன்
யானைக் காதுகள் உள்ள கஜகர்ணன்
பெரும் வயிற்றோடு கூடிய லம்போதரன்
குள்ளத் தோற்றமுள்ள விகடர்
சகல விக்கினங்களுக்கும் ராஜாவான விக்னராஜன்
தனக்கு மேல் ஒருவன் இல்லாத நாயகன் விநாயகன்
நெருப்பைப்போல ஒளிவீசும் தூமகேது
பூத கணங்களுக்குத் தலைவரான கணாத்யக்ஷன்
நெற்றியில் பிறைச்சந்திரனைச் சூடிய fala பாலசந்திரன்
யானை முகத்தையுடைய கஜானனன்
வளைந்த துதிக்கை உள்ள வக்ரதுண்டன்
முறம் போன்ற காதுகள் உடைய சூர்ப்பகர்ணன்
தம்மை வணங்கி நிற்கும் பக்தகோடிகளுக்கு அருள்புரியும் ஹேரம்பன்
கந்தப் பெருமானின் அண்ணனான ஸ்கந்தபூர்வஜன்
–இவ்வாறு சொல்லப்படும் பிள்ளையாரின் 16 நாமங்களையும்
கல்வி கற்கும் போதும், வீட்டைவிட்டுப் புறப்படும்போதும்,
போர்க் காலத்திலும், இன்னலுற்றபோதும்,
யாராவது வாசித்தாலும், கேட்டாலும் அவர்களுக்கு
எந்த இடையூறும் வராது. –கந்த புராணம்
எளிதில் நினைவிற்கொள்ள ஸ்லோக வடிவில்
ஸுமுகைஸ்சேகதந்தஸ்ச கபிலோகஜகர்ணக:
லம்போதரஸ்ச விகடோ விக்னராஜோ விநாயக:
தூமகேதுர்கணாத்யக்ஷ fala பாலச்சந்த்ரோ கஜானன
வக்ரதுண்ட ஸூர்பகர்ண ஹேரம்பஸ்கந்தபூர்வஜ:
Don’t say Balachandra; please say FALA Chandra
ஔவையார் சொன்ன வருணனையில் உள்ள பெரும்பாலான விஷயங்கள் இந்த மேற்கோள்களில் இருக்கின்றன .
சங்கீதம் பயில்வோர் எல்லோரும் முதலில் கற்றுக்கொள்ளும் க்ருதி/ கீர்த்தனை முத்து சுவாமி தீக்ஷிதர் ஸம்ஸ்ருத மொழியில் எழுதிய ஹம்சத்வனி ராகப் பாடல் ஆகும் ;

வாதாபி கணபதிம் பஜே
முத்து சுவாமி தீட்சிதர் கிருதி
பல்லவி
வாதாபி கணபதிம் பஜேஹம்
வாரணாஸ்யம் வரப்ரதம் ஸ்ரீ
அனுபல்லவி
பூதாதி ஸம் ஸேவித சரணம்
பூத பெளதிக பிரபஞ்ச பரணம்
வீத ராகிணம் வினத யோகினம்
விஸ்வ காரணம் விக்ன வாரணம்
…வாதாபி
சரணம்
புரா கும்ப ஸம்பவ முனிவர ப்ரபூஜிதம்
திரிகோண மத்யகதம்
முராரி ப்ரமுகாத் யுபாஸிதம்
மூலாதார க்ஷேத்ர ஸ்திதம்
பராதி சத்வாரி வாகாத்மகம்
ப்ரணவ ஸ்வரூப வக்ரதுண்டம்
நிரந்தரம் நிதல சந்த்ர கண்டம்
நிஜ வாமகர வித்ருதேக்ஷு தண்டம்
கராம்புஜ பாச பீஜாபூரம்
கலுஷவிதூரம் பூதாஹாரம்
ஹராதி குருகுஹ தோஷித பிம்பம்
ஹம்சத்வனி பூஷித ஹேரம்பம்
… வாதாபி
பொருள்:
யானை முகம் கொண்டவராகவும் வரங்களைக் கொடுக்கின்றவராகவும்
விளங்கும் வாதாபி கணபதியை நான் வணங்குகிறேன் .
பூதகணங்களால் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவர். பூமி, நெருப்பு, காற்று, நீர், ஆகாசம் ஆகிய ஐம்புதங்களையும் அவற்றாலான மற்ற உலகங்களையும் தரிப்பவர். ஆசையில்லாதவர்.
வணங்கப்படும் யோகியவர்களை உடையவர். உலகங்களுக்குக் காரணபூதர்.
இடையூறுகளைப் போக்கடிப்பவர்.
முன்காலத்தில் கும்பசம்பவர் எனப்படும் அகஸ்தியர் என்ற
சிறந்த முனிவரால் பூஜிக்கப்பட்டவர்.
மூன்று கோணங்களுடன் கூடிய யந்திரத்தின் நடுவில் இருப்பவர்.
விஷ்ணு முதலிய முதல்வர்களால் தியானிக்கப்பட்டவர்.
மூலாதார §க்ஷத்திரமான திருவாரூரில் இருப்பவர்.
பரா, பச்யந்தி, மத்யமா, வைகரீ ஆகிய நான்கு வித வாக்கு சொரூபமாக இருப்பவர்.
பிரணவ சொரூபமாக(ஓங்கார சொரூபமாக) வளைந்த முகத்தை உடையவர்.
எப்போதும் நெற்றியில் பிறை சூடியவர்.
தமது இடது கையில் வைத்திருக்கப்பட்ட கரும்புத்துண்டத்தை உடையவர்.
தாமரை போன்ற கையில் பாசக்கயிறு, கொய்யாப்பழம், மாதுளம்பழம்,
இவற்றை உடையவர். பாபமற்றவர்.
பூதம் போன்ற பெரிய உருவத்தை உடையவர்.
பரமசிவன் முதலியவர்களாலும் சிவகுருவாகிய முருகனாலும்
சந்தோஷிக்கப்பட்ட சொரூபத்தை உடையவர்.
ஹம்சத்வனி ராகத்தில் இன்பமுறும் யானைமுகத்தோன்
குரு குஹ என்பது தீக்ஷிதரின் எல்லா கிருதிகளிலும் வரும் முத்திரை .
vaathaapi
raagam: hamsadwani
taaLam: aadi
Composer: Muttuswaamee Dikshitar
Language: Sanskrit
pallavi
vaataapi gaNapatim bajEham |
vaaraNaasyam varapradam shree ||
anupallavi
bootaadi sam sEvita caraNam |
boota bowdika prapanca baraNam ||
veetaraagiNam vinata yOginam (shree) |
vishva kaaraNam vigna vaaraNam ||
(vaathapi)
caraNam
puraa kumba sambhava munivara prapoojitam |
trikONa madya gatam |
muraari pramukaat yupaasitam |
moolaadhaara kshEtraa stitam |
paraadi sattvaari vaakaatmagam |
praNava svaroopa vakratunDam |
nirandaram niDala candra kaNDam |
nija vaamakara vidrutEkshutanDam |
karaambuja paaSa beejaapooram |
kaloosha vidhooram bootaahaaram |
haraadi guruguha tOshita bimbam |
hamsadhwani booshita hErambam ||
(vaathapi)
இப்போது அவ்வையார் சொன்னதை மட்டும் எடுத்துக்கொள்வோம் .
விநாயகரின் அரைஞாண் தங்கத்தினால் ஆனது ; இந்துக்கள் ஆண்களாகப் பிறந்தால் அணிவது அரை ஞாண்; இப்போது அது மறைந்து ஜட்டி, அண்டர்வேர் வந்துவிட்டது.
அவர் இடுப்பில் இருப்பது வெண் பட்டு ஆடை;
பெரிய வயிறு, ஒற்றைத் தந்தம் உடையவர் (இன்னுமொரு தந்தத்தை முறித்து அதை பயன்படுத்தி மஹாபாரதத்தை எழுதினார்)
யானை முகம் உடையவர் ; இது ஓம்காரமான பிரணவ மந்திரத்தை நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும் ; இதை வாதாபி கணபதிம் பாடலில் காணலாம்;
ஒளி வீசும் பொட்டு, துதிக்கையுடன் சேர்த்து ஐந்து கைகளை உடையவர்; ஒரு கையில் ஐம்புலன்களை அடக்கும் பாசத்தை உடையவர்; நீலத் திருமேனி / கரிய உருவம் கொண்டவர் .
மூன்று கண்கள் சிவனுக்கும், தேவிக்கும், கணபதிக்கும் உண்டு ; மூன்றாவது கண் ஞானக் கண் .
மதம் வழிந்ததால் உண்டான தடங்களும் இரண்டு செவிகளும் இருக்கின்றன . விநாயகரின்ற முறம் போன்ற செவிகளை எல்லோரும் பாடுவதைக் கவனிக்க வேண்டும் ; சூர்ப்பகர்ணன் அவர் .
தங்க மகுடமும், மூன்று புரிகளை உடைய பூணூலும் அவரை அலங்கரிக்கின்றன.
தொடரும்…..
Tags- விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-2 , மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்……..……..வாதாபி கணபதிம் பஜே, 16 நாமங்கள், vaataapi gaNapatim bajEham |