நம்முடைய கேள்விகளும், அறிஞர்களின் பதில்களும்! (Post No.14,208)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,208

Date uploaded in Sydney, Australia – –16 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 கல்கி ஆன் லைன் இதழில் 11-2-25 அன்று வெளியானது.

 MOTIVATION

 நம்முடைய கேள்விகளும்அறிஞர்களின் பதில்களும்!

ச. நாகராஜன் 

கேள்விகள் நம்முடையவை. பதில்கள் பல்வேறு அறிஞர்களுடையவை!

1.   எந்த உரையாடல்- பேச்சு -மோசமானது?

      உரையாடலில் மோசமானது விவாதம் தான்! – ஜோனாதன்    

     ஸ்விப்ட்

2.   எவனுடன் போட்டி போடக் கூடாது?

எவனிடம் இழப்பதற்கு ஒன்றுமே இல்லையோ அவனிடம் போட்டி போடக் கூடாது. – பல்டாசர் க்ரேசியன்

3.   உறுதி என்பது என்ன?

     ஏழு தடவை விழுந்தாலும் எட்டாவது முறை எழுந்து நிற்பது!

–    ஜப்பானியப் பழமொழி

4.   வணிகத்தில் வெற்றி பெறுவது எப்படி?

      வணிகத்தில் வெற்றி பெற – தைரியமாக இரு, முதலாவதாக   

      இரு, வித்தியாசமாக இரு.   – யாரோ

5.   பொறுமையாக இருப்பவனுக்கு என்ன பயன்?

மிகவும் பொறுமையாக இருப்பவன் எல்லாவற்றிலும் நிபுணன் ஆவான்! – ஜார்ஜ் சவில்

6.   அதிக அதிகாரம் உள்ளவன் அதை என்ன செய்ய வேண்டும்?

     அதிக அதிகாரம் உள்ளவன் அதை குறைவாகப் பயன்படுத்த   

     வேண்டும்! – செனேகா

7.   பார்வைகள் பலவிதமாக இருப்பது எப்படி?

     மூன்று பேர்கள் செங்கலை அடுக்கிக் கொண்டிருந்தார்கள்.

     முதலாமவனிடம் கேட்கப்பட்ட கேள்வி: நீ என்ன செய்து    

      கொண்டிருக்கிறாய்?

     அவன் கூறினான்: செங்கல்லை அடுக்கிக் கொண்டிருக்கிறேன்.

     இரண்டாவது மனிதனிடம் கேட்கப்பட்ட கேள்வி: நீ எதற்காக       

     வேலை செய்து கொண்டிருக்கிறாய்?

     அவனது பதில்: ஒரு நாளைக்கு ஐந்து டாலர் கிடைக்கிறது,     

     அதனால்!

     மூன்றாமவனிடம் கேட்கப்பட்டது : நீ என்ன செய்து  

     கொண்டிருக்கிறாய்?

     அவன் பதில் கூறினான்: நான் ஒரு பெரிய சர்ச்சைக் கட்ட உதவி     

     செய்து கொண்டிருக்கிறேன்.  –  சார்ல்ஸ் எம். ஷ்வாப்

8.   எப்போது ஒரு கடையை திறக்கக் கூடாது?

புன்சிரிப்புடன் பழகத் தெரியாவிடில் ஒரு கடையைத் திறக்காதே! – யூதப் பழமொழி

9.   நன்மதிப்பை யார் இழக்க மாட்டார்கள்?

வெற்றி பெற்ற ஒருவன் ஒருபோதும் நன்மதிப்பை இழக்கமாட்டான். – தாமஸ் ஆல்பர்ட் கார்ல் ஃபுல்லர்

10. உயர்ந்த நிலையைப் பெறுவது எப்படி?

உயர்ந்த நிலையைப் பெறுவதற்கான விலை – பொறுப்புடன் இருப்பது! – வின்ஸ்டன் சர்ச்சில்

11. மேலே உயர்வதற்கான வழி என்ன?

பணிவதும் அனைவரையும் தயவுடன் அணுகுவதுமே மேலே உயர்வதற்கான வழி. – பென் ஜான்ஸன்

12. தந்திரம் என்பது என்ன?

ஒரு கருத்தை எதிரிகள் யாரையும் உருவாக்காமல் எடுத்துரைப்பது தான் தந்திரம்! – ஹோவர்ட் டபிள்யூ. நியூடன்

13. நல்ல நடையுடன் எழுதுவது எப்படி?

ஒருவன் நல்ல நடையுடன் எழுத விரும்பினால் அவன் தனது சிந்தனையில் தெளிவுடன் இருக்க வேண்டும். – ஜோஹன் டபிள்யூ வான் கதே

14. அதிஜாக்கிரதையாக ஒருவன் இருந்தால் என்ன நடக்கும்?

அதிஜாக்கிரதையாக செயல்படும் ஒருவன் குறைவாகவே சாதிப்பான்! – ஜோஹன் ஷில்லர்

15. மனித இயற்கையில் ஒருவன் மிகவும் அதிகமாக விரும்புவது எதை?

மனித இயற்கையில் ஒருவன் தன்னை மற்றவர்க்ள் பாராட்டுவதையே அதிகமாக விரும்புகிறான். – வில்லியம் ஜேம்ஸ்

***

Leave a comment

Leave a comment