
Post No. 14,235
Date uploaded in Sydney, Australia – 23 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

உலகிலேயே புனிதமான நதி கங்கை நதி என்பதால் உலகம் எங்கும் ஆதிவாசிகளும் பழங்குடி மக்களும் எல்லா நதிகளையும் கங்கை என்று அழைத்தனர். ஆப்பிரிக்காவின் அதி பயங்கரக் காடுகளுக்கு இடையே பிக்மி என்னும் குள்ளர்கள் வாழும் காங்கோ நாட்டில் ஓடும் நதிக்கும் கங்கோ என்று பெயர். தென் கிழக்காசியாவில் பல நாடுகளை வளப்படுத்தும் மா கங்கா (மீ காங்) என்ற நதியும் இலங்கையில் ஓடும் பல நதிகளும் கங்கை என்றே அழைக்கப்படுகின்றன.
நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாது என்ற காரணத்தினால் கல்கத்தா துறைமுகத்திலிருந்து பிரிட்டனுக்குச் சென்ற கப்பல்கள் கங்கை நீரை ஏற்றிச் சென்று குடித்ததையும், பிரிட்டனுக்குச் சென்ற இந்திய மஹாராஜா பெரிய அண்டாவில் கங்கை நீரை கப்பலிலேற்றிச் சென்ரதையும் நாம் அறிவோம்..
இப்போது அறுபது கோடிபேர் கும்பமேளாவில் குளித்த பின்னரும் அதன் தூய்மை கெடாதது ஏன் என்று பிரபல விஞ்ஞானி அஜய் சோ ன்கர் Padma Shri scientist Dr Ajay Kumar Sonkar விளக்கம் அளித்துள்ளார் . அவர் புற்று நோய் மற்றும் மரபியல் ஆராய்ச்சியில் வல்லவர். பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர் .
கங்கை நீரில் ஆயிரத்து நூறு வகையான பாக்டீரியோபேஜஸ் வசிக்கின்றன. அவை அந்த நதி நீரின் பாதுகாவலர்கள் போல செயல்படுகின்றன என்றும் இதனால் பாக்டீரியாக்கள் வசிக்க முடியாத நீர், புனித கங்கை நீர் என்று அவர் விளக்குகிறார்
பாக்டீரியோ பேஜஸ் என்றால் என்ன?
இவை வைரஸ் வகையைச் சேர்ந்தவை. பாக்டீரியாவுக்குள் புகுந்து அவைகளை அழித்துவிடும் . இந்த வகை வைரஸ்களின் 1100 வகை கங்கை ஜலத்தில் உள்ளது . வேறு எந்த நதியிலும் இல்லாத ஒரு அதிசயம் இது அந்த வைரஸ்கள் அவற்றின் எண்ணிக்கையைப் போல ஐம்பது மடங்கு கிருமிகளை அழிக்கும் அபூர்வ சக்தி படைத்தவை. பாக்டீரியாவுக்கள் புகுந்து அவற்றின் மரபணுவையே மாற்றிவிடும் வல்லமை படைத்தவை
A bacteriophage is a type of virus that infects bacteria. In fact, the word “bacteriophage” literally means “bacteria eater,” because bacteriophages destroy their host cells. All bacteriophages are composed of a nucleic acid molecule that is surrounded by a protein structure. They are known
‘security guard,’ of the river; these bacteriophages instantly purify the river.
பாக்டீரியோ பேஜஸ் பாக்டீரியாவைவிட ஐம்பது மடங்கு சிறியவை; இவை நல்ல பாக்டீரியாக்களை அழிக்காமல் கெட்டவற்றை மட்டும் அழிக்கின்றன. ஒவ்வொன்றும் 100 முதல் 300 வரை பெருகுகின்றன இவை கடல் நீரிலும் வசிக்கின்றன. அதனால்தான் கடல் நீரும் அசுத்தம் அடையாமல் இருக்கிறது என்று சோன்கர் சொல்கிறார்
அஜய் சோன்கர் காலஞ்சென்ற ஜனாதிபதி அப்துல் கலாமால் பாராட்டப்பெற்றவர். செல் பயாலஜி எனப்படும் உடல் செல்கள் ஆராய்ச்சி ,ஜெனெடிக் கோட் என்னும் மரபியல் ஆராய்ச்சியில் முன்னணியில் நிற்கும் விஞ்ஞானி. அவர் நோபல் பரிசை வென்ற ஜப்பானியருடன் பணியாற்றியவர்
கங்கை நீர் புனிதம் பற்றி பல அரசியல் கட்சிகள் தவறான தகவலைப் பரப்பி வரும் தருணத்தில் இவர் வெளியிட்ட ஆராய்சசி அறிக்கை , கெடு மதி படைத்தோரின் சவப்பெட்டியில் ஆணி அடித்துவிட்டது.
—subham—
Tags- கங்கை நீர், புதிய ஆராய்ச்சி, அதிசயத் தகவல்,