சிட்னி ஆர்ட் காலரிக்கு விஜயம்- 28 (Post.14,232)

Written by London Swaminathan

Post No. 14,232

Date uploaded in Sydney, Australia – 22 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Buddhist Demon

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 28

சிட்னி ஆர்ட் காலரிக்கு விஜயம்

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 28

லண்டனில் நேஷனல் ஆர்ட் காலரி, போட்ரைட் ர் காலரி, டேட் காலரி என்று பல இடங்களில் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது போல சிட்னி மாநகரில் வைத்துள்ளார்கள்; அனுமதி இலவசம். நான் மார்ட்டின் பிளஸ் ஸ்டேஷனிலிருந்து தாவரவியல் பூங்கா வழியாக நடந்து சென்றேன்.  இன்று 22-2-2025  அன்று கால் வலியையும் பொருட்படுத்தாமல் ஆர்ட் கலரியின் இரண்டு பிரிவுகளையும் பார்த்துவிட்டு தாவரவியல் பூங்கா வழியாக நடந்து வந்தேன். ஆக ஓரே நாளில் இரண்டு தரிசனங்கள்.

இதை நியூசவுத் வேல்ஸ் ஆர்ட்  காலரி என்று அழைக்கிறார்கள் . இதில் நால பாடு,  நால நூரா என்று இரண்டு பிரிவுகள்.

நாலா பாடு என்றால் தண்ணீரைப் பார்த்தல் என்றும் நால நூறா என்றால் நிலப்பரப்பைக் காணுதல் என்றும் பொருள்.

Naala Badu is an Aboriginal name that means “seeing waters” Naala Nura, which means “seeing Country”

சுமார் 45,000  ஓவியங்கள், கலைப்பொருட்கள் இருக்கின்றன.

ஆசிய ஓவியப்பிரிவில் கிருஷ்ணர், கணபதி ஓவியங்களும், நிறைய புத்த சமய ஓவியங்களும் உள்ளன. எரிமலைப் பாறையில் செய்த கணபதியை ஒருவர் மியூசியத்துக்கு நன்கொடையாக அளித்துள்ளார்  (ஒருவேளை இந்தோனேஷியாவிலிருந்து வந்திருக்கலாம். அதுபோன்ற எரிமலைப்பாறை அகஸ்தியர் சிலை லண்டனில் விக்ட்டோரியா ஆல்பர்ட் மியூஸியத்தில் இருக்கிறது).

உலகின் பல பகுதிகளில் இது போல ஓவிய மியூசியங்கள் இருந்தாலும் ஆஸ்திரேலிய ஆதிவாசி மக்களின் ஓவியங்களையும் அவர்களை பற்றி வெள்ளைக்காரர்கள் வரைந்த ஓவியங்களையும் ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணலாம் . இதைவிட பெரிய ஓவிய மியூசியம் தலைநகர் கான்பெர்ராவில் உள்ளது.

பல ஓவியங்களை டிஜிடைஸ் செய்தும் போட்டிருக்கிறார்கள் ; அவைகளை வெப்சைட்டில் பார்க்கலாம் .

இவை எல்லாம் புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடங்களில் சமீபத்தில்தான் காட்சிக்கு வைக்கப்பட்டன.

நிரந்தரக் காட்சிகளைத் தவிர அவ்வப்போது சிறப்புக் காட்சிகளை       யும் ஏற்பாடு செய்கிறார்கள்.

–subham—

Tags–சிட்னி ஆர்ட் காலரி, விஜயம் ,

Leave a comment

Leave a comment