
Post No. 14,256
Date uploaded in Sydney, Australia – 1 March 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 30
லண்டனிலுள்ள க்யூ தாவரவியல் பூங்காவையும் , ஆண்டுதோறும் நடக்கும் மலர்க கண்காட்சிகளையும் பலமுறை பார்த்திருந்தபோதிலும் சிட்னி தாவரவியல் பூங்காவைப் பார்க்காமல் வரக்கூடாது என்று முடிவு செய்து பிப்ரவரி 28-ஆம் தேதி (2025) பூங்காவுக்குள் நுழைந்தேன் . இரண்டு மணி நேரத்தில் வேறு எங்கும் இல்லாத பல தாவர, மர வகைகளைக் கண்டேன் ; பல பறவைகளும் காட்சி தந்தன ; ஆங்காங்கே சிலைகளும் பூங்காவை அலங்கரித்தன ஆஸ்திரேலியாவில் உலகில் வேறு எங்கும் காண முடியாத தாவர வகைகள் இருபதாயிரத்துக்கும் அதிகம் உள்ளன . இவற்றில் மனம் கவரும் வண்ண மலர்களும் அடக்கம்



மனதில் நின்ற சில காட்சிகள்
பெரணிகள் FERNS என்னும் கீழ்வகைத் தாவரங்கள் மிகவும் பெரிய இலைகளுடனும் உள்ளன. ஒரு செடியின் ஒவ்வொரு இலையிலும் ஒரு குழந்தை படுக்கலாம். நம்மூர் தலை வாழை இலையைப் பாதியாக வெட்டினால் எப்படி இருக்குமோ அந்த அளவு.
செவ்வாழை மரங்களும் சாதாரண பச்சை வாழை மரங்களும் உள்ளன. ஆனால் அவை மினி / குட்டி வாழைப்பழங்கள்.
நமது ஊர்களில் காடு மேடுகளில் ஊமத்தைப் பூ மலர்ந்திருப்பதைக் காண்கிறோம்; அவை வெள்ளை நிறம்; ஆனால் ஆஸ்திரேலிய ஊமத்தைகள் இளம் சிவப்பு நிறமுடையவை ; அவற்றின் சைஸ் மிகப்பெரியவை ராட்சத ஊமத்தை என்று சொல்லலாம்.
உலக மஹா கவி காளிதாசன், நம் நாட்டின் பருவங்களை ஆறாகப் பிரித்து ருது சம்ஹாரம் என்ற காவியத்தை இயற்றினான். வேதகாலம் முதல் உள்ள இதே பிரிவினை சங்கத் தமிழ்ப் புலவர்களும் பின்பற்றினார்கள்; மேலை நாட்டுக் கணக்கில் பருவங்கள் நாலுதான். அந்த நாலு பருவங்களைக் காட்டும் சிலைகளும் உள்ளன.
லண்டனில் கியூ பூங்காவுக்குள் நுழைவதற்கு கொள்ளைக் கட்டணம் வசூலிக்கிறார்கள் ; ஆனால் சிட்னியில் இலவசம். ஆங்காங்கே செடிகளின் தாவரவியல் பெயர்களை பொறித்து வைத்திருப்பதோடு ஒவ்வொரு சந்திப்பிலும் பாதைகளைக் காட்டும் கைகாட்டி மரங்களையும் வைத்திருக்கிறார்கள்; காரணம் சிட்னி பூங்காவுக்கு எட்டு நுழைவாயில்கள் ; புகழ்பெற்ற சிட்னி ஆபரா ஹவுஸ் பக்கமும் ஒரு வாசல் உள்ளது நான் மார்ட்டின் பிளேஸ் என்னும் ஸ்டேஷனுக்குச் சென்று பத்து நிமிடத்துக்குள் பூங்காவுக்குள் பிரவேசித்தேன்.
சிம்ம வாசல் என்னும் கேட்டில் இரண்டு சிங்கத்தின் சிலைகள் உள்ளன. ஓரிடத்தில் நான் விரும்புவது….. என்று பொறித்த பெண்ணின்/ தேவதையின் சிலை உளது ; அதில் இளம்வெட்டுகள் பூக்களை வைத்து தங்கள் (காதல்) விருப்பங்களை சொல்கிறார்கள்.


பெரிய மரங்கள் இந்திய ஆலமரங்களுக்குப் போட்டியாக அங்கே இருக்கின்றன. எல்லாம் உயரத்தில் நமது மரங்களைத் தோற்கடித்துவிடும்; அத்தனை உயரம். பூங்காவை பலவகைகளாகப் பிரித்து போகும் வழியையும் காட்டி இருக்கிறார்கள் பாலைவனத் தாவரங்கள், ரோஜாத் தோட்டம், பெரணிகள், மூலிகைகள், பனைவகைத் தாவரங்கள், கட்டாயம் காண வேண்டிய தாவரங்கள் என்று பல பிரிவுகள் .
நாமாகச் சென்று பார்த்தால் நேரம் அதிகமாகும். அவர்களே நடத்தும் நடைப் பயணத்தில் WALKING TOURS சேர்ந்துகொண்டால் எல்லா செடி கொடிகளையும் பார்ப்பதோடு அவற்றின் மகிமையையும் அறியலாம்
****
சிட்னி தாவரவியல் பூங்காவின் சிறப்புகள்
இது ஆஸ்திரேலியாவில் மிகவும் பழைய தோட்டம்; இருநூறு ஆண்டு வரலாறுடைத்து .
மேலும் இத்துடன் தாவரவியல் ஆராய்ச்சிக் கழகமும் இணைந்திருப்பதால், தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடக்கின்றன.
மொத்தம் 27,000 வகைத் தாவரங்களைக் காணலாம் ; அவை உலகின் பல இடங்களை சேர்ந்தவை ஆஸ்திரேலியாவிலுள்ள 24,000 வகைத் தவரங்களில் 87 சதவிகிதம் இந்த நாட்டிற்கே உரித்தானவை உலகில் வேறு எங்கும் காணக்கிடைக்காதவை.
ஆண்டு முழுதும் திறந்திருக்கும்; அனுமதி இலவசம்
பூங்காவில் 15 வகைப் பிரிவுகள் இருக்கின்றன. நாட்டின் மழை வனக்காடுகள் எப்படி இருக்கும் என்பதைக் காட்டும் ஒரு பிரிவும் அதில் அடக்கம் ; அங்கு பத்து லட்சம் தாவர வகைகளை சேமித்துப் பாதுகாத்து வைக்கும் ஆராய்ச்சிப் பிரிவும் உள்ளது இந்த விஷயத்தில் லண்டன் கியூ கார்ட்டன் இதைவிடப் பெரியது


Facts about Sydney Botanical Gardens
Royal Botanic Garden Sydney
• Australia’s oldest botanic garden, established in 1816.
• Home to over 27,000 plants from around the world.
• Includes 15 themed gardens, including an Australian Rainforest Garden and a Tropical Garden
• Free to visit, open every day of the year
• Located on Sydney Harbour, next to the Sydney Opera House
• Features a National Herbarium with about one million reference specimens
• Australia is home to approximately 24,000 species of plants, 87 per cent of which can’t be found anywhere else on the planet
–subham—
Tags- சிட்னி, தாவரவியல் பூங்கா, எனது பயணம், சிறப்புகள் , சிலைகள், ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 30