
Post No. 14,228
Date uploaded in Sydney, Australia – 21 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

மலேசியாவில் தமிழ் கல்வெட்டுகள்
கிடாரங்காய் ஊறுகாயைப் பார்த்த மாத்திரத்தில் நாவில் உமிழ்நீர் சுரக்கும் ; எலுமிச்சங்காய் ஊறுகாயை விட ஒரு படி மேலே நிற்கும் ; ஆனால் இதுவும் அதே எலுமிச்சை குடும்பத்தைச் சேர்ந்ததுதான்
கெடா , கடாரம் , கிடாரங்காய் எல்லாம் வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்கள் !
மலேசியா நாட்டின் வட பகுதியில் உள்ள மாகாணம் கெடா. அதுதான் தமிழில் கடாரம் என அழைக்கப்பட்டது. ‘கெடா’ தேசத்தை கைப்பற்றி சோழ பேரரசின் ஆட்சியின் கீழ் கொண்டு வந்ததால் ராஜேந்திர சோழன் ‘கடாரம் கொண்டான்’ என்ற பெயரை பெற்றார்.
மலேசியாவுக்கு — அதாவது மலேயா, சிங்கப்பூர், பர்மா முதலிய நாடுகளுக்கு தமிழர்களை கூலி வேலைக்கும், ராணுவப்பணிகளுக்கும் கொண்டு சென்றார்கள். அவ்வாறு தமிழ் நாட்டிலிருந்து போன மக்கள் கப்பலில் திரும்பி வரும்போது கிடாரங்காய்களைக் கொண்டு வரு வா ர்காளாம் . இதனால் இதற்கு மதிப்பு அதிகம்
அதற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராஜேந்திர சோழன் அங்கு சென்று வெற்றி வாகை சூடியதால் அவன் பெயரிலும் கடாரம் ஒட்டிக்கொண்டது .
கடாரம் என்பது கெடா மாநிலத்தின் பழைய பெயராகும். பழங்காலத்தில் இருந்து, இப்போது மலேசியாவின் வரை படத்தைக் காண்போர் கெடா என்ற பெயரைக் காணலாம்
பட்டினப்பாலை என்னும் சங்கத் தமிழ் நூலில் கடாரத்தின் பெயரை காழகம் என்று உருத்திரன் கண்ணனார் குறிப்பிட்டுள்ளார் . ஆகவே ராஜேந்திர சோழனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே காழகமும் தெரியும்; அதைத்தாண்டி பவளம் கிடைக்கும் செஷெல்ஸ் மொரீஷியஸ் (ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக அதிகம் பவளம் கிடைக்கும் மிகப்பெரிய திட்டு இரண்டு தீவுகளுக்கிடையே இருக்கிறது), மாலத் தீவுகளும் தெரியும்.

இதோ பட்டினப்பாலை வரிகள் ………
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்,
காலின் வந்த கருங்கறி மூடையும்,
வடமலைப் பிறந்த மணியும், பொன்னும்,
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென் கடல் முத்தும், குண கடல் துகிரும்,
கங்கை வாரிதியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்
அரியவும், பெரியவும் நெரிய ஈண்டி,
வளம் தலை மயங்கிய நனந்தலை மறுகு
(பட்டினப்பாலை 185–193)
(குண கடல் துகிரும்= மேலைக்கடலிலிருந்து பவளமும்)
*****
மலேசியத் தமிழ் கல்வெட்டுகள்

தகூபா என்னும் இடத்தில் கிடைத்த கல்வெட்டு மிகவும் பிரசித்தமானது.
பண்டைய கெடாவில் ஒரு இந்துக் குடியேற்றம் இருந்துள்ளது, இது கர்னல் லோவின் கண்டுபிடிப்புகள் மூலம் அறியப்படுகிறது.
ராஜேந்திர சோழன் காலத்துக்கு முந்தைய கல்வெட்டுகள் மலேஷியா, வியட்நாம், தாயலாந்து நாடுகளில் கிடைத்துள்ளது ; இந்தோனேஷியா, போர்னியோ தீவின் காடுகளிலும் சம்ஸ்க்ருத தமிழ் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அவர்கள் எழுதும் லிபி/ எழுத்து எல்லாம் பல்லவர் கால வட்டெழுத்து, பிராமி ஆகியவற்றிலிருந்து வந்ததை எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள்; அவர்களுக்கு இலக்கியத்தை உண்டாக்கிக்கொடுத்ததும் ராமாயணம், மஹா பாரதம், புத்தமத ஜாதக கதைகள்தான்.
மணிக்கிராமத்தார் என்னும் வணிக்கக்குழு அங்கே சென்று வியாபாரம் செய்ததை பல கல்வெட்டுகள் காட்டுகின்றன. விஷ்ணு கோவிலில் ஒரு பக்தர் குளம் வெட்டியதை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது . நாலாம் நூற்றாண்டு.
பல புத்த விஹாரங்களில் இந்திய பெயர்கள் இருக்கின்றன. இந்தோனேஷியாவைப் பொறுத்த மட்டில் மூலவர்மனின் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டு யாகங்கள் தானங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றன வியட்நாமில் ஸ்ரீமாறன்/ தமிழில் திருமாறன் கல்வெட்டு இருக்கிறது இதுதான் மிகப் பழைய கல்வெட்டு (இரண்டாம் நூற்றாண்டு).
*****
தகூபா தமிழ் கல்வெட்டு அவனிநாராயணன் என்ற குளத்தை நாங்கூர் உடையான் வெட்டியதாகச் சொல்கிறது
Tamil inscriptions
An inscription at Takuapa on the Malay Peninsula that indicates that Nangur-Udaiyan dug an artificial lake called Avani-naranam
****
வணிக கட்டுப்பாடுகளை குறித்து நெசெவ் கல்வெட்டு பேசுகிறது
The Neusu Inscription, which may have dealt with trading regulations
****
கீழ்க்கண்ட கல்வெட்டுகள் மலாயாவுக்கு வெளியே உள்ளவை:
போர்னியோவின் குடாய் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகள் தமிழ் இந்து மன்னர்கள் யாக யக்ஞம் செய்து தானம் செய்ததை விரிவாக விளம்புகிறது. நாலாம் நூற்றாண்டு.
அவனைத் தொடர்ந்து மேற்கு ஜாவா தீவில் பூர்ணவர்மனின் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகள் உள்ளன . இவை எல்லாம் 1800 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இந்துக்கள் அங்கு சென்றதைக் காட்டுகின்றன ; காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவ மன்னர்கள் வர்மன் என்ற பட்டத்தை தாங்கி ஆட்சி செய்தனர்.
4th century Sanskrit Yupa inscriptions of Mulavarman, Kutei East Kalimantan, Indonesia
The oldest inscriptions in Indonesia are the Kutai inscriptions, which are found on stone pillars in Borneo. They are written in Sanskrit and date to the 4th century CE.
Why are the Kutai inscriptions significant?
They suggest that Tamil Hindu traders and priests were established in Indonesia by 350–400 CE
They show that Vedic ideas were popular with the Tamils
They indicate that the Tamils used Sanskrit to praise a king in Indonesia.
Purnavarman followed Mulavarman (West Java Sanskrit Inscription)
Old Malay inscriptions
The Kedukan Bukit Inscription from South Sumatra, Indonesia, which dates from the 7th century CE
The Sojomerto inscription from Central Java, which dates from the 7th century CE
Other inscriptions from the 7th to 10th centuries discovered in Sumatra, Java, and other islands of the Sunda archipelago
Sanskrit inscriptions
Many Sanskrit inscriptions have been found in Malaysia and Indonesia
The Buddhist Bodhigarbhālaṅkāralakṣa-dhāraṇī (mantra) inscription was found in Gua Berhala, a cave in Perlis, Malaysia
Other inscriptions
The Tarumanegara Stone in West Java, which is believed to bear the oldest known Malay script dating as far back as 400 CE
—subham—
Tags- கெடா, கடாரம், கிடாரங்காய் ஊறுகாய் , பெயர் காரணம், மலேசியாவில் தமிழ் கல்வெட்டு